Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடக்கப்போவது என்ன?

Featured Replies

நடக்கப்போவது என்ன?

 

தற்­போ­தைய நிலை­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியும் ஒன்­றி­ணை­யப்­போ­வ­தில்லை என்­பது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­விட்­டது. சுதந்­திரக் கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்கள் சிலர் இன்னும் இதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ள நிலையில் அந்த முயற்­சிகள் கைகூ­டாது என்றே தற்­போ­தைய அர­சியல் சூழலில் தெளி­வா­கின்­றது.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியும் இணை­யா­விடின் இம்­முறை தேர்­த­லா­னது மும்­முனை போட்­டிக்­க­ள­மாக காணப்­படும் என்­பதே யதார்த்­த­மாகும்.

ஆளும் கட்சி என்ற வகையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தேர்­தலில் வெல்­வ­தற்­கான அதிக சாத்­தியம் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்ற நிலையில் தேர்­தலில் பாரிய போட்­டியே சுதந்­திரக் கட்­சிக்கும் கூட்டு எதி­ர­ணிக்கும் இடை­யி­லேயே காணப்­படும் என்­பது தெளி வா­கின்­றது.

இரண்டு தரப்புக்களையும் இணைக்கும் முயற்­சிகள் மிகவும் தீவி­ர­மாக இடம்­பெற்­று­வந்­தன. இரண்டு தரப்­புக்களிலும் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு தொடர் பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெற்­று­வந்­தன. அர­சியல் களத்தில் அனை­வ­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்ட விட­ய­மாக இது காணப்­பட்­டது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியும் இணைந்­துதான் தேர்­தலில் போட்­டி­யிடும் என்­ப­தனை இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அடித்­துக்­கூ­றி­யி­ருந்தார். அது மட்­டு­மன்றி ஐக்­கிய தேசிய கட்­சியும் இந்த விட­யத்தை உன்­னிப்­பாக அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருந்­தது. ஆனால் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்ற வேகத்­தி­லேயே அவை தோல்­வியில் முடி­வுக்கு வந்­தன.

பேச்­சு­வார்த்­தைகள் தோல்­வி­ய­டைய காரணம் கூட்டு எதி­ரணி முன்­வைத்த நிபந்­த­னை­க­ளாகும் என்று சுதந்­திரக் கட்சி கூறி­யது. குறிப்­பாக சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி வர­வேண்டும் என்ற கூட்டு எதி­ர­ணியின் நிபந்­த­னையை சுதந்­திரக் கட்சி ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இதனால் பேச்­சு­வார்த்­தைகள் முற்­றிலும் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தன.

இந்­நி­லையில் கூட்டு எதி­ர­ணியை இயக்­கிக்­கொண்­டி­ருப்­ப­வ­ராக கூறப்­படும் பஷில் ராஜ­பக் ஷ இணைவு குறித்து கீழ்க்கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

""நாட்டு மக்கள் அர­சாங்கம் தொடர்பில் அதி­ருப்­தி­யுடன் இருக்­கின்­றனர். எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை மக்கள் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பா­கவே கரு­து­கின்­றனர். அவ்­வாறு கரு­தியே மக்கள் வாக்­க­ளிக்­க­வுள்­ளனர். இவ்­வாறு மக்கள் அர­சாங்கம் தொடர்­பாக அதி­ருப்­தி­யுடன் இருக்­கும்­போது நாம் எப்­படி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்­றுடன் இணைய முடியும்?

அர­சாங்­கத்­துடன் இன்று பல கட்­சிகள் உள்­ளன. எதிர்க்­கட்சி என்று கூறிக்­கொள்­கின்ற தமிழ்க் கூட்­ட­மைப்பும் அர­சாங்­கத்­துடன் தான் உள்­ளது. ஆனால் எதிர்க்­கட்சி சார்பில் நாங்கள் மட்­டுமே இருக்­கின்றோம். அர­சாங்­கத்­துக்கு எதி­ரான மக்­களின் குர­லாக நாங்கள் மட்­டுமே இருக்­கின்றோம்.

எனவே மக்­க­ளுக்­காக நாங்கள் முன்­னிற்­கின்றோம். அந்­த­வ­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­தை­விட்டு வில­கினால் அக்­கட்­சி­யுடன் இணைந்து தேர்­தலில் போட்­டி­யிட முடியும். ஆனால் சுதந்­திரக் கட்சி ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலக தயங்­கு­கின்­றது.

அவ்­வாறு நல்­லாட்­சி­யி­லி­ருந்து விலக தயங்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் அர­சாங்­கத்தின் மீது அதி­ருப்­தி­யுடன் இருக்கும் மக்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் நாங்கள் எவ்­வாறு இணைய முடியும்? அத­னால்தான் அர­சாங்­கத்­தி­லிருந்து சுதந்­திரக் கட்சி வில­கினால் நாங்கள் இணைந்­து­கொள்­வ­தாக கூறி­வ­ரு­கின்றோம். எனினும் சுதந்­திரக் கட்சி விலக தயா­ராக இல்­லா­மை­யினால் கூட்­டி­ணைவு என்­பது கேள்­விக்­கு­றி­யாக இருக்­கின்­றது"" என பஷில் ராஜ­பக் ஷ குறிப்­பிட்­டுள்ளார்.

இதன்­மூலம் சுதந்­திரக் கட்­சி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களில் கூட்டு எதி­ர­ணி­யா­னது குறித்த நிபந்­த­னையை கண்­டிப்­பாக முன்­வைத்­துள்­ளதை உணர முடி­கின்­றது. அதா­வது சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­க­வேண்டும் என்ற நிபந்­த­னையை வலு­வான முறையில் கூட்டு எதி­ரணி முன்­வைத்­துள்­ளது. ஆனால் சுதந்­திரக் கட்­சி­யா­னது அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு விரும்­ப­வில்லை.

இந்­நி­லையில் இரண்டு தரப்­புக்களினாலும் ஒன்­றி­ணைய முடி­யாமல் போனமை தொடர்பில் சுதந்­திரக் கட்­சியின் சார்பில் அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர இவ்­வாறு விளக்­க­ம­ளிக்­கின்றார்.

சுதந்­திரக் கட்­சி­யுடன் கூட்டு எதி­ர­ணியை இணைத்துக் கொள்ளும் நோக்கில் நாங்­களே எமது கரங்­களை நீட்­டினோம். ஆனால் கூட்டு எதி­ர­ணி­யினர் அதனை நிரா­க­ரித்­து­விட்­டனர். கூட்டு எதி­ரணி சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்­துதான் போட்­டி­யிட வேண்­டு­மென்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யாக இருந்தார்.

மஹிந்த ராஜ­ப­க் ஷவும் இதனை விரும்­பு­கிறார். பஷில் ராஜ­ப­க் ஷவும் இதனை விரும்­பு­கிறார். ஆனால் இன்னும் 20 வரு­டங்கள் எதிர்க்­கட்­சி­யி­லேயே இருந்து 40 வயதில் ஜனா­தி­ப­தி­யாக வேண்­டு­மென்ற ஆசை­யி­லி­ருக்­கின்ற ஒருவர் உட்­பட இரண்டு நபர்­களே கூட்டு எதி­ரணி சுதந்­திரக் கட்­சி­யுடன் இணை­வதை எதிர்த்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

அவர்­க­ளுக்கு வேறு சில தரப்­புக்­க­ளுடன் டீல் இருக்­கின்­றது என்­பது எமக்குத் தெரியும். நாங்கள் இந்த தேர்­தலில் வெற்றி பெறுவோம். அதில் எந்த சந்­தே­கமும் இல்லை. ஆனால் இந்த தேர்­தலில் 60 வீத­மான வாக்­கு­களை பெற்­றால்தான் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்சி அமைக்­கலாம். தற்­போ­தைய நிலை­மை­களில் எந்தக் கட்­சிக்கும் 60 வீத வாக்­கு­களை பெற முடி­யாது.தேர்­தலின் பின்னர் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் கூட்­டாட்­சியே சாத்­தி­ய­மாகும். தினேஷ் குண­வர்­தன, விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்றோர் கூட்டு எதி­ர­ணியின் பதுளை கூட்­டத்­திற்கு செல்­ல­வில்லை. இதி­லி­ருந்து அவர்கள் என்ன நிலைப்­பாட்டில் இருக்­கின்­றார்கள் என்­பது தெரி­கி­றது என்று அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது தற்­போ­தைய நிலை­மையில் இரண்டு தரப்­புக்­களும் இணைந்து கொள்­வ­தற்­கான சாத்­தியம் இல்லை என்றே தெரி­கின்­றது. இந்­நி­லையில் மும்­முனை போட்­டிக்­களம் நில­வினால் தேர்­தலில் என்ன நடக்கும்? மற்றும் தேர்­தலின் பின்னர் என்ன நடக்கும் என்­பன தொடர்பில் தற்­போது­ ஆராயும் சூழல் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

கூட்டு எதி­ர­ணி­யிலும் அங்கம் வகிக்­கின்ற ஒரு­சிலர் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணை­வது பொருத்­த­மாக இருக்கும் என்று கரு­து­கின்­றனர். ஆனால் கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிக்­கின்ற இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணையக் கூடாது என்ற நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­றனர். மஹிந்த ராஜ­ப­க் ஷவும் இணை­வது நல்­லது என்று கரு­தி­ய­தா­கவே தெரி­கின்­றது. ஆனால் கூட்டு எதி­ர­ணியில் அதி­க­மானோர் இணை­யக்­கூ­டாது என வலி­யு­றுத்­தி­ய­மை­யினால் அவர் பெரும்­பான்மை எம்.பி. க்களின் கருத்­துக்கு மதிப்­ப­ளிப்­ப­தாக தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இது இவ்­வாறு இருக்க கூட்டு எதி­ர­ணிக்­குள்ளும் நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன. அதா­வது உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­த­லுக்­கான ஆசனப் பங்­கீடு விட­யத்தில் பங்­காளிக் கட்­சி­க­ளுக்கு இடையில் சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தேசிய சுதந்­திர முன்­னணி மற்றும் உதய கம்­மன்­பி­லவின் கட்சி என்­பன ஆசனப் பங்­கீடு தொடர்பில் அதி­ருப்­தி­யுடன் உள்­ளன. எனினும் இறு­தியில் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வி­லேயே தேர்­தலை எதிர்­கொள்ள அனை­வரும் விருப்­பத்­துடன் உள்­ளனர்.

அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஸ்ரீ­­லங்கா பொது­ஜன பெர­முன ஆகிய மூன்று கட்­சி­களின் பிர­சன்­னத்­துடன் இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் கள­மா­னது பர­ப­ரப்­பா­கவே இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய தேசிய கட்­சியை பொறுத்­த­வ­ரையில் மிகவும் பல­மான அணி­யாக நெருக்­க­டிகள் குறை­வான கட்­சி­யாக தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றது. எனவே தேர்­தலில் அதி­கூ­டிய ஆச­னங்­களை பெறு­வ­தற்­கான சாத்­தி­யத்தைக் கொண்­டி­ருக்­கின்­றது. சுதந்­திரக் கட்­சியும் மஹிந்த அணியும் பிரிந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­ற­மை­யா­னது ஐக்­கிய தேசிய கட்­சிக்கே அர­சியல் ரீதியில் பெரும் நன்­மை­யாக அமை­ய­வுள்­ளது.

அதனை அக்­கட்­சியின் பிர­தி­நி­தி­களே கூறி­வ­ரு­கின்­றனர். உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் கருத்து வெளி யிட்­டுள்ள கட்­சியின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க எமது கட்சி இந்த தேர்­தலில் ஒரு தலை­மையின் கீழ் மிகவும் வலு­வான நிலையில் போட்­டி­யி­டு­கின்­றது. பல­மான முறையில் வேட்­பா­ளர்­களை கள­மி­றக்கி நாங்கள் தேர்­தலில் வெற்றி பெறுவோம். ஐக்­கிய தேசியக் கட்சி இந்த தேர்­தலில் பெரும்­பான்மை பலத்தை பெற்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்சி அமைக்கும். அந்த நம்­பிக்­கை­யு­ட­னேயே நாங்கள் தேர்­தலில் கள­மி­றங்­கு­கின்றோம் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

 அதன்­படி பார்க்­கும்­போது மைத்­திரி தரப்பும் மஹிந்த தரப்பும் பிரிந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தா­னது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு பெரும் நன்­மை­யாக அமையும். இந்­நி­லையில் தேர்தல் முடி­வுகள் எவ்­வாறு அமையும் என்­பது குறித்து பார்க்­கும்­போது சுதந்­திரக் கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் பிரிந்து போட்­டி­யி­டு­வதால் வாக்­குகள் சித­ற­டிக்­கப்­படும் சாத்­தியம் உள்­ளது. எனவே இரண்டு தரப்­புக்களுக்கும் வாக்­கு­களை பெறு­வதில் சவால் ஏற்­படும். மறு­புறம் ஐக்­கிய தேசிய கட்சி அதிக ஆச­னங்­களை பெறு­வ­தற்­கான சாத்­தியம் உரு­வாகும்.

இந்­நி­லையில் தேர்தல் களம் சூடு­பி­டிக்­கப்­போ­கின்­றது. ஐக்­கிய தேசிய கட்­சி­யை­விட சுதந்­திரக் கட்­சிக்கும் கூட்டு எதி­ர­ணிக்கும் இடை­யி­லேயே அதி­க­ளவில் போட்டி நிலவும். எனவே மும்­முனை போட்­டி­யா­னது தேர்­தலை பர­ப­ர­ப்பாக்கும் சூழல் காணப்­ப­டு­கின்­றது.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் தமது மூன்று வருட ஆட்­சிக்­கா­லத்தை மக்கள் எவ்­வாறு எடை போட்­டுள்­ளனர் என அறிந்­து­கொள்­வ­தற்­கான சாத்­தியம் ஏற்­படும். அதற்­கேற்­ற­வாறு தமது பய­ணத்தை சீர­மைப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கிடைக்கும்.

அதா­வது எதிர்க்­கட்­சி­யினர் கூறு­வதைப் போன்று இது­வொரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை போன்­ற­துதான். மக்கள் புதிய அர­சாங்கம் தொடர்பில் எவ்­வா­றான நிலைப்­பாட்டில் இருக்­கின்­றனர் என்­ப­தனை இந்தத் தேர்­தலில் அறிந்­து­கொள்ள முடியும். அதா­வது இந்தத் தேர்தல் மூலம் ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யா­வி­டினும் இதனை ஒரு கருத்­துக்­க­ணிப்­பாக பார்க்­கலாம்.

அதே­போன்று மக்கள் தம்­முடன் இருப்­ப­தாகக் கூறும் கூட்டு எதிரணிக்கும் தமது மக்கள் ஆதரவை உரசிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இந்தத் தேர்தலில் கிடைக்கின்றது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கும் தமக்கான மக்கள் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதனை புரிந்துகொள்ள முடியும்.

அந்தவகையில் மூன்று தரப்புக்களுக்கும் தமக்கான மக்கள் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதனை மதிப்பிட்டுக் கொள்வதற்கு இந்தத் தேர்தல் வாய்ப்பாக அமையும். தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதனை யாராலும் தற்போது கூற முடியாது. ஆனால் தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்படும் என்பது மட்டும் உண்மையாகும்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முதலாம் கட்ட வேட்பு மனு தாக்கல் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கின்றது. இரண்டாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல் 18 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தற்போது மஹிந்த அணியும் மைத்திரி அணியும் இணையப்போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. கட்சிகள் தமது அரசியல் வியூகங்களை அமைக்க ஆரம்பித்துவிட்டன. எனவே மும்முனைப் போட்டி மற்றும் தேர்தல் பரபரப்புக்களுடன் அரசியல் களம் சூடுபிடிக்கப்போவதை காணலாம். மக்களின் கைகளிலேயே எஞ்சிய விடயங்கள் உள்ளன. மக்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.

ரொபட் அன்டனி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-09#page-3

  • தொடங்கியவர்
 
எதிர்கால இருப்பை தேர்தல் மூலம் உறுதிப்படுத்தும் உத்தியில் அரசியல் தரப்புக்கள்!
 
 

எதிர்கால இருப்பை தேர்தல் மூலம் உறுதிப்படுத்தும் உத்தியில் அரசியல் தரப்புக்கள்!

இலங்கை அர­சி­யல் அரங்­கில் இது­வரை கால­மும் காணக்­கிட்­டாத காட்­சி­க­ளைத் தற்­போது காண முடி­கி­றது. அர­சி­யல் ரீதி­யில் நடு­நி­லைப்­போக்­கைக் கடைக்­கொள்­ளும் தரப்­பி­னர் தற்­போ­தும் அதே நிலைப்­பாட்­டி­ லேயே உள்­ள­னர்.

மற்­றொரு தரப்­பி­னர் ஒரு மாதத்­துக்கு முன்­னர் தாம் கொண்­டி­ருந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து முற்­று­முழு­தாக மாறிக் கருத்து வௌியி­டு­கின்­ற­னர். இன்­னு மொரு தரப்­பி­னர் இது­வ­ரை­யான தமது நிலைப்­பாட்டை முற்­று­மு­ழு­தா­கக் கை­விட்­டுள்­ள­னர்.

இடம் பெற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் கார­ண­மா­கவே அர­சி­யல் அரங்­கில் இத்­த­கைய நாட­கம் அரங்­கேறி வரு­கி­றது.

அரசு பல்­வேறு சாட்­டுப்­போக்­கு­களை முன்­வைத்து மூன்­று­ வ­ரு­டங்­கள் வரை­யான காலத்­துக்கு மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லைப் பிற்­போட்டு வரு­வது குறி்த்து எதி­ர­ணி­யி­னர் வலு­வான எதிர்ப்பை வௌிக்­காட்­டத் தவ­றி­யுள்­ள­னர்.

ஆனால் அண்­மை­யில் இந்­தப்­பி­ரச்­சினை நீதி­மன்­றத்­துக்கு எடுத்­துச்­ செல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து தமது கடும் எதிர்ப்பை வௌிக்­காட்ட முய­லும் தரப்­பி­னர்­கள் நீதி­மன்­றத்­தின் தீர்ப்பு வௌிவ­ரும்­வரை பொறுமை காக்க இய­லு­மல்­லவா?

அர­ச­மைப்பு நிறை­வேற்ற முயற்­சி­யைத் தடுத்து 
நிறுத்­தும் எத்­த­னம்

இவை­யா­வும் இவ்­வி­தம் இடம் பெறக்­கா­ர­ணம், தற்­போது அர­சி­யல் அரங்­கில் முக்­கி­யத்­து­வம் பெற்­றி­ருக்­கும் முயற்சி யதார்த்­த­மாக ஆவ­தற்கு முன்­னர் தேர்­தலை முடிந்­த­வரை விரை­வாக நடத்­து­வ­தற்­கான எத்­த­னம் அல்­லவா?

அதா­வது, புதிய அரசமைப்­புக்­கான எதிர்ப்பு மற்­றும் மத்்­தி­ய­வங்கி பிணை­முறி ஊழல் கார­ண­மான குற்­றச் சாட்டு உட்­பட அர­சுக்கு எதி­ரா­கத் தலை­தூக்­கி­யுள்ள எதிர்ப்பு அலை உச்­சம் பெறு­வ­தற்கு முன்­ப­தாக, தேர்­தலை நடத்­தி­வி­ட­வேண்­டுமென்ற நோக்­கம் கார­ண­மா­க­வல்­லவா?

அந்த வகை­யில் இது­வரை பிற் போ­டப்­பட்டு வந்த தேர்­தலை அவ­சர அவ­ச­ர­மாக உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்­கான தேவை அர­ச­த­ரப்­புக்கு மட்­டும் தான் ஏற்­பட்­டுள்­ளதா? வௌிவ­ரும் கருத்து வௌிப்­பா­டு­களை நோக்­கும் போது எதி­ர­ணி­யின் சில தரப்­பி­ன­ருக்­கும் அத்­த­கைய தேவை இருப்­ப­தா­கத் தோன்­று­கி­றது.

ஒரு சிலர் நீதி­மன்­றத்­தின் தீர்ப்பு வௌியா­கும்­வரை பொறுத்­தி­ருக்க இய­லாது, தேர்­த­லில் போட்­டி­யிட அவ­சர அவ­ச­ர­மா­கக் கட்டுப் பணம் செலுத்­து­வது எதற்­காக? இதன் மூலம் தேசிய இணக்­கப்­பா­டொன்­று­டன் கூட்­ட­ணி­ யொன்­றின் மூலம் தேர்­த­லில் போட்­டி­யிட அவர்­கள் விரும்­ப­ வில்லை என்­பது நாட்­டுக்கு தெரி­விக்­கப்­ப­டு­கி­ற­தல்­லவா?

அத்­த­கை­ய­தொரு பரந்த தேசிய கூட்­ட­ணி­யொன்று உரு­வாக்­கப்­ப­டு­மா­னால், மூன்­றா­வது தரப்­பி­ன­ருக்­கும் அதன் மூலம் சிக்­கல் நிலை, பின்­ன­டைவு ஏற்­ப­டும். விசே­ட­மாக ஜே.வி.பி தரப்பு அத்­த­கைய கூட்­ட­ணி­யொன்று உரு­வா­வதை தவிப்­ப­தற்­குத் தயா­ரா­யி­ருப்­ப­தா­கத் தற்­போது வௌிக்­காட்­டி­யுள்­ளது .

சில மாதங்­க­ளுக்கு முன்­னர் இலங்கை வர­லாற்­றில் முதன்­மு­த­லாக தேர்­த­லைப்­பிற்­போ­டு­வ­தற்­கான சட்­டத்­தி­ருத்­தத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்­குப் பதி­லாக, அவர்­கள் அதற்கு ஆத­ரவு வழங்­கி­னர். தேர்­தலை பிரிவு பிரி­வாக நடத்­து­வ­தைத் தாம் எதிர்ப்­ப­தால், தேர்­தலை ஒட்­டு­மொத்­த­மாக ஒரே வேளை­யில் நடத்­து­வ­தற்­காக அதனைப் பிற் போடு­வ­தற்­குத் தாம் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­த­தாக அவர்­கள் அதற்­குக் கார­ணம் கற்­பித்­துக் கொண்­ட­னர்.

 

ஆனால் தற்­போதோ நீதி­மன்­றத் தீர்ப்பைப் பொருட்­ப­டுத்­தாது பகுதி பகு­தி­யா­க­வா­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்­டு­மென அவர்­கள் கூறு­கின்­ற­னர். முன்­னர் அதனை வலி­யு­றுத்­தா­த­வர்­கள் இப்­போது இவ்­வி­தம் வற்­பு­றுத்­து­வது கூட்­ட­ணியொன்று உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர், தேர்­தலை நடத்தி பொது இணக்­கப்­பாடு ஏற் ப­டாது தடுப்­ப­தற்­கா­கவே என்­பது தௌிவா­கத் தெரிகிறது.

மகிந்த – மைத்திரிபால கூட்டு உருவாகாது 
தடுக்கப் பிரயத்தனம்

அந்த வகை­யில் தலைமை அமைச்­சர் ரணி­லி­ன­தும் ஜே.வி.பி தரப்­பி­னர்­க­ள­தும் தேவை ஒரே வித­மா­னதே. அதே­போன்று இணக்க ரீதி­யில் செயற்­ப­டும் இரு தரப்­புக்­க­ளான தம்­பர அமில தேரர் தலை­மை­யி­லான அர­சுக்கு ஆத­ர­வான அரச சார்­பற்ற நிறு­வன செயற்­பாட்­டா­ளர்­க­ளும், முருந்­தெட் டுவே ஆனந்த தேரர் தலை­மை­யி­லான இன­வாத பிக்­கு­மார் சில­ரும் ஒரே கருத்து நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருப்­பது ஆச்­ச­ரி­யம் மிக்­க­தொன்­றா­கும்.

ஒரு புறத்­தில் தம்­பர அமில தேரர் தரப்­பி­னர் ‘‘மகிந்­த­வு­டன் இணைந்­தால் பார்த்­துக்­கொள்­கின்­றோம் ’’ என அரச தலை­வ­ருக்கு அச்­சு­றுத்­தல் விடு­கின்­ற­னர்.மறு­பு­றத்­தில் முருந்­தெட் டுவே ஆனந்த தேரர் தரப்­பி­னரோ ‘‘மைத்­தி­ரி­பா­ல­வு­டன் இணைந்­தால் பார்த்­துக்­கொள்­கி­றோம்’’ என மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு அச்­சு­றுத்­தல் விடு­கின்­ற னர்.

இதன் மூலம் இவ்­விரு தேரர் தரப்­புக்­க­ளும் மைத்­தி­ரி­பால– மகிந்த கூட்­டுக்கு எதி­ரா­ன­வர்­கள் என்­பது தௌிவா­கி­றது. ஐ.தே.கட்சி ஆத­ர­வா­ள­ரான தம்­பர அமில தேர­ரது எதிர்ப்­புத் தொடர்­பாக பொது­மக்­க­ளுக்கு பிரச்­சினை எது­வும் கிடை­யாது. ஆனால் முருந்­தொட்­டுவே ஆனந்த தேர­ரது எதிர்ப்பு பொது­மக்­க­ளால் பல­த­ரப்­பட்ட விதத்­தில் நோக்­கப்­பட இட­முண்டு.

முருந்­தட்­டுவே ஆனந்த தேர­ரது கருத்­துக்­குச் சம­மான கருத்­தைக் கொண்­டுள்ள வேறு­ப­ல­ரும் உள்­ள­னர். இவர்­கள் கூட்டு எதி­ரணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மத்­தி­யில் போன்று, இம் முறை உள்­ளூ­ராட்­சித்­தேர்­த­லில் போட்­டி­யி­ட­வுள்ள தரப்­பி­னர்­கள் மத்­தி­யி­லும் உள்­ள­னர்.

ஆயி­னும் அவர்­க­ளில் பலர் மைத்­தி­ரி­பால மகிந்த கூட்­ட­ணிக்கு எதிர்ப்­புத் தெரி­விப்­பது, வேறு குறு­கிய மற்­றும் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­கா­கவே என்­பது தௌிவா­கப் புரி­கி­றது.

பெரும்­பா­லும் நாட்டு மக்­க­ளைக் கவ­ரத்­தக்க வகை­யில் தமது கடும் எதிர்ப்பை வௌிப்­ப­டுத்தி வரும் தரப்­பி­னர்­கள், சிங்­கள அர­சி­யல் பின்­னணி கொண்­ட­வர்­களே. அவர்­க­ளில் பலர் மகிந்­த­வுக்கு பேரா­த­ரவு தெரி­விக்­கும் சுதந்­தி­ரக்­கட்­சி­யின் முன்­னாள் உறுப்­பி­னர்­களே.

அவர்­கள் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணி­ யில் தாம் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கா­ரர்­கள் என்ற வகை­யி­லேயே இணைந்து செயற்­ப­டு­கின்­ற­னர். இது­வரை பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணிக்­குச் சம­மாக சுதந்­தி­ரக்­கட் சி­யைத் தவிர்ந்த வேறு கட்­சி­யெ­து­வும் நிறு­வப்­ப­ட­வில்லை.

மகிந்த மைத்திரிபால  இணைவை எதிர்க்கும் தரப்பினர்களது குறிக்கோள்

எது எவ்­வா­றான போதி­லும், மைத்­தி­ரி­பா­ல–­­ம­கிந்த கூட்­டணி குறித்த யோச­னைக்கு எதி­ரான தரப்­புக்­கள் தத்­த­மது தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­கா­கவே அத்­த­கைய எதிர்ப்பை வௌியிட்டு வரு­கின்­றன. ஒரு சிலர் அத்­த­கைய எதிர்ப்பை வௌியி­டு­வ­தற்­குக் கார­ணம், அத்­த­கைய கூட்­ட­ணி­யொன்று உரு­வா­கு­மா­னால் தற்­போது தயா­ரிக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பா­ளர் பட்­டி­யல் முற்று முழு­தாக மாற்­ற­முற நேரும் என்ற அச்­சம் கார­ண­மா­கவே ஆகும்.

 

மற்­றொரு தரப்­பி­னர் அவ்­வித எதிர்ப்பை வௌியி­டக் கார­ணம், தமக்கு வேட்­பா­ளர் நிய­ம­னம் இல்­லாது போகக் கூடும் என்­ப­த­னால் ஆகும். அதே­வேளை அடுத்து வரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தாம் மகிந்த தரப்­பின் சார்­பா­கப் போட்­டி­யிட இய­லாது போகக் கூடு­த­லால், மைத்­தி­ரி­பால தரப்­பின் நாட­ாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் இணைத்து இந்த உள்­ளு­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட விரும்­பாத தரப்­பி­ன­ரும் இவர்­க­ளில் உள்­ள­னர்.

ஆனால் பரந்­து­பட்ட விதத்­தில் மைத்­தி­ரி­பால– மகிந்த தரப்­புக்­கள் ஒன்­றிணைந்து ஐ.தே.கட்­சி­யைத் தோற்­க­டிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தென இவர்­க­ளில் பலர் ஒப்­புக் கொள்­கின்­ற­னர்.தனிப்­பட்ட தேவை மற்­றும் அர­சி­யல் எதிர்­கா­லம் குறித்த தேவை என்­ப­வற்­றுக்கு இடை­யே­யான வேறு­பாட்டை பரந்த அள­வி­லான உய­ர் மட்­ட­ப்பேச்­சுக்­கள் மூலமே தீர்த்­துக்­கொள்ள முடி­யு­மென்­ப­தில் இந்­தத் தரப்­புக்­கள் நம்­பிக்கை கொண்­டுள்­ளன.

இந்த விட­யத்­தில் மைத்­தி­ரி­பால மற்­றும் மகிந்த தரப்­பி­னர் மட்­டு­மன்றி ஏனைய தேசிய அதி­கா­ரத் தரப்­பு­க­ளும் பொருத்­த­மான முடி­வு­களை மேற்­கொள்­ளும் பொறுப்­பைக் கொண்­டுள்­ளன. மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னைய கால­கட்­டங்­க­ளில் மகிந்­த­ரா­ஜ­பக்­ச­வு­டன் நெருக்­க­மா­கச் செயற்­பட்டு வந்த ஒரு­வ­ரா­வார்.

இவ்­வி­ரு­வ­ரது அர­சி­யல் அடிப்­ப­டை­யின் பின்­னணி சுதந்­தி­ரக் கட்­சி­யி­லேயே தங்கியுள்­ளது. அந்த வகை­யில் இவ்­விரு தரப்­பி­ன­ரும் ஒன்­றி­ணைவ­தில் தனிப்­பட்ட பேதங்­கள் இருக்­கக்­கூ­டு­மே­யேன்றி அர­சி­யல் ரீதி­யான பேத­மெ­து­வும் இருக்க வாய்ப்­பில்லை. அந்த வகை­யில் இவ்­விரு தரப்­புக்­க­ளும் தத்­த­மது விட்­டுக் கொடுக்­கும் மனப்­பாங்­கின் மூலம் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான இடத்தை எட்ட வாய்ப்­புண்டு.

மைத்­தி­ரி­பா­ல–­­ம­கிந்த ஆகியோர் தௌிவான நிலைப்­பாட்டை வௌிப்­ப­டுத்­தல் அவ­சி­யம்

அந்த வகை­யில் இவ்­விரு தலை­வர்­க­ளும் நாட்­டின் நன்­மை­க­ருதி தனிப்­பட்ட தியா­கத்தை மேற்­கொள்­ளத் தயா­ரென்­பதை வௌிப்­ப­டுத்தி ஆக வேண்­டும். அதே­போன்று எதிர்த் த­ரப்­பின் நம்­பிக்­கையை ஈட்­டிக்­கொள்­ளத் தாம் விட்­டுக்­கொ­டுப்­பு­டன் செயற்­ப­டத்­த­யா­ரென்­பதை வௌிப்­ப­டுத்தி ஆக­வேண்­டும் அந்த வகை­யில் இவ்­விரு தரப்­பி­ன­ரும் கீழ்க்­கா­ணும் விதத்­தி­லான நிபந்­த­னை­ களை ஏற்­றுக் கொள்­ளத்­த­யா­ரென்­பதை நாட்டு மக்­க­ளுக்கு வௌிப்­ப­டுத்­தி­யாக வேண்­டும்.

அது உள்­ளூ ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லுக்­கான உடன்­பா­டாக மட்­டு­மன்றி, பொதுத் தேர்­தல் மற்­றும் பொது­சன அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்பு என்­ப­வற்­றுக்­கு­மான இணக்­கப்பாடாக அமை­தல் வேண்­டும்.
அவற்­றில் முத­லா­வது நிபந்­தனை , எதிர்­வ­ரும் தேர்­தல் நாட்­டைப் பிளவு படுத்­தும் அர­ச­மைப்­புத் திருத்­தத் துக்கு எதி­ரான பொது­சன அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பாக நடத்­தப்­ப­டல் வேண்­டும் என்­ப­தா­கும்.

 

அடிப்­ப­டை­யில் அதன் மூலம் அந்­தத் தேர்­தல் சிறிய தேர்­த­லொன்­றாக அல்­லா­மல் தேசி­யத் தேர்­த­லொன்­றாக அமை­யும். இரண்­டா­வது நிபந்­தனை, அந்­தத் தேர்­தலை, படை­யி­ன­ரைக் காட்­டிக்­கொ­டுத்­தல் மற்­றும் தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­ருத்­த­லுக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ராக வாக்­க­ளிக்­கும் தேர்­த­லாக ஆக்­கிக் கொள்­ள­லா­கும். மூன்­றா­வது நிபந்தனை, இலங்கை வர­லாற்­றில் மிகப்­பெ­ரும் நிதி­மோ­ச­டிச் சம்­ப­வ­மாக இனங்
கா­ணப்­பட்ட மத்­திய வங்கி பிணை­முறி ஊழலுக்­கான பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கும் நீதி­மன்­ற­மாக இந்த உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை ஆக்­கு­வ­தா­கும்.

நான்­கா­வது நிபந்தனை, அரச காணி­கள் சொத்­துக்­கள், துறை­மு­கங்­கள் மற்­றும் விமான நிலை­யங்­களை வௌி நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு விற்­பனை செய்­த­வர்­க­ளுக்­கெ­தி­ராக பொது மக்­கள் தமது எதிர்ப்பை வௌி யி­ட­லா­கும். ஐந்­தா­வ­து நிபந்தனை, நாட்­டின் நிதி நிறு­வ­னங்­களை, கறுப்­புப்­ப­ணத்­தைச் சட்­ட­பூர்வ பண­மாக ஆக்­கும் பன்­னாட்டு வர்த்­த­கர்­க­ளது குகை­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்ப்பு வௌியி­டும் விதத்­தில் இந்த உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளது தேர்­த­லைப் பயன்­ப­டுத்­து­வ­தா­கும்.

ஆறா­வது நிபந்தனை, வயல்­நி­லங்­கள் உள்­ளிட்ட விவ­சாய நிலங்­கள் மற்­றும் வீடு­கள் உட்­பட்ட நகர்ப்­புற நிலங்­க­ளுக்கு நூறு­வீத நில­வரியி லி­ருந்து விலக்­க­ளித்து குறைந்த பெறு­ம­திக்கு வௌிநாட்­ட­வர்­க­ளுக்கு அல்­லது மதக்­க­டுங்­கோட்­பா­ள­ர்களுக்கு வழங்­கு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கும் விதத்­தில் இந்­தத் தேர்­த­லைப் பயன்­ப­டுத்­த­லா­கும்.

ஏழா­வ­து நிபந்தனை பொது­மக்­கள் மீது சுமத்­தப்­பட்டு வரும் வாழ்க்­கைச் செலவு மற்­றும் வரிச்­சு­மைக்கு எதி­ரான எதிர்ப்பை வௌிப்­ப­டுத்த இந்­தத் தேர்­த­லைப்­ப­யன்­ப­டுத்­த­லா­கும். இவற்றை விட வேறு பல பின்­ன­டை­வு­கள் குறித்­தும் பொது மக்­கள் மத்­தி­யில் அதி­ருப்தி நில­வு­வதை எவ­ரும் புறம் தள்­ளி­விட இய­லாது.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லில் ஐ.தே.க. வெற்­றி­யீட்­டி­னால் நாட்­டுக்குப் பின்­ன­டைவு நிச்­ச­யம்

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில் ஐ.தே.கட்சி வெற்றி பெறு­மா­னால், அதன் மூலம் நாட்­டுக்­குத் தீங்­காக அமை­யும் அவர்­க­ளது எதிர்­காலக் கொள்கை நிலைப்­பாட்டை நாட்டு மக்­கள் அனு­ம­திப்­ப­தாக ஆகி­வி­டும். அத்­த­கைய நிலை­யில் இலங்கை பின்­ன­டைவு கண்டு நாடாவதுடன், பிளவுபட்ட நாடாக ஆகவும் வழி­ய­மை­யும் என்­ப­தில் சந்­தே­கம் கிடை­யாது.

கடை­சி­யாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில் ஐ.தே.கட்­சி­யைத் தோற்­க­டிக்­கும் தேசிய இணக்­கப்­பாடு, அடிப்­படை நிலையை ஏற்­றுக் கொள்­ளும் கருத்து நிலைப்­பாட் டி­லேயே தங்­கி­யுள்­ளது. அந்த வகை­யில் சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சி­னின்­றும் வௌியே­றி­யாக வேண்­டும்.

இந்த மாதத்­தின் கடைசி நாளு­டன் அதா­வது, டிசெம்­பர் 31 ஆம் திக­தி­யு­டன் சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சி­லி­ருந்து வில­கி­யாக வேண்­டும். தற்­போ­தைய தேசிய அர­சைத் தொடர்ந்­தும் நிர்­வ­கிக்­கும் நோக்கை ஒரு பக்­கம் கொண்­ட­வாறு, அரச எதிர்ப்பு பொதுக் கூட்­ட­ணி­ யொன்­றை நிறுவவோ, இணக்­கப்­பா­டொன்­றை எட்டவோ இய­லாது என்பதே நிதர்­சன உண்­மை­யா­கும்.

http://newuthayan.com/story/53962.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.