Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணைமுறி குறித்த விவா­தத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர் பங்­கேற்பார்கள்

Featured Replies

பிணைமுறி குறித்த விவா­தத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர் பங்­கேற்பார்கள்

 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பங்­கேற்­காது

(ஆர்.யசி)

மத்­திய வங்கி பிணை­முறி மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை குறித்த விவா­தத்­தின்­போது ஏட்­டிக்குப் போட்­டி­யாக ஜனா­தி­பதி, பிர­தமர் கள­மி­றங்­குவர். ஜே.வி.பியும் பொது எதி­ர­ணியும் விவா­தத்­திற்­கான அதிக நேர ஒதுக்­கீட்டை கோரி­யுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு விவா­தத்தில் பங்­கேற்­காது என தெரி­வித்­துள்­ளது.  

மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் மற்றும் பாரிய நிதி மோச­டிகள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் இரண்டு அறிக்­கைகள் மீதான பாரா­ளு­மன்ற விமாதம் எதிர்­வரும் 6 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது.

தேர்­தலின் பின்னர் 21,22 ஆம் திக­தி­களில் அறிக்கை குறித்த விவா­தத்தை முன்­னெ­டுக்க கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்ட போதிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அறி­விப்­பினை அடுத்து விவா­தத்தை தேர்­த­லுக்கு முன்னர் நடத்­த­ப­ட­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

 அனைத்து அர­சியல் கட்­சி­க­ளுக்கும் விவாத தினத்தில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் சகல கட்­சி­களும் பங்­கேற்­காத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி , பொது எதி­ரணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் விவா­தத்தில் கலந்­து­கொள்­கின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜன­நா­யக மக்கள் முன்­னணி உள்­ளிட்ட சில கட்­சிகள் கலந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என தெரி­வித்­துள்­ளது.

விவாதம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பினர் மஹிந்த அம­ர­வீர கூறு­கையில்

மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் மற்றும் பாரிய நிதி மோசடி ஊழல் குறித்த குற்­றங்­களின் மத்­தியில் தான் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி ஆகிய இரண்டு கட்­சி­களும் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளன . ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழுத்தம் கார­ண­மா­கவே இன்று தேர்­தலின் முன்னர் விவாதம் ஒன்றை நடத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. இதில் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி ஆகி­யன ஒரு­வ­ருக்கு ஒருவர் கள்­ளர்கள் என பழி­சு­மத்தி வரு­கின்ற நிலை­மையே இந்த விவா­தத்தின் போதும் இடம்­பெறும்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இந்த விட­யத்தில் தொடர்­பு­ப­ட­வில்லை. நாம் விவா­தத்தில் கலந்­து­கொண்ட போதிலும் வேடிக்கை பார்க்க வேண்­டிய நிலை­மையே ஏற்­படும். அவர்கள் ஒரு­வ­ருக்கு ஒருவர் மோதிக்­கொண்டு இந்த விவா­தத்தை குழப்பும் நிலைமை காணப்­படும். எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்­துக்கள் அவர் தெரி­வித்து வரும் கார­ணிகள் அனைத்தின் உண்மை நிலை­மையும் அன்­றைய தினம் மக்­க­ளுக்கு தெரி­ய­வரும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பினர் லக்ஸ்மன் கிரி­யெல்ல கூறு­கையில்,

நாம் விவா­தத்தை நடத்த தயா­ரா­கவே உள்ளோம். தேர்­தலின் பின்னர் முழு­மை­யான விவாதம் ஒன்றை முன்­னெ­டுக்­கவே கட்சி தலைவர் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. எனினும் ஜனா­தி­ப­தியின் வேண்­டு­கோ­ளுக்கு இணை­யங்க தேர்­தல்கள் ஆணைக்­குழு தலைவர் மற்றும் கட்சி தலை­வர்கள் அனை­வரின் இணக்­கத்­துடன் எதிர்­வரும் 6 ஆம் திகதி விவா­தத்தை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் ஐக்­கிய தேசியக் கட்சி கலந்­து­கொள்ளும். நாம் விவா­தத்தை எதிர்­கொள்ள தயா­ரா­கவே உள்ளோம். எந்த நிலை­யிலும் நாம் அஞ்­சப்­போ­வ­தில்லை. மத்­திய வங்கி பிணை­முறி குற்­றச்­சாட்­டினை போலவே பாரிய நிதி மோசடி ஊழல் அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதிலும் மிகப்­பெ­ரிய ஊழல் இடம்­பெற்­றுள்­ளது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லாளர் விஜித ஹேரத் கூறு­கையில்.

ஊழல் குறித்த அறிக்­கைகள் தொடர்­பி­லான விவா­தத்தை நாமே கேட்டோம். ஆகவே இந்த விவாதம் மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்தில் இருந்து மேற்­கொண்ட மிகப்­பெ­ரிய ஊழல் மற்றும் முன்­னைய ஆட்­சியின் மிகப்­பெ­ரிய ஊழல் ஆகி­யன மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆகவே இந்த விவா­தத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி நிச்­ச­ய­மாக கலந்­து­கொள்ளும். எமக்­கான விவாத நேரங்­களை அதி­க­ரித்து தரு­மான நாம் கோரிக்கை விடுத்­துள்ளோம் எனக் குறிப்­பிட்டார்.

பொது எதி­ரணி உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன இது குறித்து தெரி­விக்­கையில்.

 கூட்டு எதிர்க்­கட்சி மத்­திய வங்கி பிணை­முறி குறித்து நாடு தழு­விய ரீதியில் பல்­வேறு போராட்­டங்­களை மேற்­கொண்­டது. அதன் பின்­ன­ணி­யி­லேயே அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடிந்­துள்­ளது. எனினும் அம்­மோ­ச­டிக்கு எதி­ராக உத்­தி­யோ­க­பூர்வ எதிர்க்­கட்சி குரல் கொடுக்­க­வில்லை. அர­சாங்­கத்தைப் போல் அத்­த­ரப்பும் அதனை மூடி மறைப்­ப­தற்கே முயற்­சித்­தது. அதற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ காலத்தில் பாரி­ய­ளவில் மோசடி இடம்­பெற்­றுள்­ளதாக் குறிப்­பிட்டு நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மோச­டியை சிறி­ய­ள­வி­லான மோச­டியாச் சித்­த­ரிக்க விளைந்­தது. எனவே மத்­திய வங்கி பிணை­முறி மோச­டிக்கு எதி­ராக தொடர்ந்தும் குரல்­கொ­டுத்து வரும் கூட்டு எதிர்க்­கட்­சிக்கு பாரா­ளு­மன்ற விவாத்தின் போது அதி­க­ள­வான நேரம் ஒதுக்கித் தரு­மாறு சபா­நா­ய­க­ரிடம் எழுத்­து­மூலம் கோரிக்கை விடுக்­க­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பார­ளு­மன்ற இருப்­பினர் எம். எ. சுமந்­திரன் இது குறித்து தெரி­விக்­கையில்

மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி ஊழல் அறிக்கை ஆகிய இரண்டு அறிக்கை மீதான விவா­தமும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். பொது­மக்கள் நிதி மீதான ஊழல் குற்­றங்கள் குறித்து உரிய வகையில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற எமது நிலைப்­பாட்டில் எந்­த­வித மாற்­றமும் இல்லை. எனினும் ஆரம்­பத்தில் கட்சி தலை­வர்கள் கூட்டம் கூடிய நிலையில் இந்த அறிக்­கைகள் மீதான விவாதம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் இப்­போது தேர்­த­லுக்கு முன்­னரே விவாதம் நடத்­த­ப­டு­வ­தாக கூறப்­படும் நிலையில் அதில் எம்மால் கலந்­து­கொள்ள முடி­யாத நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றது. நாம் தற்­போது தேர்தல் பிர­சார செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம். அதன் கார­ண­மா­கவே எம்மால் அறிக்கை குறித்த பாரா­ளு­மன்ற விவா­தத்தில் கலந்­து­கொள்ள முடி­யாத நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றது. எவ்­வாறு இருப்பினும் விவாதம் ஒன்று நடத்தபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகவே அதனை நாமும் வலியுறுத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி விவாதத்தில் கலந்துகொள்வதிலும் சாத்தியப்பாடுகள் இல்லை என தெரிய வருகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வருகைதருகின்ற போதிலும் விவாதத்தில் கலந்துகொள்வது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.