Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கானல் நீராக காணப்படும் தமிழர்களுக்கான தீர்வு வர­லாற்­றுத்­துறை தகைசார் பேரா­சி­ரியர் எஸ்.சத்தி­ய­சீலன்

Featured Replies

கானல் நீராக காணப்படும் தமிழர்களுக்கான தீர்வு

 

வர­லாற்­றுத்­துறை தகைசார் பேரா­சி­ரியர் எஸ்.சத்தி­ய­சீலன்  கேசரிக்கு  பேட்டி

நேர்காணல்:  சு.கமலேஸ்வரன்

 

இலங்­கை­யி­னு­டைய சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியை பார்க்­கின்­ற­பொ­ழுது. பத­விக்கு வந்த எந்­த­வொரு அர­சாங்­கமும் தமிழ் மக்­களை ஏமாற்றும் செயற்­பாட்டில் இருந்து முரண்­பட்­டி­ருக்­கவில்லை. மாறி­மாறி அதி­கா­ரத்­தினைப் பெற்­றுக்கொண்டவர்கள் தங்­க­ளு­டைய இருப்பை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக பேரி­ன­வா­தத்­தினை முன்­வைத்­துள்­ளனர். தமி­ழர்­க­ளு­க்­கான தீர்வு என்­பது கானல் நீரா­கவே காணப்­ப­டு­கின்­றது. இதனால் தமிழ் மக்­களின் எதிர்­கால நிலை கேள்வி குறி­யா­கவே அமையும் என வர­லாற்­றுத்­துறை தகைசார் பேரா­சி­ரியர் எஸ்.சத்தி­ய­சீலன் தெரி­வித்தார்

தற்­கா­லத்தின் அர­சியல் நிலை தொடர்­பா­கவும், தமி­ழர்­களின் வர­லாற்று ஆதா­ரங்கள் தொடர்பாக அவர் வழங்­கிய செவ்­வி­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் இதன்­போது தெரி­வித்த கருத்­துக்கள் பின்­வ­ரு­மாறு 

கேள்வி: வர­லாற்றுத் துறையில் பல காலம் சேவை­யாற்றி இருக்­கின்­றீர்கள் இத்­து­றை­சார்ந்த  உங்­க­ளது அனு­ப­வங்­களை பற்றி கூறுங்கள்?

பதில்: பேரா­தனை யாழ்.பல்­கலைக் கழ­கத்தில் வர­லாற்­றுத்­து­றையில் சிறப்­பு­க்கலை கற்­கை­யினை  முடித்துக் கொண்டு 1975 ஆம் ஆண்டு யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் உதவி விரி­வு­ரை­யா­ள­ராக எனது சேவையை ஆரம்­பித்த நான் படிப்­ப­டி­யாக பதவி உயர்­வு­களைப் பெற்று பேரா­சி­ரி­ய­ராக பின்னர் தகைசார் பேரா­சி­ரி­ய­ராக உயர்வு பெற்று 44 வரு­டங்கள் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வரலாற்றுத் துறையில் சேவை­யாற்றி தற்­போது ஓய்வு பெற்­றி­ருக்­கின்றேன். இந்த காலப்­ப­கு­தி­யிலே எனது துறை­சார்ந்து நவீன வர­லாற்றை 1000க் கணக்­கான மாண­வர்­க­ளுக்கு போதித்து முது­க­லை­மாணி, தத்­து­வ­மாணி பட்­டங்­களை மேற்­பார்வை செய்து ஆய்­வா­ள­ராக இருந்து கட­மை­களை ஆற்­றி­யுள்ளேன். 15ற்கு மேற்­பட்ட நூல்­க­ளையும் நூற்­றுக்கு மேற்­பட்ட கட்­டு­ரை­க­ளையும் எழு­தி­யுள்ளேன். 

மற்றும் யாழ்.­பல்­க­லைக்­க­ழக வர­லா­ற்றுத்­துறை தலை­வ­ரா­கவும் இருந்து  பல்­க­லைக்­க­ழக உயர்­பட்­ட­ப­டிப்­பு­க­ளுக்­கு­ரிய பீடா­தி­ப­தி­யாக 6 ஆண்­டு­களும் கடமை­யாற்­றி­யுள்ளேன். வர­லாற்­றிலே என்­னு­டைய துறை­யாக நவீன வர­லாற்­றி­னையும் தென்­ஆ­சிய நவீன வர­லாற்­றி­னையும்  உல­க­ளா­விய அர­சியல் சம்­பந்­த­மான விட­யங்­க­ளிலும் ஆர்வம் கொண்­டுள்­ள­வ­னாக இருப்­ப­தோடு சர்­வ­தேச விவ­கா­ரங்­க­ளிலும் எனது ஈடு­பா­டு­களை காட்­டி­வ­ரு­கின்றேன்.

கேள்வி: தற்­கா­லத்தில்  வர­லாற்று பாடம் முக்­கி­ய­மா­ன­தொன்­றாக கரு­து­கின்­றீர்­களா? அவ்­வா­றெனில் அதனை மாண­வர்கள் கற்­க­வேண்­டி­யதன் அவ­சியம் என்ன?

பதில் :இன்று உலகில் உள்ள பல நாடு­களில் தோன்­றி­யி­ருக்கும் அடிப்­ப­டைக்­கா­ரணம் என்­ன­வென்றால் உண்­மை­யான வர­லாறு தெரி­யாமல் வர­லாறு பற்றி கதைப்­ப­தாகும் அல்­லது கூறு­வ­தாகும். அந்த வகை­யிலே ஒரு மனி­த­னுக்கு தன்­னைப்­பற்­றிய வர­லாறும்  தனது சமூ­கத்தை பற்­றிய வர­லாறும், உல­கத்­தைப்­பற்­றிய வர­லாறும், அறிந்­தி­ருக்க வேண்­டி­யது தெரிந்­தி­ருக்­க­வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும். இன்று வர­லாற்றை கற்­ற­வர்கள் வர­லாற்றை பேசாமல் இருக்க வர­லாறு கற்­கா­த­வர்கள் வர­லாற்றில் பல விட­யங்கள் பற்றி உள­றிக்­கொண்டு இருக்கின்­றனர். இன்று இலங்­கை­யிலும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற பிரச்­சி­னை­களை இந்த அடிப்­ப­டை­யிலே கொள்­ள­வேண்டும். அந்த வகையில் வர­லாற்­றினை முறை­யாக கற்­ப­தென்­பது தற்­கா­லத்தில் இன்­றி­ய­மை­யா­த­தொன்­றாகும்.

கேள்வி:வடக்கு கிழக்கில் காணப்­ப­டு­கின்ற வர­லாற்று தட­யங்கள் தமி­ழரின் பூர்­வீக வர­லாற்றில் செல்­வாக்கு செலுத்­து­வ­தாக அமைந்­துள்­ளதா?

பதில்: நீண்­ட­கா­ல­மா­கவே இலங்­கையில் ஏற்­பட்ட குடி­யேற்­றங்கள் தென்­னிந்­தி­யாவில் இருந்து இடம்­பெற்ற குடி­யேற்­றங்­க­ளா­கத்தான் கரு­தப்­ப­டு­கின்­றது. வடக்கு கிழக்­கு தென்­னிந்­தி­யா­வுக்கு அண்­மை­யாக அமைந்­துள்­ளதன் கார­ண­மாக தென்­னிந்­தி­யா­விலே ஏற்­பட்ட அர­சியல், பொரு­ளா­தார, சமூக, கலா­சார செல்­வாக்­குகள் இந்த பிர­தே­சங்­களில் ஏற்­பட்டு இருந்­தன.

 எனவே தமி­ழ­கத்தின் செல்­வாக்கு இப்­பி­ர­தே­சங்­களில் ஏற்­பட்டு இருப்­ப­தற்­கான தட­யங்கள் இங்கு அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. அந்த வகையில் வட­கி­ழக்கு பிர­தே­சங்­களில் நீண்­ட­கா­ல­மாக தமி­ழ­ரு­டைய செல்­வாக்கு உட்­ப­ட்டி­ருந்­தது. அந்த வகையில் போத்­துக்­கேயர் இலங்­கையை கைப்­பற்­றிய காலத்தில் இருந்து பின்னர் ஒல்­லாந்­தரின் ஆட்­சி­ ஈறாக வடக்கு கிழக்கு பிர­தே­சங்கள் தமி­ழ­ரு­டைய அடை­யா­ளங்­களை கொண்­டி­ருந்த பிர­தே­சங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.

ஆரம்ப காலத்தில் இலங்­கையில் பௌத்தம் பர­விய பொழுது தமிழ் பௌத்­தர்கள் வட­, கி­ழக்­கிலே வாழ்ந்­தி­ருக்­கின்றனர் அவர்கள் ஆரம்­பத்தில் இந்­து­மதத்தில் இருந்து பௌத்த மதத்­திற்கு உட்­பட்­ட­வர்­க­ளாக இருந்­தி­ருக்­கின்­றார்கள். ஆனால் காலப்­போக்கில் இந்த நில­மை­மாறி மீண்டும் இந்­துக்­க­ளு­டைய செல்­வாக்கு இந்த பகு­தி­க­ளிலே ஏற்­பட்டு இருக்­கின்­றது. இதனை காட்­டு­வ­தற்­கான ஆதா­ரங்கள் இங்கு நிலை­பெற்று இருக்­கின்­றது.

கேள்வி:இவ்­வாறு காணப்­ப­டு­கின்ற பெறு­ம­தி­மிக்க வர­லாற்று தடை­யங்கள் தற்­கா­லத்தில் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­ற­னவா? 

பதில்: வட­கி­ழக்­கிலே பல இடங்கள் தொல்­லியல் வர­லாற்­றினை வைத்து முக்­கி­ய­மான இடங்­க­ளாக நாங்கள் கொள்­ளலாம். பௌத்த மதத்­தி­னு­டைய வரு­கை­யோடு இலங்கை வர­லாறு தொடங்­கு­வ­தாக பௌத்த நூல்கள் கூற, அதற்கு முற்­பட்ட காலத்தில் இலங்­கை­யிலே இந்து மதத்­தி­னு­டைய செல்­வாக்கு இருந்­தி­ருக்­கின்­றது என்­ப­தற்கு நிறைய ஆதா­ரங்கள் கிடைக்­கின்­றன. புத்தர் இலங்­கைக்கு மூன்று முறை வருகை தந்த­தா­கவும் ஒரு­முறை நாக­தீ­பத்­திற்கு வருகை தந்­த­தாக பாளி இலக்­கி­யங்கள் குறிப்­பி­டு­கின்­றது. அவ்­வாறு புத்தர் வருகை தந்­ததன் நோக்கம் இலங்­கையில் நாக­தீ­பத்தில் இருந்த அர­சர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தற்­காக என்று மகா­வம்சம் குறிப்­பி­டு­கின்­றது. இதனை உற்­று­நோக்கும் போது பௌத்தம் வரு­வ­தற்கு முன்பே இங்கு அரச இருக்­கையும் நாக­ரி­கமும் சிறப்­புற்று இருந்­ததை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. 

 அது­மட்­டு­மல்ல இங்கு நாகர்கள் இந்த பிர­தே­சத்­தி­னு­டைய பூர்­வீக குடி­க­ளாக வாழ்ந்­தி­ருக்­கின்­றனர். பெளத்தம் இலங்­கைக்கு வந்த பிற்­பாடு நாகர்­க­ளு­டைய அடை­யா­ளங்கள் அழிக்­கப்­பட்டு புத்­த­ருக்கு பாது­காப்பை வழங்­கு­கின்ற சின்­னங்­க­ளாக நாகர் சின்­னங்கள் மாற்­றப்­பட்­டுள்­ளன. பௌத்த சிற்­ப­ம­ரபை எடுத்து பார்த்தால் நாக­தே­வ­தையின் பாது­காப்பின் கீழே புத்­தரும் நாக­தே­வ­தையும் இருப்­ப­தான சிற்­பங்­களை நாங்கள் கண்டு கொள்­ளலாம். இது நாக­ரு­டைய வர­லாற்றை பௌத்­தர்­க­ளுக்­குள்ளே உள்­வாங்­கப்­ப­டு­வ­தற்­கான ஒரு வெளிப்­பா­டா­கத்தான் இதனை பார்க்க முடியும். 

இத­னை­விட பௌத்­தர்­க­ளு­டைய வரு­கைக்கு முன்­பாக இங்கு பெருங்­கற்­கா­லத்­தைச் சேர்ந்த பல்­வேறு தொல்­லியல் முக்­கி­யத்­துவம் வாய்ந்த பிர­தே­சங்கள் காணப்­ப­டு­கின்­றன. வட­கி­ழக்­கிலே இவை நிறை­யவே காணப்­ப­டு­கின்­றது. ஆனைக்­கோட்டை, காரை­நகர், வேல­ணை­யில்­சாட்டி, மட்­டக்க­ளப்பு,திரு­கோ­ண­மலை ஆகிய பிர­தே­சங்­களில் இவ்­வா­றான நிறைய அடை­யா­ளங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் தொல்­லியல் துறை­யிலே ஆய்­வு­களை மேற் கொள்­வ­தற்கு இலங்கை அர­சி­னு­டைய இறுக்­க­மான சட்­ட­திட்­டங்கள் தடை விதிப்­ப­த­னாலே இவற்றை ஆழ­மான ஆய்­வுக்கு உட்­ப­டுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. பௌத்த வழி­பாட்டு இடங்­க­ளு­டைய அழி­பா­டுகள் கிடைக்­கின்ற இடத்து அவற்றை பௌத்த மதத்­தோடும் சிங்­கள இனத்­தோடும் இணைத்து பார்க்­கின்ற ஒரு தவ­றான போக்கு இலங்கை அர­சினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. கந்­த­ரோ­டை­யிலே,நாக­தீ­பத்­திலே,சம்­பூ­ரிலே போன்ற இடங்­க­ளிலே அவ்­வா­றான அடை­யா­ளங்­களை காட்டக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. இதுதான் தற்­போ­தைய நிலைப்­பா­டாக உள்­ளது.

கேள்வி:தற்­போது வர­லாற்று ஆதா­ரங்­களை பாது­காப்­பதில் அரசு கொண்­டுள்ள ஈடு­பாடு பற்றி கூற­மு­டி­யுமா?

பதில்: இதில் அடிப்படை உண்மை இருக்­கின்­றது. தொல்­லியல் ஆதா­ரங்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். மனி­த­கு­லத்தினுடைய கடந்த கால­வ­ர­லாற்றை எடுத்­தி­யம்­பு­கின்ற சான்­று­க­ளாக இருக்­கின்­றன. ஆனால் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் இவ்­வா­றான ஆதா­ரங்­களை ஒரு இனத்­துடன் மாத்­திரம் தொடர்­பு­ப­டுத்தி கூறு­வது வேத­னை­யான விட­ய­மாகும். உங்­க­ளுக்குத் தெரியும் தமி­ழி­லே தோற்றம் பெற்ற பௌத்த காப்­பி­ய­மாக மணி­மே­கலை காணப்­ப­டு­கின்­றது. ஆனால் இலங்­கையில் வட­கி­ழக்கில் காணப்­ப­டு­கின்ற பௌத்த சின்­னங்­களை கண்­ட­வுடன் அவை சிங்­கள பௌத்­தத்­தோடு தொடர்­பு­ப­டுத்தி அரசு அதனை தங்­க­ளது கட்­டுப்­பாட்­டுக்­குள்ளே கொண்டு வரு­கின்­றது. மிகச்­சி­றந்த உதா­ரணம் யாழ்ப்­பா­ணத்தில் கந்­த­ரோ­டையில் காணப்­ப­டு­கின்ற வர­லாற்று சின்­னங்­களை இவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்தி பாது­காத்து வரு­கின்­றனர். 

வட­கி­ழக்கு பிர­தே­சத்தில் இரா­ணு­வத்தின் மேலா­திக்­கத்­தி­னூ­டாக தனியார் காணி­க­ளிலே பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. பழம்­பெரும் திருக்­கே­தீச்­ச­ரத்தின் முன்­பாக அதே­போல கோணேஸ்­வர கோயிலின் கீழ் மட்­டத்­திலே, ஏ9 வீதி ஓரங்­க­ளிலே இவ்­வா­றாக பல இடங்­களில் அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றன. பௌத்த மதத்­தினை தமி­ழர்கள் எவரும் எதிர்க்­க­வில்லை பௌத்த மதம் இந்து மதத்தில் இருந்துதான் தோற்றம் பெற்­றது. ஆனால் இரா­ணுவத்தின் பாது­காப்­போடு தனி­யா­ரு­டைய காணி­க­ளிலே இந்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­வது ஒரு இனத்தினுடைய நட­வ­டிக்­கை­யாக அமைகின்­றது. இந் நிலை மாற்­றப்­பட்டு சகல ஆதா­ரங்­களும் சம­னாக பாது­காக்­கப்­பட வேண்டும்.

கேள்வி:வட­கி­ழக்கு பிர­தே­ச­ங்­களை தவிர இலங்­கையின் ஏனைய பிர­தே­சங்­களில் காணப்­படும் தமி­ழர்கள் வர­லாறு தொடர்­பான தொல்­லியல் ஆதா­ரங்கள் பற்றி கூறுங்கள்  

பதில்: பௌத்த மதத்தின் வரு­கைக்கு முன்­பாக இலங்கை முழு­வ­தி­லுமே  பெருங்­கற்­கால பண்­பாடு காணப்­பட்­டது. இது திரா­விட நாக­ரி­கத்­தோடு தொடர்பு கொண்­டது. விவ­சாயம்,குள­நநீர்ப்பா­சனம்,மீன்­பிடி,மட்­பாண்­டங்கள் இத­னு­டைய அடை­யா­ளங்­க­ளாகும். இந்த அடை­யா­ளங்கள் கரை­யோ­ரங்­களை அண்­டி­ய­தாக புத்­த­ளத்­திலே, சிலா­பத்­திலே, கதி­ர­வெ­ளி­யிலே, மட்­டக்­க­ளப்­பிலே, அம்­பாந்­தோட்­டை­யிலே  பர­வ­லாக காணப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு காணப்­ப­டு­கின்­ற­வற்றை வெளிப்­ப­டு­த்தாது உள்­ளனர். அவ்­வாறு வெளிப்­ப­டுத்­தினால் பௌத்தம் இலங்­கைக்கு வரு­வ­தற்கு முன்னர் இலங்­கையில் நாக­ரி­க­மான சமுதாயம் இருந்­தமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டு­விடும் என்ற அச்­சத்தில் அவற்றை  இலங்கை அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­தாது உள்­ளது.

 உதா­ர­ண­மாக பென்­சில்வே­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருந்­து­வந்த லுவ­லா­வேட்ளி தலை­மையில்  கந்­த­ரோ­டையில்  மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் முடி­வுகள் நீண்­ட­கா­ல­மா­கவே வெளிப்­ப­டுத்­தப்­ப­டாமல் இருக்­கின்றன இவ்­வாறு இலங்­கை­யி­னு­டைய பல பாகங்­க­ளிலும் ஐரோப்­பிய அறி­ஞர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு விட­யங்­கள்­வெ­ளிப்­ப­டுத்­தப்­ப­டாமல் இருப்­ப­தற்கு ஒரே காரணம் இலங்கைத் தீவு தங்­க­ளுக்கு உரி­யது என்ற நிலைப்­பாடு மாறி­விடும் என்ற அச்­சமே கார­ண­மாகும்.

கேள்வி: வர­லாற்று ரீதி­யாக இலங்கை இந்­திய உறவு பேணப்­பட்­டுள்­ள­தா­கவும் இந்­தி­யாவின் ஆதிக்கம் இலங்­கையை பிர­தி­ப­லித்­த­தா­கவும் கூறப்­ப­ட­வ­துடன் தற்­போதும் அந் நிலை தொடர்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

 பதில்:  பண்­டைய கால நிலை­மை­க­ளோடு இன்­றைய கால நிலைமை­களை ஒப்­பிட்டு பார்ப்பது தவ­றா­ன­தாகும். இப்­பொழுது இந்­தியா ஒரு தனி­நா­டாக காணப்­ப­டு­கின்­றது. ஆதி­கா­லத்­திலே இந்த சிந்­தனை இந்­திய தீப­கற்பத்­திலே இருந்த மக்­க­ளுக்கு இருக்­க­வில்லை. தனி­யான இராச்­சி­யங்­களும் மொழி அடை­யா­ளங்­களும், தனி­யான மத அடை­யா­ளங்­களும் பல கூறு­க­ளா­கவும் பிரிந்­தி­ருந்­தது. இதனால் தென்­னிந்­தி­யாவில் எற்­பட்ட மாற்­றங்கள் எல்லாம் இலங்­கையில் செல்­வாக்­குக்கு உட்­பட்­டி­ருந்­தது ஆனால் தற்­போ­தைய இந்­தி­யாவின் நிலைமை வேறா­க­வுள்­ளது. 

இப்­போது இந்­தியா ஒரு­மித்த இந்­தியா ஒட்­டு­மொத்த இந்­தி­யாவின் நலன்­களை கொண்­டுதான் தனது வெளி­நாட்டு கொள்­கையை உரு­வாக்கி இருக்­கின்­றது. அத­னாலே  வர­லாற்று காலங்­களில் ஏற்­பட்ட மாற்­றங்­களை அது கவ­னித்துக் கொள்­வ­தில்லை அத­னால்தான் இன்று இந்­தி­யாவின் வெளி­நாட்டு கொள்­கை­யிலே இலங்கை வாழ் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை பெரி­தாக கொள்­வ­தான தன்மை காணப்­ப­டு­வ­தில்லை 

கேள்வி: இலங்­கையில் நீண்­ட­கா­ல­மாக நிலவி வரு­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்பாக தங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில்: இலங்­கையில் இருக்­கின்ற ஆட்­சி­யா­ளர்கள் தூர­நோக்­கோடு செயற்­ப­டு­வ­தாக இருக்­க­வில்லை. அவர்கள் தேர்தல் மூலம் அதி­கா­ரத்­தினைக் கைப்­பற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­யில்தான் ஈடு­பட்டுக் கொண்டு இருக்­கின்­றார்கள். இதற்­காக பெரும்­பான்மை மக்­க­ளி­டையே பௌத்த சிங்­கள அடை­யா­ளங்­களை பாது­காக்­கின்­ற­வர்­க­ளாக காட்­டிக்­கொள்ள வேண்­டிய தேவை அவர்­க­ளுக்கு இருக்­கின்­றது. 

மற்­றைய நாடு­க­ளிலே அர­சியல்,பொரு­ளா­தாரம் போன்ற பிரச்­சி­னைகள் முக்­கியம் பெற்­றி­ருக்க இலங்­கை­ போன்ற மூன்றாம் உலக நாடுகள் சில­வற்­றி­டையே மதத்­தையும் மொழி­யையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஒரு பேரி­ன­வாத உணர்வை மக்­க­ளி­டையே கொடுத்து அதன்­மூலம் அதி­கா­ரத்­தினை கைப்­பற்றி கொள்ளும் நோக்கு காணப்­ப­டு­கின்­றது. 

 இலங்­கை­யி­னு­டைய சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியை பார்க்­கின்­ற­பொ­ழுது. பத­விக்கு வந்த எந்­த­வொரு அர­சாங்­கமும் மேற்­கு­றித்த செயற்­பாட்டில் இருந்து முரண்­பட்­டி­ருக்­வில்லை. மாறி­மாறி அதி­கா­ரத்­தினைப் பெற்­றுக்கொண்;டவர்கள் தங்­க­ளு­டைய இருப்பை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக பேரி­ன­வா­தத்­தினை முன்­வைத்­துள்­ளனர். தற்­பொ­ழுது கூட பௌத்த சங்­கங்கள் பிக்­குகள் அர­சி­ய­லிலே வேண்­டத்­த­காத வகையில் தலை­யிட்டு இந்த நாட்­டி­னு­டைய எதிர்­கால முன்­னேற்­றத்தை தடை­செய்­ப­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். தோல்வி அடைந்­த­வர்­களும் இந்த கயிற்றை இறு­கப்­பி­டித்துக் கொண்டு மீண்டும் அர­சி­ய­லுக்கு வர­மு­யற்­சிக்­கின்­றனர். பெரு­ம்­பான்மை இன­மாக சிங்­கள பௌத்­தர்கள் இருப்­ப­தாலே சிறு­பான்மை இன­மா­கிய தமிழர்­களோ அல்­லது முஸ்­லிம்­களோ அவர்­க­ளுக்கு எதி­ராக போராடி வெற்­றி­பெ­று­வ­தென்­பது இய­லாத காரி­ய­மாக இருக்­கின்­றது

கேள்வி: தமிழ் மக்­களின் தீர்வு விடயம் தொடர்பில் தற்­போ­தைய தமிழ்த் தலை­மை­க­ளி­டையே  மாறு­பட்ட கருத்­துக்கள் நிலவி வரு­கின்­றன இது தொடர்­பாக உங்கள் கருத்து என்ன?

பதில்:-­சு­தந்­தி­ரத்­திற்கு பின்­பாக தமிழ்க் கட்­சிகள் அமை­தி­யான முறை­யிலே மக்­களின் நலன்­களை பாது­காக்க முற்­பட்­டனர். சமஷ்டி கோரிக்­கையை முன்­வைத்து அவர்கள் அகிம்சை வழி­யிலே போரா­டி­னார்கள். அந்த நோக்கை பௌத்த சிங்­கள பெரும்­பான்மை மக்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. சமஷ்டி என்­ப­தனை அவர்கள் தனி­நா­டா­கத்தான் கரு­தி­னார்கள். பல­த­ரப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றன தோல்வி அடைந்­தன. 1989 இலங்கை இந்­திய ஒப்­பந்தம் ஒன்று இடம்­பெற்­றது. அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் இலங்கை அரசு அக்­கறை காட்­ட­வில்லை இதன் அடிப்­ப­டையில் அமை­திப்­படை வெளி­யே­றிய பிற்பாடு  மீண்டும் இரா­ணு­வ­ரீ­தி­யான போராட்டம் ஒன்று தமிழ் அர­சி­ய­லிலே ஆரம்­பித்­தது. 

அந்த போராட்­ட­மா­னது முப்­­பது வரு­ட­மாக தொடர்ந்­தது. இறு­தியில்  முள்­ளி­வாய்க்­கா­லிலே சர்­வ­தேச வல்­ல­ர­சு­களின் செயற்­பா­டு­க­ளினால் மௌனிக்­கப்­பட்­டது. இந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு முடி­கின்ற கட்­டத்தில் இருக்­கின்­றது. எந்­த­வி­த­மான முன்­னேற்­றங்­களும் தமிழ் மக்­களின் அர­சி­ய­லிலே ஏற்­ப­ட­வில்லை. சர்­வ­தேச  நாடு­களும் தங்­க­ளது நலன்­க­ளுக்­காக தங்­க­ளது ஆதிக்­கத்தை நிலை­நி­றுத்திக் கொள்­வ­தற்­காக செயற்­பட்டு வரு­கின்­றார்கள். ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் ஜெனிவா தீர்­மா­னங்­களும் செயற்­ப­டாத விட­யங்­க­ளாக போய்க்­கொண்டு இருக்­கின்­றது. இலங்­கையில் இருக்­கின்ற தமிழ்த் தலை­வர்கள் பலர் களைத்­து­போய்­விட்­டார்கள். வயது வந்­து­விட்­டது. இந்த தோல்­வி­களை அவர்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நிலைமை வந்­து­விட்­டது.

 தற்­பொ­ழுது எதிர்க்­கட்சி தலைவர் போது­மென்ற அடிப்­ப­டையில் செயற்­பா­டுகள் போய்க்­கொண்டு இருக்­கின்­றது. அர­சியல் தலை­மைகள் தவறு விட்­ட­த­னா­லேயே மக்கள் வீதியில் இறங்கி போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். காணாமல் ஆக்­கப்­பட்­டோர், நில­மி­ழந்தோர், சிறை­யில்­வா­டுவோர் என பல­த­ரப்­பட்­ட­வர்கள் நீதி­கோரி பல­த­ரப்­பட்ட போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். ஆனால் இவற்­றிலே தமிழ்த் தலை­மைகள் பெரி­தாக அக்­கறை காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. தீர்­வுத்­திட்டம் வரப்­போ­கின்­றது அவற்­றி­னையே மேற்­கொண்டு வரு­கின்றோம் இச்­சந்­தர்ப்­பத்தில் இவ் விட­யங்­களை நாங்கள் பெரி­து­ப­டுத்­தாது இருக்­க­வேண்டும் என்று கூறு­கின்­றனர். பின்னர் தீபா­வளி, பொங்கல் விழாக்­க­ளின்­போது அடுத்­த­வ­ருடம் எமக்கு தீர்வு கிடைத்­து­விடும் என்று கூறி அர­சாங்­கத்­திற்கு தாலாட்டு பாடிக்­கொண்டு இருக்­கின்­றார்கள். 

அர­சாங்கம் ஒரு தூர­நோக்­கு­டைய அர­சாங்­க­மாக இருந்­தி­ருந்தால் இந்த பிரச்­சி­னையை தீர்ப்­பது இல­கு­வான விடயம். இலங்­கையில் இரண்டு மொழி பேசு­கின்ற மக்கள், மூன்று மதங்கள் உள்­ளன. உல­கிலே எத்­த­னையோ மொழிகள் எத்­த­னையோ மதங்­களை கொண்ட நாடுகள் தங்கள் பிரச்­சி­னை­களை இல­கு­வாக தீர்த்­தி­ருக்­கின்­றது.  மனம் இருந்தால் இடம் உண்டு. ஆனால் மனமும் இல்லை இடமும் இல்லை. அத­னாலேயே இப்­பி­ரச்­சினை தொடர்ந்து இழு­பட்டுக் கொண்டே செல்­கின்­றது. அரசி­ய­லிலே குறிப்­பிட்ட வய­தெல்­லையை கொண்­டு­வ­ர­வேண்டும். அல்­லா­த­வி­டத்து நடக்­க­மு­டி­யா­தர்கள் எழும்­ப­மு­டி­யா­த­வர்கள் தலை­மைத்­து­வத்தை கொண்­டி­ருந்தால் அது பலம் கொண்­ட­தாக இருக்­க­மு­டி­யாது மற்றும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை கொஞ்சம் கூட அறிந்­தி­ரா­த­வர்கள் தமிழ்த்­த­லை­மை­க­ளாக கொழும்­புக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­ற­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். எனவே தமிழ் மக்­களின் அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் நன்கு அறிந்­து­கொண்டு, புரிந்து கொண்டு செயற்­படக் கூடிய தலை­மையே இன்­றைய காலத்தின் தேவை­யாக உள்­ளது.

கேள்வி: தற்­போது அர­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் தீர்வு திட்டம் தொடர்பில் தமிழ்த் தலை­மையில் ஒரு­சாரார் மிகுந்த நம்­பிக்கை கொண்டு செயற்­ப­டு­கின்றனர் இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

  பதில்: இடைக்­கால அறிக்­கை­யிலே தமிழ்த் தலை­மை­கள்தான் மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளன. அதுவும் மிக­முக்­கி­ய­மாக கடந்த காலங்­க­ளிலே ஏமாற்­றப்­பட்ட தலை­வர்­கள்தான் இதில் நம்­பிக்கை கொண்­டுள்­ளனர். இடைக்­கால தீர்வு பற்றி ஒரு அள­விற்கு நம்­பிக்கை காணப்­பட்­டது. ஆனால் பெரும்­பான்மை மக்­க­ளு­டைய அர­சி­யல்­வா­தி­க­ளு­டைய நட­வ­டிக்­கைi­யினை கடந்து எழு­பது ஆண்­டு­க­ளாக நாங்கள் பார்க்­கின்­ற­பொ­ழுது அவர்கள் தமிழ் மக்­களை ஏமாற்­று­வ­தைத்தான் தங்­க­ளு­டைய கொள்­கை­யாக கொண்­டுள்­ளனர். எழு­பது ஆண்­டுகள் சேர்பொன். அரு­ணாச்­சலம் இலங்கை தேசிய காங்­கி­ரசை விட்டு விலகி தமிழர் மகா­ச­பையை உரு­வாக்­கிய காலத்தில் இருந்தே தமி­ழர்கள் இவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். யாழ்ப்­பாண காங்­கிர­சி­னு­டைய வளர்ச்­சியின்­போது கூட சுதந்­தி­ரத்­திற்­காக ஒன்­றா­க­போ­ராடி பின்னர் சிங்­கள பௌத்த நட­வ­டிக்­கைக்கு ஆட்­பட்­டு­கொண்­டனர். அந்த வகையில் தமி­ழர்­களை ஏமாற்­று­வது சிங்­கள தலை­வர்­களின் கொள்­கை­யாக காணப்­ப­டு­கின்­றது.  இந்­தி­யா­வினால் இலங்கை கைப்­பற்­றப்­பட்ட வர­லாற்றை வைத்துக் கொண்டு தற்­கா­லத்தில் பெரும்­பான்­மை­யினர் சிறு­பான்­மை­யி­ன­ரி­டத்தில் அச்சம் கொண்­டுள்­ளனர். 

அந்த வகை­யிலே என்­னு­டைய கருத்­துப்­ப­டியும் நீண்­ட­கால அனு­ப­வத்­தின்­ப­டியும்  தமி­ழ­ருக்கு அர­சியல் அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு சிங்­கள தலை­வர்கள் முன்­வ­ரப்­போ­வ­தில்லை. சில தலை­வர்கள் தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்ற நல்­லெண்­ணத்தில் இருக்­கின்­றனர். இவர்கள் குறை­வா­கவே இருக்­கின்­றனர். ஏனை­ய­வர்கள் மாறாக செயற்­ப­டு­வ­தையே இலங்கை அர­சி­யல்­காட்டி நிற்­கின்­றது.

எனவே தூர நோக்­கோடு இந்த இலங்­கையை வளர்க்க­வேண்­டு­மாக இருந்தால் அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே மன மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும். என்­பது எனது கருத்­தாகும். சமஷ்டி என்­ப­தனை கூடாத விட­ய­மாக பார்க்­க­வேண்டாம் உல­கிலே முன்­னே­றிய நாடுகள் பல பிரச்­சி­னை­களை சமஷ்டி முறை மூலம் தீர்த்­தி­ருக்­கின்­றது.  தற்­பொ­ழுது முன்னாள் ஜனா­தி­பதி தற்­போது துவேஷத்தை கக்­கி­வ­ரு­கின்றார், அது­மாத்­தி­ர­மின்றி பௌத்த அமைப்­புக்கள் பலவும், இதற்கு எதி­ரான கருத்­தினை வெளி­யிட்டு வரு­கின்­றனர் எனவே இது ஒரு சிக்­க­லான விட­ய­மாகும். ­ இதனால் அர­சாங்கம் தீர்வு விட­யத்தில் தற்­போது பின்­னோக்கி செல்வதனை அவதானிக்க முடிகின்றது. 

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.