Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொற்களில் சூட்சுமம்

Featured Replies

சொற்களில் சூட்சுமம்

 

ஆயினும் சுய­நிர்­ணய உரிமை, பகி­ரப்­பட்ட இறை­யாண்மை, பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கின்ற அதி­யுச்ச அதி­கா­ரங்­களைக் கொண்ட சமஷ்டி ஆட்சி முறை என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தா­கவே அர­சியல் தீர்வு அமைய வேண்டும் என்று மக்கள் மத்­தியில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆணித்­த­ர­மாக எடுத்­து­ரைக்­கின்­றது. அரை­கு­றை­யான தீர்வை ஏற்றுக் கொள்ளமாட்டோம். அந்த வகையில் தமிழ் மக்களை ஏமாற்றமாட்டோம். தமிழ் மக்களை விற்கவும் மாட்டோம். அரைகுறை தீர்வை ஏற்றுக்கொண்டு யாருக்கும் விலைபோகவும் மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக் கட்சியும் மக்கள் மத்தியில் சூளுரைத்து வருகின்றது. 

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் முயற்­சி­யா­னது சொற்­களில் சிக்கித் திணறிக் கொண்­டி­ருக்­கின்­றது. இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணும் வகையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சியே இத்­த­கைய சிக்­க­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றது. 

பிரச்­சி­னை­க­ளு­க்குத் தீர்வு காண்­பதில் உளப்­பூர்­வ­மான ஈடு­பாடும், உண்­மை­யான அக்­க­றையும் கொண்­டி­ருத்தல் அவ­சி­ய­மாகும். ஆனால் தற்­போ­தைய முயற்­சி­களில் இந்தப் பண்­புகள் இருக்­கின்­ற­னவா என்­பது கேள்விக் குறி­யா­கி­யி­ருக்­கின்­றது. 

மக்கள் தமது அர­சியல் பிர­தி­நி­தி­களை மிகுந்த நம்­பிக்­கை­யோடும் பல்­வேறு எதிர்­பார்ப்­பு­க­ளு­ட­னுமே தேர்தல் மூல­மாகத் தெரிவு செய்­கின்­றார்கள். தமது நம்­பிக்­கை­யையும், எதிர்­பார்ப்­ப­ுக­ளையும் அவர்கள் நிறை­வேற்ற வேண்டும் என்­பதில் மக்கள் ஆர்­வ­மாக இருக்­கின்­றார்கள். ஆனால் மக்­க­ளு­டைய இந்த ஆர்­வத்தை அர­சி­யல்­வா­தி­களும், அர­சியல் தலை­வர்­களும் எந்த அள­வுக்குப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்­ற­வாறு செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பதும் கேள்விக் குறி­யா­கி­யி­ருக்­கின்­றது.

மக்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக இருக்க வேண் டும். அவர்கள் அர­சாங்­கத்­திற்கும் அர­சி­யல்­வா­திகள், அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் விசு­வா­ச­மாக இருக்க வேண்டும் என்று அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றது. ஆனால், அர­சி­யல்­வா­தி­களும், அர­சியல் தலை­வர்­களும் தங்­க­ளுக்குள் ஒற்­று­மை­யாக இருப்­ப­தில்லை. அவர்கள் மக்­க­ளுக்கு விசு­வா­ச­மா­கவும் இருப்­ப­தில்லை என்­பது யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான அர­சியல் கள நிலை­மை­யாகக் காணப்­ப­டு­கின்­றது, 

மக்­க­ளிடம் இருந்து எதிர்­பார்ப்­ப­வற்றை அர­சி­யல்­வா­தி­களும், அர­சியல் தலை­வர்­களும் கைக்­கொள்­ளா­ததன் கார­ண­மாக மக்கள் அவர்கள் மீது நம்­பிக்கை இழக்க நேரிட்­டி­ருக்­கின்­றது. யுத்­தத்தின் போது எத்­த­னையோ பிரச்­சி­னை­க­ளுக்கு மக்கள் முகம் கொடுத்­தி­ருந்­தார்கள். யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து, அந்தப் பிரச்­சி­னைகள் பல முடி­வுக்கு வந்­துள்ள போதிலும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நிம்­ம­தி­யாக வாழ்­வ­தற்­கான சரி­யான சூழல் இன்னும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அவர்கள் தமது எதிர்­கா­லத்தின் மீது நம்­பிக்கை வைத்து செயற்­படக் கூடி­ய­தா­கவும் இல்லை என்றே கூற­வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

இத்­த­கைய ஒரு நிலை­மை­யையே இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு வழி வகுக்கும் என நம்­பிக்­கை­யூட்­டப்­பட்ட, புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கின்ற விட­யத்­திலும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

புதிய அர­சி­ய­ல­மைப்பு 

இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்த்து வைக்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும். அதற்­கா­கவே நாங்கள் அதற்கு ஆத­ரவை வழங்­கு­கின்றோம் என தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கூறி­யி­ருந்தார். அதற்­கா­கவே நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யது என்றும் கூறப்­பட்­டது. 

புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது மூன்று முக்­கிய விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக உரு­வாக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மாற்­றத்தைக் கொண்டு வரு­வது, நடை­மு­றையில் உள்ள விகி­தா­­சார தேர்தல் முறையை மாற்றி அமைப்­பது, இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­பது என்ற மூன்று விட­யங்­க­ளுக்­கா­க­வுமே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த மூன்று விட­யங்­க­ளையும் நிறை­வேற்றும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அத்­த­கைய முயற்­சிக்கே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்கும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கூறி­யி­ருந்தார். 

இந்த மூன்று விட­யங்­களில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் முறையில் மாற்றம் செய்­வ­தற்­கான சட்­ட­மூ­லமும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. முழு­ மை­யான விகி­தா­சார தேர்தல் முறைமை மாற்­றப்­பட்டு, வட்­டார முறை­யி­லான தேர்தல் முறை விகி­தா­சார தேர்தல் முறை என்ற இரண்டும் கல­ந்­த­­தொரு தேர்தல் முறைக்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் இன்னும் எந்­த­வி­த­மான முன்­னேற்­றமும் காணப்­ப­ட­வில்லை. 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான அடிப்­படை விட­யங்­களை உள்­ள­டக்கி வெளி­யி­டப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணத்­தக்க வகை­யி­லான விட­யங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்­பது பல­ராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

'ஏக்­கிய ராஜ்­ஜிய'வும் ஒரு­மித்த நாடும்

நாட்டில் நடை­மு­றையில் உள்ள ஒற்­றை­யாட்சி முறையின் கீழ் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வுகாணப்­பட முடி­யாது என்­பது தமிழர் தரப்பின் நிலைப்­பா­டாகும். ஏனெனில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு என்­பது அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­ப­தி­லேயே மையம் கொண்­டி­ருக்­கின்­றது. ஒற்­றை­யாட்­சியின் கீழ் இனப்­பி­ரச்­சி­னைக்கு அவ­சி­ய­மான அதி­காரப் பகிர்வை மேற்­கொள்ள முடி­யாது என்­பது தமிழர் தரப்பின் வலு­வான வாத­மாகும். 

ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு அர­சாங்­கமும், சிங்­களத் தரப்­பி­னரும் தயா­ராக இல்லை. இந்த ஆட்சி முறையின் கீழ் அதி­கா­ரங்­களைப் பர­வலாக்க முடியும் என்­பதே அவர்­க­ளு­டைய நிலைப்­பா­டாகும். பர­வ­லாக்­கப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்கள் எந்த நேரத்­திலும் மத்­திய அர­சாங்­கத்­தினால் மீளப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்ற அடிப்­படைத் தன்­மையைக் கொண்­டது. 

சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறை­மையைக் கொண்ட சமஷ்டி ஆட்சி முறையை உள்­ள­டக்­கி­யதோர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதே தமிழர் தரப்பின் எதிர்­பார்ப்­பாகும். சமஷ்டி ஆட்சி முறை­யென்­பது ஒற்­றை­யாட்­சியில் சாத்­தி­ய­மா­காது. ஆக­வேதான் ஒற்றையாட்சி முறையை மாற்­றி­ய­மைக்­கத்­தக்க வகை­யி­லான புதி­யதோர் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அதன் மூல­மாக இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக்காண வேண்டும் என்­பதே பொருத்­தப்­பா­டான முயற்­சி­யாக இருக்கும் என்­பதும் தமிழர் தரப்பின் நிலைப்­பா­டாகும். 

ஆனால் இந்த அடிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டுமா என்­பது சந்­தே­க­மாக இருக்­கின்­றது. ஒற்­றை­யாட்­சியைக் குறிக்­கின்ற ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சிங்­கள சொல்லைக் கொண்ட ஆட்சி முறையே அமைந்­தி­ருக்கும் என்று இடைக்­கால அறிக்கை கூறு­கின்­றது. ஏக்­கிய ராஜ்­ஜிய என்­ப­தற்கு ஒரு­மித்த நாடு என்ற தமிழ்ப்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஒரு­மித்த நாடு என்­பது பிரிக்­கப்­பட முடி­யாத நாடு என்­ப­தாகும். பிரிக்­கப்­பட முடி­யாத ஒரு­மித்த நாட்­டுக்குள் சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கின்ற ஒரு தீர்வை நோக்­கி­யதே புதிய அர­சி­ய­ல­மைப்பு என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன், பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆகியோர் விளக்­க­ம­ளிக்­கின்­றனர். 

ஆனால், ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது ஏற்­க­னவே நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்­பின்­படி, ஒற்றை முறை­மையைக் கொண்­ட­தாகும் என்­பது சட்­டத்­துறை சார்ந்­த­வர்­களின் விளக்­க­மாகும். ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது ஒற்­றை­யாட்­சியைக் குறிப்­பது. ஒரு­மித்த நாடு என்­பது பிராந்­தி­யங்­களின் கூட்டு அர­சியல் முறையைக் குறிக்­கின்­றது என்று அவர்கள் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். 

எனவே, ஒற்றையாட்­சியின் கீழ் சாத்­தி­யப்­ப­டாத சமஷ்டி ஆட்சி முறைமை முறை­யான அதி­காரப் பகிர்வு என்­பது, ஏக்­கிய ராஜ்­ஜிய (ஒற்­றை­யாட்சி) – ஒரு­மித்த நாடு (பிராந்­தி­யங்­களின் கூட்டு) என்ற முரண்­பா­டான நிலையில் எவ்­வாறு சாத்­தி­ய­மாக முடியும்?

சொற்­களில் சூட்­சுமம்

ஒற்­றை­யாட்­சியைக் குறிக்­கின்ற யுனிட்­டரி ஸ்டேட் என்ற ஆங்­கிலச் சொல்லை அகற்­றி­விட்டு ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சிங்­களச் சொல்லை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதற்குத் தமிழில் ஒரு­மித்த நாடு என்று வியாக்­கி­யானம் கூறப்­ப­டு­கின்­றது. யுனிட்­டரி ஸ்டேட் என்ற ஆங்­கிலச் சொல்லைப் பயன்­ப­டுத்­தி­னா­லும்­சரி, புதிய அர­சி­ய­ல­மைப்பில் உரு­வாக்­கு­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­ப­டு­கின்ற ஆட்சி முறை குறித்து ஆங்­கி­லத்தில் குறிப்­பிட்­டா­லும்­கூட, அது அர­சியல் ரீதி­யாகக் குழப்­பத்தை விளை­விப்­ப­தாக அமையும் என்ற கார­ணத்­திற்­கா­கவே ஆங்­கி­லத்தைத் தவிர்த்து, ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சிங்­களச் சொல் முதன்­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் காரணம் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.  

ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது அன் டிவை­டபிள், இன்­டி­வி­டி­சிபிள் பிரிக்­கப்­பட முடி­யாத அல்­லது பிள­வு­பட முடி­யாத என்று ஆங்­கி­லத்தில் பொருள்­ப­டு­வ­தாக சட்­டத்­து­றை­யினர் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். 

சிங்­களச் சொல்­லா­கிய ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது ஒற்­றை­யாட்­சி­யையே குறிக்கும். எனவே சமஷ்டி முறைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பில் இட­மில்லை. சிங்­கள மக்­க­ளையும் சிங்­களத் தேசி­ய­வா­தி­க­ளா­கிய சிங்­கள அர­சியல் தீவி­ர­வா­தி­க­ளையும்  திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக, ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சிங்­களச் சொல்லை இரா­ஜ­தந்­திர ரீதியில் அரச தரப்­பினர் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். 

ஆனால், நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை அனைத்து விட­யங்­க­ளிலும் வழங்கிச் செயற்­பட்டு வரு­கின்ற தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையும், தலை­மைக்­கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சியும், சொற்­களில் உள்ள இந்த சூட்­சு­மத்தை, தமிழ் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­த­வில்லை. 

ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சிங்­களச் சொல்லால் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற புதிய ஆட்சி முறை என்று சொல்­லப்­ப­டு­கின்ற முறையின் கீழ், மத்­திய அர­சாங்­கத்­தினால், மீளப்­பெற முடி­யாத வகையில், தமிழ் மக்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற நம்­பிக்­கை­யூட்­டப்­ப­டு­கின்­றது. இந்த அர­சியல் செயற்­பாட்டின் தன்­மையை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைபு இன்னும் வர­வில்லை. ஆனாலும்.....

ஹஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சொல்லின் உண்­மை­யான அர­சியல் ரீதி­யான கருத்து என்ன என்­ப­தையும், ஒரு­மித்த நாடு என்­பதன் அர­சியல் ரீதி­யான உண்­மை­யான கருத்து என்ன என்­ப­தையும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனும், பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனும் அறி­யா­தி­ருக்கின்றார்கள் என்று கூற முடி­யாது.  

ஆனால் இந்த இரண்டு சொற்­க­ளுமே நேர் முர­ணா­னவை. இவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு புதி­யதோர் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மே­யானால், அது இப்­போ­துள்ள அர­சியல் சிக்­கல்­க­ளை­விட, அதிக சிக்­க­லான அர­சியல் நிலை­மைக்கே வழி சமைப்­ப­தாகும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

 

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த வகையில் இடைக்­கால அறிக்­கை­யொன்றே வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான உத்­தேச வரைபு இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அத்­த­கைய வரை­பு ­கு­றித்து இன்னும் முடிவு செய்­யப்­ப­ட­வு­மில்லை என்று அர­சாங்கத் தரப்­பி­னரும், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­காட்டல் குழு­வி­னரும் கூறு­கின்­றனர். 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைபு இன்னும் தயா­ரிக்­கப்­ப­டா­விட்­டா­லும்­கூட, அத னைத் தயா­ரிப்­ப­தற்­கான வழி­காட்­டி­யா­கவே இடைக்­கால அறிக்­கையில் விட­யங்கள் வெளி யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பில் அடிப்­ப­டை­யாக என்­னென்ன விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்­பதை .இந்த அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. எனவே, அடிப்­படை விட­யங்கள் நம்­பிக்­கை­யூட்­டத்­தக்­க­தா­கவும், ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தா­கவும் அமைந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சியம்.  

அடிப்­படை விட­யங்­களைக் குறிப்­பி­டு­கின்ற இடைக்­கால அறிக்கை முழு­மை­யாக விட­ யங்­களைக் கொண்­டி­ருக்க முடி­யாது என்ற வாதம் ஏற்­பு­டை­யதே. ஆயினும், அதில் கூறப்­ப­டு­கின்ற விட­யங்கள் பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் கேள்­வி­க­ளையும் எழுப்­பத்­தக்க வகை யில் அமைந்­தி­ருப்­பது வர­வேற்­புக்கு உரி­ய­தல்ல. அடிப்­படை விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்டு, அந்த விட­யங்கள் மேலும் விரி­வு­ப­டுத்­ தப்­ப­டு­வ­தற்­கு­ரிய விவாத வெளியைக் கொண் டி­ருக்க வேண்­டி­யது அவ­சியம்.  ஆனால் ஆட்சி முறை என்­பதே இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் அடிப்­ப­டையில் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. ஆட்சி முறையே சிக் கல் நிறைந்­த­தா­கவும், முரண்­பா­டு­டை­ய­தா­கவும் அமைந்­தி­ருக்­கு­மானால், புதிய அர சியல் அமைப்பு பிரச்­சி­னைக்குத் தீர்வு காணத் தக்­க­தாக அமையும் என்று நம்­பிக்கை கொள்­வது எப்­படி?  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு... ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மாற்றம், தேர்தல் முறையில் மாற்றம், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு என்ற மூன்று விட­யங்­களும் ஒரே நேரத்தில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான முயற்­சிக்கே ஆத­ரவு வழங்­கப்­படும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைகூறி­யி­ருந்­தது.  

ஆனால் இந்த மூன்று விட­யங்­களில் முதல் இரண்டு விட­யங்­களும் ஏற்­க­னவே தீர்வு காணப்பட்டுவிட்­டன அல்­லது ஓர­ள­வுக்குத் தீர்வு காணப்­பட்­டு­விட்­டன என்­பதே இப்­போ­தைய நிலை­யாகும். இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில், திருப்­தி­ய­ளிக்­கத்­தக்க வகையில் இன்னும் முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை. 

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிக்கு ஆத­ரவு வழங்க முன்­வந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வையே முதன்­மைப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் அர சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதே அதன் முக்­கிய நோக்­க­மா­கவும் அமைந்­தி­ருந்­தது.  

ஆயினும் சுய­நிர்­ணய உரிமை, பகி­ரப்­பட்ட இறை­யாண்மை, பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கின்ற அதி­யுச்ச அதி­கா­ரங்­களைக் கொண்ட சமஷ்டி ஆட்சி முறை என்­ப­வற்றை உள்­ள ­டக்­கி­ய­தா­கவே அர­சியல் தீர்வு அமைய வேண் டும் என்று மக்கள் மத்­தியில் தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பு ஆணித்­த­ர­மாக எடுத்­து­ரைக் கின்­றது. அரை­கு­றை­யான தீர்வை ஏற்றுக் கொள்ளமாட்டோம். அந்த வகையில் தமிழ் மக்களை ஏமாற்றமாட்டோம். தமிழ் மக்களை விற்கவும் மாட்டோம். அரைகுறை தீர்வை ஏற்றுக்கொண்டு யாருக்கும் விலைபோகவும் மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலை மையும், தமிழரசுக் கட்சியும் மக்கள் மத்தியில் சூளுரைத்து வருகின்றன.  

ஆனால் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் தமிழ்த்தேசிய கூட் டமைப்பின் சார்பில் பங்கேற்றுள்ள பிரதி நிதிகள் இருவரும் தமிழ் மக்களுக்கு நியாய மானதோர் அரசியல் தீர்வுக்காக உரிய முறை யில் குரல் கொடுத்தார்களா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. அவ்வாறு அவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றே வழிநடத்தல் குழு வில் இடம்பெற்றுள்ள எதிரணியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கருத்து கூறி யிருக்கின்றார்கள். அவர்களுடைய கருத்து களுக்கு உரிய முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் இருந்து மறுப்பு கருத் துக்கள் வெளியிடப்பட்டதாகத் தெரிய வில்லை.  அதேவேளை, வழிநடத்தல் குழுவின் கலந்துரையாடல்கள், விவாதங் களில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை கள் உரிய முறையில் முன்வைக்கப்பட்டி ருந்தால், அவற்றின் அம்சங்கள் இடைக்கால அறிக்கையில் வெளிப்பட்டிருக்க வேண் டும். அவ்வாறு அவைகள் உரிய முறையில் வெளிப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை. மாறாக அடிப்படையையே தகர்க்கத்தக்க வகையில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங் களச் சொல் பயன்படுத்தப்பட்டு, ஏற்க னவே நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி முறைமையை மேலும் இறுக்கமாக பேணுவத ற்கே வழி சமைக்கப்பட்டிருக்கின்றது.  எனவே, அரசியல் தீர்வுக்கான இந்த அரசியல் நிலைமையானது தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் மிகவும் மோசமானது. சூட் சுமமான சொற்களில் அரசியல் தீர்வு சிக்கியுள்ளதன் மூலம், தமிழ் மக்களுக்கு மோசமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பின்னடைவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை துணை போயுள்ளதோ என்ற சந்தேகத்தையும் இப் போதைய நிலைமை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.  

பி.மாணிக்கவாசகம்

 

http://epaper.virakesari.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.