Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளர் ஆர்னோல்ட்...தமிழரசுக்கட்சி இறுதி செய்தது; இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு

Featured Replies

யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளர் ஆர்னோல்ட்

1-909e649656815a2c394a4f74091cf4ce4955a8eb.jpg

 

தமிழரசுக்கட்சி இறுதி செய்தது; இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு 
(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபையின் மேயர் வேட் பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை களமிறக்குவதென இலங்கை தமிழரசுக்கட்சி இறுதி செய்துள்ளதாகவும் இன்று வியாழக்கிழமை உத்தி யோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் உள்ளகத்தகவல்கள் தெரி விக்கின்றன.  

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுத்தாக்களுக்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அண்மைய நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேயர் வேட்பாளர் தொடர்பில் பலத்த இழுபறிகள் காணப்பட்டு வந்திருந்தன. ஆரம்பத்தில் ஐவரின் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இறுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.

குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வந்திருந்த போதும் தற்போது அது கைவிடப்பட்டமையினால் அவருடைய சிரேஷ்டத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து அவரை மேயர் வேட்பாராக களமிறக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தலைவர் மாவை.சேனாதிராஜாவிடத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அணியினர் அரசியலில் இளம் சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கதி்னை மையப்படுத்தி இம்மானுவேல் ஆர்னோல்டை மேயர்வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இவ்வாறான சர்ச்சைகள் நீடித்தமையால் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா மேயர் வேட்பாளர் தொடர்பில் முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறி வந்ததோடு மேயர் வேட்பாளார் யார் என்பது குறித்து அறிவிக்காது போட்டியிடுவதெனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்போது வடமாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இம்மானுவேல் ஆர்னோல்ட் விலகும் கடிதத்தினை கையளித்துள்ளமையை தவிசாளர் சி.வி,கே சிவஞானம் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் வேட்பாளருக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணிகளில் ஆர்னோல்ட் ஈடுபட்டிருந்தமையை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இத்தகைய நிலையில் அவரே மேயர் வேட்பாளர் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில் இன்றையதினம் தமிழரசுகட்சி தான் இறுதி செய்த முடிவினை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதெனவும் தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழ்.மாநகரசபையில் களமிறங்கியுள்ள இலங்கை தமிழ் காங்கிரஸ் சட்டத்தரணி மணிவண்ணனை மேயர் வேட்பாளராக அறிவித்துள்ளது. மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்திலான புதிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய மேயர் வேட்பாளர் யார் என்பதை தனியாக அறிவிக்காது களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.