Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்­தே­கத்­திற்கு இட­மான முகாம்­களை ஐக்கிய நாடுகள் சபையினர் சோதனையிடலாம் : அனுமதி வழங்குவோம் என்­கி­றது அர­சாங்கம்

Featured Replies

சந்­தே­கத்­திற்கு இட­மான முகாம்­களை ஐக்கிய நாடுகள் சபையினர் சோதனையிடலாம் : அனுமதி வழங்குவோம் என்­கி­றது அர­சாங்கம்

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­தி­நி­திகள் உள்­நாட்டில் மேற்கொள்ளும் ஆய்­வுகள் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது. உறுப்பு நாடு என்ற வகையில் அவ்­வா­றான அனு­ம­தி­க­ளுக்கு இணங்­கியே ஐ.நா.சாச­னங்­களில் இலங்­கையும் கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. சந்­தே­கத்­திற்கு இட­மான முகாம்­களில் மனித எலும்பு கூடுகள் காணப்­பட்­ட­மை­யி­னா­லேயே எந்­த­வொரு பிர­தி­நி­தி­யையும் கடந்த அர­சாங்கம் முகாம்­க­ளுக்குள் அனு­ம­திக்கவில்லை. நல் ­லாட்சி அர­சாங்­கத்தின் வெளிப்­ப­டைத்­தன்மை சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மா­கி­யுள்­ளது எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக சந்­திப்பு நேற்று புதன் கிழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதன் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இங்கு உரை­யாற்­றிய அமைச்­ச­ர­வையின் இணைப்­பேச்­சாளர் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேலும் கூறு­கையில் ,

ஐக்­கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் பல்­வேறு இணக்­கப்­பா­டு­க­ளுடன் இலங்கை செயற்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச சட்­டங்­களை பாது­காத்தல் மற்றும் மனித உரி­மைகள் விவ­கா­ரங்­களை கையா­ளுதல் போன்ற விட­யங்­களில் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை ஐக்­கிய நாடுகள் சபையின் சாச­ணங்­களில் கைச்­சாத்­திட்­டுள்­ளது.

அந்த வகையில் ஐ நா சாச­னங்­க­ளுக்கு எதி­ரான அல்­லது இணக்­கப்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுள்ள சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் உள்­நாட்டில் இடம்­பெற்­றுள்­ளன என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டால் அதனை ஆராய்­வ­தற்­கான அதி­கா­ரங்கள் ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு உள்­ளது. இதனை தவிர்க்­கவும் முடி­யாது.

எனவே உள்­நாட்டில் இடம்­பெ­று­கின்ற அல்­லது இடம்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்ற சர்­வ­தேச சட்­ட­திட்­டங்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களை ஆராய்­வ­தற்­கான அங்­கி­கா­ர­மா­கவும் அந்த சாச­னங்கள் காணப்­ப­டு­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் சந்­தே­கத்­திற்கு இட­மான முகாம்­களை சோத­னை­யிடும் அனு­ம­தியை எவ்­வி­த­மான தடை­யு­மின்றி ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்கும்.

ஏனென்றால் தற்­போது அந்த முகாம்­க­ளுக்குள் எழும்பு கூடுகள் இல்லை. ஆனால் கடந்த அர­சாங்­கத்தில் எழும்பு கூடுகள் காணப்­பட்­ட­மை­யி­னா­லேயே யாரையும் முகாம்­க­ளுக்குள் அனு­ம­திக்க வில்லை. எனவே தான் நான்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளையும் பல மாத­மாக முகாம்­க­ளுக்குள் வைத்­தி­ருந்­தனர். தற்­போது இவ்­வா­றான சம்­ப­வங்கள் நாட்டில் இடம்­பெ­று­வ­தில்லை.

ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­தி­நி­திகள் இலங்­கையில் சர்­வ­தேச குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராயும் போது அது ஒருபோதும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது. அரசாங்கத்துடன் உரிய வகையில் தொடர்புகளை ஏற்படுத்திய பின்னரே அவர்கள் நாட்டிற்கு வருவார்கள். தற்போதைய அரசாங்கத்தின் வெள்ளிப்படைத்தன்மை காரணமாக இலங்கையின் மனித உரிமைகள் மிக உயரிய நிலையில் காணப்படுவதாக அந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டுகின்றனர் என தெரிவித்தார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.