Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவாலைக் கடக்குமா அரசு?

Featured Replies

சவாலைக் கடக்குமா அரசு?

புதிய அர­ச­மைப்பு முயற்­சி­களை மகா­நா­யக்க பீடங்­கள் எதிர்த்துள்­ள­ன.

இலங்கை பன்­மைத்­து­வச் சமூ­க­மாக, எதிர்­கா­லத்தை நோக்­கிய முற்­போக்­குச் சமூ­க­மாக மாறு­வதை தமது பௌத்த மேலா­திக்க வாதத்­துக்­காக ஒரு­போ­தும் ஏற்­கப்­போ­வ­தில்லை என்­பதை இந்த எதிர்ப்­பின் மூல­மாக பௌத்த பீடங்­கள் தெளி­வு­ப­டுத்­தி­விட்­டன.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்­கை­யில் நாட்­டின் தன்மை குறித்­துப் பெரி­தான மாற்­றம் எது­வும் நிகழ்த்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

30 வரு­ட­கால உள்­நாட்­டுப் போரின் பின்­னர், பெரும் இழப்­புக்­கள் துய­ரங்­க­ளின் பின்­னர், அதன் படிப்­பி­னை­க­ளில் இருந்து கற்­றுக்­கொண்டு எதிர்­கால உலகை நோக்­கித் தயா­ரிக்­கப்­பட்ட ஒரு முற்­போக்கு வரை­பாக அது இருக்­க­வில்லை.

முடிந்த வகை­யில் எல்­லாம் பௌத்த சிங்­கள மேலா­திக்க வாதத்­தைத் திருப்­திப்­ப­டுத்­தும் விதத்­தி­லான அணு­கு­ முறை இடைக்­கால அறிக்கை முழு­வ­தும் தெறித்­தி­ருந்­தது.

அந்தத் திருப்­திப்­ப­டுத்­தல்­கள், நெகிழ்­வு­ப­டுத்­தல்­கள், தட­வல்­கள், கொஞ்­சல்­கள், கெஞ்­சல்­கள் என்­ப­வற்­றுக்கு மத்­தி­யில் தமி­ழர்­க­ளுக்­கும் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வ­தற்­கான முயற்­சியை நாசூக்­கா­கச் செய்ய முடி­யுமா என்­று­தான் இடைக்­கால அறிக்கை முயன்­றது.

ஆனால், அந்த முயற்­சி­யே­கூ­டத் தேவை­யில்லை என்று அடி­யோடு நிரா­க­ரித்­து­விட்­டன பெளத்த பீடங்­கள். அது­மட்­டு­மல்ல, அர­ச­மைப்­பில் திருத்­தங்­க­ளைச் செய்­வ­து­கூ­டத் தேவை­யற்­றது,இருப்­பதேபோதும்என்றுஅவர்­கள்ஆணித்­த­ர­மா­கச்சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.

அதா­வது, தமி­ழர்­க­ளு­டன் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளத் தேவை­யில்லை, அவர்­கள் இப்­போது இருப்­ப­தைப் போன்றே இலங்­கை­யின் இரண்­டாம் மூன்­றாம் தரக் குடி­மக்­க­ளாக விரும்­பி­னால்வாழ்ந்­து­விட்­டுப்போகட்­டும்என்­பதைமறை­மு­க­மா­கச்சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.

30 வருட கால­மாக ஓர் உள்­நாட்­டுப் போரால் நாடு சிதைந்­த­போ­தும், தலதா மாளி­கை­யிலே குண்டு வெடித்­த­போ­தும் மகா­நா­யக்­கர்­க­ளி­ட­மும் பௌத்த பீடங்­க­ளி­ட­மும் சிறு சஞ்­ச­லம்­கூட ஏற்­ப­ட­வில்லை என்­ப­து­தான் அவர்­கள் அறிக்­கை­யின் ஊடாக வெளிப்படும் உண்மை.

தமி­ழர்­கள் கொல்­லப்­ப­டு­வது, இரண்­டாம்­த­ரக் குடி­மக்­க­ளாக நடத்­தப்­ப­டு­வது, மனி­தா­பி­மா­னத்தை நாடு இழந்­து­கொண்­டி­ருப்­பது எது­வும் அவர்­க­ளுக்­குப் பெரி­தல்ல.

பெளத்­தத்­தை­யும் அதை வழி­மொ­ழிந்து வாழ­வைக்­கும் சிங்­க­ளத்­தை­யும் பாது­காப்­பது மட்­டுமே அவர்­க­ளின் நோக்­கம்.

இலங்­கை­யின் வர­லாறு முழு­வ­தும் பிக்­கு­கள் இதைத்­தான் செய்­தார்­கள். அவர்­க­ளின் அணு­கு­மு­றை­யில் கடந்த 1000 வரு­டங்­க­ளில் கிஞ்­சித்து மாற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை என்­பதை அவர்­கள் தெளி­வு­ப­டுத்­தி­விட்­டார்­கள்.

பாம­ரச் சிங்­கள மக்­க­ளும் கிரா­மப்­பு­றங்­க­ளில் படித்­தி­ருக்­கக்­கூ­டிய சிங்­கள மக்­க­ளும்­கூட மகா­நா­ய­கர்­களை மீறி நடக்­கும் சக்­தி­யற்­ற­வர்­கள். பிக்­கு­கள் எதிர்க்­கி­றார்­களே, அத­னால் அதில் ஏதோ சங்­கதி இருக்­கும் என்று விக்­கி நிற்­கப்­போ­கும் அந்த மக்­களை உசுப்­பேற்றி இனம், வீரம், சிங்­கங்­க­ளின் வாரி­சு­கள் என்று முழக்­க­மிட்டு இன­வா­தத்­துக்­கூ­டாக வாக்கு வேட்­டை­யா­டக் காத்­தி­ருக்­கும் மகிந்த ராஜ­பக்ச வேறு இருக்­கும்போது, புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வரு­வ­தற்­கான சரி­யான சவாலை இப்­போ­து­தான் அரசு எதிர்­கொள்­கி­றது.

பௌத்த பீடங்­களை மீறி மக்­க­ளைக் கவர்ந்­தி­ழுத்து தனது புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­றும் வல்­ல­மையை இந்த அரசு கடந்த மூன்­றாண்­டு­க­ளில் ஒரு­போ­தும் வெளிக்­காட்­டி­ய­தில்லை.

பௌத்த பீடங்­க­ளின் நாடி­யைத் தடவி, அவர்­க­ளைச் சமா­ளித்­துக் காரி­யங்­க­ளைச் சாதிக்­கத்­தான் அவர்­கள் முயன்­றார்­கள்.

அவர்­க­ளின் அத்­த­கைய முயற்­சி­களை மாகா­ந­ாயக்க பீடங்­கள் நிரா­க­ரித்­து­விட்ட நிலை­யில், அர­சின் முயற்­சி­யில் துணிந்து பங்­கேற்­ப­தற்கு அர­சில் உள்ள அரை­வா­சிப் பேரே இனிப் பின்­ன­டித்­து­வி­டு­வார்­கள் என்­பதை எதிர்­பார்க்­க­லாம்.

இந்த நிலை­யைக் கடப்­ப­தற்கு அர­சி­ட­மும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ட­மும் ஏதா­வது வழி­மு­றை­கள் இருக்­கின்­றன போல் தெரி­ய­வில்லை.

மலை­யைத் தலை­யால் தள்ளி நகர்த்த முய­லும் சமா­னி­ய­னின் முயற்­சி­யா­கத்­தான் இந்த இரு தரப்­பி­ன­ர­தும் முயற்­சி­க­ளும் இப்­போது தோன்­று­கின்­றன.

இதனை அவர்­கள் எப்­ப­டிக் கையா­ளப்­போ­கி­றார்­கள் என்­ப­தில்­தான் இலங்­கை­யின் அடுத்த 50 ஆண்­டு­கால எதிர்­கா­லம் தங்­கி­யுள்­ளது.

பின்­வாங்­கு­வார்­களா? முன்­னே­று­வார்­களா? ஒன்று மட்­டும் நிச்சயம்.

விடு­த­லைப் புலி­க­ளின் தேசி­யத் தலை­வர் வே.பிர­பா­க­ரன், எப்­போ­துமே சொல்­வது ‘‘சிங்­க­ள­வர்­கள் தாமாக ஒரு­போ­தும் தமி­ழர்­க­ளுக்­குத் தீர்­வைத் தர­மாட்­டார்­கள்’’ என்­ப­து­தான்.

அதன் அடிப்­ப­டை­யில்­தான் அவர் கடைசி வரை­யில் ஆயு­தங்­க­ளை­யும் போரை­யும் நம்­பி­னார்.

இந்த நிமி­டம் வரைக்­கும் அவ­ரது நம்­பிக்கை உயிர்ப்­போடு வாழ்கின்­றது.

http://newuthayan.com/story/38553.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.