Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலை மாணவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் மட்டுமே சந்திப்பு!

Featured Replies

யாழ் பல்கலை மாணவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் மட்டுமே சந்திப்பு!

 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் 4 மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே தற்போது சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் பல்கலை மாணவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் மட்டுமே சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரே மாணவர்களுடன் பேச்சு நடத்துகின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்ட கூடாரத்துக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.
இந்நிலையில் அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவெடுக்க தம்முடன் பேச வருமாறு மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் மாணவர்கள் அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/People-s-representatives-meet-University-students

  • தொடங்கியவர்

தமிழ் கைதிகளின் போராட்டத்தை கைவிடுமாறு கோரத் தீர்மானம்

p5-ce2ce3fd6807996f5ac2e3932dc3aba850dac729.jpg

 

(ரி.விரூஷன்)

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொட ர்ச்சியான உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை கைவிடு  மாறு கோருவதற்கு தீர்மானிக்கப்பட் டுள்ளது. 

யாழ்.பல்கலைகழக மாணவர்களும் தமிழ் அரசியல் தலமைகளும் இன்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று இக்கோரிக்கையை முன்வைப்பதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

வவுனியா நீதிமன்றத்திற்கு மீண்டும் வழக்குகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பல்கலைகழக மாணவர்களாகிய தாமும் அரசியல் தலமைகளும் தொடர்ந்தும் பலவழிகளில் போராடி அக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்ற உறுதிமொழியை வழங்கியே இவ் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கோரப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியில் நேற்று யாழ்.பலகலைகழக மாணவர்களுக்கும் வடக்குகிழக்கை சேர்ந்த பாராளுமன்ற மாகாணசபை உறுப்பிணர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானமானது எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றில் தொடர் வழக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளானது சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி சட்டமா அதிபரினால் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றுக்கு மாற்ற வேண்டும் என்று மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் இன்று 35 நாட்களையும் தாண்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இவ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கி அதற்குள் தீர்வு வழங்குவதாக கூறியிருந்தார். இருந்தபோதிலும் ஜனாதிபதி அவ்வாறு செய்திருக்கவில்லை.

இதனை தொடர்ந்து தமது கோரிக்கையான, உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை மீளவும் வவுனியா நீதிமன்றுக்கு மாற்ற வேண்டும், எனைய கொடூரமான வழக்குகளின் கைதிகளோடு அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருக்ககூடாது என்ற இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கோரி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் யாழ்.பல்கலைகழகத்தை முற்றாக முடக்கி ஜந்து நாட்களாக கொட்டும் மழைக்கும் மத்தியில் போராடியிருந்தனர்.

இப் போராட்டத்தின் ஒரு கட்டமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்றைய தினம் யாழ்.பல்கலைகழகத்திற்கு வந்து அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இத்தீர்மானத்தின் படி நேற்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் இக் கலந்துரையாடல் ஆரம்பமாகிய போது அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்கதி ஆனந்தன், சிறிலங்கா சுதந்திரகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஈழமக்கள் ஜனநாயகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஆகியோருடன் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் மற்றும் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்திலேயே கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்றைய தினம் முடித்துவைப்பது என்றும் கோரிக்கை நிறைவேறும்வரை தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டம் தொடரும்.

இதேவேளை அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்ட பின்னரும், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தாம் பல்வேறு வடிவங்களிலான தொடர் போராட்டங்களை மேற்கொள்வோம் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் குறித்த கலந்துரையாடலுக்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டிருந்தனர். இதில் தமழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக கலந்துகொண்டிருந்தார். ஏனைய மூன்று அங்கத்துவ கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை. 

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.