Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி

Featured Replies

`என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி

 
'நான் ஏன் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமைFACEBOOK

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத்திய அரசு, மதவாதம், ஜி.எஸ்.டி., தமிழக அரசியல் சூழல், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசினார் பிரகாஷ் ராஜ். அந்தப் பேட்டியின் முதல் பாகம் இது.

கேள்வி - சில காலமாக மிகத் தீவிரமாக உங்கள் கருத்துகளை சமூகவலை தளங்களிலும், பேட்டிகளிலும் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். என்ன காரணம்?

பதில் - நான் நீண்ட காலமாகவே என் எண்ணங்களைத் தெரிவித்து வந்திருக்கிறேன். அப்போது பெரிதாக யாரும் கவனிக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல, இப்போது இவ்வளவு தீவிரமாக வெளிப்படுத்துவதற்குக் காரணம், ஒரு கொலை. ரொம்ப மோசமான ஒரு கொலை. கௌரி லங்கேஷின் கொலை.

எங்களைச் செதுக்கியவர் கௌரி லங்கேஷின் அப்பா. இப்போதும் நீ மௌனமாக இருந்தால் அது தவறாகிவிடும் என்று என் மனசாட்சி சொல்லியது. எங்காவது ஒரு இடத்தில் கேள்விகளைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது. கேட்க ஆரம்பித்தேன்.

`கொலையை கொண்டாடுகிறார்கள்'

கௌரி லங்கேஷின் கருத்துகள் சில பிடிக்கும், சில பிடிக்காது. எல்லோருடைய கருத்துக்களையும் முழுமையாக ஏற்க முடியாது. அவங்க கருத்தைத் தெரிவிக்கும் விதம் சில சமயம் பிடிக்காது. நானே அவங்ககிட்ட பேசியிருக்கேன். இந்த மொழிதான் அவர்களுக்குப் புரியுமென்று சொல்லுவார். ஆனால், அதற்காக அவரைக் கொன்றுவிடுவீர்களா? ஒரு குரலை அமுக்குவதற்கான தைரியம் எங்கிருந்து வருகிறது?

அப்பேற்பட்ட கொலையை கொண்டாடுபவர்களைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடுகிறார்கள்.

இம்மாதிரி கொலையைக் கொண்டாடும் மனப்பான்மை எங்கிருந்து வந்தது?

கேள்வி - இம்மாதிரியான மனப்பான்மை எங்கிருந்து வந்ததாக நினைக்கிறீர்கள்?

பதில் - யார் தூண்டுகிறார்கள்? எல்லோரும் ஒரு முகமூடிக்குப் பின்னாடி இருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வரமாட்டேன். எந்தக் கட்சியோடும் உடன்பாடு இல்லை. என்னுடைய குருநாதர்கள் கனவு கண்ட சமுதாயம் வேறு. அது இல்ல இப்போது இருப்பது. இது எல்லாம் ஒருங்கிணைந்து நடக்கிறது. பத்து பேர் சேர்ந்து குரல் எழுப்பும்போதுதான் இது புரிகிறது.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி, பத்மாவதி பட விவகாரம் என பல விஷயங்கள் குறித்தும் கேள்வியெழுப்ப ஆரம்பித்திருக்கிறீர்கள்..

பதில் - அதற்கு வரும் பதில்களைப் பாருங்கள். இவர்கள் யாரும் என் கேள்விக்குப் பதில் கொடுக்கவில்லை. இப்படிக் கொண்டாடுபவர், என்னுடைய பிரதமர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு கட்சியைச் சேர்ந்தவரில்லை. ஓட்டுபோடாதவர்களுக்கும் அவர்தான் பிரதமர். ஒரு குடிமகனாக நான் அவரிடம் கேட்டேன்,

உங்களைப் பின்பற்றுபவர்கள் ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டேன். எனக்கு ஆதங்கமாக இருக்கிறது. பிரதமர் அவர்களைக் கண்டிக்க வேண்டும். இப்படிப் பேசாதீங்க. ஒரு பெரிய தவறு நடந்திருக்கிறது. நீங்க கொண்டாடுவது தவறில்லை என்று நீங்க ஏன் சொல்ல மாட்டேங்கிறீங்க? நீங்க யார் மோடியைக் கேட்பதற்கு என்கிறார்கள். என் பிரதமரைக் கேட்பதற்கு எனக்கு உரிமை இல்லையா?

அடுத்ததாக ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்படுகிறது. அது தவறென்று சொல்லவில்லை. என்னைப் போல லட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்கள் கட்ட முடியும். ஆனால், சாதாரண தொழிலாளர்கள், பானை செய்பவர்கள் போன்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை வரும் நவம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசும்போது நீக்குவீர்களா என்றுதான் கேட்டேன். உடனே, நான் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். இந்துத்துவாவிற்கு எதிரானவன் என்கிறார்கள். இந்துத்துவாவுக்கும் ஜி.எஸ்.டிக்கும் என்ன சம்பந்தம்?

ஆளுங்கட்சி மீது சந்தேகம்

அடுத்ததாக பத்மாவதி பட விவகாரம். இந்த நாடு பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும், கலாசாரத்திற்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. என்னுடைய தனித்துவத்தை புண்படுத்தியிருக்கிறீர்களா என்ற அச்சம் வருவதிலோ, கேள்வி கேட்பதிலோ தவறில்லை. ஆனால், அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

இன்றைக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அந்தப் படத்திற்கு தடை கோருகிறார்கள். தணிக்கை வாரியத்திடம் சென்று உங்கள் அச்சங்களைச் சொல்லுங்கள். அவர்கள் பார்த்து முடிவெடுத்த பிறகு இங்கு வாருங்கள் என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். அதெல்லாம் முடியாது, நான் தலையை வெட்டுறேன், கழுத்த வெட்டுறேன் அப்படிங்கிறீங்க.

இதெப்படி நீங்க சட்டத்தைக் கையில் எடுக்க முடியும். உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. ஆனால், கேள்வி கேட்கும் முறை தவறு. அந்த முறை தவறாக இருக்கும்போது, ஓர் ஆளும் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காம, கலைஞனான எனக்குப் பாதுகாப்பு கொடுக்காமல் பேசாம இருந்தா எனக்கு சந்தேகம் வரத்தானே செய்யும்.

உங்களால் முடியாது என்றால் கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள். இதைக் கேள்வி கேட்கக்கூடாது என்றால் எப்படி? நான் கேட்கும் கேள்விக்கும் பதில் கொடுப்பதில்லை. நான் இந்துக்களுக்கு எதிரி என்கிறீர்கள். என் அம்மா கிறிஸ்தவர் என்கிறீர்கள். இந்த விவகாரத்தில் மதம், ஜாதி எங்கிருந்து வந்தது. அதனால்தான் கேள்வி கேட்கிறாய் என்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - ஆக, உங்கள் விமர்சனங்கள் எல்லாமே விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதானே தவிர, பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரானது அல்ல என்கிறீர்களா?

பதில் - ஆமாம். என் விமர்சனங்களை ஏன் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரானதாக எடுத்துக்கொள்கிறீர்கள்? நீங்க ஆட்சியில் இருக்கும்போது, நீங்கள் ஒரு கட்சியைச் சார்ந்தவர் இல்லை. எல்லோருக்குமான ஆட்சியைத்தான் நீங்க தரணும். ஒரு குடிமகனாக நான் உங்களைத்தான் கேள்வி கேட்பேன். இதுக்கு ஏன் கோபப்படுறீங்க?

நான் கேட்ட கேள்விகளில் உண்மை இல்லை என்று சொல்லுங்க, உனக்கு என்ன தெரியும் என்று கேளுங்க. பதில் சொல்றேன். இவங்க டெக்னிகலா பேசறாங்க. நான் தெளிவா பேசுறேன். உங்களிடம் பதில் இல்லை. அல்லது உங்கள் பதிலுக்குப் பின்னால் ஏதோ திட்டம் இருக்கிறது.

கேள்வி - உங்கள் கருத்துகள் மிகக் கடுமையாக எதிர்கொள்ளப்படுகின்றன. தற்போதைய சூழல்தான் அப்படியிருக்கிறதா?

பதில் - இல்லை. ஒரு சினிமாவைத் தடுப்பது, சிந்தனையை முடக்குவது போன்றவை காலகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. நெருக்கடி நிலையின் போது நாம் பார்க்காததா? இன்னைக்கு ஊடகங்கள் பெரிய அளவில் இருப்பதால் உடனே தெரிகிறது. நெருக்கடி நிலையின்போது எனக்கு 10 வயசு. நான் எப்படி கேட்பேன். நீ காங்கிரஸா என்கிறார்கள்.

`நான் ஏன் இந்தி கற்க வேண்டும்?'

இந்தியை ஏன் திணிக்கிறீர்கள் என்கிறேன். கேட்கக்கூடாதா? கர்நாடகாவில் கன்னடம் இருக்கனும். தமிழனுக்கு தமிழ் இருக்கனும். மலையாளிக்கு மலையாளம் இருக்கனும். இந்தியை நான் ஏன் கத்துக்கனும்? இதைக் கேட்டா இந்திய எதிரி, மோடியின் எதிரி என்கிறார்கள், என்று குறிப்பிட்டார் பிரகாஷ்ர ராஜ்.

மேலும், தமிழக அரசியல் களம், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் மற்றும் சினிமா உலகில் நிலவும் பிரச்சனைகள் போன்ற பல அம்சங்கள் குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த பாகங்களில் வெளிவரும்.

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-42163038

  • தொடங்கியவர்

கமல், ரஜினியின் கொள்கைகள் என்ன? நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

 

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

'நான் மோதிக்கு எதிரானவனா?' பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமைFACEBOOK

மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத்திய அரசு, மதவாதம், ஜி.எஸ்.டி., தமிழக அரசியல் சூழல், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசினார் பிரகாஷ் ராஜ். அந்தப் பேட்டியின் இரண்டாம் பாகம் இது.

கேள்வி - நீங்கள் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வதால், பிரதமர் தரப்பிலிருந்து உங்களை, குறிப்பாக பிரதமர் உங்களிடம் பேசினாரா?

பதில் - இல்லை. அவர்கள் எல்லாம் பெரியவர்கள். எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தால் போதும். அதைவிட்டுவிட்டு என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது எனக்குக் கோபம் வருகிறது. என் சந்தேகம் சரியாக இருக்கிறது என்ற எண்ணம் வருகிறது. தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது.

நான் பேசுவதைத் திரிக்கிறார்கள். நடிகர்கள் சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னேன். உடனே, நடிகர்கள் சினிமாவுக்கு வரக்கூடாது என்று நான் சொன்னதாகத் திரிக்கிறார்கள். நான் எப்போது அப்படிச் சொன்னேன்?

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், அவர்கள் கொள்கைகளைப் பாருங்க. நீங்கள் விரும்பும் மாற்றத்தை அவர்கள் உருவாக்குவார்களா என்று பாருங்க. இதையெல்லாம் பார்த்து வாக்களியுங்கள்னு சொன்னேன். யாரும் வரக்கூடாதுன்னு சொல்லலை.

கமல், ரஜினி மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு, அவர்களை மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு ரசிகனாக அவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன். அவர்கள் தங்கள் கொள்கைகளை இன்னும் சொல்லவில்லை. அவர்களுடைய தேர்தல் அறிக்கையைப் பார்ப்பேன்.

'நான் மோதிக்கு எதிரானவனா?' பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - நீங்கள் வைக்கும் விமர்சனங்களை வைத்து, மோடிக்கு எதிரானவர் என்ற முத்திரை உங்கள் மீது இருக்கிறது. இதை ஏற்கிறீர்களா?

பதில் -அவர்கள் அப்படி நினைத்தால் அப்படியே இருக்கட்டும். இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களை நான் கேள்வி கேட்கிறேன். நேற்று இருந்தவர்களை நான் கேட்க முடியாது. நான் ஜி.எஸ்.டி. பற்றியோ, இந்தி திணிப்பு பற்றியோ கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும். இதன் மூலம் நீங்கள் மோதியை கேள்வி கேட்கிறீர்கள் என்றால், ஆமாம் நான் மோதியைத்தான் கேட்கிறேன் என்று சொல்வேன்.

கேள்வி - கமல்ஹாசன் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், அவர் ட்விட்டரில் மட்டும் கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, இப்போது அரசியலுக்கு வர முடிவுசெய்துவிட்டார் என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.

பதில் -அவர் தன் கருத்துக்களைத் தெரிவிக்க ஒரு மேடை வேண்டுமல்லவா. நான் வருகிறேன் என்று அறிவித்துவிட்டார் அல்லவா. நான் தமிழ்நாட்டைத் தெரிந்துகொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே அறிவிக்க முடியாதல்லவா..

'நான் மோதிக்கு எதிரானவனா?' பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - தனது கருத்துகளைத் தெரிவிக்க சமூக வலைதளங்களை ஒரு மேடையாக கமல் பயன்படுத்துகிறார் என்கிறீர்கள். நீங்களும் இதைச் செய்கிறீர்கள். உங்களுக்கும் அப்படி ஒரு சிந்தனை இருக்கிறதா?

பதில் -எனக்கு ஆர்வமில்லை. நான் அவ்வளவு பெரிதாக சிந்திக்க முடியாது. எனக்கு முதலில் உண்மையான, நேர்மையான, அச்சமில்லாத குடிமகனாக வேண்டுமெனத்தான் ஆசை. எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. நிச்சயமாக இல்லை. இதைக் கேட்டுக்கொண்டே இருப்பது நல்லதுதான்.

கேள்வி -நீங்கள், கமல் போன்றவர்கள் சமூக வலைதளங்களில் தற்போதைய நிலை குறித்து வெளிப்படையாக பேசுகிறீர்கள். விஜய் போன்றவர்கள் சினிமாவில் சில கருத்துகளைச் சொல்கிறார்கள். ஆனால், வட இந்தியாவில் அப்படிப் பார்க்க முடியவில்லை. அரசியல் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிப்பதில் வட இந்திய நடிகர்களைவிட தென்னிந்திய நடிகர்கள் சற்று வெளிப்படையாக, தைரியமாக இருக்கிறார்களா?

பதில் -உண்மைதான். ஆனால், இங்கு ஒரு நடிகன் பேசுவதால், அங்கிருக்கும் நடிகனும் பேச வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. அதை யாரிடமும் வற்புறுத்த முடியாது. அந்த எண்ணம் அவர்களிடமே இருக்கவேண்டும். அதை ஒரு விதியாக முன்வைக்க முடியாது. ஏற்கனவே கேட்டுக்கொண்டிருப்பவர், திடீரென மௌனமானால் கேட்கலாம். கேட்கவேயில்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - தற்போதைய அரசியல் களத்தை நீங்க எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் - எல்லோருக்கும் தெரிந்ததுதான். இன்றைக்கு நல்ல களம் இருக்கிறது. ரஜினி, கமல், சீமான், ஸ்டாலின் எனப் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தங்கள் கொள்கைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்க வேண்டும்.

கேள்வி -தமிழக அரசியல் களத்தில் தற்போது வெற்றிடம் இருப்பதாக பார்க்கிறீர்களா?

பதில் -இருக்கு. ஒரு மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள். இந்த நேரத்தில் மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது, மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் கொள்கைகளில் உண்மையாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார் பிரகாஷ் ராஜ்.

மேலும், தமிழ் சினிமா உலகில் நிலவும் பிரச்சனைகள் போன்ற அம்சங்கள் குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த பாகத்தில் வெளிவரும்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42176910

  • தொடங்கியவர்

'சினிமாக்காரர்கள் கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும்': பிரகாஷ் ராஜ்

 

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைFACEBOOK

மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத்திய அரசு, மதவாதம், ஜி.எஸ்.டி., தமிழக அரசியல் சூழல், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசினார் பிரகாஷ் ராஜ். அந்தப் பேட்டியின் கடைசி பாகம் இது.

கேள்வி - நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவது தொடர்பாக உங்களுக்கு திரையுலகில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதா?

பதில் -இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் நடந்திருக்கு, உனக்கு எதுக்கு பிரச்சனைனு சொல்றாங்க. உண்மையில் இதற்கு முன்பே கேட்டிருக்க வேண்டும். உண்மையாக இருக்கும்போது இழக்கத் தயாராக இருக்க வேண்டும். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு தவறு செய்து, படத்திற்குப் பிரச்சனை வந்தால், நான் காரணம். பழிவாங்குவதற்காகச் செய்தால், மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

கேள்வி -சினிமாத் துறை இன்னமும் அமைப்பு ரீதியான துறையாக இல்லை. பல பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுகொள்ளாமல், இவர்கள் நாட்டின் பிரச்சனைகள் குறித்து பேசுகிறார்கள் என்ற விமர்சனம் இருக்கிறது.

பதில் - அதற்கு தயாரிப்பாளர் சங்கம் இருக்கு. ஏன் தனி மனிதர்களை, நடிகர்களைக் கேள்வி கேட்கிறீர்கள். கமல்ஹாசனைப் பார்த்து, முதலில் உங்கள் துறையைச் சரி செய்யுங்கள், பிறகு அரசியலுக்கு வாங்கன்னு சொல்ல முடியாது. நாங்கள் உள்ளுக்குள்ளிருந்து போராடிக்கிட்டிருக்கோம்.

விஷாலும் நானும் வந்த பிறகு பல விஷயங்களுக்காக போராடிக்கிட்டிருக்கோம். வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை எதற்கு சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டும்? அரசியல் உலகத்திற்கான விஷயம். வீட்டிற்குள் இருக்கும் விஷயத்தை நான் ஒழுங்குபடுத்திக்கொள்வேன். அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. நீங்கள் அதைப் பற்றிக் கேட்டால் பதில் சொல்வேன்.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைTWITTER

கேள்வி -சில நாட்களுக்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார், கந்துவட்டி காரணமாக. இது துறைக்குள் இருக்கும் ஒழுங்கின்மையைக் காட்டவில்லையா?

பதில் -கந்து வட்டி ஒரு பெரிய பிரச்சனைதான். நடந்தது மிகத் தவறான சம்பவம். இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் கறுப்பு - வெள்ளையாக முடிவெடுக்க முடியாது. ஒரு விவசாயி சாவு மாதிரிதான் இது. சினிமாவிற்குள் கறுப்புப் பணம் எப்படி வருகிறது? சினிமாவுக்குள் இருப்பவர்கள் கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதை நிறுத்தினால்தானே, தயாரிப்பாளர் வெளியில் சென்று கறுப்புப் பணம் வாங்கி வருவதை நிறுத்துவார்?

இரண்டாவதாக, எல்லா வரியையும் செலுத்தி செயல்படும் சினிமா துறையில் சட்ட ரீதியாக பணியாற்றும் சூழல் இல்லை. படத்தை வாங்கும் திரையரங்குகள் தயாரிப்பாளர்களுக்கு கணக்குக் கொடுப்பதில்லை. அரசு வரி வசூல்செய்வதை ஒழுங்குபடுத்தினால், அது திரைத்துறைக்கு பாதுகாப்பாக அமையும்.

அதேபோல மக்களும் திருட்டு வி.சி.டியில் படம் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த சூழலுக்கு பலரும் காரணம். எல்லோரும் அதை யோசிக்க வேண்டும். திரையரங்குகளில் டிக்கெட் விற்பதை முழுவதும் கணினி மயமாக்க வேண்டும். ஒழுங்காக கணக்குக் கொடுக்க வேண்டும். இதைக் கேட்டால் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

திரையரங்கக் கட்டணம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு சிரமம்தான். ஆனால், அவர்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு வருவதில்லை.

பிரகாஷ் ராஜ்

இதைக் கேட்டால் கெட்டவனாகிவிடுகிறோம். நீங்கள் சம்பளம் வாங்குவதைக் குறையுங்கள் என்கிறார்கள். அது அல்ல பதில். டிக்கெட்டை சரியான விலையில் விற்க வேண்டும். இணையத்தில் டிக்கெட் வாங்கினால் ஏன் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறீர்கள். ஐந்து டிக்கெட் வாங்கினால் 150 ரூபாய். இந்தக் காசு யாருக்கு போகிறது?

திரையரங்க உரிமையாளர்கள் விரைவில் டிக்கெட் கொடுப்பதை கணினிமயமாக்குவதாக சொல்லியிருக்கிறார்கள். நேரம் கேட்டிருக்கிறார்கள். கொடுத்திருக்கிறோம். அதற்கு மேல் போனால், அந்தத் தியேட்டருக்குப் படம் கொடுக்க மாட்டோம். திருட்டி விசிடி விவகாரத்தில், ஒரு தியேட்டர் பிடிபட்டால் அதன் நிர்வாகியை கைதுசெய்து விஷயத்தை முடித்துவிடுவார்கள். இப்போது திரையரங்க உரிமையாளர்களைப் பொறுப்பாக்குகிறோம். அவர்கள் இதை சரிசெய்யாவிட்டால், அவர்களைத் தடைசெய்வோம்.

நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் திரையரங்குகளில் அதிக கட்டணம் என்கிறார்கள். அது சரியல்ல. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் திரையுலகில் வெறும் பத்து சதவீதம் மட்டும்தான். அவர்கள் மட்டுமே சினிமா அல்ல. 90 சதவீதம் பேர் சிறு தயாரிப்பாளர்கள். அவர்களைப் பற்றிப் பேசுவோம். பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு கட்டணமும் சிறிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு கட்டணமுமா திரையரங்குகளில் கொடுக்கிறீர்கள்?

திரையரங்குகள் ஒழுங்காகக் கணக்குக் கொடுத்தால், ஒரு நடிகருக்கான சந்தை என்னவென்று சரியாகத் தெரியும். அது தெரியவந்தால் அந்த நடிகருக்கு அதற்கேற்றபடி சம்பளம் அமையும். என் படம் எவ்வளவு ஓடுகிறதென்றே தெரியாது என்றால் எப்படி? என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

பிரகாஷ் ராஜுக்கு பிடித்தவை:

பிரகாஷ் ராஜுக்கு பிடித்தவை

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-42192022

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.