"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 80 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது நாகர்கள் மற்றும் தேவர்கள் உட்பட பில்லியன் கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை மீண்டும் மதம் மாற்ற மகிந்த தேரர் ஏன் அனுப்பப்பட்டார்? அல்லது புத்தர் வந்து போன பிறகு, அந்த உயிரினங்கள் அனைத்தும் தனது கொள்கைகளை கைவிட்டு முந்தைய கொள்கைகளுக்கும் சிவன் மற்றும் நாக வழிபாடுகளுக்கும் திரும்பிச் சென்றார்களா? அல்லது புத்தர் சரியாகப் போதிக்கவில்லையா? அத்தியாயம் 14: தலைநகரில் வசிப்பவர்களுக்கு நீர்விழா நடத்த ஏற்பாடு செய்த தேவநம்பிய தீசன் வேட்டையாடுவதில் உள்ள இன்பத்தை அனுபவிக்கப் நாற்பதாயிரம் ஆண்களுடன் வேட்டைப் பயணத்திற்குச் சென்றார். மலையின் உச்சியில் இறங்கிய மகிந்தவிடம் மன்னனை வழிநடத்த விரும்பிய மலைக் கடவுள் (தேவன்), ஒரு ஆண் மானின் வடிவத்தை எடுத்தார். வேடடைக்குச் சென்ற மன்னன் அதைப் பின்தொடர்ந்தார். அந்த மான், மன்னனை மகிந்த தேரரிடம் அழைத்துச் சென்று, அதன் பின் மறைந்தது விட்டது. கட்டாயம் இது ராமாயணத்தில் நடந்த நிகழ்வின் ஒரு நகல், அதில் ராமர் தனது மனைவி சீதையின் வற்புறுத்தலின் பேரில் ஒரு மாயை மானைப் பின்தொடர்ந்தார். குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச் சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்; நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும் மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா! [மகளிர் மனம் போல நின்றும் ஓடியும் மான் மாயம் செய்தது / கம்பராமாயணம் - மாரீசன் வதைப் படலம்] மேலே கூறிய நம்பமுடியாத பல நிகழ்வுகளில் இருந்து, இது ஒரு உண்மையான வரலாற்று நிகழ்வாக இருக்க முடியாது என்பது, கொஞ்சம் சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவருக்கும் புரியும். அவர்கள், மன்னனும் மகிந்தவும் பல விடயங்களில் விவாதங்களை நடத்தினர். இறுதியில் மன்னனும் அவரது நாற்பதாயிரம் ஆட்களும் புத்த மதத்திற்கு உடனேயே மாறினர். வின்சென்ட் ஏ. ஸ்மித் [Vincent A. Smith], புத்த மதத்திற்கு மதமாற்றம் மிகவும் படிப்படியாக நடந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறார். நிதானமான வரலாறாகக் கருத முடியாத பல அற்புதங்களும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகளும் இங்கு கூறப்பட்டு உள்ளன. அசோகரின் மகன் மகிந்தவைப் பற்றி மன்னர் தேவநம்பிய தீசன் அறிந்தது இதுவே முதல் முறை ஆகும். இருப்பினும், மன்னர் அசோகரும் மன்னர் தேவநம்பிய தீசனும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள்? 11- 18 முதல் 19 வரை பார்க்கவும். [1 5 (முத்துக்கள்) கடலில் இருந்து வெளிவந்து குவியலாக கரையில் கிடந்தன. 16 இவை அனைத்தும் தேவநம்பியதீசனின் பெருமையால் நிகழந்தவை. நீலமாணிக்கம் [Sapphire], பெரில் (Beryl) அல்லது காமதகம் , மாணிக்கம் [ruby], இரத்தினக்கல் அல்லது இரத்தினம் [gems] மற்றும் பல நகைகள் மற்றும் 17 முத்துக்களும் மூங்கில் தண்டுகளும் அனைத்தும் ஒரே வாரத்தில், மன்னனுக்கு அவர்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். இதைக் கண்ட மன்னன் மனதார மகிழ்ச்சியடைந்தார். 1 8 ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ்விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதி உள்ளவர்கள் அல்ல. இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்று எண்ணினான். / 19 தேவநம்பியதீசனும், தர்ம அசோகனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததே இலலை. ஆயினும் வெகு காலமாகவே அவர்கள் நண்பர் களாக இருந்தார்கள் என்கிறது இந்தப்பகுதி. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அசோகர் தனது மகன் மற்றும் மகளைப் பற்றி தனது நீண்டகால நெருங்கிய நண்பரான மன்னன் தேவநம்பிய தீசனுடன் விவாதிக்க மறந்துவிட்டார்! நெருங்கிய நண்பர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளைப் பற்றி முதலில் விவாதிப்பார்கள். ஆனால் இங்கு அதைக் காணவில்லை? இது ஒரு வினோதமான நட்பு அல்லது தோழமை! அத்தியாயம் 15 [மகா விகாரை]: இது ஒரு நீண்ட அத்தியாயம், பெரும்பாலும் புத்தர் மற்றும் முந்தைய புத்தர்களைப் பற்றிய நம்பிக்கையைப் பற்றியது, ஆனால் இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. மேலும் புராணக் கதைகள் கண்டுபிடிக்கப்படும் போது அத்தியாயங்கள் பொதுவாக நீளமாக இருக்கும். ராணி அனுலாவும் [Queen Anula] ஐநூறு பெண்களும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] பெற விரும்பினர். பப்ஜா (Pabbajjā) என்பது பௌத்த மதத்தில் மடாலய வாழ்க்கைக்குள் நுழைவதற்கான ஆரம்ப புத்த மத சடங்கு ஆகும். இது ஒரு துறவி (பிக்கு) அல்லது கன்னியாஸ்திரி (பிக்குனி) ஆக முழுமையாக வாழ்வை ஈடுபடுத்த முன், அதற்கான முதல் கட்டம் ஆகும், இதில் ஒரு நபர் உலகியலான வாழ்க்கையை விட்டு பௌத்த மதத்தின் வழியில் செல்வதை குறிக்கிறது. அதாவது, இங்கு கட்டாயம் நான்கு விடயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும். ஆண்-பெண் கலவி கூடாது. புல்லைக் கூட திருடக் கூடாது. உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது. இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது. இப்ப இலங்கையில் , பர்மாவில் பிக்கு அல்லது பிக்குணியின் வாழ்வு மற்றும் அவர்களின் செயல்கள், வாய்மொழி பேச்சுக்கள் இப்படித்தானா இருக்கிறது என்பதைக் நீங்களே கூறுங்கள்? எனவே இந்த நோக்கத்திற்காக சங்கமித்தாவை [Sanghamitta] அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. மேலும் தாரை வார்த்த நீர் தரையில் விழுந்தபோது ஒரு பூகம்பம் ஏற்பட்டது. 15 - 22 முதல் 26 வரை பார்க்கவும். ‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் அவள் இங்கே வருவாள். அவளுடன், புனிதத்தால் புகழ்பெற்ற பிக்குணிகளும் உடன் வருவார்கள். இகைக் குறித்து என்னுடைய தந்தையாகிய அரசனுக்குச் செய்தி அனுப்புக. அந்தத் தேரி இங்கு வந்ததும் இந்தப் பெண்களுக்குத் தீட்சை செய்து வைப்பாள்" என்றார் மகிந்த, அதுதான் நல்லது" என்றான் மன்னன். பின்பு அழகிய கலசத்தில் நீரை யெடுத்து மகிந்த தேரருடைய கையில் ஊற்றி தாரை வார்த்துக் கொடுத்தான். "இந்த மகா மேகவனத்தை பிக்கு சங்கத்துக்கு அளிக்கிறேன்' என்று மன்னன் சொன்னான். தாரை வார்த்த நீர் தரையில் விழுந்த போது பூமி அதிர்ந்தது. புவியின் காவலன் தேரரிடம், 'ஏன் இப்படி பூமி அதிர்கிறது?’ என்று கேட்டான். தீவில் இப்போது முதல் தர்மம் வேரூன்றிவிட்டது அதனால்" என்று தேரர் பதிலளித்தார். [எப்படியான புத்த தர்மம் உண்மையில் இலங்கையில் வேரூன்றிவிட்டது என்பதை வடக்கு கிழக்கில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்?] Part: 81 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 14: The King Devanampiya Tissa was having a water festival, and went on a hunting expedition with forty thousand men. The mountain god (Deva) wanted to guide the king to Mahinda who has just alighted on the top of the mountain. The mountain god took the form of a male deer and the king followed it. The deer lead the king to Mahinda Thera and vanished. This is a copy of the event that happened in the Epic Ramayana in which Rama went after an unreal deer on the urging of his consort Sita. This cannot be a real historical event. They, the king and Mahinda, had discussions on many subjects, and in the end, the king and his forty thousand men converted to Buddhism. Vincent A. Smith strongly expresses that the first conversion to Buddhism must have taken place in a very gradual manner. There are so many miracles and unnatural happenings, which cannot be considered as sober history. This is the first time the King Devanampiya Tissa came to know about Mahinda, the son of Asoka. However, it is alleged that the King Asoka and the King Devanampiya Tissa were intimate friends, 11- 18 to 19. Asoka forgot to discuss about his son and the daughter with his long-time intimate friend, the King Devanampiya Tissa! Intimate friends usually discuss first about their children. It is a queer friend ship! There is confusion with the name ‘Anula’. Anula is the consort of Sub-king Mahanaga. The sentence next to it says queen Anula! It seems that the name of the queen is also Anula and the name of the consort of the sub-king, the brother of the king who is next in line to the throne, is Anula. It seems quite strange. Chapter 15: This is a long chapter and mostly about the faith, about Buddha, and the previous Buddhas, but not about any reliable historical events that took place in Lanka. The chapters are usually long when the narratives are invented. The Queen Anula and five hundred other women wanted to receive pabbajji ordination. It was decided to bring Samghamitta for that purpose. Water from the king fell on the ground and an earthquake occurred. Earthquake occurs so many times due to Mahinda Thera’s actions, not less than nine times. No masonry buildings of that time would have survived, not only in Lanka but also in the adjacent South India, these so many earthquakes. Lanka and South India are not earthquake prone regions. There are stories of former four Buddhas, which cannot be considered as sober history. The Buddha prophesied that Dutthagamani would build a Thupa at a particular place, 15 – 168 to 169. The episode of Dutthagamani is imagined to come from the mouth of the Buddha. Any prophesies by anyone, even if it is by the Buddha, is with suspicious motive. A mango seed grow into a tall tree bearing fruits immediately, 15 – 41 to 43. The King Tissa built the MahaVihara. Lengthier the chapter, fraudulent is the narrative. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 80 B தொடரும் / Will follow துளி/DROP: 1971 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A] https://www.facebook.com/groups/978753388866632/posts/33119471261034761/?
By
kandiah Thillaivinayagalingam · 29 minutes ago 29 min
Archived
This topic is now archived and is closed to further replies.