Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயமா இருக்கு திரை விமர்சனம்

Featured Replies

பயமா இருக்கு திரை விமர்சனம்
card-bg-img
 

தமிழ் சினிமாவை பேய் விட்டாலும், பேய் தமிழ் சினிமாவை விடாது போல. பேய் சீசன் முடிந்துவிட்டது என்று இருந்தால் மீண்டும் ஒரு ஹாரர், காமெடி டெம்ப்ளேட்டில் ஜவஹர் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் பயமா இருக்கு.

கதைக்களம்

படத்தின் நாயகன் சந்தோஷ் ப்ரதீப், தன் மனைவியின் அம்மாவை அழைத்து வர இலங்கை செல்கின்றார், அங்கு இரானுவ வீரர்கள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இதில் மொட்டை ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகனும் மாட்டிக்கொள்ள, இரானுவ வீரர்களிடம் சண்டைபோட்டு சந்தோஷ் அந்த 4 பேரையும் காப்பாற்றுகின்றார்.

அதன் பின் இவர்கள் 5 பேரும் நல்ல நண்பர்களாக சந்தோஷின் வீட்டிற்கு 4 பேரும் வர, அங்கு பல அமானுஷிய விஷயங்களை பார்க்கின்றனர், ஒருக்கட்டத்தில் நம்மை கூட்டி வந்த சந்தோஷே பேய் தானா என்று சந்தேகம் எழும் அளவிற்கு சில விஷயங்கள் நடக்க, இதை தொடர்ந்து யார் பேய்? இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

நாம் முன்பே கூறியது போல் பேய் சீசனே முடிந்தும் ஒரு சில கால தாமதத்தால் இப்படம் இன்று வெளிவந்துள்ளது, ஒருவேளை படம் எடுத்த போதே வந்திருந்தால் கொஞ்சம் சுவாரசியம் கூடியிருக்கும்.

இதே கதைக்களத்தில் தமிழ் சினிமா இதுவ்ரை 100 படங்களுக்கு மேல் பார்த்திருக்கும், ஆனால், அதையும் தாண்டி இவர்கள் கதைக்காக தேர்ந்தெடுத்த லொக்கேஷன் மிகவும் கவர்கின்றது.

உண்மையாகவே இங்கு பேய் இருக்கிறது என்று சொன்னார்கள் கூட நம்பலாம் போல, அந்த அளவிற்கு பயமுறுத்துகின்றது, அதற்கு உறுதுணையாக சத்யாவின் இசையும், மகேந்திரனின் ஒளிப்பதிவும் கைக்கோர்த்து பலம் சேர்க்கின்றது.

மொட்டை ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகன் என காமெடிக்கு 4 பேர் இருந்தாலும் ஒன் மேன் ஷோவாக கலக்குவது மொட்டை ராஜேந்திரன் தான், அதிலும் பொருட்காட்சியில் பேய் வீட்டிற்குள் செல்லும் போது சந்தோஷை கடத்த இவர்கள் செய்யும் கலாட்டா சிரிப்பு சரவெடி

இப்படி படத்தில் அங்கங்கு சிரிப்பு, பயமும் வந்தாலும், பல முறை பார்த்த கதை, காட்சி என்பதால் படம் முழுவதும் ஒன்றி பார்க்க முடியவில்லை.

க்ளாப்ஸ்

சத்யாவின் பின்னணி இசை, மகேந்திரனின் ஒளிப்பதிவு.

மொட்டை ராஜேந்திரனின் காமெடி காட்சிகள்.

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன பேய் ட்ராமா. ரேஷ்மி மேனன், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு செட் ஆகவே இல்லை.

மொத்தத்தில் பயமா இருக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு பயமுறுத்தவில்லை.

 

 

http://www.cineulagam.com/films/05/100867?ref=review_section

  • தொடங்கியவர்

பயமா இருக்கு @ விமர்சனம்

bayama-44-690x400.jpg

வசந்தம் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி ஜவஹர் என்பவர் இயக்க, 

சந்தோஷ், ரேஷ்மி மேனன் , கோவை சரளா, ஜகன், பரணி, நான் கடவுள் ராஜேந்திரன் , லொள்ளு சபா ஜீவா, ஆகியோர் நடித்துள்ள படம் பயமா இருக்கு .
 
நல்லா இருக்கா ? பார்க்கலாம் 
 
நாகர்கோவில் மார்த்தாண்டம் பகுதியில் வாழும் இளம் தம்பதியில் , கர்ப்பமாக இருக்கும் மனைவி லேகாவின் (ரேஷ்மி மேனன்) ஆசைப்படி,bayama-2.jpg
 
யாழ்ப்பாணத்தில் உள்ள அவளது பெற்றோரை அழைத்து வரப் போகிறான் கணவன் ஜெய் (சந்தோஷ்)
 
அந்த சமயத்தில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் தமிழின அழிப்பு உச்சம் அடைந்து , அந்த அழிப்பில்,
 
 லேகாவின் பெற்றோர்கள் கொல்லப் பட  ஜெய்யும் சிங்கள ராணுவத்தான்களிடம் சிக்கிக் கொள்கிறான் . bayama-888.jpg
 
ஒரு இடத்தில் அவனையும் , தொழில் விசயமாக இலங்கை போயிருந்த  வேறு  சில தமிழ்நாட்டு தமிழர்களையும்  ( ராஜேந்திரன், ஜீவா , பரணி, ஜெகன்),  
 
கை கால்களை கட்டி மண்டியிட வைத்து சுட்டுக் கொல்ல முயல்கிறான்கள் சிங்கள ராணுவத்தான்கள் . 
 
”நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து  அண்மையில் வேலை விசயமாக வந்தவர்கள்; (உங்கள் சிங்கள இனம் உருவாவதற்கு முன்பிருந்தே), 
bayama-1.jpg
 
இந்த மண்ணில் வாழ்ந்து வரும்   பூர்வீக ஈழத் தமிழர்கள் அல்ல” என்று கூறியும் பயன் இல்லை . 
 
எதிர்பாராத சமயத்தில் ஜெய்  அவர்களோடு சண்டை போட்டு , நெருப்பில் சிலர் விழ , ஒரு வழியாக தோணி மூலம் ஐவரும் தமிழகம் வருகிறார்கள் . 
 
கடல்புறத்து தண்ணீர் பரப்பில் உள்ள சிறு நிலத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு நண்பர்களோடு வருகிறான் ஜெய் .bayama-66.jpg
 
மனைவியும் பிறந்த குழந்தையும் அங்கு  இருக்கிறார்கள் . ஆனால் லேகாவின் நடவடிக்கைகள் இயல்பாக இல்லை . 
 
இந்த நிலையில் ஜெய் நண்பர்களோடு கடை வீதிக்குப் போக , அங்கு ஜெய்யை பார்க்கும் ஒருவர் பேய் பேய் என்று அலறுகிறார் .  
 
சிங்கள ராணுவத்தான்களுடன் நடந்த சண்டையில் ஜெய்யும் இறந்ததாக வந்த பத்திரிகை செய்தி காட்டப்படுகிறது . 
 
வேறு சிலர் ”லேகா பிரசவத்தில் இறந்து  விட்டாள். அங்கே இருப்பது அவளது ஆவி” என்கின்றனர் . bayama-77.jpg
 
அதற்கேற்ப அங்கே புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்படும் ஒரு எலும்புக் கூட்டின் கையில் ஒரு மோதிரத்தை நண்பர்கள் பார்க்கின்றனர் .
 
அந்த மோதிரம் இப்பொது லேகாவின் விரலில் இருக்கிறது . லேகாதான் பேய் என்று நண்பர்கள் நம்ப , ஜெய் அதை மறுக்கிறான் . 
 
பேய் ஓட்டும் மந்திரவாதி (கோவை சரளா )  சொன்ன முறையைப் பயன்படுத்திப் பார்த்தால்  ஜெய் தான் பேய் என்று நண்பர்கள் நினைக்கின்றனர் . bayama-33.jpg
 
ஒரு நிலையில் நண்பர்களில் ஒருவரான பரணிதான் பேய் என்று மற்ற நண்பர்கள் நினைக்கின்றனர் .
 
சிங்கள ராணுவத்தான்களுடன் நடந்த சண்டையில் பரணியும் இறந்ததாக வந்த பத்திரிகை செய்தி காட்டப்படுகிறது . 
 
உண்மையில் யார் பேய் ? உண்மை தெளிவாக தெரிய வரும்போது நடந்தது என்ன  என்பதே,  இந்த பயமா இருக்கு .
bayama-777.jpg
 
ஒரு பேய்க் கதையில் ஈழத்து இன அழிப்பை ஓரிரு காட்சியே ஆனாலும் சிறப்பாக காட்டிய இயக்குனர் ஜவஹருக்கு பாராட்டுகள் . 
 
லேகாவின் வீடு …. ! வாவ் ! கேரளாவில் எங்கோ பிடித்துள்ளார்கள் அந்த அற்புதமான லொக்கேஷனை ! கடலுக்குள் இருக்கும் சிறு நிலம் .
 
படகில் மட்டுமே போகும் வசதி.. பின்பக்கம் அடர்ந்த காடு என்று,  அந்த லோக்கேஷன் மயக்குகிறது என்றால் ..bayama-5.jpg
 
அதில் நிறைய இரவு நேரக் காட்சிகளை அற்புதமாக ஒளியூட்டி சிறப்பாக ஷாட்கள் வைத்து படம் எடுத்து  வாய் பிளக்க வைக்கிறார்கள் .
 
இந்த பாராட்டில் இயக்குனருக்கு மட்டுமல்லாமல் மகேந்திரனின் ஒளிப்பதிவுக்கும்  முக்கியப் பங்கு உண்டு . சிறப்பு . 
 
சத்யாவின் பாடல் மற்றும் பின்னணி இசையில் செண்டிமெண்ட். திகில் இரண்டும் சிறப்பாக வெளிப்படுகிறது . 
 
காடுகளுக்குள் இரவில் சில காட்சிகளில் நிஜமாகவே மிரட்டுகிறார்கள் .bayama-55.jpg
 
பேய் மேஜிக் விளையாட்டு அரங்குக்குள்  நிஜ பேயும் போலி பேய்களுமான அந்த காட்சி நல்ல ஐடியா . ஆனால் அதை இன்னும் சிறப்பாக அமைத்து இருக்க வேண்டும் 
 
ரேஷ்மி மேனன், சந்தோஷ் , பரணி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் . ஜெகன் , ஜீவா கூட சேதாரம் இல்லை . 
 
ஆனால் கோவை சரளாவும் ராஜேந்திரனும்தான் காமெடி என்ற பெயரில் படுத்தி எடுக்கின்றனர் .
 
காஞ்சனா ஸ்டைல் கிளிஷே நடிப்பை விட்டுடுங்க சரளா … புண்ணியமா போகும் . bayama-22.jpg
 
ஈழப் பிரச்னை பற்றி காட்சி அமைத்தவர்கள் ஏதாவது ஒரு வகையில் கடைசியில் அந்த விசயத்தை மீண்டும் கொண்டு வந்து கனம் கூட்டி இருக்கலாம் .
 
இன்னும் கவனத்தை ஈர்த்து இருக்கலாம் . அநியாயமா மிஸ் பண்ணிட்டீங்களே !
 
எனினும் பேயானாலும் நிஜ காதல் போகாது என்று சொல்லும் அந்த கிளைமாக்ஸ் பாஸ் ஆகிறது . bayama-11.jpg
 
இன்னும்  உழைத்து  சிரத்தை  மற்றும் செய் நேர்த்தியோடு திரைக்கதை  அமைத்து, இருந்தால் பாக்ஸ் ஆபிசில் படம் இடம் பிடித்து இருக்கும் இந்தப் படம்.

http://nammatamilcinema.in/bayama-irukku-review/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.