Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டுபாயில் இன்டர்போல் அதிகாரிகளால் உதயங்க வீரதுங்க கைது

Featured Replies

டுபாயில் உதயங்கவிடம் விசாரணை

 

 

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாய் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

5_Udayanga.JPG

அமெரிக்காவுக்குப் பயணமான அவர், இடைத்தங்கலுக்காக டுபாயில் தரையிறங்கியிருந்தார். இதன்போதே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/30264

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டுபாயில் இன்டர்போல் அதிகாரிகளால் உதயங்க வீரதுங்க கைது

 

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ‘இன்டர்போல்’ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5_Udayanga.JPG

அமெரிக்கா நோக்கிப் பயணமான உதயங்க, இடைத் தங்கலுக்காக டுபாயில் தரையிறங்கினார். அப்போது இன்டர்போல் அதிகாரிகள் அவரை விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக உதயங்கவை அதிகாரிகள் சற்று முன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவரை நாட்டுக்கு அழைத்துவர விசேட பொலிஸ் குழுவொன்று டுபாய் பயணமாகியுள்ளது.

http://www.virakesari.lk/article/30266

  • தொடங்கியவர்

கோத்தாவைச் சந்திக்கச் சென்ற போது டுபாயில் சிக்கினார் உதயங்க வீரதுங்க

 

udayanga-weeratungaடுபாயில் நேற்று கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் வழியில், மாற்று விமானத்துக்காக காத்திருந்த போது, டுபாய் விமான நிலையத்தில் உதயங்க வீரதுங்க நேற்றுக்காலை டுபாய் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் டுபாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டு,பின்னர்  அவரை அனைத்துலக காவல்துறையினர் பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரேனிடம் இருந்து, நான்கு மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக, உதயங்க வீரதுங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவரைக் கைது செய்வதற்கு 2016 ஒக்ரோபர் மாதம், கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றம், அனைத்துலக காவல்துறைக்கான பிடியாணையை பிறப்பித்துள்ளது.

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்குக் கொண்டு வருவதற்கு, இராஜதந்திர மற்றும் சட்ட காரணங்களால் குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்று ஒரு தகவல் கூறுகிறது.

அதேவேளை, டுபாயில் உதயங்க வீரதுங்கவை பொறுப்பேற்பதற்காக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியுள்ள தனது மைத்துனர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்திக்கச் சென்ற போதே, உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மிக் போர் விமானக் கொள்வனவில் இடம்பெற்ற மோசடிகளுடன் கோத்தாபய ராஜபக்சவும், உதயங்க வீரதுங்கவும் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், முடக்கப்பட்ட சிறிலங்கா கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே உதயங்க வீரதுங்க அமெரிக்கா செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இந்த வாரத்துக்குள் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

அதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக உதயங்க வீரதுங்கவை கொழும்புக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/02/05/news/28832

  • தொடங்கியவர்

டுபாயில் கைதானார் உதயங்க

1-e19da8ae55b88665fd16f02dac5b0fb571b08213.jpg

 

அமெ­ரிக்கா செல்ல முற்­பட்­ட­போது டுபாய் குடி­வ­ரவு – குடி­ய­கல்வு அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை
(எம்.எப்.எம்.பஸீர்)

மிக் -– 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மோசடி தொடர்பில்  நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சந்­தேக நப­ராக கருதி தேடப்­பட்டு வரும் ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர் உத­யங்க வீர­துங்க டுபாயில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.  

தனது மனை­வி­யுடன் அமெ­ரிக்கா நோக்கி செல்ல டுபாய் சர்­வ­தேச விமான நிலை­யத்­துக்கு உத­யங்க வீர­துங்க வந்த போது, விமான நிலைய குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரிகள் அவரை கைது செய்து தடுத்­து­வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், அது தொடர்பில் இலங்­கையின் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு அவர்கள் அறி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

உத­யங்க வீர­துங்க, இலங்கை கடவுச் சீட்டை பயன்­ப­டுத்தி அமெ­ரிக்கா செல்ல முற்­பட்­டுள்ள நிலையில், அந்த கடவுச் சீட்­டா­னது கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­னவின் உத்­த­ர­வுக்கு அமைய இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளதால், அது தொடர்பில் அவ­தானம் செலுத்­தியே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்த அதி­காரி மேலும் குறிப்­பிட்டார்.

எனினும் நேற்று மாலை வரை, உத­யங்க வீர­துங்­கவை இலங்­கைக்கு கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் பொலிஸார் எவ்­வித தீர்­மா­னத்­தி­னையும் எடுத்­தி­ருக்­க­வில்லை எனவும், டுபாய் சென்று அழைத்து வரு­வதா இல்­லையா என்று கூட முடிவு செய்­யப்­ப­ட­வில்லை என குறித்த உயர் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

கைது செய்­யப்­பட்ட உத­யங்க வீர­துங்­கவை டுபாய் அதி­கா­ரிகள் விசா­ரணை செய்து, தடை செய்­யப்­பட்ட கடவுச் சீட்டில் வெளி­நாடு செல்ல முற்­பட்­டமை தொடர்பில் கைது செய்து அந் நாட்டு சட்­டத்தை நடை முறைப்­ப­டுத்த முற்­பட்­டுள்­ளனர். இதன்­போது தான் உக்ரேன் பிரஜை எனவும் அதனால் தன்னை உக்­ரே­னுக்கு நாடு கடத்­து­மாறும் உத­யங்க வீர­துங்க டுபாய் குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரி­களை கோரி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

எனினும் அவர் வெளி நாடு செல்ல முற்­பட்ட கடவுச் சீட்­டுக்கு எதி­ரான தடை உத்­த­ரவு கோட்டை நீதி­மன்­றினால் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அது இலங்­கையின்ல் இடம்­பெறும் குற்றம் ஒன்­றுடன் தொடர்­பு­டை­யது என்­ப­தாலும், சர்­வ­தேச பொலிஸார் ஊடாக பிடி­வி­றாந்து ( நீல அறி­வித்தல்) பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தையும் கருத்தில் கொண்டு அவரை இலங்­கை­யிடம் கைய­ளிப்­பது தொடர்பில் பேச்­சுக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

  பெரும்­பாலும் உத­யங்­கவை இலங்­கைக்கு டுபாய் நாடு­க­டத்­தலாம் எனவும் அவ்­வாறு இல்லை எனில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒரு­வரை அங்கு அனுப்பி அவரை கையேற்று வரு­வது தொடர்பில் தற்­போது அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளன. இது குறித்­துள்ள சட்ட திட்ட ஏற்­பா­டு­களை பொலிஸ் திணைக்­க­ளமும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளமும் வெளி­வி­வ­கார அமைச்­சுடன் இனைந்து நேற்று ஆராய்ந்­தி­ருந்­தது.

முன்­ன­தாக மிக் விமான கொள்­வ­னவு நிதி முறை­கேடு தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும், நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் (எப்.சி.ஐ.டி.), அந்த விவ­கா­ரத்தின் பிர­தான சந்­தேக நப­ரான முன்னாள் ரஷ்­யா­வுக்­கான தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் இரு வங்­கிக்­க­ணக்­கு­க­ளுக்கு வைப்­பி­லி­டப்­பட்ட பெருந் தொகை பணத்தை அண்­மைய விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­தி­ருந்­தனர்.

கோட்டை நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமை­வாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கா­ரவின் மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கே.டி.பிரி­யந்­தவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக இரண்டாம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஹால் பிரன்சிஸ் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இரு தனியார் நிதி நிறு­வ­ன­களில் உள்ள உத­யங்­கவின் கணக்­கு­க­ளுக்கே இந்த நிதி­யா­னது, லத்­வியா, சைப்ரஸ், ஐக்­கிய அரபு இராச்­சியம், மாஷல் தீவுகள், ரஷ்யா, பனாமா மற்றும் அமெ­ரிக்­காவில் இருந்து வெவ்­வேறு நபர்கள், நிறு­வ­னங்­க­ளினால் வைப்­பி­டப்­பட்­டுள்­ளமை நிதிக் குற்றப் புல­னா­யவுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பணத்­தொகை உத­யங்­கவின் கணக்கில் இவ்­வாறு வைப்­பி­டப்­பட்­ட­மையை சந்­தே­கத்­துக்கு இட­மான கொடுக்கல் வாங்­க­லாக கருதும் நிதிக் குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் அதன் பிர­கா­ரமே, அந்த நிதியின் ஊடாக கொள்­வ­னவு செய்­யப்­பட்ட உதய்ங்­கவின் சொத்­துக்­களை நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமைய கடந்த வாரத்­துக்கு முதல் வாரம் தடை செய்­த­தாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் இந்த சந்­தே­கத்­துக்கு இட­மான பண வைப்­புக்கள் தொடர்பில் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்­ற­வியல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான பரஸ்­பர தகவல் பறி­மாற்றுச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் தக­வல்­களைப் பெற்று மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி லத்­வியா, சைப்ரஸ், ஐக்­கிய அரபு இராச்­சியம், மாஷல் தீவுகள், ரஷ்யா, பனாமா மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­களின் புல­னாய்வுப் பிரி­வு­க­ளுக்கு இது தொடர்பில் தகவல் கோரும் எம்.எல்.ஏ.கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த கடி­தத்தின் பிர­காரம் அந்­தந்த நாடு­களில் இருந்து உத­யங்­கவின் வங்­கிக்­க­ணக்கு பணம் வைப்­பி­லிட்ட நிறு­வனம், தனி நபர்கள் தொடர்பில் பதி­ல­ளிக்­கப்­பட்ட பின்னர் அடுத்த கட்ட விசா­ரணை தொடர்பில் நட­வ­டிக்­கைக்கு தயா­ரான நிலையிலேயே தற்போது டுபாயில் உதயங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு உக்­ரே­னி­ட­மி­ருந்து இலங்கை மிக் 27 ரக போர் விமா­னங்கள் நான்­கினை கொள்­வ­னவு செய்­தி­ருந்­தது. இந் நட­வ­டிக்­கை­யா­னது அப்­போ­தைய ரஷ்ய தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் ஊடா­ கவே முன்­னெ­டுக்­கப்பட்­டி­ருந்­தது.

 இது குறித்த ஒப்­பந்­தங்­களும் விமா­னப்­ப­டை­யி­ட­மி­ருந்து காணாமல் போயுள்ள நிலையில் இக்கொள்வனவு தொடர்பில் 14 மில்லியன் அமெ ரிக்க டொலர்கள் மோசடி இடம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட் டுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.