Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கட்­சி­களின் தலை­மைகள் சிந்­தித்து செய­லாற்ற வேண்டும்

Featured Replies

தமிழ் கட்­சி­களின் தலை­மைகள் சிந்­தித்து செய­லாற்ற வேண்டும்

 

நாடு தழு­விய ரீதியில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் எதிர்­வரும் பெப்ர­வ­ரி­ மாதம் 17 ஆம் திக­திக்கு முன்னர் நடத்­தப்­படும் என்று சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இதற்­கி­ணங்க 93 சபை­க­ளுக்கு எதிர்­வரும் 11 ஆம்­ தி­கதி முதல் 14ஆம் திக­தி­ வரை வேட்­பு ­ம­னுத்­தாக்கல் செய்யும் கால­மா­கவும் ஏனைய 243 சபை­க­ளுக்கு எதிர்­வரும் 18ஆம் திகதி முதல் 21 ஆம்­ தி­க­தி­ வரை வேட்­பு­மனு தாக்கல் செய்ய முடியும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­த­லுக்­கான அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­ட­தை­ய­டுத்து அர­சி­யல் ­கட்­சிகள் கூட்­டணி அமைப்­பது குறித்து தொடர்ச்­சி­யான பேச்­சுக்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன. வடக்கு, கிழக்கு, மலை­யகம் மற்றும் மேல்­மா­கா­ணத்தில் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர்பில் சிறு­பான்மை கட்­சி­களும் தமக்­கி­டையே வியூ­கங்­களை அமைத்து வரு­கின்­றன.

வடக்கு, கிழக்கில் தொகு­திப்­பங்­கீ­டுகள் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்குள் பிணக்கு நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, ரெலோ, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய நான்கு கட்­சிகள் அங்கம் வகித்­தி­ருந்­தன. தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­யுடன் ஏற்­பட்ட பிணக்­கு ­கா­ர­ண­மாக சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யா­னது உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தனி­வழி செல்­வ­தற்கு தீர்­மா­னித்­தது. இத­னை­ய­டுத்து ஏனைய மூன்று கட்­சி­க­ளுக்­கி­டையே தற்­போது உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­கான தொகு­திப்­பங்­கீடு தொடர்­பான பேச்­சு­வார்த்தை இடம்­பெ­று­கின்­றது.

கடந்த மூன்று தினங்­க­ளாக யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தமி­ழ­ர­சுக்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற இந்த பேச்­சு­வார்த்­தை­களின் போது தொகு­திப்­பங்­கீடு தொடர்பில் மூன்று கட்­சி­க­ளுக்­கு­மிடையில் இன்­னமும் இணக்கம் ஏற்­ப­ட­வில்லை. வடக்கு, கிழக்கில் சில சபை­களை தமக்கு வழங்­க­வேண்­டு­மென்று ரெலோவும் புௌாட்டும் கோரி வரு­கின்­றன. ஆனால் இந்த விட­யத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைமை விட்­டுக்­கொ­டுக்­கா­மை­யினால் முரண்­பா­டான நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் தமது கட்­சி­க­ளுக்கும் சபைகள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று இரு ­கட்­சி­களும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றன. ஆனால் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யின் ­த­லைமை அதற்கு இன்­னமும் உடன்­ப­ட­வில்லை. இதனால் புௌாட் மற்றும் ரெலோ ஆகிய கட்­சியின் தலை­மைத்­துவ உறுப்­பி­னர்கள் மாற்று முடி­வு­களை எடுப்­பது குறித்தும் தற்­போது கலந்­து­ரை­யாடி வரு­கின்­றனர்.

யாழ்ப்­பா­ணத்தில் நேற்று முற்­பகல் ரெலோவின் தலை­மைக்­குழு உறுப்­பி­னர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரையும் தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் தலைவர் வீ. ஆனந்த சங்­க­ரி­யையும் சந்­தித்து பேசி­யுள்­ளனர். இதே­போன்று ரெலோவின் தலை­மைக்­குழு உறுப்­பி­னர்கள் புௌாட் தலைவர் சித்­தார்த்­த­னு­டனும் தனித்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைமை தொகுதி பங்­கீட்டு விட­யத்தில் தம்­முடன் இணங்­காத பட்­சத்தில் மாற்று முடி­வு­களை எடுப்­பது குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்டு வரு­கின்­றது.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மையின் நிலைப்­பாட்­டினால் அதி­ருப்தி அடைந்­துள்ள கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­மைப்­பீட உறுப்­பி­னர்கள் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னையும் சந்­தித்துப் பேச நேற்று ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது.

வடக்கு, கிழக்கை பிர­தி­நி­தித்­து­வப்­படுத்தும் தமிழ் கட்­சி­க­ளி­டையே ஒற்­று­மையை ஏற்­ப­டுத்தும் வகையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் அங்­கீ­கா­ரத்­துடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது உரு­வாக்­கப்­பட்­டது. இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு 2001 ஆம் ஆண்டு முதல் நடை­பெற்ற தேர்­தல்­களில் வட, கிழக்கு மக்கள் பேரா­த­ர­வினை அளித்து வந்­தனர்.

2013 ஆம் ஆண்டு நடை­பெற்ற வட­மாகா­ண­சபை தேர்­த­லின்­போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் சார்பில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட முன்னாள் நீதி­ய­ரசர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான அணி­யி­ன­ருக்கு வடக்கு தமிழ் மக்கள் பேரா­த­ர­வினை வழங்கி வட­மா­காண சபையை கூட்­ட­மைப்பு வசம் ஒப்­ப­டைத்­தி­ருந்­தனர். அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் வட­மா­காண சபை தேர்­தலில் வெற்­றி­பெற்­று­வி­ட­வேண்டும் என்று கங்­கணம்­கட்டி செயற்­பட்­டி­ருந்­தனர். பெரு­வா­ரி­யான அமைச்­சர்கள் வடக்­கிற்குப் படை­யெ­டுத்து பிரசா­ரங்­க­ளையும் மேற்­கொண்­டனர்.

மக்­க­ளுக்கு பெரும் சலு­கை­க­ளையும் அவர்கள் வழங்­கி­யி­ருந்­தனர். ஆனாலும் சலு­கை­க­ளுக்கு விலை­போ­காது வடக்கு தமிழ் மக்கள் உரி­மையை நோக்­கா­கக்­கொண்டு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு பெரும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இதே­போன்றே 2001 ஆம் ஆண்­டுக்கு பின்னர் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளிலும் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கே அதி­க­ளவு ஆச­னங்கள் கிடைத்­தி­ருந்­தன.

யுத்தம் முடி­வ­டைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு மக்­களின் அர­சியல் தலை­மைத்­து­வ­மா­னது கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கூட்­ட­மைப்­பிற்கு பேரா­த­ர­வினை வழங்­கி­யி­ருந்­த­போதும் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சி­க­ளி­டையே பிணக்­குகள் தொடர்ந்­தி­ருந்­தன. கூட்­ட­மைப்பை பதிவு செய்­ய­வேண்டும் என்று கூட்­டுக்­கட்­சிகள் கோரி­வந்­தன. ஆனால் அந்தக் கோரிக்­கைக்கு தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைமை இணங்­க­வில்லை. இதன் பின்­ன­ணி­யி­லேயே கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்த ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியின் தலை­வர்கள் தமி­ழ­ர­சுக்­கட்சித் தலை­மையை விமர்­சிக்கும் நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே தற்­போ­தைய தேர்­தலில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து தாம் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என்று ஈ.பி. ஆர்.எல்.எவ். அறி­வித்­த­துடன் தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணி­யுடன் இணைந்து புதிய தேர்தல் கூட்­டினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

வட­மா­கா­ண­சபைத் தேர்­த­லாக இருக்­கலாம். அல்­லது பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளாக இருக்­கலாம் தொகு­திப்­பங்­கீடு விட­யத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்குள் அங்கம் வகிக்கும் கட்­சி­க­ளி­டையே ஒவ்­வொரு முறையும் பெரும் பிணக்­குகள் ஏற்­பட்­டதே வர­லா­றாக உள்­ளது. இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­யா­னது ஏனைய அங்­கத்­து­வக்­கட்­சி­க­ளுக்கு உரிய ஆசனப் பங்­கீட்டை செய்­வ­தற்கு மறுப்பு தெரி­வித்­த­மையே இந்த முரண்­பா­டு­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தன. அதே­போன்றே உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­கான ஆச­னப்­பங்­கீட்டு விட­யத்­திலும் தற்­போது பிணக்கு நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

இந்தப் பிணக்கு தொட­ரு­மானால் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ மற்­றும் புௌாட் ஆகிய கட்­சி­களும் மாற்று முடி­வு­களை எடுக்­க­வேண்­டிய சூழல் உரு­வாகும். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­து­வத்தின் விடா­ப்பிடி கார­ண­மா­கவே இந்த இரு கட்­சி­களும் மாற்று கூட்­ட­ணி­யுடன் பேச்­சுக்­களை நடத்தும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

எனவே கூட்­ட­மைப்­பிற்குள் ஆசனப் பங்­கீடு விட­யத்தில் ஏற்­பட்­டுள்ள பிணக்­கினை தீர்ப்­ப­தற்கு இரு­த­ரப்­பிலும் விட்­டுக்­கொ­டுப்­புக்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாக உள்­ளது. ஏற்­க­னவே கூட்­ட­மைப்­பி­லி­ருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். விலகி தனி­வ­ழி­யாக தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றது. ஏனைய கட்­சி­க­ளுக்­கி­டை­யேயும் பிணக்­குகள் வலு­வ­டை­யு­மானால் கூட்­ட­மைப்­பிற்குள் பிளவு என்­பது நிதர்­ச­ன­மா­கி­விடும்.

இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வடக்கு, கிழக்கில் தேசிய கட்­சி­களும் போட்­டி­யி­டு­கின்­றன. இத­னை­விட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­மு­னவும் போட்­டி­யி­டு­வ­தற்கு ஆயத்­தங்­களை செய்­துள்­ளது. இதே­போன்று ஏனைய கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கவுள்ளன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய முன்னணியும் பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து தனியாகப் போட்டியிடுகின்றது. கூட்டமைப்பிலிருந்து விலகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமை யிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கூட்டணியுடன் இணைந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்­­பிற்குள் மேலும் பிளவுகள் ஏற்படுத்தப்பட்டால் வாக்குகள் மேலும் பிரியும் நிலையே உருவாகும்.

இதனைவிட தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒருமித்து செயற்படவேண்டும் என்பதற்காகவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு தமது ஆணையினை வழங்கி வந்தனர். எனவே தற்போதைய நிலையில் தமிழ் கட்சிகள் தமக்குள் முரண்பட்டுக்கொள்வது தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவே அமையும். இந்த விடயத்தில் தமிழ் கட்சிகளின் தலைமைகள் சிந்தித்து செயலாற்றவேண்டிய நேரம் இது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-07#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.