Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி...

Featured Replies

மாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி...

 

தமிழ் தேசிய இன விடு­தலைப் போராட்­ட­மா­னது நாடு சுதந்­திரம் அடை­வ­தற்கு முன்னர் ஒரு மேட்­டுக்­கு­டி­யி­னரின் கைகளிலும், சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் மேட்­டுக்­கு­டி­யினர் மற்றும் மத்­திய தர வகுப்­பி­னர்­களின் கைக­ளிலும், 1970 களுக்கு பின்னர் மத்­திய தர இளை­ஞர்­களின் கைக­ளிலும் குடி­கொண்­டது. முன்­னை­ய­வர்கள் தங்­க­ளது கல்வி அறி­வையும், செல்­வத்­தையும் கொண்டு பிரித்­தா­னி­ய­ரிடம் பேரம் பேசி தமது உரி­மை­களை வென்­று­வி­டலாம் என்று நினைத்­தி­ருந்­தனர். இருப்­பினும், அவர்­க­ளது எண்­ணங்கள் முழு­வதும் காலனித்துவ ஆதிக்­கத்தில் இருந்து இலங்­கையை விடு­விப்­ப­தி­லேயே குவிந்­தி­ருந்­தது. ஆறு கடக்கும் வரை அண்ணன், தம்பி. ஆறு கடந்த பின் நீயாரோ, நான்­யாரோ என்னும் அனு­பவ மொழிக்கு ஏற்ப சிங்­கள தேசியம் தமிழ் தேசிய இனத்தை அடி­மைப்­ப­டுத்த தொடங்­கி­யது. இந்த அடி­மைத்­த­னத்தை தகர்த்­தெ­றிந்து தமது இருப்­பையும், அடை­யா­ளத்­தையும், காத்துக் கொள்­வ­தற்­காக அடுத்த தலை­முறை மித­வா­தத்தில் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தது. அந்த மித­வாத தன்மை  அரச பயங்­க­ர­வா­தத்­தினால் ஆயுத முனையில் அடக்­கப்­பட்­டதைக் கண்டு தமது தலை­வர்­க­ளுக்கு நேர்ந்த அவ­ம­திப்­பையும், இனத்­திற்கு நேர்ந்த அவல நிலை­யையும் கண்டு இளம் தலை­மு­றை­யினர் ஆயு­த­மேந்தி போரா­டினர். 

மித­வாத தலை­வர்­களின் சகிப்புத் தன்மை எல்லை கடந்து சென்று இனி சிங்­கள தேசி­யத்­துடன் கைகோர்த்து பய­ணிக்க முடி­யாது என்ற நிலையை அடைந்த பின்னர் வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தின் மூல­மாக மித­வாத தலை­மை­யினால் இறை­மை­யுள்ள தனி­ய­ர­சான தமி­ழீழ கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. இந்தக் கோரிக்­கையை அவர்­களால் செயற்­ப­டுத்த முடி­யா­மையின் கார­ண­மாக இளை­ஞர்கள் அந்தப் போராட்­டத்தை தமது கையில் எடுத்துக்கொண்டு முன்­னோக்கி நகர்ந்­தனர். இதன் விளை­வாக தமிழ் தேசிய இனத்தின் மீதான அடக்கு முறையும் வன்­மு­றையும் ஓர­ள­வுக்கு கட்­டுப்­பட்­டி­ருந்­தது என்­ப­துடன் தமிழர் தாய­கத்தில் வலிந்து மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த சிங்­கள குடி­யேற்­றமும், நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. இத்­த­கைய ஆயுதப் போராட்­ட­மா­னது 2009 ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்­யப்­பட்­டது. 

1987 ஆம் ஆண்டு தொடக்­கத்தில் இருந்து தமிழ் தேசிய இனத்தின் விடு­தலைப் போராட்­டத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்ட தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அந்த ஆண்டு கார்த்­திகை மாதம் 27 ஆம் திகதி மர­ணித்த சங்­கரை நினைவு கூரும் வகையில் 1989 ஆம் ஆண்டு முதல் அதே கார்த்­திகை 27 ஐ மாவீரர் தின­மாக தமது இயக்­கத்தில் இணைந்து செயற்­பட்டு மர­ணித்­த­வர்­களின் நினை­வாக அனுஷ்டித்து வந்­தனர். 1989 முதல் 2008 வரை மிகவும் உணர்­வு­பூர்­வ­மா­கவும், தமிழ் தேசிய இனத்தின் அடி­மைத்­த­ளையை அகற்­றிட வேண்டும் என்ற வேட்­கை­யு­டனும், அதற்கு திட­சங்­கற்பம் பூணும் தின­மா­கவும் அன்­றைய நாள் அனுஷ்டிக்­கப்­பட்டு வந்­தது. உயி­ரி­ழந்­த­வர்­களின் பெற்­றோர்கள், உற­வி­னர்கள், நண்­பர்கள் சக போராளித் தோழர்கள் அனை­வரும் ஒன்று சேர்ந்­தி­ருந்த அந்த சூழல் ஒரு உணர்வு மிக்­க­தா­கவும், தமது இனத்தின் விடு­த­லைக்­காக தமது பிள்­ளைகள் ஏதோ ஒரு விதத்தில் பங்­காற்­றி­யி­ருக்­கி­றார்கள் என்று அந்த பெற்­றோர்­களும், உற­வி­னர்­க­ளும பெரு­மிதம் கொண்­டி­ருந்­தனர். தனித்­த­னிய அவர்கள் சோகத்தில் ஆழ்ந்­தி­ருந்­தாலும் ஒரு கூட்டு நிகழ்வில் அவர்கள் அந்த துய­ரத்தை மறந்து பெரு­மிதம் கொண்­ட­வர்­க­ளா­கவே தெரிந்­தனர். 

2009 மே மாதத்­திற்கு பின்னர் பல்­வேறு முகாம்­க­ளிலும், தடுப்புக் காவல்­க­ளிலும் கூட அந்தப் போரா­ளிகள் மாவீரர் தினத்தை அந்த சூழ­லுக்கு ஏற்ப சூட்­சு­ம­மான முறையில் அனுஷ்டித்­துள்­ளனர். இதனைப் போன்றே மக்­களும் வீடு­க­ளிலும், ஆல­யங்­க­ளிலும், பிரத்­தி­யேக இடங்­க­ளிலும் அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி­யிலும் தமது உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். வடக்கு, கிழக்கின் பல்­க­லைக்­க­ழக சமூகம் அனைத்து அச்­சு­றுத்­தல்­க­ளையும் கடந்து தமது உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­தினர். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய வெற்­றியை கொண்­டா­டு­வ­தற்கு அர­சாங்கம் ஒவ்­வொரு இடத்தை தேர்வு செய்­தி­ருந்­தது. ஒட்­டு­மொத்த தீவில் எண்­ணிக்­கையில் பெரும்­பான்­மையைக் கொண்­டி­ருக்­கின்ற சிங்­கள, பௌத்த பேரி­ன­வாத ஆளும் வர்க்கம் தமிழ் தேசிய சிறு­பான்மை இனத்தின் உரி­மை­களை மறுத்து தனது கால­டியின் கீழ் தொடர்ந்தும் வைத்­தி­ருக்க வேண்டும் என்ற சிந்­த­னைக்கு எதி­ரா­கவே தமிழ் தேசிய இனம் வீறு கொண்டு எழுந்­தி­ருந்­தது. இவ்­வாறு எழுந்து போரா­டிய இளை­ஞர்கள் போற்­றப்­பட வேண்­டி­ய­வர்­க­ளா­கவே அந்த சமூகம் கரு­தி­யது. ஆனால் 2009 இற்கு பின்னர் அர­சாங்கம் அவர்­களை நினைவு கூரு­வது மீண்டும் புலி­களை மீள் உரு­வாக்­கு­வ­தாக அமையும் என்று கூறி தனது முழுப்­ப­லத்­தையும் பயன்­ப­டுத்தி அந்த நினைவு கூரலை இரும்புக்­கரம் கொண்டு அடக்­கி­யது. 

மர­ணித்துப் போன தமது உற­வு­களை கூட்­டா­கவே, தனி­யா­கவோ வீடு­க­ளிலோ, பொது இடங்­க­ளி­லோ, நினைவு கூரு­வ­தற்கு ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் உரிமை இருக்­கி­றது. அந்த உரி­மையை மறுப்­பது என்­பது அடிப்­படை மனி­த­வு­ரிமை மீறல் என்று சர்­வ­தேச சமூகம் இடித்­து­ரைத்­ததன் விளை­வா­கவே ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நினைவு கூரு­வதை அர­சாங்கம், கண்டும் காணாமல் விட்­டுள்­ளது. கடந்த வருடம் இந்த அனுஷ்­டிப்­பா­னது அர­சி­யல்­வா­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தது. அதன் பின்­னா­லேயே மக்­களும் சென்­றி­ருந்­தனர். இது ஒரு விதத்தில் மக்­க­ளுக்கு தைரியம் ஊட்­டு­வ­தா­கவும் இருந்­தது. இருப்­பினும், அர­சி­யல்­வா­திகள் ஏதோ தம்மை தாமே விடு­தலைப் புலி­களின் தலை­வ­ராக பாவித்துக் கொண்டு முதன்மைச் சுடரை ஏற்றி வைத்து வீர­வ­ச­னங்கள் பேசு­வ­தாக எண்ணி சர்ச்­சை­க­ளுக்­குள்ளும் சிக்கிக் கொண்­டனர். இதன் கார­ண­மா­கவே இந்த முறை மாவீரர் தின­மா­னது மீண்டும் பழைய முறைக்கு திரும்பி உற­வி­னர்­க­ளி­னதும், நண்­பர்­க­ளி­னதும், சமூ­கத்­தி­னதும் உணர்வு பூர்வ தின­மாக அனுஷ்­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

அர­சியல்வாதி­களை நம்பிப் பய­னில்லை என்று முடி­வெ­டுத்து எப்­படி மக்கள் தங்கள் கோரிக்­கை­களை முன்­வைத்து தாமே போராடி வரு­கின்­றார்­களோ அதேபோல் இம்­முறை மாவீரர் நாள் நிகழ்­வி­னையும் தாமே ஒழுங்­க­மைத்து ஒரு சுய­கட்­டுப்­பாட்­டுடன் யார் முதன்மைச் சுடரை ஏற்­று­வது என்­பதில் கூட ஒரு தீர்க்­க­மான முடி­வெ­டுத்து சுட­ரேற்­றி­ய­வரின் குடும்­பத்­திற்கும், அவர்கள் மூல­மாக ஒவ்­வொரு போரா­ளிக்கும் தமது உணர்வுபூர்வ அஞ்­ச­லியை செலுத்­தி­யி­ருந்­தனர். இதில் ஒவ்­வொ­ரு­வரும் கௌர­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஒரு சிறு சல­ச­லப்பு கூட இல்­லாமல் இந்­நி­கழ்வு நேர்த்­தி­யாக ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­ததை அறிய முடி­கி­றது. 

இந்த வருடம் நடை­பெற்ற மாவீரர் நாள் நிகழ்வைப் பார்க்­கின்ற பொழுது நவீன உல­கத்தின் தொழில்­நுட்ப உத­வியின் மூல­மாக மிக எளி­தாக அனை­வ­ரையும் ஒன்­றி­ணைக்க முடியும் என்­பது நிரூ­ப­ண­மா­கி­யி­ருக்­கி­றது. இந்த உணர்வுபூர்­வ­மான நிகழ்வில் கலந்து கொண்டு தமது உள்­ளக்­கி­டக்­கையை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளுக்கு ஓர­ளவு ஆறுதல் கிடைத்­தி­ருக்கும் என்­பதில் ஐய­மில்லை. 

இந்­த­வி­டத்தில் ஒன்றை நினை­வு­ப­டுத்­து­வதும் இதற்கு துணை­பு­ரி­வ­தாக அமையும். ஒரே இயக்­கத்தில் ஒன்­றி­ணைந்து போராடி வித்­தா­கி­ய­வர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்கு ஒன்­றி­ணைத்­ததைப் போலவே சக போரா­ளிகள், சர­ண­டைந்த பல்­லா­யிரம் பேர் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் இருக்­கி­றார்­களா?, அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? என்­பது குறித்து அறிந்து கொள்­வ­தற்­காக சுமார் ஒரு­வ­ருட கால­மாக அவர்­க­ளது உற­வுகள் வீதிகளில் இறங்கி நியாயம் கேட்டு வருகின்றனர். அரசாங்கம் இன்று வரை அவர்களுக்கு உரிய பதிலை வழங்காது இருக்கின்றது. மாவீரர் குடும்பங்களின் உறவுகளையும் ஒன்றி ணைத்து  அதனூடாக ஒட்டுமொத்த சமூகத் தையும் இணைப்பதன் ஊடாக அந்த மக்களு க்கு நியாயம் கிடைப்பதற்கான காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அஞ்சலிக்காக உழைத்தவர்கள்  நீதி, நியாயம் கோருவதற்காகவும் முன்வர வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினதும், காணி விடுவிப்புக்காக காத் திருப்போரினதும், நீதி விசாரணையின்றி அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப் பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளினதும் அவர்களது உறவினர்களினதும் எதிர்பார்ப் பாகும். எதிர்காலத்தில் இதற்கான முன்னெ டுப்புக்கள் நடைபெறுவது சிறப்பானதாக இருக்கும்.

ருத்திரன்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-02#page-5

  • தொடங்கியவர்
  • தமிழர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் தின நிகழ்வுகள்
தமிழர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் தின நிகழ்வுகள்
 
 

தமிழர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் தின நிகழ்வுகள்

 

பல்­வேறு வகைப்­பட்ட இடை­யூ­று­க­ளுக்கு மத்­தி­யி­லும் விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னின் பிறந்­த­நாள் நிகழ்­வும் , மாவீ­ரர் நாள் நிகழ்­வு­க­ ளும் தமி­ழர் தாய­கத்­தில் உற்­சா­கத்­து­ட­னும் உருக்­கத்­து­ட­னும் கடைக்கொள்ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

போர் ஓய்ந்­த­தன் பின்­னர் மக்­கள் தமது உணர்­வு­க­ளைச் சுதந்­தி­ர­மா­க­வும், உணர்­வு­பூர்­வ­மா­க­வும் பகிர்ந்து கொள்­வ­தற்­கான ஓர் அரிய வாய்ப்பு இம்­முறை கிடைத்­தமை மன­துக்கு ஆறு­தல் தரு­மொன்று. தமி­ழர்­க­ளி­டையே பிணக்­கு­க­ளும் பிள­வு­க­ளும் தலை­தூக்­கிக் காணப் ப­டு­கின்ற நிலை­யி­லும், உணர்­வு­கள் ஒன்­றாக இருந்­ததை இந்த நிகழ்­வு­க­ளின்­போது காண முடிந்­தது.

தமி­ழர்­க­ளுக்கு அவர்­க­ளுக்கான அடிப்­படை உரி­மை­கள் கிடைக்க வேண்­டும்; அவர்­க­ளும் இந்த நாட்­டில் தன்­மா­னத்­து­டன் வாழ வேண்­டும் என்­ப­தற்­கா­கவே தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­த­மேந்­திப் போரா­டி­னார்­கள். பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் தமது உயிர்­களை இழந்­தார்­கள்.

மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சு­கள் தமி­ழர்­க­ளது பிரச்­சி­னை­ கள் விட­யத்­தில் விட்­டுக் கொடுப்­பு­டன் நடந்­தி­ருந்­தால் இந்த நாட்­டில் ஏற்­பட்ட அழி­வு­க­ளைத் தவிர்த்­தி­ருக்க முடி­யும். போர் இடம்­பெற்­ற­போது போரா­ளி­கள் மற்­றும் படை­யி­னர் மட்­டும் தமது உயிர்­களை இழக்­க­வில்லை. பெருந்­தொ­கை­யான பொது­மக்­க­ளும் தமது உயிர்­களை இழந்­துள்­ள­னர்.

இவர்­க­ளது உற­வு­கள் இவர்­களை நினைத்­துத் தின­மும் கண்­ணீர் விட்­டுக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் மாவீ­ரர் நாள் அவர்­க­ளது மன­தில் உள்ள சோகத்­தைக் கீழே இறக்கி வைப்­ப­தற்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்­கு­கின்­றது.

 

மாவீரர் நாள் நிகழ்வுகளை ஜூரணிக்க முடியாத இனவாதத் தரப்பினர்

போரில் வீரச்­சா­வைத் தழு­விக் கொண்ட தமது சக­போ­ரா­ளி­க­ளின் நினை­வாக விடு­த­லைப் புலி­கள் அமைத்த மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் படை­யி­ன­ரால் சேதப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன.
இவற்­றைக் காணும் போதெல்­லாம் மன­தில் தாங்க முடி­யாத சோகம் ஏற்­ப­டு­கின்­றது. அதே­போன்று இறந்­த­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளும் தாங்க முடி­யாத வேத­னை­யில் மூழ்கி விடு­கின்­ற­னர்.

இதே­வேளை மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் இடம்­பெற்­ற­தைப் பொறுக்­க­மு­டி­யாத இன­வா­தி­கள் வழக்­கம் போன்று தமது பாணி­யில் இன­வா­தக் கருத்­துக்­க­ளைக் கூறி வரு­கின்­ற­னர். அஞ்­சலி செலுத்து­வ­தற்­குச் சென்­ற­வர்­கள் அனை­வ­ருமே விடு­த­லைப் புலி­கள் என­வும், அவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெ­ன­வும் கூறு­கின்­ற­னர்.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வவு­னியா வளா­கத்­தில் பிர­பா­க­ர­னின் பிறந்­த­நாள் கொண்­டா­டப்­பட்­டதை எதிர்த்த சிங்­கள மாண­வர்­க­ளால் பதற்ற நிலை உரு­வா­கி­ய­தை­ய­டுத்து வளா­கத்தை தற்­கா­லி­க­மாக மூட­வேண்­டி­ய­தா­யிற்று.

இன­வா­தத்தை வளர்த்­து­விட்டு அழிக்க முயன்­றால் அது இல­கு­வா­ன­தாக அமை­யாது

இன­வா­தத்தை விதைப்­பது மிக எளி­தான காரி­ய­மா­கும். ஆனால் அந்த விதை முளைத்து பெரும் விருட்­ச­மாக வளர்ந்த பின்­னர் அதை இல­கு­வில் அழித்­து­விட முடி­யாது. நாடு சுதந்­தி­ரம் அடைந்த நாளில் இருந்து இன­வா­தத்­தின் விதை­கள் தொடர்ந்து விதைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கொடிய போர் இடம்­பெற்று முடிந்த பின்­ன­ரும் அந்த விதைப்பு ஓய்ந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

 

போரி­னால் தெற்­கி­லும் பொது­மக்­கள் மத்­தி­யில் உயி­ரி­ழப்­புக்­கள் ஏற்­ப­டத்­தான் செய்­தன. ஏரா­ள­மா­ன­வர்­கள் தமது உயிர்­க­ளை­யும் அங்­கங்­க­ளை­யும் இழந்­த­னர். ஒரு சில­ரின் தவ­றான அணு­கு­மு­றை­கள் பல­ருக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது.

இதே­வேளை இம்­முறையும் சில இடங்­க­ளில் மாவீ­ரர் நாள் நிகழ்­வு­க­ளைக் குழப்­பும் வகை­யில் இரா­ணு­வத்­தி­ன­ரும் பொலி­ஸா­ரும் நடந்து கொண்­ட­தா­கத் தெரிய வரு­கின்­றது. புல­னாய்­வா­ளர்­க­ ளும் தமது பங்­குக்கு மக்­களை கைத்­தொ­லை­பே­சி­கள் மூல­மும் புகைப்­ப­டக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யும் படம் பிடித்­துள்­ள­னர். இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் இந்த வேளை­ யில் தேவை­தானா?

இது­போன்ற நட­வ­டிக்­கை­கள் நல்­லி­ணக்­கத்­தைச் சீர்குலைக்க வல்­ல­வை­யல்­லவா? புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன் போர் இடம்­பெற்­ற­போது கொல்­லப்­பட்­டு­விட்­ட­தாக அர­சின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­போ­தி­லும் பெரும்­பா­லான தமிழ் மக்­கள் இதை ஏற்­ப­தற்கு இன்­ன­மும் தயங்­கு­கின்­ற­னர். அவர் உயி­ரு­டன் இருப்­ப­தா­கவே நம்­பு­கின்­ற­னர். இந்த நிலை­யில்­தான் இலங்கை உட்­பட உல­கின் பல நாடு­க­ளி­லும் பிர­பா­க­ரன் பிறந்­த­நாள் நிகழ்­வு­கள் சிறப்­பா­கக் கொண்­டா­டப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை பிர­பா­க­ர­னின் பிறந்த நாளைக் கொண்­டா­டிய அனை­வ­ரும் கைது செய்­யப்­ப­டு­வார்­க­ளென பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் தற்­போது கூறு­கி­றார்.

 

தமிழ் மக்­கள் மனங்­க­ளில் மாவீ­ரர் தின நிகழ்­வு­கள் ஒரு எழுச்சி உணர்வை உரு­வாக்­கி­யுள்­ளன

பிர­பா­க­ரன் பிறந்­த­நாள் நிகழ்­வும் மாவீ­ரர் தின நிகழ்­வு­க­ளும் ஈழத் தமி­ழர்­க­ளின் வாழ்­வில் ஒரு திருப்­பு­மு­னை­யாக அமைய வேண்­டும். அவர்­க­ளின் மனங்­க­ளில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த வேண்­டும். இவர்­கள் தலை நிமிர்ந்து நடப்­ப­தற்கு இவை திருப்­பு­
மு­னை­யொன்றை ஏற்­ப­டுத்த வேண்­டும். ஈழத் தமி­ழர்­கள் தலை நிமிர்ந்து நடப்­ப­தற்கு இது­வொரு ஆரம்­ப­மா­க­வும் அமைந்­தி­டல் வேண்­டும்.

இதே­வேளை தமிழ்த் தலை­வர்­கள் மீதான நம்­பிக்­கை­யீ­னமே மாவீ­ரர் தின நிகழ்­வு­ க­ளில் மக்­கள் பெரும் திர­ளா­கக் கலந்­து­கொண்­ட­மைக்­கான கார­ண­மென வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் புதிய வியாக்­கி­ய­ மொன்­றைக் கூறி­யுள்­ளார். அவர் தலை­வர்­க­ளென எவ­ரைக் குறிப்­பி­டு­கின்­றார் என்­பது புரி­ய­வில்லை. ஆனால் தமி­ழர்­க­ளின் தலை­வ­ரா­கத் தாம் மதிக்­கப்­ப­ட­வில்லை என்­பது குறித்து அவர் ஏமாற்­றம் அடைந்­துள்­ளார் என்­பது மட்­டும் தெளி­வா­கத் தெரி­கி­றது.

எவர் என்ன கூறி­னா­லும் இம்­முறை மாவீ­ரர் தின நிகழ்­வு­ களை உற்று நோக்­கும்­போது தமிழ் மக்­க­ளின் மனங்­க­ளில் ஏதோ­வொரு எழுச்சி உரு­வா­கி­யுள்­ளதை ஒப்­புக்­கொள்­ளத்­தான் வேண்­டும்.

http://newuthayan.com/story/51862.html

  • தொடங்கியவர்

மாவீரர் நாளும் மக்கள் எழுச்சியும்

 

மாவீரர் நாளும் மக்கள் எழுச்சியும்

நரேன்-

தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்தை ஆயுத ரீதியில் முன்னெடுத்திருந்த நிலையில் பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. அவை தமக்குள் சகோதார முரண்பாடுகளை ஏற்படுத்தி ஒவ்வொரு திசை நோக்கிச் சென்றிருந்தன. இறுதி வரை ஒரே இலட்சியத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே போராடியது. ஒவ்வொரு இயக்கங்களும் போராட்ட காலத்தில் மடிந்த தமது வீரர்களை நினைவு கூர ஒவ்வொரு தினங்களை தேர்தெடுத்து அதில் நினைவு கூரல்களை செய்தும் வருகின்றது. ஈபிஆர்எல்எப் தியாகிகள் தினம் எனவும், புளொட் வீரமக்கள் தினம் எனவும், விடுதலைப் புலிகள் மாவீரர் தினம் எனவும் அவற்றை நினைவு கூர்ந்தனர். இதில் மாவீரர் தினம் வித்தியாசமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களை நினைவுகூரும் முகமாக மாவீரர் தினத்தை விடுதலைப்புலிகள் அனுஸ்டி வந்தனர். கார்த்திகை 21 முதல் 27 வரையான காலப்பகுதி மாவீரர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டும் இருந்தது. இந்தக் காலப்பகுதிக்குள் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டப்பட்டதுடன், 27 ஆம் திகதி விடுதலைப் புலி உறுப்பினர்களின் உடலங்கள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இலங்லங்களில் சுடரேற்றி மக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். கார்த்திகை 27 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளியான சங்கர் மரணித்திருந்தார். அன்றைய நாளே மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டது. மாவீரர் வாரக் காலப்பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு முதல் 2008 வரை மாவீரர் நாள் நிகழ்வுகள் விடுதலைப்புலிகளால் அனுஸ்டிக்கப்பட்டு வந்திருந்தது. தமிழ் மக்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இந்நிகழ்வு இடம்பெற்று வந்தது.

2009 மே மாதம் முள்ளியவாய்கால் பேரவலத்துடன் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர் மாவீரர் நாள் அனுஸ்டிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டதுடன், அவை இடித்தும் அழிக்கப்பட்டிருந்தன. மாவீரர் வாரம் ஆரம்பிக்கும் காலப்பகுதிகளில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுத்தின் கழுகுப் பார்வை அதிகரித்துடன், மக்கள் நெருக்குவாரங்களுக்கும் முகம் கொடுத்தனர். இருப்பினும் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வழிபாட்டு தளங்களிலும், வீடுகளிலும், பிரத்தியேக இடங்களிலும், பல்கலைக் கழகத்திலும் மக்கள் மாவீரர் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். இது தொடர்பான செய்திகள் வெளியானதும், அது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்றும் வந்திருந்தது.

2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரை மாவீரர் நாள் அனுஸ்டிப்பு என்பது வடக்கு, கிழக்கு பகுதிகளை விட தமிழ் மக்கள் வாழும் புலம் பெயர் தேசங்களிலிலேயே உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தது. அங்கு ஈழ உணர்வாளர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு தமது அஞ்சலிகளை செலுத்தி வந்தனர். 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறிய ஜனநாயக இடைவெளி ஒன்று ஏற்பட்டிருந்தது. இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 30- 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கமும் இணை அணுசரணை வழங்கியிருந்தது. அது நிறைவேற்றப்பாடாத நிலையில் 2017 ஆம் ஆண்டு அதனை நடைமுறைப்படுத்த 34- 1 இன் மூலம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஐ.நா மாற்றும் சர்வதேச சமூகம் என்பவற்றில் மூலம் ஏற்பட்ட அழுத்தம் என்பது ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு குறைவடைந்திருந்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையையும் அரசாங்கம் கச்சிதமாக பயன்படுத்தி வருகின்றது.

ஐ.நா தீர்மானங்களில் ஒன்றாக இறந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களின் போதும் நினைவு கூரல் உரிமை பற்றி மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் இராணுவம் வசமிருந்த சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டிருந்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு மாவீரர் வாரத்தில் அரசாங்கத்தின் இருப்புக்கரம் தளர்வடைந்து மாவீரர் நாளை துயிலும் இல்லங்களில் நினைவு கூருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மாவீரர் வாரம் இம்முறை மிகவும் உணர்வெழுச்சியுடன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றிருக்கின்றது. 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டிருப்பது இம்முறையே.

மாவீரர் வாரத்தை முன்னிட்டு இளைஞர்களும், மக்களும் தன்னெழுச்சியாக தாமாகவே முன்வந்து இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்து நினைவு கூரலுக்கு ஏற்ற வகையில் அவற்றை தயார் செய்தனர். மாவீரர் நாள் 2017 என பொறிக்கப்பட்ட பதாதைகளை நிறுவி, சிவப்பு, மஞ்சள் கொடிகளால் துயிலும் இல்லங்கள் அலங்கரிக்கப்பட்டு தமது உணர்வெழுச்சிகளை இளைஞர்களும் மக்களும் வெளிப்படுத்தியிருந்தனர். இராணுவம் வசமுள்ள கோப்பாய் மற்றும் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சிவப்பு, மஞ்சள் கொடிகளை கட்டி மாவீரர் நாளை அனுஸ்டித்திருந்தனர். இந்த நிகழ்வுகளின் போது மாவீரர் நினைவுக் கீதங்களையும் இசைத்திருந்தனர். நவம்பர் 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு ஒவ்வொரு துயிலும் இல்லங்களும் மக்களின் உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டன.

எவருடைய அழைப்பும் இன்றி, எந்தவொரு வாகன ஒழுங்கமைப்பும் இன்றி மக்கள் தாமாகவே, தன்னெழுச்சியாகவும், உணர்வு பூர்வமாகவும் வீட்டில் இருந்து வெளியேறி துயிலும் இல்லங்களுக்குச் சென்று தமது பிள்ளைகள் மற்றும் உறவுகள் நினைவாக அஞ்சலி செலுத்தியிருந்தனர். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பகுதி கண்ணீரால் தோய்ந்தது. கடந்த காலங்களில் மனங்களுக்குள் புதைத்து வைத்திருந்த தமது உணர்வுகளை மக்கள் வெளிப்படையாகவே வெளிப்படுத்தியிருந்தனர். மாவீரர்களை மக்கள் இன்றும் தமது மனங்களில் நிலை நிறுத்தியுள்ளார்கள் என்பதை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்ற பல ஆயிரக் கணக்கான மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள். இதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் தலைமைகளுக்கும் மக்கள் ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் உரிமைக்காக நடந்த போரினை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக காட்டி சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் அப்போதைய மஹிந்த அரசாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. ஆனால் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. எம்மில் ஒருவர். எமது விடுதலைக்காக போராடியவர்கள். அவர்களை நாம் தெய்வங்களாக மதிக்கின்றோம் என்ற செய்தியை மாவீரர் நாள் எழுச்சி போரின் போது அரசாங்கத்திற்கு உதவிய சர்வதேச சமூகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தியிருக்கின்றது. தமிழ் தலைமைகளின் புலி நீக்க அரசியல் முயற்சிக்கும், தமிழ் மக்கள் மீது அரைகுறை தீர்வை திணிக்கும் முயற்சிக்கும் மக்கள் சவாலாக மாறியிருக்கின்றார்கள் என்பதை இந்த மக்கள் எழுச்சி வெளிப்படுத்தியிருக்கிறது. ‘தமது தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ அல்லது அரைகுறைத் தீர்வைத் தம்மீது திணித்து விடுவார்களோ என்று எண்ணி அதற்கு அஞ்சி மக்கள் விடுதலை வீரர்களின் நினைவேந்தலில் மன நிறைவு காண எத்தனித்துள்ளார்கள். அவர்கள் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர்களின் நினைவில் அமைதி காண எத்தனித்துள்ளார்கள்’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளமை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களிலும், ஆலயங்களிலும், வீடுகளிலும், யாழ் பல்கலைக்கழகத்திலும், கிழக்கு பல்கலைக்கழத்திலும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் இடம்பெற்றதுடன், பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும், மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த காலங்களைப் போன்று புலம்பெயர் நாடுகளில் பிரித்தானியா, நோர்வே, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, சுவிஸ்லாந்து, ஜேர்மனி, நியூசிலாந்து, இந்தியா என பல நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவாக ‘அந்த புனித மாவீரர்களை நினைவு கூர்ந்து குருதிக் கொடை’ என்னும் தொனிப்பொருளில் லண்டனில் அமைந்துள்ள எட்வேர்ட் குருதிக் கொடை நிலையத்தில் குருதிக் கொடை நிகழ்வு உணர்ச்சி பூர்வமாகவும் இடம்பெற்றுள்ளது. இதில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள், முக்கிய செயற்பாட்டாளர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஈழ உணர்வாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது உணர்வினை வெளிக்காட்டியதோடு குருதிகளையும் தானம் செய்தார்கள். அத்துடன் ஈழத்தின் தற்போதைய நிலையை சுமந்த குறுந்திரைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் என்பது இம்முறை தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களிலம் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது. மக்கள் தமது உணர்வுகளையும், உள்ளக் கிடக்கைகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். இவை தமிழ் தேசிய அரசியலில் விடுதலைப் புலிகளின் பங்கினை வெளிப்படுத்துவதாக அமைவதுடன், மக்கள் மனங்களில் இருந்து விடுதலைப் புலிகள் பிரிக்கப்பட முடியாதவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது. மக்கள் தமது உரிமைக்கான கொள்கையிலும், தீர்வு நோக்கிய பயணத்திலும் உறுதியாக இருக்கின்றார்கள் என்ற செய்தியையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆகவே, இதனை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே மாவீரர் தின எழுச்சி வெளிக்காட்டியிருக்கின்றது.

http://www.samakalam.com/செய்திகள்/மாவீரர்-நாளும்-மக்கள்-எழ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.