Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்சத்திர ஓட்டல் சிறையில் சவுதி இளவரசர்கள்: ஆட்சிக்கட்டிலுக்கான குடும்ப அரசியலால் மன்னரின் சூழ்ச்சி?

Featured Replies

நட்சத்திர ஓட்டல் சிறையில் சவுதி இளவரசர்கள்: ஆட்சிக்கட்டிலுக்கான குடும்ப அரசியலால் மன்னரின் சூழ்ச்சி?

 

02CHPMUMUSTAFIZURRAHMAN

இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல்.

08CHSKOTALAL

அல்-வலீத் பின் தலால்   -  Reuters

08chskohotel

இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல்.

02CHPMUMUSTAFIZURRAHMAN

இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல்.

08CHSKOTALAL

அல்-வலீத் பின் தலால்   -  Reuters

சவுதி அரேபியாவின் ஊழல் புகாரில் கைதான 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஓட்டல்களில் சொகுசு கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை, அந்நாட்டின் ஆட்சிக்கட்டில் மீதான குடும்ப அரசியலால் நடத்தப்படும் மன்னர் சல்மான் பின் அப்துலஜீஸின் சூழ்ச்சி என சர்ச்சை கிளம்பியுள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் பெரும் பரபரப்புக்குள்ளானது. அன்றைய தினம் அதன் மன்னர் சல்மான் பின் அப்துலஜீஸ் அல் சவுதாலால் அமர்த்தப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையம் உருவான சில மணி நேரங்களில் அதிரடி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், சவுதி அரேபியாவின் 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பெருந்தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ’எம்பிஎஸ்’ என்றழைக்கப்படும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் (32) இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். கைது செய்யப்பட்டவர்களில் அரச குடும்பத்தின் அல்-வலீத் பின் தலால் வளைகுடா நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் முக்கியமான தொழிலதிபர் ஆவார். ஆப்பிள், ட்விட்டர், சிட்டி குரூப் ஆப் ஹோட்டல்ஸ், உட்பட பல முக்கிய பெருநிறுவனங்களில் அதிக முதலீடு செய்திருக்கிறார்.

இவருடன் கைதானவர்களில் தேசிய அரசவை பாதுகாப்பு அமைச்சர் மித்தாப் பின் அப்துல்லா, திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் அமைச்சர் ஆதில் பகே மற்றும் சவுதியின் கப்பற்படை கமாண்டரான சுல்தான் பின் முகம்மது அல் சுல்தான் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்த ஆணையத்தின் தலைவரான எம்பிஎஸ், சவூதி மன்னரின் மகன்.

உலக முஸ்லிம் நாடுகளில் நிலவி வரும் மன்னராட்சிகளில் இருந்து லேசாக மாறுபட்டது சவுதி அரேபியா. அந்த நாட்டின் ஆட்சியாளர் குடும்பத்தினர் இடையே கடைபிடிக்கப்படும் ஜனநாயகம் அல்லது அரசாட்சி முறையால் சவுதி வேறுபடுகிறது. தந்தைக்கு பின் மகன், இவருக்கு பின் பேரன் என அரசர்கள் அமர்த்தப்படுவதில்லை. மாறாக அரசவை குடும்பத்தார் இடையே அடுத்த அரசர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். தற்போது இந்த ஜனநாயகத்தில் தனது நேரடிக் குடும்பத்தை மட்டும் ஆட்சி பொறுப்பில் அமர்த்தும் பொருட்டு மன்னர் சல்மான் கைது நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், சவுதியின் எதிர்கால ஆட்சி தனது நேரடி வாரிசுகளின் கீழ் அமைவதற்காக மன்னர் சல்மானின் பெயரில் எம்பிஎஸ் எடுத்த நடவடிக்கை எனவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய நாட்டுக் கல்வித் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆரிப் ரிஜ்வீ, ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘ஜனநாயக நாட்டில் நிலவும் அளவிற்கு சவுதி குடும்பத்திலும் அரசியல் பிரச்சினைகள் எழுவது உண்டு. இது முதன்முறையாக அதன் அரண்மனைத் சுவர்களை தாண்டி வெளியே வந்துள்ளது. இதை அமெரிக்கா வரவேற்று இருப்பதை பார்த்தால் அதன் பின்னணியில் அந்நாட்டின் பங்கு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இதனால், கைது நடவடிக்கை மிரட்டல் அரசியலாகப் பார்க்கப்படுகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கும் அளவிற்கு போகாது எனக் கருதப்படுகிறது. ஏனெனில், அங்கு நடைபெறும் குற்றங்களுக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்படும் நீதிக்கான தண்டனைகள் மிகவும் கடுமையானது என்பது பலரும் அறிந்ததே’ எனத் தெரிவித்தார்.

 

சவுதியின் மன்னர் குடும்பம்

சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியாவில் பல்வேறு பழங்குடியினர் குழுக்களாக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து சவுதி அரேபியா நாடு 1930-ல் அமைக்கப்பட்டது. இதை உருவாக்கியவரான அப்துலஜீஸ் அல் சவூத் என்பவர் நாட்டுடன் தனது பெயரையும் சேர்த்து சவுதி அரேபியா என்றாக்கினார். அப்போது இருந்த சிறிய குடும்பத்தில் அடுத்த மன்னரான பட்டத்து இளவரசரை தேர்ந்தெடுப்பது எளிதாக இருந்தது. மற்ற இளைஞர்கள் அனைவரும் இளவரசர்களாக அமர்த்தப்பட்டு, அரசவையின் அமைச்சரவையிலும் இடம் பெறுகிறார்கள். இதில், அரசரின் சகோதரர் அல்லது சகோதரி மகன், பேரன் என யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். தற்போது ஆயிரக்கணக்கில் பெருகிவிட்ட மன்னரின் குடும்ப உறுப்பினர்களால் பட்டத்து இளவரசர் தேர்ந்தெடுப்பதில் பெரும் அரசியல் நிகழத் தொடங்கி விட்டது. தற்போதைய பட்டத்து இளவரசரான எம்பிஎஸ் கடந்த ஜுனில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது இடத்தில் இருந்த முகம்மது பின் நய்யிப் மீது போதை மருந்து உண்ணும் புகார் எழுந்ததால் அவரை மன்னர் சல்மான் பதவி நீக்கம் செய்தார். ஆனால், அதன் மீது இதுவரை எந்த விசாரணையும் அமைக்கப்படவில்லை. இதன் பின்னணியிலும் சவுதி குடும்பத்து மிரட்டல் அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது கைதாகி உள்ளவர்கள் அனைவரும் பட்டத்து இளவரசரான எம்பிஎஸ்-க்கு எதிரானவர்கள் எனவும், தனக்கு பின் மகன் மன்னராவதற்கு அவர்களால் எதிர்ப்பு கிளம்பும் என சல்மான் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒரு மிரட்டலாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தலைநகரான ரியாத்தில் உள்ள ஏழு, ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் அறைகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதின் மூலம் எதிர்ப்புகள் அடங்கிவிட்டால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என எதிர்நோக்கப்படு கிறது.

http://tamil.thehindu.com/world/article20002453.ece

  • தொடங்கியவர்

கைது செய்யப்பட்ட செளதி இளவரசர்களின் சிறைச்சாலையான சொகுசு ஹோட்டல்

செளதி இளவரசர்களுக்காக 'தங்கமுலாம்' சிறையாக மாறிய சொகுசு ஹோட்டல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலின் உட்புறம்

"உலகின் சிறந்த இடங்களில் மறக்க முடியாத பயண அனுபவங்கள் தரக்கூடிய ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள்" என்ற பெயரை பெற்றது ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல்கள்.

அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய நபர்கள் உயர்வகுப்பு சங்கிலி ஹோட்டல்களான ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் தங்குவார்கள். பணக்காரர்களின் இரண்டாவது வீடு போல இந்த ஹோட்டல்கள் இருக்கிறது.

ஆனால், செளதி தலைநகரான ரியாத்தில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல் தங்கமுலாம் பூசப்பட்ட சிறையாக மாறியுள்ளது எனச் செய்திகள் கூறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு முதல்முறையாக செளதி வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியிருந்த இந்த ஹோட்டல், தற்போது உலகின் மிக ஆடம்பரமான சிறையாக மாறியுள்ளது.

தீவிர பழமைவாத ராஜ்ஜியமான செளதியில், ஊழலுக்கு எதிரான களையெடுப்பு என செளதி அதிகாரிகள் விவரிக்கும் நடவடிக்கையில் 11 இளவரசர்களும், நான்கு அமைச்சர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செளதி இளவரசர்களுக்காக 'தங்கமுலாம்' சிறையாக மாறிய சொகுசு ஹோட்டல்படத்தின் காப்புரிமைREUTERS

தற்போது கைது செய்யப்பட்டவர்களில், உலகம் முழுக்க அறியப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் இளவரசர் அல்வலித் பின் தாலாலும் அடக்கம்.

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு காணொளி, ரியாத் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலின் தற்போதைய நிலையைக் காட்டுகிறது.

ஹோட்டலின் அரங்கம் ஒன்றில் சிலர் போர்வைகளை போர்த்தியபடி பாயில் படுத்திருப்பதை இந்த காணொளி காட்டுகிறது. அநேகமாக அவர்கள் காவலர்களாக இருக்கலாம்.

ஒரு ராணுவ துப்பாக்கியும், சீருடை அணிந்த நபர்களும் காணொளியில் காணப்படுகின்றனர்.

கைது செய்யப்பட்ட உலக கோடீஸ்வர இளவரசர் அல்வலித் பின் தாலால்படத்தின் காப்புரிமைREUTERS Image captionகைது செய்யப்பட்ட உலக கோடீஸ்வர இளவரசர் அல்வலித் பின் தாலால்

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் தங்கியிந்த விருந்தினர்கள், சனிக்கிழமை மாலை ஹோட்டலின் மத்திய இடத்திற்குக் கூடுமாறு கூறப்பட்டதாகவும், பிறகு செளதியின் தலைநகரில் உள்ள வேறு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்மந்தப்பட்டவர்களைச் சிறையில் அடைக்கவில்லை என்றும், இதுவே 'கண்ணியான தீர்வு' என்றும் செளதி அதிகாரிகள் கூறியுள்ளதையும் தி கார்டியன் மேற்கோள்களில் கூறியுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று ஹோட்டல் அறைகளைப் பதிவு செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் இச்செய்திகளை நிரூபிக்கின்றன. வியப்பில்லாமல், அறைகளைப் பதிவு செய்வதற்கான முயற்சி பலனற்றதாக முடிந்தது.

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல்

நவம்பர் மாதம் எந்த அறையும் காலியாக இல்லை என ரியாத் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் வலைத்தளம் கூறுகிறது. ஆனால், டிசம்பர் மாத மத்தியில் சில நாட்கள் இருவர் தங்கும் அறை ஒன்றினை பதிவு செய்யலாம் என பரிந்துரைக்கிறது.

ஆனால், விரைவிலே அறை பதிவு வசதி மறைந்துவிட்டது. எதிர்வரும் காலத்திற்கான புதிய வியாபாரத்தால் ஹோட்டலில் அறைகள் எதுவும் காலியாக இல்லை என வலைத்தளம் கூறுகிறது.

http://www.bbc.com/tamil/global-41911840

  • தொடங்கியவர்

சவூதி அரச குடும்பத்திற்குள் வெளிப்படையான அதிகாரப் போட்டி மூளக்கூடிய ஆபத்து

Published by Priyatharshan on 2017-11-08 16:50:59

 

சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சராக 2015 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட நாள் தொடக்கம் முஹமட் பின் சல்மான் அந்த இராச்சியம் தனது சிந்தனையின் வழியிலேயே ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக - பொறுமை இழந்து செயட்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

mohammed-bin-salman.jpg

தனது தந்தையார் மன்னர் சல்மான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஜூன் மாதத்தில் அவர் முஹமட் பின் நயேவை ஓரங்கட்டி விட்டு முடிக்குரிய இளவரசராகிக் கொண்டார். (நயேவ் மன்னர் சல்மானின் பெறாமகனாவார்.)

அண்மைய வாரங்களில் முஹமட் பின் சல்மான் சலாபி மத பீடத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் பெரும் கோடீஸ்வரர் அல் வாலீத் பின் தலால் மற்றும் தேசிய காவலர் படையின் பலம் பொருந்திய தலைவர் முத்தாய்ப் பின் அப்துல்லா உட்பட 11 இளவரசர்களையும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அதிகாரிகளையும் கைது செய்வதற்கு உத்தரவிட்டு இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.  கைதுகளுக்கான உடனடிக் காரணம் முதலில் தெரியவில்லை என்ற போதிலும், மன்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நோக்குகையில், இளவரசர் முஹமட் பின் சல்மானால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஊழலுக்கு எதிரான புதிய நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அண்மைய கடும் நடவடிக்கைகள் எல்லாமே முடிக்குரிய இளவரசர் தனது அதிகாரத்தை வலுப்படுத்துகின்றார் என்பதையே வெளிக்காட்டுகின்றன.

முதலில் அவர் முடிக்குரிய இளவரசராக தான் வருவதற்கு குறுக்கே நின்ற இளவரசர் நயேவை நீக்கச் செய்தார். சவூதி அரச குடும்பத்தவர்கள் மத்தியில் மிகவும் பெரிய தனவந்தர்களில் ஒருவராக விளங்கும் இளவரசர் அல் வாலித் மேற்கு நாடுகளின் அரசாங்கங்களுடன் சொகுசான உறவைக் கொண்டவர் என்பதுடன் பழமைவாத கருத்துக்களை பெருமளவுக்கு கொண்டவராகவும் இல்லை. காலஞ் சென்ற மன்னர் அப்துல்லாவின் தனிப்பாசத்துக்குரிய மகனான இளவரசர் முத்தாய்ப் அரச மாளிகைக்குள் செல்வாக்கு மிக்க ஒரு புள்ளியாவார். அவர்கள் இருவரையும் கைது செய்ததன் மூலமாக முடிக்குரிய இளவரசர் முஹமட் பின் சல்மான் எதிர் காலத்தில் தனக்கு சவாலைத் தோற்றுவிக்கக் கூடிய பண பலம் கொண்ட மையத்தையும் அதிகார மையத்தையும் வலுவிழக்கச் செய்திருக்கிறார் என்று கூறலாம்.

இந்தக் கைதுகளையடுத்து இளவரசர் முஹமட் பின் சல்மான் பல தசாப்தங்களுக்குப் பிறகு சவூதியில் முன்னிலைக்கு வந்திருக்கும் மிகவும் பலம் பொருந்திய ஒரு முடிக்குரிய இளவரசராக அதுவும் 32 வயதில் தன்னை நிலை நாட்டிக் கொண்டுள்ளார் என்றே தெரிகிறது. முக்கியமான கொள்கைத்தீர்மானங்கள் நடைமுறையில் அவரின் பொறுப்பின் கீழேயே மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் இராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு, தேசிய காவல் படை என்று சவூதியின் பாதுகாப்பு சேவைகளின் சகல கிளைகளும் அவரின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன. மன்னரின் பெருவிருப்புக்குரியவராகவும் அவர் விளங்குகின்றார். எது எவ்வாறிருப்பினும் அவர் ஆபத்தான ஒரு விளையாட்டிலேயே இறங்கியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.  கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் அதிகார உட்சண்டையில் ஒரு குறுகிய கால கட்டத்திற்குள் பல முனைகளை அவர் திறந்து விட்டிருக்கின்றார்.

சவூதி அரேபியாவில் ஆட்சியாளர்கள் பாரம்பரியமாக ஒரு சமநிலை பேணும் தந்ரோபாய ஏற்பாடாக அரச குடும்பத்தின் வெவ்வேறு கிளைகள் மத்தியில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வார்கள். அவர்களின் முடிவுகளுக்கு  நியாயப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காக அவற்றுக்கு உலமாவின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் முடிக்குரிய இளவரசரின் நடவடிக்ககைகள் எல்லாம் அந்தப் பாரம்பரியத்தைத் தலை கீழாக்கியிருப்பதைக் காணக்கூயதாக இருக்கிறது. தனது கைகளில் அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஏனயை இளவரசர்களுக்கும் சில மதத் தலைவர்களுக்கும் எதிராக திரும்பியதன் மூலமாக அவர் சவூதியின் ஆட்சி ஒழுங்கு முறையின் சமநிலையைக் குழப்பியிருக்கின்றார் என்று தான் கூற வேண்டும். விரைவாக அவர் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருப்பதால் ஆட்சி முறையின் பாணியை அவர் மீள் வடிவமைக்கக் கூடிய சூழநிலைதோன்றியிருக்கக் கூடும். ஊழலுக்கு எதிரான அவரின் நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்கும். அதனால் அவர் தனது போட்டியாளர்களை இலக்கு வைப்பதற்கு அந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

ஆனால், அவரின் கடந்தகாலச் செயற்பாடுகளில் சாதனைகள் என்று குறிப்பிடக் கூடியதாக எதுவுமில்லை என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான அவரின் பேரார்வமிக்க திட்டம் முன்னோக்கி நகர்ந்ததாக இல்லை. அவரின் வெளியுறவுக் கொள்கை நகர்வுகளும் திருப்பித் தாக்கியிருக்கின்றன, யேமன் போர் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விரிவடைந்து கொண்டிருக்கிறது. சிரியாவின் உள்நாட்டுப் போர் சவூதி ஆட்சியாளர்களின் ஒரு எதிரி என்று நோக்கப்படுகின்ற ஜனாதிபதி பஷார் அல் - அசாத்திற்கு அனுகூலமான முறையில் திரும்பிக் கொண்டிருக்கிறது.

முடிக்குரிய இளவரசர் தொடர்ந்தும் தவறுகளைச் செய்து கொண்டிருப்பாரேயானால் எல்லாமே கோணலாகி சவூதி அரச குடும்பத்துக்குள் வெளிப்படையான அதிகாரப் போராட்டம் மூண்டுவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது.

மேற்காசியாவில் சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டா போட்டி மீண்டும் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில்  மேற்கூறப்பட்ட நிகழ்வுப்போக்குகள் எல்லாம் சவூதி அரேபியாவுக்கும் அப்பால் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன என்று சர்வதேச அரசியல் அவதானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

(வீரகேசரி இணையத்தள செய்தி ஆய்வுகள்)

http://www.virakesari.lk/article/26788

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.