Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்காளர்களர்கள் என்ன ‍செய்ய வேண்டும்?

Featured Replies

வாக்காளர்களர்கள் என்ன ‍செய்ய வேண்டும்?

 

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் என்­பது ஆட்­சி­மாற்­றத்தை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தேர்தல் அல்ல. ஆனால் ஆட்­சியில் இருக்­கின்ற கட்­சி­க­ளுக்கு தாம் எந்த இடத்தில் இருக்­கின்றோம். கடந்த மூன்று  வரு­டங்­க­ளாக தாம் முன்­னெ­டுத்­து­வந்த திட்­டங்­களை மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றார்­களா? இல்­லையா  என்­பது தொடர்­பான மதிப்­பீட்டை கட்­சிகள் செய்­து­கொள்ள முடியும். அது­மட்­டு­மின்றி எதிர்த்­த­ரப்பில் இருக்கின்ற அர­சியல் கட்­சி­களும் தாம் முன்­னெ­டுத்து வரு­கின்ற அர­சியல் செயற்­பா­டுகள், ஆர்ப்­பாட் டங்கள், எதிர்ப்பு போராட்­டங்கள் என்­ப­வற்றை பொது­மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்­ற­னரா? இல்லையா  என்பது தொடர் பான ஒரு மதிப்­பீட்டை பெற்­றுக்­கொள்ள முடியும். 

 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் பர­ப­ரப்­பாக ஆரம்­பித்­து­விட்­டது. அர­சி­யல்­கட்­சிகள், மக்கள், அர­சி­யல்­வா­திகள், சமூ­கத்­த­லை­வர்கள் என அனைத்துத் தரப்­பி­னரும் தேர்தல் தொடர்பில் அவ­தானம் செலுத்த ஆரம்­பித்­து­விட்­டனர். 341 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி­மாதம் 17ஆம் திக­திக்கு முன்னர் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதற்­கான வேட்­பு­ம­னுத்­தாக்­கல்கள் இரண்டு கட்­ட­மாக இடம்­பெ­று­கின்­றன.

முத­லா­வது 93 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்­கல்கள் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யுடன் முடி­வுக்கு வந்­தன. அதே­போன்று எஞ்­சிய 248 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கு­மான வேட்­பு­மனு தாக்­கல்கள் 18ஆம் திகதி முதல் 21 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளன.

அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது அர­சி­யல்­களம் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­து­விட்­டது. நாட்டில் சாதா­ர­ண­மாக காணப்­படும் அர­சியல் சூழ­லை­விட தேர்­தல்­கால அர­சியல் சூழ­லா­னது மிகவும் வித்­தி­யா­ச­மா­ன­தாக இருக்கும். பர­ப­ரப்­பா­கவும் இருக்கும். அதே ஒரு பரப்­பான அர­சியல் சூழல் காணப்­ப­டு­கின்­றது.

 அர­சியல் ரீதி­யான காய்­ந­கர்த்­தல்கள், நகர்­வுகள் மற்றும் பேரம்­பே­சல்கள் என்­பன தொடர்ந்து இடம்­பெற்­றி­ருக்­கின்ற நிலையில் தேர்­தல்­களம் தொடர்பில் பொது­மக்­களும் ஆர்­வ­ம­டைய ஆரம்­பித்­து­விட்­டனர். அதுவும் இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லா­னது புதிய முறை­மையில் நடை­பெ­று­கின்­ற­மை­யா­னது அனை­வ­ருக்கும் ஒரு வித்­தி­யா­ச­மான அனு­ப­வத்தை வழங்­கு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

அதா­வது உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லா­னது தொகுதி மற்றும் விகி­தா­சார முறைமை கலந்த கலப்பு முறை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. இது அனை­வ­ருக்கும் ஒரு புது அனு­ப­வ­மாக அமையும். 60வீதம் தொகுதி முறை­யிலும் 40 வீதம் விகி­தா­சார முறை­மை­யிலும் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அதற்­காக ஒவ்­வொரு உள்­ளூ­ராட்­சி­மன்­றத்துக்கும் தொகு­திகள் பிரித்து வழங்­கப்­பட்­டுள்­ளன.

அதன்­படி அனைத்து தொகு­தி­க­ளுக்கும் பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­துடன் உள்­ளூ­ராட்­சி­மன்­றத்­திற்கு முழு­மை­யாக கட்­சிகள் பெறும் வாக்­கு­களின் அடிப்­ப­டையில் விகி­தா­சார ரீதி­யான பிர­தி­நி­தி­களும் தெரி­வு­செய்­யப்­ப­ட­வி­ருக்­கி­றார்கள். இது­வொரு புது­வி­த­மான நிலை­மை­யாகும்.

1977 ஆம் ஆண்­டு­வரை தொகு­தி­முறை தேர்தல் முறை­மையே காணப்­பட்­டது. பின்னர் விகி­தா­சா­ர­முறை தேர்தல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தற்­போது உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் முதன்­மு­த­லாக விகி­தா­சார முறை­மையும் தொகு­தி­மு­றை­மையும் கலந்த கலப்புத் தேர்­தல்­மு­றைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்தத் தேர்தல் முறை­மையில் காணப்­ப­டு­கின்ற மற்­று­மொரு விசேட அம்சம் என்­ன­வென்றால் தெரி­வு­செய்­யப்­படும் பிர­தி­நி­தி­களில் 25 வீத­மானோர் பெண்­க­ளாக இருக்­க­வேண்டும். அதா­வது பெண் வேட்­பா­ளர்கள் 25 வீதம் அல்ல மாறாக உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு தெரி­வு­செய்­யப்­படும் பிர­தி­நி­தி­களில் 25 வீதம் பெண்­க­ளாக இருக்­க­வேண்டும். இது இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் ஒரு மிக முக்­கி­ய­மான அம்­ச­மாகும்.

இவ்­வாறு புதிய தேர்தல் முறை­மையின் ஊடாக உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தல்­களம் தற்­போது சூடு­பி­டித்­தி­ருக்­கின்­றது. அதன்­படி அர­சி­யல்­வா­திகள் தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்து கள­மி­றக்­கி­வ­ரு­கின்­றனர். வேட்­பாளர் தெரிவு மற்றும் நிரா­க­ரிப்­புக்கள் என பல்­வேறு அர­சியல் ரீதி­யான காய்­ந­கர்த்­தல்கள் நாட்டில் சூடு­பி­டித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான பின்­ன­ணியில் தேர்­தலில் வாக்­கா­ளர்­க­ளா­கிய பொது­மக்கள் என்ன செய்­ய­வேண்டும் என்ற கேள்வி இங்கு எழு­கின்­றது. தேர்தல் என்­பது ஜன­நா­யக கட்­ட­மைப்பின் மிக முக்­கி­ய­மா­ன­தொரு அம்­ச­மாகும். அவ்­வா­றான ஒரு ஜன­நா­யக செயற்­பாட்டில் பொது­மக்கள் பங்­கேற்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தேர்­தலில் வாக்­க­ளிக்­காமல் அசட்­டை­யாக இருந்­து­வி­டு­வது ஜன­நா­யக ரீதி­யான சமூ­க­மொன்­றையும் நாடொன்­றையும் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் பாரிய குறை­பாட்டை ஏற்­ப­டுத்­தி­விடும் என்­பதை வாக்­கா­ளர்கள் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். எனவே தேர்­தலில் வாக்­கா­ளர்கள் மிகவும் சிந்­தித்து ஆழ­மான அர­சியல் நோக்­குடன் தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யது அவ­சியம்.

தேர்தல் நடக்­கி­றது வாக்­க­ளிப்போம் என்ற நோக்கில் அதில் பங்­கெ­டுக்­காமல் அர­சியல் ரீதி­யான நோக்­குடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக தேர்­தல்­க­ளத்தில் இம்­முறை பல்­வேறு அணிகள் கள­மி­றங்­கி­யுள்­ளன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்சி, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்சி, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன, மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ் முற்­போக்கு கூட்­டணி, தமிழ்­தே­சி­யக்­கூட்­டமைப்பு, சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட பல்­வேறு அர­சி­யல்­கட்­சிகள் இம்­முறை தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளன.

எனவே போட்­டி ­மி­கவும் வலு­வாக தேர்­தலில் காணப்­படும் என எதிர்­பார்க்­கப்­படும் நிலையில் வாக்­கா­ளர்­களே மிகவும் ஆழ­மாக சிந்­தித்து தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக வாக்­கா­ளர்கள் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் வாக்­க­ளிக்­கும்­போது இவ்­வா­றான ரீதியில் சிந்­திக்­க­வேண்டும்.

எவ்­வா­றான விட­யங்­களை ஆரா­ய­வேண்டும் என்­பது தொடர்­பாக அவ­தானம் செலுத்­த­வேண்டும். கட்­சி­க­ளினால் வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆனால் அவர்­களை தெரி­வு­செய்­கின்ற பொறுப்பு வாக்­கா­ளர்­க­ளி­டமே இருக்­கி­றது. அதன்­படி அந்த வர­லாற்­றுக்­க­ட­மையை வாக்­கா­ளர்கள் சரி­யா­ன­மு­றையில் செய்­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தேர்­தலில் வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கும்­போது அர­சி­யல்­கட்­சி­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மான ஒரு சமூ­கப்­பொ­றுப்பு இருக்­கி­றது. அதா­வது அபி­வி­ருத்­திசார் கவனம் செலுத்­தக்­கூ­டிய மக்­களின் நலன்­கு­றித்து சிந்­திக்­கக்­கூ­டிய சிறந்த பிர­ஜை­களை வேட்­பா­ளர்­க­ளாக அமர்த்­த­வேண்­டி­யது அர­சியல் கட்­சி­களின் கட­மை­யாகும். அவ்­வாறு வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­தப்­ப­டு­ப­வர்­களை சரி­யான முறையில் கணிப்­பிட்டு தெரி­வு­செய்­வது வாக்­கா­ளர்­க­ளா­கிய பொது­மக்­களின் கட­மை­யாகும்.

அந்­த­வ­கையில் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் என்­பது ஆட்­சி­மாற்­றத்தை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தேர்தல் அல்ல. ஆனால் ஆட்­சியில் இருக்­கின்ற கட்­சி­க­ளுக்கு தாம் எந்த இடத்தில் இருக்­கின்றோம். கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தாம் முன்­னெ­டுத்­து­வந்த திட்­டங்­களை மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றார்­களா? இல்­லையா என்­பது தொடர்­பான மதிப்­பீட்டை கட்­சிகள் செய்­து­கொள்ள முடியும். அது­மட்­டு­மன்றி எதிர்­த­ரப்பில் இருக்­கின்ற அர­சியல் கட்­சி­களும் தாம் முன்­னெ­டுத்து வரு­கின்ற அர­சியல் செயற்­பா­டுகள், ஆர்ப்­பாட்­டங்கள், எதிர்ப்பு போராட்­டங்கள் என்­ப­வற்றை பொது­மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்­ற­னரா? இல்லையா என்­பது தொடர்­பான ஒரு மதிப்­பீட்டை பெற்­றுக்­கொள்ள முடியும்.

எனவே உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லா­னது ஆளும்­கட்சி மற்றும் எதிர்க்­கட்­சி­க­ளுக்­கான ஒரு கருத்­துக்­க­ணிப்­பாக அமையும் என்­பதே யதார்த்­த­மாகும். எனவே அதற்கு ஏற்­ற­வ­கையில் பொது­மக்கள் தமது தீர்ப்பை வழங்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதனால் பொது­மக்கள் இந்த விட­யத்தில் அர­சியல் ரீதி­யான நோக்­குடன் தமது பார்­வையை செலுத்­த­வேண்டும்.

இது இவ்­வா­றி­ருக்க இம்­முறை தேர்தல் முறைமை மாற்­றப்­பட்­டுள்­ளதால் முதலில் வாக்­கா­ளர்கள் எவ்­வாறு வாக்­க­ளிப்­பது? எவ்­வாறு பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்­றார்கள் என்ற விளக்­கத்தை பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். இது­கு­றித்து சமூக நிறு­வ­னங்­களும் ஊட­கங்­களும் தேர்தல் ஆணைக்­கு­ழுவும் விசேட தெளி­வு­ப­டுத்­தல்­களை பொது­மக்­க­ளுக்கு வழங்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

புதிய தேர்தல் முறைமை என்­பதால் இது­வரை பொது­மக்கள் இந்த தேர்தல் முறைமை தொடர்பில் முழு­மை­யான விளக்­கத்தை பெற்­றுக்­கொள்­ள­வில்லை. இதுவே யதார்த்­த­மாகும். எனவே இது­தொ­டர்பில் முதலில் பொது­மக்­க­ளுக்கு விளக்­க­ம­ளிப்­ப­தற்கும் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கும் விழிப்­பு­ணர்வு ஊட்­டு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இந்த விட­யத்தில் வாக்­கா­ளர்­களை தெளி­வு­ப­டுத்­த­வேண்­டிய பொறுப்பு அர­சியல் கட்­சி­க­ளுக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் இருக்­கின்­றது என்­ப­தையும் இங்கு யாரும் மறந்­து­வி­டக்­கூ­டாது. எனவே அடிப்­படை திட்­டங்­க­ளை­ முன்­னெ­டுத்து இந்த தேர்தல் முறைமை தொடர்­பாக மக்­களை தெளி­வு­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும்.

இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் வாக்­கா­ளர்கள் எவ்­வாறு நடந்­து­கொள்­ள­வேண்டும் என்­பது தொடர்­பாக பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி சந்­தி­ரபோஷ் கருத்­துப்­ப­கிர்­கையில், உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பில் பொது­மக்கள் சமூக நலன்­சார்ந்த அக்­க­றையைக் கொண்டு செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தமக்கு விரும்­பிய தலை­மையை தெரி­வு­செய்­யக்­கூ­டிய சந்­தர்ப்பம் பொது­மக்­க­ளுக்கு கிடைத்­துள்ள நிலையில் அந்த உரி­மையை சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி தமக்­கான பிர­தி­நி­தி­களை தெரி­வு­செய்­து­கொள்­ள­வேண்டும். அதா­வது குற்­றச்­செ­யல்­களில் தொடர்­பு­ப­டாத, சமூக நலன்­சார்ந்த அபி­வி­ருத்­தியில் கவனம் செலுத்­தக்­கூ­டிய மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் உட­ன­டி­யாக ஆரா­யக்­கூ­டிய பிர­தி­நி­தி­களை உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு தெரி­வு­செய்­வது வாக்­கா­ளர்­களின் கட­மை­யாகும். அர­சி­யல்­கட்­சிகள் வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கி­னாலும் அவர்­களை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு அனுப்­பு­வதா? இல்­லையா என்­பது தொடர்­பான உரி­மையை பொது­மக்­களே, அதா­வது வாக்­கா­ளர்­களே கொண்­டி­ருக்­கின்­றனர்.

எனவே வாக்­கா­ளர்கள் மிகவும் விழிப்­பு­ணர்­வுடன் செயற்­பட்டு தமக்­கான பிர­தி­நி­தி­களை தெரி­வு­செய்­து­கொள்­வது அவ­சி­ய­மாகும். தமது பிர­தே­சங்­களை எவ்­வாறு அபி­வி­ருத்தி செய்­வது என்­பது தொடர்­பான திட்­டங்­களை எந்­தக்­கட்­சிகள் முன்­வைக்­கின்­றன என்­பது தொடர்பில் வாக்­கா­ளர்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்­வாறு தமது பிர­தே­சங்­க­ளுக்கு பொருத்­த­மான திட்­டங்­களை கொண்­டி­ருக்­கின்ற பிர­தி­நி­தி­களை சரி­யான முறையில் தெரி­வு­செய்­ய­வேண்­டி­யது வாக்­கா­ளர்­களின் கட­மை­யாகும். எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் இன்னும் 82 வீத­மான மக்கள் கிரா­மிய சூழ­லி­லேயே வாழ்­கின்­றனர். வாழ விரும்­பு­கின்­றனர்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் நகர மயத்தை நோக்­கிய குடி­யி­ருப்பு ஆர்வம் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. சகல வச­தி­க­ளு­டனும் கிரா­மப்­பு­றத்தில் வாழவே ஆர்வம் காட்­டப்­ப­டு­கின்­றது. அதா­வது கிரா­மங்­களை உப­ந­க­ரங்­க­ளாக அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான ஆர்­வத்தை பொது­மக்கள் கொண்­டி­ருக்­கின்­றனர். அது­மட்­டு­மின்றி தமது கிரா­மங்­களை ஒரு பொரு­ளா­தார அல­காக தொழில் வாய்ப்பை உரு­வாக்கும் ஒரு பகு­தி­யாக கல்­வியில் சிறந்­து­வி­ளங்கும் ஒரு பிர­தே­ச­மாக கட்­டி­யெ­ழுப்ப மக்கள் விரும்­பு­கின்­றனர். எனவே அதற்கு ஏற்­ற­வ­கை­யி­லான தெரி­வு­களை வாக்­கா­ளர்கள் தெரி­வு­செய்­ய­வேண்டும்.

இம்­முறை தேர்­தலில் பெண்­க­ளுக்கு 25 வீத இட ஒதுக்­கீடு கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அர­சி­யல்­கட்­சி­க­ளினால் கள­மி­றக்­கப்­ப­டு­கின்ற பெண் வேட்­பா­ளர்கள் தொடர்பில் வாக்­கா­ளர்கள் கூடிய கவனம் செலுத்­த­வேண்டும். பெண் வேட்­பா­ளர்­களை அதி­க­ளவில் தெரி­வு­செய்­யா­விடின் அது­வொரு குறை­யாக அமைந்­து­விடும். பெண்­களின் பங்­க­ளிப்பு இல்­லாத சமூக வளர்ச்­சி­யா­னது அரை குரு­டுக்கு சம­மா­ன­தாகும். எனவே இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெண்கள் அதி­க­ளவில் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு சென்று பெண் வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்­வ­தற்கு ஆர்வம் காட்டவேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொதுவாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் என்றாலே வாக்காளர்களிடம் வாக்களிப்பதற்கான நாட்டம் குறைவாக காணப்படும்.ஆனால் இது உங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு தேர்தலாகும். எனவே அதனைக் கருத்தில் கொண்டு மக்கள் அதிகளவில் வாக்களிக்கவேண்டும் என்பதுடன் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதும் அவசியமாகும். இவ்வாறு பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரபோஷ் சுட்டிக்காட்டுகிறார்.

அந்தவகையில் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்யவேண்டியது மிகவும் அவசியமாக காணப்படுகின்றது. புதிய தேர்தல் முறைமை என்பதும் அதில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் இவற்றுக்கு முக்கியமான காரணமாகும். ஆனால் பொதுமக்கள் அரசியல் ரீதியில் சிந்தித்து தீர்மானங்களை எடுக்கவேண்டியது அவசியமாகின்றது.

அரசியல் கட்சிகளும் சமூகப் பொறுப்புடன் வேட்பாளர்களை களமிறக்கவேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று வாக்காளர்களும் சரியான பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எனவே இரண்டு வருட தாமதத்தின் பின்னர் கிடைத்துள்ள இந்த தேர்தலை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகும். எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் தமது நாட்டத்தை குறைத்துவிடக்கூடாது.

 எனவே உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தம்மை மதிப்பிட்டுக்கொள்வதற்கு வாக்காளர்களே தமது பங்களிப்பை சரியானமுறையில் செலுத்தவேண்டியிருக்கிறது. இதன் ஊடாகவே ஜனநாயகம் வலுப்பெறும் என்பதுடன் பொதுமக்களின் அரசியல் விழிப்புணர்வும் அடுத்தகட்டத்திற்கு செல்லும் என்பதும் யதார்த்தமாகும்.

ரொபட் அன்­டனி 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-16#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.