Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கத்திற்கு சாதகமான பட்ஜட் அரச,தனியார் துறை ஊழியர்களுக்கு நிவாரணங்கள் எதுவுமில்லை

Featured Replies

நல்லிணக்கத்திற்கு சாதகமான பட்ஜட் அரச,தனியார் துறை ஊழியர்களுக்கு நிவாரணங்கள் எதுவுமில்லை

p11-932694605b5894535aeedb4afd762fb27527c880.jpg

 

சொகுசு கார் விலை ரூபா 25 இலட்சத்தினால் அதிகரிப்பு

மின்சார கார் விலை ரூபா 10 இலட்சத்தால் குறைப்பு

மலையக வீடமைப்புக்கு 2600 மில்லியன்  ரூபா

டீசல் ஆட்டோ விலை ரூபா 50 ஆயிரத்தினால்  அதிகரிப்பு

வடக்கில் மீள்குடியேறவும் வீடமைக்கவும் 2750 மில்லியன் ரூபா

மதுபானத்துக்கு தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறவீடு

 யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார நிலையம்

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்க 1400 மில்லியன் ரூபா  

முன்னாள் போராளிகளுக்கு தொழில் வழங்கினால் சம்பள உதவித் தொகை

வடக்கு, கிழக்கில் 50000 வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.750 மில்லியன்

வடக்கில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்களுக்கு விசேட நிலையம்

வெளிநாட்டவர்கள் சொத்துக்களை வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

மயிலிட்டி மீன்பிடித்துறைமுக அபிவிருத்திக்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் நேற்று முன்­வைக்­கப்­பட்ட 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு, செல­வுத்­திட்­ட­மா­னது வர்த்­தக தொழில் முயற்­சி­களை  ஊக்­கு­விப்­ப­தற்­காக பல்­வே­று­ வி­த­மான வரிச்­ச­லு­கை­களை வழங்கும் வகை­யிலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் மற்றும் மக்களின் அடிப்­படைத் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­கான யோச­னை­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  

அத்­துடன் மலை­ய­கத்தில் வீட­மைப்­புத்­திட்­டத்தை விரை­வு­ப­டுத்த 2000 மில்­லியன் ரூபாவும்   வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு தேவை­யான நிதியும் வடக்கில் இடம்­பெ­யர்ந்­தோரை மீள்­கு­டி­யேற்ற 2750 மில்­லியன் ரூபாவும் காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­காக 1400 மில்­லியன் ரூபாவும் அடுத்த வரு­டத்­திற்­கான வரவு, செல­வுத்­திட்­டத்தில் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.  

மேலும் மின்­சாரக் கார் ஒன்­றுக்­கான விலை 10 இலட்சம் ரூபா­வினால் குறைக்­கப்­பட்­டுள்­ள­துடன் சொகுசு கார்­க­ளுக்­கான விலை 25 இலட்சம் ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. டீசலில் செலுத்­தப்­படும் முச்­சக்­க­ர­வண்­டி­களின் விலை 50 ஆயிரம் ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் மின்­சா­ரத்தில் இயங்கும் முச்­சக்­க­ர­வண்­டி­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு சலு­கை­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இது இவ்­வா­றி­ருக்க சிறிய மற்றும் நடுத்­தர வர்த்­தக முயற்­சி­யா­ளர்­களை ஊக்­கு­விக்கும் நோக்கில் பல்­வேறு வச­திகள் செய்­து­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது. மது­பா­னங்­க­ளுக்கு தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் வரி அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்­தி­லி­ருந்து அமுல்­ப­டுத்­தப்­படும் என்றும் வரவு, செல­வுத்­திட்­டத்தில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 இத­னி­டையே மயி­லிட்டித் துறை­மு­கத்தை முன்­னேற்­று­வ­தற்­காக யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் யாழ்ப்­பா­ணத்தில் புதிய நவீன முறை­மை­யி­லான பொரு­ளா­தார நிலை­ய­மொன்றை நிறு­வவும் முன்னாள் போரா­ளிகள் மற்றும் விதவைப் பெண்­களை பணிக்கு அமர்த்தும் நிறு­வ­னங்­க­ளுக்கு உதவித் தொகையை வழங்­கு­வ­தற்கு வரவு, செல­வுத்­திட்­டத்தில் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றெ­னினும் அரச ஊழி­யர்­க­ளுக்கு எவ்­வி­த­மான சம்­பள உயர்வும் வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­துடன் தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு தொடர்பில் எந்­த­வி­த­மான யோச­னை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வதும் 2018 ஆம் ஆண்­டுக்­கு­மான வரவு, செல­வுத்­திட்டம் நேற்று நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. நிதி அமைச்சர் வர­லாறு நிகழ்­காலம், மற்றும் எதிர்­காலம் என்ற அடிப்­ப­டையில் வகைப்­ப­டுத்தி வரவு, செல­வுத்­திட்ட யோச­னை­களை வாசித்தார். மேலும் 100 வரு­டங்­க­ளுக்கு மேலான பழைமை கொண்ட முக்­கி­ய­மான சில சட்­டங்­களை உட­ன­டி­யாக திருத்­த­வேண்­டி­யுள்­ள­தா­கவும் வரவு, செல­வுத்­திட்ட உரை­யின்­போது அமைச்சர் மங்­கள சம­ர­வீர சுட்­டிக்­காட்­டினார்.

2018ஆம் ஆண்­டுக்­கான முழு­மை­யான வரு­மா­ன­மாக 2228 பில்­லியன் ரூபா மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன் செல­வாக 2903 பில்­லியன் ரூபாவும் மதிப்­பி­டப்­பட்­டு­ளது. இதன்­மூலம் அடுத்த வரு­டத்­திற்­கான வரவு, செல­வுத்­திட்ட பற்­றாக்­கு­றை­யா­னது 675 பில்­லியன் ரூபா­வாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன் இது மொத்த தேசிய உற்­பத்­தியில் 4.8 வீத­மாக கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்­த­வ­கையில் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நேற்­றைய தினம் முன்­வைக்­கப்­பட்ட வரவு, செல­வுத்­திட்­டத்தின் முக்­கிய பரிந்­து­ரை­களும் அம்­சங்­களும் நிதி ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான தவ­கல்­களும் வரு­மாறு:

கொள்கைத் திட்­டங்கள்

இந்த வரவு, செல­வுத்­திட்­ட­மா­னது தொழில் முயற்­சி­யா­ளர்­களை உரு­வாக்கும் தொனிப்­பொ­ருளில் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதா­வது நீல பசுமை பொரு­ளா­தா­ரத்தை நோக்­கிய பயணம் முக்­கி­ய­மா­னது என்­பதும் வெளி­நாட்டு நேரடி முத­லீட்­டுக்­கான சூழலை உரு­வாக்­க­வேண்டும் என்­பதும் இளம் தொழில் முயற்­சி­யா­ளர்­களை ஊக்­கு­விக்­க­வேண்டும் என்றும் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

மேலும் 13 வருட கல்­வியை கட்­டா­யப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் சர்­வ­தேச தரத்­தி­லான பல்­க­லைக்­க­ழக கல்­வியை மேற்­கொள்­வது தொடர்­பா­கவும் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. மேலும் சட்ட மறு­சீ­ர­மைப்­புக்­களை மேற்­கொள்­ள­வேண்டும். அரச துறையை செயற்­றி­ற­னாக மாற்­றி­ய­மைக்­க­வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வேண்டும். வீடற்­ற­வர்­க­ளுக்கு வீடு­களைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் போன்ற விட­யங்­களும் பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

அரு­வக்­காடு கழி­வ­கற்றல்

அரு­வக்­காடு கழிவு அகற்றல் முகா­மைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான 3000 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு மின்­சார பஸ்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காக 500 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு பிர­தேச சபை­க­ளிலும் பசு­மைப்­பூங்­காக்­களை நிறு­வு­வ­தற்­காக 1500 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 2040 ஆம் ஆண்டு ஆகும் போது காபன் அல்­லாத எரி­பொருள் வாக­னங்­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

வாகன விலை

பெற்­றோ­லைப்­ப­யன்­ப­டுத்தும் வாக­னங்­க­ளுக்­கான வரிகள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. அந்­த­வ­கையில் மின்­சா­ரத்­தினால் செலுத்­தப்­படும் கார் ஒன்­றுக்­கான விலை 10 இலட்சம் ரூபாவால் குறைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சொகுசு ரக கார்­க­ளுக்­கான விலை 25 இலட்சம் ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் டீசலில் செலுத்­தப்­படும் ஆட்டோ ஒன்­றுக்­கான விலை 50 ஆயிரம் ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

காபன் வரி

மின்­சா­ரத்தில் இயங்கும் முச்­சக்­கர வண்­டி­களை இறக்­கு­மதி செய்­வோ­ருக்கு 90 வீத கடன் சலு­கையை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. பெற்­றோலில் இயங்கும் முச்­சக்­கர வண்­டி­களை விற்­பனை செய்­ய­வேண்­டு­மாயின் அவற்றை பங்­க­ளா­தே­ஷுக்கு விற்­பனை செய்ய ஏற்­பா­டுகள் செய்­யப்­படும். அத்­துடன் கார்­க­ளுக்கு 1.78 சத காபன் வரியும் முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்கு .27 சத­வீத வாகன வரியும் பஸ்­க­ளுக்கு 2.74 வீத காபன் வரியும் விதிக்­கப்­ப­ட­வுள்­ளது.

 வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளுக்கு சலுகை

வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஊக்­கு­விக்கும் நோக்கில் இலங்கை சுங்கத் திணைக்­க­ளத்­துடன் இணைந்து 31 முகவர் நிலை­யங்­களை இணைத்து தேசிய ஒற்றைச் சாளரம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

 நந்­திக்­கடல் களப்பு அபி­வி­ருத்தி

நந்­திக்­கடல், சிலாபம் மற்றும் நீர்­கொ­ழும்பு உள்­ளிட்ட 10 கலப்­புக்கள் அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கா­கன 1000 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

மீன்­பிடி

ஆழ்­க­டலில் மீன் பிடியில் ஈடு­படும் 55 அடி நீள­மான இழுவை பட­குகள் கொள்­வ­ன­வின்­போது 50 வீத­மான செலவை அர­சாங்கம் ஏற்கும். சிலாபம் மீன்­பி­டித்­து­றை­முகம் அபி­வி­ருத்தி செய்­யப்­படும். கிரா­மத்­திற்கு ஒரு குளம் என்ற திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும்.

வர்த்­தக முயற்சி

சிறிய மற்றும் நடுத்­தர வர்த்­தக முயற்­சி­யா­ளர்­களை ஊக்­கு­விப்­ப­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பிணை இல்­லா­த­தனால் கடன் பெற முடி­யாது என்ற நிலை மாற­வேண்டும். அதன்­படி சிறிய மற்றும் நடுத்த முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு நிதி வச­தியை, கடன் வச­தி­களை வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக புதிய அபி­வி­ருத்தி வங்­கி­யொன்று உரு­வாக்­கப்­படும் இதனை உரு­வாக்க 10 ஆயிரம் மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய 150 வர்த்­தக நிலை­யங்கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. சிறிய மற்றும் நடுத்­தர முயற்­சி­யா­ளர்­க­ளுக்­காக பிணை நிதியம் ஒன்றை உரு­வாக்க 500 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­படும். மிளகு, மற்றும் கருவாய் போன்ற துறை­களை ஊக்­கு­விக்க 100 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­படும். சிறு­தே­யிலைத் தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக 250 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் இருக்­கின்ற 15 இலட்சம் ஆட்டோ சார­திகள் மின்­சார வச­தி­யான ஆட்­டோக்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு ஊக்­கு­விக்­கப்­படும். விசேட சுற்­றுலா ஆட்டோ சார­தி­களை உரு­வாக்கும் திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும்.

கல்வி

கல்­வித்­து­றையில் பாரிய மறு­சீ­ர­மைப்­புக்கள் செய்­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. மாணவர் பக்கம் நின்று சிந்­திப்­ப­தற்கு பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. 13 வருடம் கல்­வி­யா­னது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு மாண­வர்­களை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பல்­க­லைக்­க­ழ­கத்தின் வவு­னியா வளா­கத்தின் நூலக வச­தியை முன்­னேற்ற 200 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மகா­பொல புல­மைப்­ப­ரிசில் பெறும் மாண­வர்­களின் பெற்­றோரின் வரு­மான மட்டம் 3 இலட்­சத்­தி­லி­ருந்து 5 இலட்­ச­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு விசேட காப்­பு­று­தித்­திட்டம் ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். கல்­வி­யியல் கல்­லூ­ரியல் பயிலும் மாண­வர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு 3500 லிருந்து 5000 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

சுகா­தாரம்,

தாதியர் பயிற்சி பாட­சா­லையை மேம்­ப­டுத்த 300 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மொரட்­டுவை, தெனி­யாய, பேரு­வளை, மாத்­தறை, ஆகிய வைத்­தி­ய­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்ய 500 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையின் புற்­றுநோய் பிரிவு உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. ரிஜ்வே சீமாட்டி வைத்­தி­ய­சா­லையில் இரு­தய சிகிச்சைப் பிரிவை நிறு­வு­வ­தற்கு 400 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பு, கண்டி வைத்­தி­ய­சா­லை­களில் விசேட பிர­சவ நிலை­யங்­களை ஸ்தாபிக்க 200 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

வீட­மைப்பு

மலை­ய­கத்தில் வீட­மைப்பு திட்­டத்தை விரை­வு­ப­டுத்த 2677 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. கிரா­மிய வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க 6000 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. நகர வீட­மைப்­புத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க 17500 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு,மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் 50 ஆயிரம் செங்கல் மற்றும் சுண்­ணக்­க­லவை வகை­யான வீடு­களை நிர்­மா­ணிக்க யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. மண் சரி­கா­ர­ண­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள் குடி­யேற்ற 27500 ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

நீதித்­துறை

ஊழல் மோசடி மற்றும் நிதிக்­குற்­றச்­சாட்­டுக்­களின் வழக்­கு­களின் தாம­தங்­களை தடுக்க விசேட நீதி­மன்றம் ஒன்றை உரு­வாக்க 25 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. கிளி­நொச்சி நீதி­மன்றத் தொகு­தியை வேறு இடத்­திற்கு மாற்­று­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சிறு­வ­யது குற்­ற­வா­ளி­களை நீதி­மன்றம் அழைத்து செல்­வ­தற்கு தனி­யாக அழைத்து செல்­வ­தற்கு பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.

மது­பானம்

மது­பா­ன­வ­கை­க­ளுக்கு அடுத்­த­வ­ருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து தேச நிர்­மாண வரியை அமுல்­ப­டுத்த யோசனை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

கலை­ஞர்கள்

கலை­ஞர்­க­ளுக்கு விசேட காப்­பு­று­தித்­திட்டம் ஒன்று முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அரச ஊழி­யர்கள்

அரச ஊழி­யர்­களின் சம்­பள முரண்­பாட்டை நீக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் இதற்­காக புதிய முறைமை ஒன்றை முன்­வைக்க யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 500 பேர் பணி­யாற்­று­கின்ற ஒரு அரச நிறு­வ­னத்தில் குழந்­தைகள் பரா­ம­ரிக்கும் நிலையம் ஒன்றை உரு­வாக்கம் திட்டம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

நல்­லி­ணக்கம்

இதே­வேளை இம்­முறை வரவு, செல­வுத்­திட்­டத்தில் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்­காக தனி கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. அதன்­படி வடக்கு, மற்றும் வட­மத்­திய மாகா­ணங்­களில் கடன் பட்­டுள்ள மக்­க­ளுக்­காக ஆத­ரவு அளிக்க 1000 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

உற்­பத்­தி­யாளர் கூட்­டு­றவு சங்­கங்கள் ஊடாக தெரிவு செய்­யப்­பட்ட சிறு கைத்­தொ­ழில்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க 1000 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. வட­மா­க­ணத்தில் இடம்­பெ­யர்ந்த மக்­களை குடி­யேற்ற 2750 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. வட­கி­ழக்கில் 50 ஆயிரம் செங்கல் மற்றும் சீமெந்து கலவை வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன.

யாழில் நவீன பொரு­ளா­தார நிலையம்

கிளி­நொச்­சி­யிலும் நெடுந்­தீ­விலும் பனை சம்­பந்­த­மான உணவு பத­னிடல் நிலை­யங்கள் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளன. முன்னாள் போரா­ளிகள் மற்றும் யுத்­தத்­தினால் வித­வை­யா­ன­வர்­களை பணிக்­காக ஆட்­சேர்ப்பு செய்யும் தனியார் நிறு­வ­னங்­க­ளுக்கு சம்­பள உதவுத் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக 400 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நவீன பொரு­ளா­தார நிலை­ய­மொன்றை உரு­வாக்க 100 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

காணாமல் போனோர் அலு­வ­கத்தை அமைக்க 1400 மில்.

அச்­சு­வேலி கைத்­தொழில் வலை­யத்தை மேம்­ப­டுத்­தவும் அம்­மச்சி எண்­ணக்­க­ருவை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை நிய­மித்து அதனை செயற்­ப­டுத்­து­வ­தற்கு 1400 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய பல்­க­லைக்­க­ழகம் பொலிஸ் மற்றும் குற்­ற­வியல்  நீதி­மன்ற பல்­க­லைக்­க­ழகம்  பொலிஸ் மற்றும் குற்­ற­வியல் நீதி­மன்ற பல்­க­லைக்­க­ழகம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக 125 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 

சீனிக்­கான வரி

சுவை­யூட்­டப்­பட்ட குடி­பா­னங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­வ­தற்­காக பெறப்­படும் சீனி, ஒரு கிரா­மிற்­காக 50 சத­வீதம் வரி­யாக அறி­வி­டப்­ப­ட­வி­ருக்­கி­றது.

குறுஞ்­செய்தி விளம்­ப­ரத்­துக்கு வரி

குறுஞ்­செய்­திகள் மூலம் (எஸ்.எம்.எஸ்) செய்யப்படும் விளம்பரங்களின் போது ஒரு குறுஞ்செய்திக்காக 25 சதம் வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்னாசி, மற்றும் வாழைப்பழத்தின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக விசேட ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்படவுள்ளது.

தேங்காய்

தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும்போது அதற்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரியை ஒருவருடத்திற்கு அகற்றுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மீள் குடியேற்றம்

வடக்கில் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றுவதற்காக அவர்களுக்காக வீடமைப்பு திட்டத்தை முன்னெடுக்கவும், 2500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வருமான முன்மொழிவுகள்

வருமான முன்மொழிவுகளாக சில விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது மதுபானம் மீதானதீர்வை வரித்திருத்தம் ஊடாக 10ஆயிரம் மில்லியன் ரூபா வருமானத்தைப் பெறுவதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன உற்பத்தி வரி மற்றும் சொகுசு வாகன வரித்திருத்தம் ஊடாக 25 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானத்தை பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுவையூட்டப்பட்ட குடிபானங்களுக்கான சீன வரி மூலம் 5000 ரூபா மில்லியன் வருமானத்தைப் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன காபன் வரி மூலம் 2500 மில்லியன் ரூபாவை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வங்கி கொடுக்கல் வாங்கலின்போது 1000 ரூபாவுக்கு 20 சதம்  

வங்கி கொடுக்கல் வாங்கலின்போது 1000 ரூபாவுக்கு 20 சதம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அரசாங்கத்துக்கு வழங்கவேண்டும்.

வெ ளிநாட்டவர் வீடு வாங்கலாம்

இலங்கையில் வெ ளிநாட்டவர்கள் சொந்தமாக வீட்டை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.