Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேயிலை தடை நீக்கத்திற்கு சகலமட்டத்திலும் நடவடிக்கைகள்

Featured Replies

தேயிலை தடை நீக்கத்திற்கு சகலமட்டத்திலும் நடவடிக்கைகள்

p17-651551184a7a663491556ea2bfa4c59e76c8564b.jpg

 

அஸ்­பெஸ்டஸ் இறக்­கு­மதி கட்­டுப்­பாட்­டிற்­கான தடையும் ஒத்­தி­வைப்பு
(லியோ நிரோஷ தர்ஷன்)

அஸ்­பெஸ்டஸ் கூரை தகடு உற்­பத்தி மூலப் ­பொ­ருட்­க­ளுக்­கான இறக்­கு­ம­திக்கு விதித்­துள்ள கட்­டுப்­பாடு கார­ண­மா­கவே இலங்கை தேயி­லைக்கு ரஷ்யா தடை­வி­தித்­துள்­ள­தாக வெளி­வரும் தக­வல்­களில் உத்­தி­யோ­க­பூர்வ  தன்மை இல்லை. எனவே ரஷ்யா விதித்­துள்ள தடை மிக விரைவில் தளர்த்த தேவையான அனைத்து மட்­டத்­தி­லான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பெருந்­  தோட்ட கைத்­தொ­ழில்­துறை அமைச்சர் நவீன் திசா­நா­யக்க தெரி­வித்தார்.  

அதே­போன்று பிரச்­சி­னைக்கு சுமுகமான சூழலை ஏற்­ப­டுத்தும் நோக்கில் அஸ்­பெஸ்டஸ் கூரை தகடு உற்­பத்தி மூலப்­பொ­ருட்­க­ளுக்­கான இறக்­கு­மதி

 கட்­டுப்­பாட்­டிற்­கான தடையை ஒத்­தி­வைக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக சந்­திப்பு நேற்று புதன் கிழமை அர­சாங்க தகவல் தினைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதன் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இங்கு உரை­யாற்­றிய அமைச்சர் நவீன் திசா­நா­யக்க தொடர்ந்தும் கூறு­கையில் ,

ரஷ்ய கூட்­ட­ர­சாங்­கத்தின் மூலம் இலங்கை தேயி­லைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. தேயி­லையில் காணப்­பட்­ட­தாக கூறப்­படும் வண்டு இனம் இலங்­கையில் அறி­தாக காணக்­கூ­டிய ஒரு வகை வண்டு இன­மாகும் . எனவே குறித்த வண்டு இனம் ரஷ்­யா­விற்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட தேயி­லையில் கலந்­தி­ருந்­தமை பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மா­கி­யுள்­ளது.

குறித்த நிலைமை தொடர்பில் துரித கதியில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக உரிய துறையில் உயர் அதி­கா­ரிகள், ரஷ்யா அர­சாங்­கத்­தினால் திக­தி­யொன்று குறிப்­பிட்ட உடன் அங்கு செல்ல உள்­ளனர். மேலும் குறித்த தடை­யினை நீக்கிக் கொள்­வ­தற்­காக பொருத்­த­மான ஏனைய இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

எனவே இந்த பிரச்­சி­னையை மிக விரைவில் தீர்த்­துக்­கொள்ள முடியும். இலங்­கையின் மொத்த தேயிலை ஏற்­று­ம­தியில் 11 வீதம் ரஷ்­யா­விற்கே ஏற்­று­மதி செய்­யப்­ப­ட­கின்­றது. ரஷ்­யா­வுடன் தேயிலை தடை விவ­கா­ரத்தை சுமூ­க­மாக தீர்த்­துக்­கொள்ளும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். பலர் இதனை அர­சியல் நோக்­கத்தில் விமர்­சிக்­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் நேற்றும் நேற்று முன்­தி­னமும் காணப்­பட்ட சர்­வ­தேச தேயிலை சந்தை ஏலத்தில் இலங்­கையின் தேயி­லைக்கு எவ்­வி­த­மான பாதிப்பும் ஏற்­பட வில்லை. எவ்­வா­றா­யினும் இலங்­கைக்கு எதி­ரான ரஷ்­யாவின் தேயிலை தடைக்கும் ஜன­வ­ரியில் இருந்து அமு­லுக்கு வர­வி­ருந்த ஹெஸ்­பெஸ்டஸ் கூரை தகடு தடைக்கும் இடையில் தொடர்­புகள் இருப்­ப­தாக உத்­தி­யோ­கப்­பூர்­வ­மற்ற தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இந்­நி­லையில் ஹெஸ்­பெஸ்டஸ் கூரை தகடு உற்­பத்தி மூலப்­பொ­ருட்­க­ளுக்­கான இறக்­கு­மதி கட்­டுப்­பாட்­டிற்­காக தடையை ஒத்­தி­வைக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ரஷ்­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் ஹெஸ்­பெஸ்டஸ் கூரை தகடு உற்­பத்தி மூலப்­பொ­ருட்­களில் எவ்­வி­த­மான பாதிப்பும் இல்லை என அந்­நாட்டு உத்­த­ர­வாத சான்­று­களை வழங்­கி­யுள்­ளது. இதனை மேலும் உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தலை­மை­யி­லான குழு ரஷ்யாவிற்கு செல்ல உள்ளது.

இவ்வாறு பல கோணஙகளில் ரஷ்யாவின் தேயிலை தடைகுறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றிய சர்வதேச தரத்திற்கு அமைவாக இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்கின்றது. ரஷ்யாவிற்கு என தனிப்பட்ட தர நிர்ணய விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்றால் அதனை செய்யவும் இலங்கை தயாராகவே உள்ளதாக தெரிவித்தார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.