Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹொண்டூறஸ் துறைமுகத்தில் புலிகளின் கடத்தல் கப்பல்கள்

Featured Replies

சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும் கடல் மார்க்க வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் ஆய்வு, மற்றும் அறிக்கைகள் சமர்ப்பித்தல் போன்ற சர்வதேச கடற்பிராந்தியங்களினூடாக நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் பதிவு செய்யும் சர்வதேச நிறுவனமாகிய லொயிட்ஸ் சர்வதேச அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சர்வதேச கடற்பிராந்தியத்தில் போக்குவரத்து செய்து வருவதான கப்பல்களைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது.

மேற்படி அறிக்கைக்கு ஏற்ப சிறிலங்காவிலுள்ள புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சட்டவிரோதமாகப் போக்குவரத்துச் செய்து வருவதுமான கப்பல்கள் சர்வதேச கடற்பிராந்தியங்களில் பயணம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கப்பல்களை புலிகள் அமைப்பு தமது போதைப் பொருள் கடத்தல் வியாபாரத்துக்கும் மற்றும் யுத்த ஆயுதங்கள் உபகரணங்களைக் கடத்துவதற்கும் பயன்படுத்தி வருவதாக குறித்த லொயிட்ஸ் அறிக்கையில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் இவ்வாறு சட்ட விரோத கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அவை அனைத்தும் சர்வதேச கப்பற் போக்குவரத்து தாபனத்தில் பதிவு செய்யப்பட்டவையாக இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி சர்வதேச பொலிஸ் அமைப்பாகிய இன்ரர்போல் தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப இவ்வாறு கடத்தல்கள், சட்டவிரோத வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் கப்பல்களைப் பதிவு செய்வதில் சர்வதேச ரீதியில் பிரபலமாக இருக்கும் நாடுகளான இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஹொண்டூறஸ், பெலாறிஸ் ஆகிய நாடுகளின் துறைமுகங்களிலும், மற்றும் கருங்கடல் பிராந்தியத்திலுள்ள ஒட்டும் துறைமுகத்திலுமே மேற்படி புலிகள் அமைப்பின் சட்ட விரோதமான கப்பல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இதேவேளை, அண்மையில் தாக்கியழிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் இரண்டு ஆயுதக் கப்பல்கள் பற்றி வெளியாகிய தகவல்களில் அந்தக் கப்பல்கள் இரண்டும் சிங்கப்பூரிலுள்ள ஹொண்டூறஸ் நாட்டுத் தூதரகங்களில் பதிவு செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த 28 ஆம் திகதி சிறிலங்காவுக்கு தென் கடற் பிராந்தியத்தில் காலித் துறைமுகத்துக்கு அப்பாலுள்ள தேவேந்திர முனைப் பகுதி கடலில் வைத்து சிறிலங்கா கடற் படையினரால் தாக்கியழிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கப்பலும் மேற்படி இலத்தீன் அமெரிக்க நாடாகிய ஹொண்டூறஸில் பதிவு செய்யப்பட்டதே என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அண்மையில் லொயிட்ஸ் சர்வதேச கப்பல்துறை ஸ்தாபனம் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியிருந்த மேற்படி அறிக்கையில் கூறப்பட்டிருந்த தகவல்களிருந்தே தேவேந்திர முனையில் அழிக்கப்பட்ட புலிகளின் ஆயுதக் கப்பலும் ஹொன்டூறஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்பது உறுதி செய்யபப்பட்டதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான சட்டவிரோதமான பல கப்பல்கள் ஹொண்டூறஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டவை என்பது லொயிட்ஸ் ஸ்தாபனம் மற்றும் இன்ரர்போல் சர்வதேச பொலிஸ் அமைப்பு என்பவை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ஹொண்டூறஸ் துறைமுகத்திலுள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருத முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.