Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசோலை வழக்கில் ஆள் மாறாட்டம் செய்த யாழ்.காவல்துறையினர் – இடைத்தரகர்களுடன் நெருக்கமா ?

Featured Replies

காசோலை வழக்கில் ஆள் மாறாட்டம் செய்த யாழ்.காவல்துறையினர் – இடைத்தரகர்களுடன் நெருக்கமா ?

 

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

காசோலை வழக்கில் ஆள்மாறாட்டம் செய்ய யாழ்.காவல்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு  காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காயத்திரி சைலவன் கடுமையாக எச்சரித்துள்ளார். யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை 25 இலட்ச ரூபாய் காசோலை வழங்கி மோசடி செய்தமை தொடர்பிலான வழக்கு சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினரால் தொடரப்பட்டது.

 
வழக்கு விசாரணை நேற்று முன்தினம் புதன் கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் நடைபெற்ற போது , முறைப்பாட்டாளர் , காசோலை உரிமையாளரான சந்தேக நபரிடம் பெறவில்லை எனவும் , வேறு ஒருவரிடமே பெற்றதாக மன்றில் தெரிவித்தார். அதனை அடுத்து ,  முறைப்பாட்டாளர் குறிப்பிட்ட மற்றைய நபரிடமும் வாக்கு மூலம் பெற்று அவரையும் சந்தேக நபராக மன்றில் முற்படுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.
 
நீதவான் கட்டளையிட்ட நபருக்கு பதிலாக வேறு ஒரு நபரை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்து நேற்றைய தினம் வியாழக்கிழமை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.  அந்நேரம் முறைப்பாட்டாளர் நேற்றைய தினம்   முற்படுத்தப்பட்ட நபரிடம் தான் காசோலையை பெறவில்லை எனவும் , வேறு ஒருவரிடமே காசோலையை பெற்று பணத்தினை வழங்கினேன் என கூறினார்.
 
அதனையடுத்து சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவினரை கடுமையாக பதில் நீதவான் எச்சரித்தார். பக்க சார்பின்றி நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது அதற்கான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என எச்சரித்தார்.
 
கொமிசன் வைக்கும் இடைத்தரகர்கள். 
 
 
அதேவேளை குறித்த வழக்கில் கொமிசனுக்கு காசோலை மாறி கொடுக்கும் நபர் ஒருவர் காவல்துறையினருடன் நெருங்கி செயற்பட்டு விசாரணைகளின் போக்கில் தலையிட்டு வருவதாக தெரிய வருகின்றது. யாழ்.நகரில் உள்ள வர்த்தகர்களுக்கு இடையில் வட்டிக்கான பண கொடுக்கல் வாங்கலின் போது சிலர் இடைத்தரகர்களாக செயற்படுகின்றனர். அவ்வாறு செயற்படும் நபர் ஒருவரே இந்த வழக்கின் விசாரணையின் போக்கில் செல்வாக்கு செலுத்துவதாக தெரிய வருகின்றது.
 
குறித்த வழக்கானது , காசோலை உரிமையாளர் தனது உறவினரான வர்த்தகர் ஒருவருக்கு நம்பிக்கை அடிப்படையில் காசோலையை வழங்கியுள்ளார்.  குறித்த வர்த்தகர் அந்த காசோலையை கொடுக்கல் வாங்கலுக்காக சக வர்த்தகர் ஒருவருக்கு அதனை கொடுத்துள்ளார்.  காசோலையை பெற்றுக்கொண்ட வர்த்தகர் கடந்த 09ஆம் மாதம் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
அதன் பின்னர் குறித்த காசோலை எங்கே ? எவருடைய கையில் உள்ளது எனும் விடயம் காசோலையின் உரிமையாளருக்கோ அல்லது உரிமையாளர் கொடுத்த உறவினரான வர்த்தகருக்கோ தெரியவில்லை. அதனால் காசோலை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் , வங்கியில் சென்று காசோலையை நிறுத்தவும் செய்துள்ளனர்.
 
 காவல்துறையில் முறைப்பாடு. 
 
அந்நிலையில் குறித்த காசோலை வேறு ஒரு நபரிடம் கொடுக்கப்பட்டு , அவரிடம் இருந்து பணம் பெறப்பட்டு உள்ளது. அந்த காசோலைக்கு பணம் கொடுத்த நபரே கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார். குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட  காவல்துறையினர் காசோலையின் உரிமையாளரை கைது செய்தனர். அந்த காசோலையின் பின்னால் , இடைத்தரகர் என சந்தேகிக்கப்படும் நபர் கையொப்பம் இட்டுள்ளார்.
 
கையொப்பம் இட்ட நபரிடமே தான் பணத்தினை கொடுத்து காசோலையை பெற்றுக்கொண்டேன் என முறைப்பாட்டாளர் கூறிய போதிலும் அவரிடம் காவல்துறையினர் எந்த விதமான விசாரணைகளையும் மேற்கொள்ளாது காசோலை உரிமையாளரை கைது செய்து   தடுத்து காவலில் வைத்து இருந்தார்கள்.
 
இடைத்தரகர் என சந்தேகிக்கப்படும் நபர்  காவல்நிலையத்தில் அதிக செல்வாக்கு உள்ளவர் போன்று நடந்து கொண்டார். அவரே காவல்துறையினர் முன்னிலையில் காசோலை உரிமையாளர் தான் அதில் எழுதப்பட்டு உள்ள 25 இலட்ச ரூபாய் பணத்தினையும் வழங்க வேண்டும் என மிரட்டி உள்ளார்.
 
அதன் போது உரிமையாளர் சார்பில் நின்றவர்கள் தாம் நீதிமன்றை நாடி இந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகின்றோம் என்று கூறிய போதிலும் , நீதிமன்றுக்கு செல்வது வீண் கால தாமதம் , பணம் செலவழியும் மற்றும் நீதிமன்றினால் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட வேண்டி வரும் என மிரட்டும் தொனியில் காவல்துறையினர் முன்னிலையில் ,  காவலில் உள்ள நபரிடம் கூறியுள்ளார்.
 
அதேவேளை காசோலை உரிமையாளர் சார்பில் நின்றவர்களிடமும் மிரட்டும் தொனியில்  காவல் நிலையத்தில் வைத்து பொலிசார் முன்னிலையில் தற்போது மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை தந்தால் உடனே  காவல்துறை காவலில் இருந்து விடுவிக்க தன்னால் முடியும் எனவும் கூறியுள்ளார்.
 
அவரின் மிரட்டலுக்கு காசோலை வழங்கியவர்கள் மறுத்து , தாம் நீதிமன்றின் ஊடாக பிரச்சனையை தீர்க்க விரும்புவதாக கூறிய பின்னர் இரவு 11 .30 மணி வரை காவல் நிலையத்தில் தங்கி இருந்து காசோலை உரிமையாளருடன் பேச்சு நடத்தி உள்ளார். அவர் கேட்ட பணத்தினை வழங்க மறுத்துள்ளனர்.
 
இந்த பேச்சு வார்த்தைகள் மிரட்டல்கள் , அனைத்தும் யாழ்.காவல் நிலையத்தில் நடைபெற்ற போதிலும் அவை தொடர்பில் காவல்துறையினர் பாராமுகமாக நடந்து கொண்டுள்ளனர்.
 
அதன் பின்னர் மறுநாள் காலையில் காசோலை உரிமையாளரை  காவல்துறையினர்  நீதிமன்றில் முற்படுத்தது காவல் நிலையத்தில் தடுத்து வைத்து இருந்த போது அங்கு சென்று இடைத்தரகர் என நம்பப்படும் நபர் காசோலை உரிமையாளிரிடம் இன்னமும் முறைப்பாடு எழுதப்படவில்லை , மூன்று லட்சம் ரூபாய் பணத்திணை தந்தால் நீதிமன்றுக்கு செல்லாமல் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்ப்போம் என பேச்சு நடத்தி உள்ளார்.
 
அத்துடன் இன்றைக்கு பிணை கிடைக்காது. நீதிமன்றம் சென்றால் விளக்கமறியலில் வைக்கப்படுவீர் என மிரட்டும் தொனியிலும் கூறியுள்ளார். அவை எதற்கும் காசோலை உரிமையாளர் அடிபணியாத நிலையில் , முதல் நாள் மாலை 03 மணிக்கு கைது செய்த காசோலை உரிமையாளரிடம் மறுநாள் மதியம் 11 மணிக்கு பின்னரே வாக்கு மூலம் பெற்றனர். அதுவரையில் இடைத்தரகர் என சந்தேகிக்கப்படும் நபர் பேச்சு நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
 
பின்னர் காசோலை உரிமையாளரை மதியம் 2 மணியளவில் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.
 
அந்நேரம் காசோலை உரிமையாளர் குறித்த காசோலையை கொடுத்த உறவினரான வர்த்தகர் நீதிமன்ற வளாகத்தினுள் நின்ற போது , நீ ஏன் இங்கே வந்தநீ ? உன்னை யார் வர சொன்னது என கேட்டு சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் , வேறு ஒரு காவல்துறை உத்தியோகஸ்தரை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து அவரை கைது செய்யுமாறு கூறி அவரை கைது செய்து காவல்த நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
 
வழக்கினை அவதானித்த இடைத்தரகர். 
 
குறித்த வழக்கு விசாரணைக்கு நீதவான் எடுத்த போது , முறைப்பாட்டாளர்  தனக்கு எதிரே உள்ள சந்தேக நபரான காசோலை உரிமையாளரை யார் என்று தெரியாது எனவும் , இடைத்தகரர் என சந்தேகிக்கப்படும் நபர் வழக்கு விசாரணையின் போக்கினை  நீதிமன்றினுள் அமர்ந்து இருந்து அவதானித்துக்கொண்டு இருந்த வேளை முறைப்பாட்டாளர் பெயரை கூறி அடையாளம் காட்டி இவரிடம் இருந்தே காசோலையை பெற்றுக்கொண்டு பணத்தினை பெற்றுகொண்டேன் என அடையாளம் காட்டினார்.
 
அதை அடுத்து இடைத்தரகர் என நம்பப்படும் குறித்த நபரிடம் வாக்கு மூலம் பெற்று நாளை (நேற்றைய தினம் வியாழக்கிழமை) மன்றில் முற்படுத்துமாறு நீதவான் கட்டளையிட்டு இருந்தார்.
 
அத்துடன் காசோலை உரிமையாளரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
 
அதேவேளை காவல்துறையினர்  நீதவானின் கட்டளையை மதிக்காது , காசோலை உரிமையாளரின் உறவினரை கைது செய்து அவரிடம் வாக்கு மூலம் பெற்று நேற்றைய தினம் வியாழக்கிழமை பதில் நீதவான் முன்னிலையில் காவல்துறையினர் முற்படுத்தினார்கள். அதனை அடுத்தே காவல்துறையினரை பதில் நீதவான் கடுமையாக எச்சரித்தார்.
 
அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் இடைத்தரகர்கள். 
 
அதேவேளை வட்டிக்கு பணம் கொடுக்கும் சிலரிடம் சில இடைத்தரகர்கள் பணத்தினை பெற்று தமக்கும் கொமிசன் வைத்து அதிக வட்டிக்கு பணத்தினை வேறு நபர்களுக்கு கொடுக்கின்றார்கள். அவ்வாறு கொடுத்து அதிக வட்டியுடன் பணத்தினை வசூலிக்கின்றார்கள்.
 
அவ்வாறு பணத்தினை பெற்றுக்கொண்டவர்கள் பணத்திணை மீள வழங்க முடியாத நிலை ஏற்படும் போது , அவர்களை மிரட்டி பொலிஸ் செல்வாக்கு மற்றும் இதர செல்வாக்குகளை பயன்படுத்தி பணத்தினை வசூலிக்கின்றனர்.
 
இடைத்தரகர்களின் மிரட்டலால் தற்கொலை செய்கின்றனர். 
 
இவ்வாறான இடைத்தரகர்களுக்கு பயந்தே பணம் பெற்றவர்கள் தலைமறைவு ஆகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவ்வாறான இடைத்தரகர்கள் பொலிசாருடன் நெருங்கி இருப்பதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
அண்மையில் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாகவே அரியாலை பகுதியில் தாய் ஒருவர் மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி விட்டு தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவரும் இவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு 58 நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/49190

  • தொடங்கியவர்

திறந்த மன்­றில் எஸ்.சி.ஐ.பி பொலி­ஸா­ருக்கு மேல­திக நீதி­வான் கடு­மை­யான எச்­சரிக்கை

 
திறந்த மன்­றில்  எஸ்.சி.ஐ.பி பொலி­ஸா­ருக்கு மேல­திக நீதி­வான்  கடு­மை­யான எச்­சரிக்கை
 

காசோலை வழக்­கில் ஆள்­மா­றாட்­டம் செய்த யாழ். பிராந்­திய சிறப்பு குற்ற தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களை யாழ்.நீதிவான் மன்ற பதில் நீதி­வான் காயத்­திரி சைல­வன் நேற்­றுக் கடு­மை­யாக எச்­ச­ரித்­தார்.

திறந்த நீதி­மன்­றில் வழக்­குக்கு வந்­தி­ருந்த பல­ரும் பொலி­ஸா­ரின் பக்­கச்­சார்­பான இந்தச் செயற்­பாடு குறித்து அவ­தா­ன­மாகக் கண்­கா­ணித்­துக் கொண்டிருந்­த­னர்.

யாழ்.நீத­ிவான் நீதி­மன்­றில் நேற்றுமுன்­தி­னம் புதன் கி­ழமை 25 இலட்ச ரூபா காசோலை வழங்கி மோசடி செய்­தமை தொடர்­பி­லான வழக்கு சிறப்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­ன­ரால் தொட­ரப்­பட்­டது.

வழக்கு விசா­ரணை நேற்று முன்­தி­னம் புதன்கிழமை யாழ். நீத­ிவான் நீதி­மன்ற நீதி­வான் எஸ்.சதிஸ்­த­ரன் முன்னி லையில் நடை­பெற்றபோது, முறைப்­பாட் டா­ளர் , காசோ­லை­யைச் சந்­தேகநப­ராக இருக்­கும் நப­ரி­டம் பெற­வில்லை என­வும், வேறு ஒரு­வ­ரி­டமே வழங்­கி­ய­தாகவும் மன்­றில் தெரி­வித்­தார்.

அதனையடுத்து, முறைப்­பாட்டாளர் குறிப்­பிட்ட நப­ரி­ட­மும் வாக்கு மூலம் பெற்று அவ­ரை­யும் சந்­தேகநப­ராக மன்­றில் முற்­ப­டுத்­து­மாறு நீதிவான் கட்­ட­ளை­யிட்­டார்.

நீத­ிவான் கட்­ட­ளை­யிட்ட நப­ருக்குப் பதி­லாக வேறு ஒரு நபரைச் சிறப்புக் குற்றத் தடுப்பு பிரி­வி­னர் கைது செய்து நேற்­று வியா­ழக்­கி­ழமை பதில் நீதி­வான் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்­தி­னார்­கள்.

முறைப்­பாட்­டா­ளர் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்ட நப­ரி­டம் தான் காசோ­லையைப் பெற­வில்லை என­வும், வேறு ஒரு­வ­ரி­டமே காசோ­லையைப் பெற்றுப் பணத்தை வழங்­கி­னேன் எனக் கூறி­னார்.

அத­னை­ய­டுத்து சிறப்புக் குற்ற புல­னாய்வுப் பிரி­வி­னரைக் கடு­மை­யாக பதில் நீத­ிவான் எச்­ச­ரித்­தார். பக்கச் சார்­பின்றி நீதி­மன்ற கட்­ட­ளை­யின் பிர­கா­ரம் சரி­யான முறை­யில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்­டும்.
அல்­லது அதற்­கான பின் விளை­வு­களைச் சந்­திக்க வேண்டி ஏற்­ப­டும் என எச்­ச­ரித்­தார்.

அதே­வேளை குறித்த வழக்­கில் தரகுப் பணத்துக்காக காசோலை மாற்றிக் கொடுக்­கும் நபர் ஒரு­வர் பொலிஸா­ரு­டன் நெருங்கிச் செயற்­பட்டு விசா­ர­ணை­க­ளின் போக்­கில் தலை­யிட்டு வரு­வ­தாகக் குற்­றஞ் சாட்­டப்­பட்­டது.

யாழ். நக­ரில் உள்ள வர்த்­த­கர்­க­ளுக்கு இடை­யில் வட்­டிக்­கான பணக் கொடுக்­கல் வாங்­க­லின் போது சிலர் இடைத்­த­ர­கர்­க­ளாகச் செயற்­ப­டு­கின்­ற­னர். அவ்­வாறு செயற்­ப­டும் நபர் ஒரு­வரே இந்த வழக்­கின் விசா­ர­ணை­யின் போக்­கில் செல்­வாக்குச் செலுத்துவதாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

குறித்த வழக்­கில் , காசோலை உரி­மை­யா­ளர் தனது உற­வி­ன­ரான வர்த்­த­கர் ஒரு­வ­ருக்கு நம்­பிக்கை அடிப்­ப­டை­யில் காசோ­லையை வழங்­கி­யுள்­ளார்.

குறித்த வர்த்­த­கர் அந்தக் காசோ­லையைக் கொடுக்­கல் வாங்­க­லுக்­காக சக வர்த்­த­கர் ஒரு­வ­ருக்குக் கொடுத்­துள்­ளார்.

காசோ­லையைப் பெற்­றுக்­கொண்ட வர்த்­த­கர் கடந்த மாதம் கடன் நெருக்­க­டி­யால் தற்­கொலை செய்து கொண்­டார்.

அதன் பின்­னர் குறித்த காசோலை எங்கே? எவ­ரு­டைய கையில் உள்­ளது எனும் விட­யம் காசோ­லை­யின் உரி­மை­யா­ள­ருக்கோ அல்­லது உரி­மை­யா­ளர் கொடுத்த உற­வி­ன­ரான வர்த்­த­க­ருக்கோ தெரி­ய­வில்லை.

காசோலை தொடர்­பில் யாழ்.பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­த­து­டன், வங்­கி­யில் சென்று காசோ­லையை நிறுத்­த­வும் செய்­துள்­ள­ார்.

குறித்த காசோலை வேறு ஒரு நப­ரி­டம் கொடுக்­கப்­பட்டு, அவ­ரி­டம் இருந்து பணம் பெறப்­பட்டு உள்­ளது. அந்தக் காசோ­லைக்குப் பணம் கொடுத்த நபரே கடந்த செவ்­வாய்க்­கி­ழமை யாழ். பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­தார்.

குறித்த முறைப்­பாட்­டின் பிர­கா­ரம் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸார் காசோ­லை­யின் உரி­மை­யா­ளரைக் கைது செய்­த­னர். அந்த காசோ­லை­யின் பின்­னால், இடைத்­த­ர­கர் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டும் நபர் கையொப்­பம் இட்­டுள்­ளார்.

கையொப்­பம் இட்ட நப­ரி­டமே தான் பணத்தைக் கொடுத்து காசோ­லையைப் பெற்­றுக்­கொண்­டேன் என முறைப்­பாட் டா­ளர் கூறிய போதி­லும் அவ­ரி­டம் பொலி­ஸார் எந்த வித­மான விசா­ர­ணை­க­ளை­யும் மேற்­கொள்­ளாது.

காசோலை உரி­மை­யா­ளரைக் கைது செய்து பொலிஸ் தடுப்புக் காவ­லில் வைத்து இருந்­தார்­கள்.

இடைத்­த­ர­கர் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டும் நபர் பொலிஸ் நிலை­யத்­தில் அதிக செல்­வாக்கு உள்­ள­வர் போன்று நடந்து கொண்­டார் என்­றும் அவரே பொலி­ஸார் முன்­னி­லை­யில் காசோலை உரி­மை­யா­ளர் தான் அதில் எழு­தப்­பட்டு உள்ள 25 இலட்ச ரூபா பணத்தை­யும் வழங்கவேண்­டும் என மிரட்டி உள்­ளார் என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

காசோலை உரி­மை­யா­ளர் தரப்­பி­னர் தாம் நீதி­மன்றை நாடி இந்த பிரச்­சி­னையைத் தீர்க்க விரும்­பு­கின்­றோம் என்று கூறிய போதி­லும், நீதி­மன்­றுக்குச் செல்­வது வீண் கால தாம­தம், பணம் செல­வ­ழி­யும் மற்­றும் நீதி­மன்­றால் விளக்­க­ம­றி­ய­லில் தடுத்து வைக்­கப்­பட வேண்டி வரும் என மிரட்­டும் தொனி­யில் பொலி­ஸார் முன்­னி­லை­யில், பொலிஸ் காவ­லில் உள்ள நப­ரி­டம் கூறி­யுள்­ளார் என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

காசோலை உரி­மை­யா­ளர் சார்­பில் நின்­ற­வர்­க­ளை­யும் மிரட்­டும் தொனி­யில் பொலிஸ் நிலை­யத்­தில் பொலி­ஸார் முன்­னி­லை­யில் தற்­போது மூன்று இலட்­சம் ரூபா பணத்தைத் தந்­தால் உடனே பொலிஸ் காவ­லில் இருந்து விடு­விக்கத் தன்­னால் முடி­யும் என­வும் கூறி­யுள்­ளார்.

அவ­ரின் மிரட்­ட­லுக்குக் காசோலை வழங்­கி­ய­வர்­கள் மறுத்து, தாம் நீதி­மன் றின் ஊடாகப் பிரச்­ச­ினையை தீர்க்க விரும்­பு­வ­தாகக் கூறிய பின்­னர் இரவு 11 .30 மணி வரை பொலிஸ் நிலை­யத்­தில் தங்கி இருந்து காசோலை உரி­மை­யா­ளரு­ட­னும் உற­வி­னர்­க­ளி­ட­மும் பேச்சு நடத்தி உள்­ளார். அவர்­கள் அவர் கேட்ட பணத்­தை வழங்க மறுத்­துள்­ள­னர்.

இந்தப் பேச்சு வார்த்­தை­கள் மிரட்­டல்­கள், அனைத்­தும் யாழ். பொலிஸ் நிலை­யத்­தில் நடை­பெற்ற போதி­லும் அவை தொடர்­பில் பொலி­ஸார் பாரா­ மு­க­மாக நடந்து கொண்­டுள்­ள­னர் என்­றும் பொலி­ஸார் மீது குற்­றஞ்சாட்­டப்­ப­டு­கி­றது.

அதன் பின்­னர் மறு­நாள் காலை­யில் காசோலை உரி­மை­யா­ளரைப் பொலி­ஸார் நீதி­மன்­றில் முற்­ப­டு­த்தாது பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைத்து இருந்தபோது அங்கு சென்று இடைத்­த­ர­கர் என நம்­பப்­ப­டும் நபர் காசோலை உரி­மை­யா­ளி­ரி­டம் இன்­ன­மும் முறைப்­பாடு எழு­தப்­ப­ட­வில்லை, மூன்று லட்­சம் ரூபா பணம் தரு­கி­றேன். நீதி­மன் றுக்குச் செல்­லா­மல் இந்தப் பிரச்­ச­னையைச் சுமு­க­மாகத் தீர்ப்­போம் எனப் பேச்சு நடத்தி உள்­ளார். அத்­து­டன் நீதி­மன்­றம் சென்­றால் பிணை கிடைக்­காது. விளக்­க­ம­றி­ய­லில் வைக்­க­ப்படு­வீர் என மிரட்­டும் தொனி­யி­லும் கூறி­யுள்­ளார் என்றும்் குற்­ற­ஞ்சாட்­டப்பட்டது.

காசோலை உரி­மை­யா­ளர் அதற்­குச் சம்­ம­தம் தெரிவிக்காத நிலை­யில் , முதல் நாள் மாலை 3 மணிக்குக் கைது செய்த காசோலை உரி­மை­யா­ள­ரி­டம் மறு­நாள் மதி­யம் 11 மணிக்கு பின்­னரே வாக்கு மூலம் பெற்­ற­னர்.

அது­வ­ரை­யில் இடைத்­த­ர­கர் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டும் நபர் பேச்சு நடத்த பொலி­ஸார் அனு­மதி அளித்­துள்­ள­னர்.
பின்­னர் காசோலை உரி­மை­யா­ளரை மதி­யம் 2 மணி­ய­ள­வில் யாழ். நீத­ிவான் நீதி­மன்ற நீதிவான் எஸ்.சதிஸ்­த­ரன் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்­தி­னார் கள்.

அந்­நே­ரம் காசோலை உரி­மை­யா­ளர் குறித்த காசோ­லையைக் கொடுத்த உற­வி­ன­ரான வர்த்­த­கர் நீதி­மன்ற வளா­கத்­தி­னுள் நின்றபோது, நீ ஏன் இங்கே வந்­தநீ? உன்னை யார் வரச் சொன்­னது எனக் கேட்டு சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸ் பரி­சோ­த­கர், வேறு ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தரை நீதி­மன்ற வளா­கத்­துக்கு அழைத்து அவரைக் கைது செய்­யு­மாறு கூறி அவரைக் கைது செய்து பொலிஸ் நிலை­யத்துக்குக் கொண்டு சென்­ற­னர் என்று குற்­றஞ்சாட்­டப்­பட்­டது.

குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு நீத­ிவான் எடுத்த போது, முறைப்­பாட்­டா­ளர் தனக்கு எதிரே உள்ள சந்­தேக நப­ரான காசோலை உரி­மை­யா­ளரை யார் என்று தெரி­யாது என­வும், இடைத்­தரகர் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டும் நபர் வழக்கு விசா­ர­ணை­யின் போக்­கை நீதி­மன்­றி­னுள் அமர்ந்து இருந்து அவ­தா­னித்­துக்­கொண்டு இருந்த வேளை முறைப்­பாட்­டா­ளர் பெயரை கூறி அடை­யா­ளம் காட்டி இவ­ரி­டம் இருந்தே காசோ­லை யைப் பெற்­றுக்­கொண்டு பணத்­தை பெற்­று­கொண்­டேன் என அடை­யா­ளம் காட்­டி­னார்.

அதை அடுத்து இடைத்­த­ர­கர் என நம்­பப்­ப­டும் குறித்த நப­ரி­டம் வாக்கு மூலம் பெற்று நாளை (வியா­ழக்­கி­ழமை) மன்­றில் முற்­ப­டுத்­து­மாறு நீத­ி வான் கட்­ட­ளை­யிட்டு இருந்­தார்.
ஆனால் நீத­ிவா­னின் கட்­ட­ளையை மாறாக , காசோலை உரி­மை­யா­ள­ரின் உற­வி­னரை கைது செய்து அவ­ரி­டம் வாக்கு மூலம் பெற்று நேற்­றைய தினம் வியா­ழக்­கி­ழமை பதில் நீதிவான் முன்­னி­லை ­யில் பொலி­ஸார் முற்­ப­டுத்­தி­ னார்­கள். அதனை அடுத்தே பொலி­ஸாரை பதில் நீத­ிவான் கடு­மை­யாக எச்­ச­ரித்­தார்.

பணத்தைப் பெற்­றுக்­கொண்­ட­வர்­கள் பணத்தை மீள வழங்க முடி­யாத நிலை ஏற்­ப­டும் போது, அவர்­களை மிரட்டி பொலிஸ் செல்­வாக்கு மற்­றும் இதர செல்­வாக்­கு­களைப் பயன் படுத்தி பணத்தை வசூ­லிக்­கின்­ற­னர்.
இவ்­வா­றான இடைத்­த­ர­கர் க­ளுக்குப் பயந்தே பணம் பெற்­ற­வர்­கள் தலை­ம­றைவு ஆகின்­ற­னர். சிலர் தற்­கொலை செய்து கொள்­கின்­ற­னர். இவ்­வா­றான இடைத்­த­ர­கர்­கள் பொலி­ஸா­ரு­டன் நெருங்கி இருப்­ப­த­னால் பல­ரும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

அண்­மை­யில் பணம் கொடுக்­கல் வாங்­கல் கார­ண­மா­கவே அரி­யாலைப் பகு­தி­யில் தாய் ஒரு­வர் மூன்று பிள்­ளைக­ளுக்கு நஞ்­சூட்டி விட்டு தானும் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டார். அவ­ரது கண­வ­ரும் இவர்­கள் தற்­கொலை செய்து கொள்­வ­தற்கு 58 நாட்­க­ளுக்கு முன்­னர் தற்­கொலை செய்து கொண்­டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/45326.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.