Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனத்­தின் பய­ணம் வெற்­றி­ அடைய நிதா­னித்த செயற்பாடு அவ­சி­யம்

Featured Replies

  • இனத்­தின் பய­ணம் வெற்­றி­ அடைய நிதா­னித்த செயற்பாடு அவ­சி­யம்
Idpcamp-1-352x430.jpg

இனத்­தின் பய­ணம் வெற்­றி­ அடைய நிதா­னித்த செயற்பாடு அவ­சி­யம்

 

மழை ஆரம்­பித்­து­விட்­டால் காளான்­கள் முளைக்­கும். தேர்­தல் ஆரம்­பித்­து­விட்­டால் கட்­சி­கள் முளைக்­கும். இது புதி­து­மல்ல; புதி­ன­மு­மல்ல. உல­கின் எந்­த­வொரு நாட்­டி­லும் , சிறு­பான்­மை­யி­னத்தை பெரும்­பான்மை இனம் நசுக்­கு­வது என்­பது வர­லாற்­றுப் பதி­வு­க­ளா­கும்.

தேர்­தல் காலங்­க­ளில், மேடை­க­ளில் பீரங்­கிப் பரப்­பு­ரை­க­ளால் கிடைப்­பது கொக்­க­ரிப்­பும் கர­கோ­சங்­க­ளும் மட்டும்தான். இலங்­கை ­யில் இனப்­பி­ரச்­சி­னை­யின் வெளிப்­பாடு 1977 ஆம் ஆண்டில் ஆரம்­பித்து 1983 ஆம் ஆண்டில் ஆயு­தப் போராட்­ட­மாக மாறி 2009 ஆம் ஆண்­டில் நிறை­வுக்கு வந்த காலம் வரை, அரச சேவை­யில் கட­மை­யாற்றி அண்­மை­யில் ஓய்­வு­பெற்ற ஒரு­வர் என்ற நிலை­யில் எனது அனு­ப­வங்­க­ளை­யும், தமிழ் மக்­கள் உயிர்­வா­ழும் உரி­மை­யு­டை­வர்­களா என்ற கேள்­வி­யை­யும் முன்­வைத்து எனது எண்­ணங்­களை வெளிப்­ப­டுத்­து­கின்­றேன்.

இலங்­கை­யின் அர­சி­யல் பய­ணம்
முச்­சக்­க­ர வண்­டிப் பய­ணத்தை ஒத்­தது

இலங்­கை­யின் அர­சி­யல் நிர்­வா­க­மா­னது, மூன்று சில்லு வாக­னத்­தைப் போன்று பய­ணிக்­கும் ஒரு சாத­ன­மா­கும். இதில் முன்­சில்­லுக்கு உரி­யது, திசை­காட்­டும் முக்­கிய பணி­யா­கும். இந்த வழி­த­வ­றிப் போனால் பின்­சில்­லுகளும் வழி­த­வ­றி­ய­தா­கவே இருக்­கும். முன்­சில்லு என்­பது உள்­ளூ­ராட்சி தேர்­த­லையே குறிக்­கும். இந்­தத் தேர்­தல் எல்­லை­கள் என்­பது சிறு­ப­கு­தி­யையே குறிப்­பி­டு­கின்­றது.

 

இந்­தப் பகுதி மக்­கள் தங்­கள் எண்­ணங்­களை, தீர்­மா­னங்­கள் சரி­யாக மேற்­கொண்­டால், சரி­யான கட்­சியை தெரிவு செய்­தால் அவர்­களே ஏனைய இரண்டு சில்­லு­க­ளான மாகாண சபை மற்­றும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளி­லும் அதே கட்­சி­யையே தெரிவு செய்­வார்­கள். இது­தான் யதார்த்­தம்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில், கட்சி நலனை விட, இன­உ­ரி­மையை விட, மேலோங்­கு­வது காப்­பெற் வீதி­க­ளும், மின்­சார விளக்­கு­க­ளும் ,களி­யாட்ட நிகழ்­வு­க­ளும் கொண்ட உள்­ள­டக்­கங்­களே. ஒரு மாகாண சபை உறுப்­பி­ன­ருக்கு 60 லட்­சம் ரூபா தான் ஒரு வருட அபி­வி­ருத்­திக்­கான ஒதுக்­கீ­டா­கும் என்­றால், எந்­தக் கட்சி சார்ந்­த­வர்­க­ளா­யி­னும் அந்த 60 லட்­சத்­துக்­குள் தான் மக்­கள் முன்­மொ­ழி­வு­களை உள்­ள­டக்­க­லாம். என்னை அனுப்­புங்­கள் நான் 60 கோடி ரூபா கொண்டு வரு­கின்­றேன் என ஒரு­வர் மேடை­யிலே சன்­ன­தம் ஆடு­கி­றார் என்­றால், ஆடு­கி­ற­வர் முட்­டா­ளல்ல, கைதட்­டும் பார்­வை­யா­ளர்­களே முட்­டாள்­கள்.

இவற்றை நினைக்­கும்­போது கடந்த காலத்­தில் இலங்கை ஆசி­ரி­யர் சங்­கத் தலை­வ­ராக இருந்த ஒரு­வ­ரது கூற்று எல்லா மக்­க­ளின் பிரச்­சி­னை­ க­ளுக்­கும் நூறு வீதம் தீர்­வைக் கொடுக்­கி­றது. அவர் கூறி­ய­தா­வது, அனு­தி­ன­மும் தனது ‘வீட்­டுக்­கேற்’ திறக்­கும் ஆசி­ரி­யர்­க­ளது பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு ஒரே­ஒரு வழி­தான் இருக்­கி­றது.

அது என்­ன­வென்­றால், அவ­ர­வர் வீ்ட்டுக் கேற்­றிற்கு முன்­னால் ஒவ்­வொரு பள்­ளிக்­கூ­டத்தை கட்­டிக் கொடுத்­தால் ஆசி­ரி­யர்­க­ளுக்கு எந்­தப் பிரச்­சி­னை ­யு­மில்லை என்­பார். இதே­நி­லை­தான் இன்று இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளது தேர்­தல்­க­ளுக்­கும். பிர­தேச அபி­வி­ருத்­தி­க­ளும், காப்­பெற் வீதி­க­ளும் மட்­டும்­தான் எங்­கள் உரி­மை­யும் சுதந்­தி­ர­ மும் என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்து எவ­ரும் வில­கிச் செல்­லக் கூடாது என்ற சூழ்­நி­லைக்கு ஒரு அணி­யி­னர் இறுக்­க­மான விதி­க­ளைப் பிர­யோ ­கிக்­கின்­ற­னர்.

தென்­னி­லங்­கை­யில் மண்­ப­டாத கால்­க­ளு­டன் பிறந்து, அங்கு இன்­னும் தங்­கள் மாளி­கை­யி­லேயே உறங்­கும் ஒரு சிலர் தென்­னி­லங்கை பெரும்­பான்­மை­யின மக்­க­ளுக்கு தமிழ் மக்­க­ளின் நிலை­மை­க­ளைப் புரிய வைக்­கும் செயற்­பா­டு­கள் எத­னை­யும் செய்­யாது, தேர்­தல் அண்­மிக்­கும் போது திரு­வி­ழா­விற்கு கச்­சான் கடை­போ­டு­வது போல், வட­ப­குதி நோக்கி படை­யெ­டுப்­பது இன்று இயல்­பா­ன­தொரு விட­ய­மாக ஆகி­விட்­டுள்­ளது.

சுமந்­தி­ரன் இனத்தை விற்­கி­றார், சம்­பந்­த­னுக்கு அறளை பிடித்­து­விட்­டது என்­பவை வட­ப­கு­தி­யில் அர­சி­யல் சுற்­று­லாப் பய­ணி­க­ளின் பரப்­புரை. சரி, மேற்­கூ­றிய இரண்டு விட­யங்­க­ளை­யும் இரண்­டா­வ­தாக வைத்­துக் கொண்டு முத­லா­வ­தாக இணைந்த அர­சி­யல் ஒன்றை மேற்­கொண்­ட­த­னால் கிடைத்த பெறு­பேறு என்­ன­வெ­னப் பார்த்­தால் எண்­பது வீத­மான இரா­ணு­வக் கட்­டுப்­பாட்டு பிர­தே­சங்­கள் விடு­விக்­கப்­பட்­டு­விட்­டன என அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவே கூறு­கி­றார்.

இந்­தத் தக­வல் பிழை­யா­னது எனி­னும், சரி­யான புள்ளி விவர அடிப்­ப­டைத் தக­வ­லு­டன் இத்­த­கைய குற்­றச்­சாட்டை முன் வைக்­கும் தரப்­பி­னர் அரச தலை­வரை அணு­கி­யி­ருக்­க­லாம். அல்­லது அணு­க­லாம். மாற்­றம் வேண்­டும்; புது யுகம் வேண்­டும் என்­னும் எதி­ர­ணி­யி­னர், மேற்­கூ­றிய விட­யங்­கள் எதிர்ப்பு அர­சி­யல் மூலம் நிறை­வே­றி­யதா அல்­லது இணைந்த அர­சி­யல் மூலம் நிறை­வே­றி­யதா ? என்­ப­தைத் தீர்­மா­னிக்­கட்­டும்.

தமது கடும் கோட்­பாட்டை மாற்ற முன்­வ­ராத
தென்­னி­லங்­கைத் தரப்­புக்­கள்

தென்­னி­லங்கை பெரும்­பான்மை இன மக்­க­ளும், பெளத்த பீடங்­க­ளும், சிறு­பான்­மை­யி­ன­ரது உரி­மையை அங்­கீ­க­ரிக்­கு­மாறு எமது முதிர்ந்த அர­சி­யல் தலை­வர் சம்­பந்­தன், பெளத்த பீடங்­களை சந்­தித்­தும், அவர்­க­ளின் கடும் போக்கை மாற்­றிக் கொள்­ளாத நிலைப்­பாடு குறித்து அண்­மைக்­கா­லப் பத்­தி­ரி­கை­க­ளில் நாம் வாசிக்­கும்­அதேவேளை, அதை­விட கடும் போக்­கொன்று வட­ப­கு­தி­யில் கிளர்ந்­தெ­ழு­வ­து­தான் வேடிக்கை.

உலக நாடு­க­ளில் பெரும்­பான்மை இனம், சிறு­பான்மை இனத்தை நசுக்­கு­வது ஒரு வர­லா­றா­கி­விட்­டது. முன்­னைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் புதிய அர­ச­மைப்பை எதிர்க்­கா­மல் அங்­கீ­க­ரிக்­கு­மாறு பணி­வு­டன் வேண்­டி­ய­போ­தி­லும், புதிய அர­ச­மைப்பு யோச­னை­யைத் தான் எந்­தக் கட்­டத்­தி­லும் ஆத­ரிக்க மாட்­டேன் என நிரா­க­ரித்­த­தனை நாம் மறந்­து­விட்­டோமா?

எமது இனத்­துக்கு உரிமை பெற்­றுத்­த­ரு­வோம் என எவர்­தான் வட­ப­கு­தி­யில் நின்று சங்கு ஊதி­னா­லும், அது அர­ச­மைப்பு ஊடாக நிறை­வேற்­றப்­பட வேண்­டும். எனவே இங்கு நின்று ஊதும் சங்­கு­களை தென்­னி­லங்கை பெரு்­பான்மை மக்­கள் மத்­தி­யில் ஊது­வ­தன் மூலம் எங்­கள் உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­ப­டும் நிலை ஏற்­ப­டு­மா­னால், எம்­மி­னம் சங்கு ஊது­ப­வர்­க­ளுக்கு ஆத­ர­வா­கச் செயற்­ப­டு­வது நியா­ய­மா­ன­தாக இருக்­கும்.

இத­னையே மறைந்த முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரவி­ராஜ் நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார். அவர் மறை­வுக்கு முன்பு ரூப­வா­ஹ।னி தொலைக்­காட்­சி­யின் சிங்­கள சேவை­யில் கூட சிங்­க­ளத்­தில் தமி­ழர்­க­ளின் உரி­மைக் குறை­பா­டு­கள் பற்றி எத்­த­னையோ தடவை விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

புதிய அர­ச­மைப்­பும் சிறு­பான்மை
இனங்­க­ளது உரி­மை­க­ளும்

புதிய அர­ச­மைப்பு என்­பது உப்­புச்­சப்பு அற்ற உணவு என எதி­ர­ணி­யி­னர் விமர்சிக்கின்ற னர். இடைக்­கால வரை­பில் இருக்­கும் விட­யங்­கள் சிறு­பான்மை இனத்­துக்கு ஒரு விடி­வெள்ளி என்­பது எதி­ர­ணி­யி­ன­ருக்கு தெரி­யா­த­தல்ல.விடு­த­லைப் புலி­க­ளின் ஆலோ­ச­க­ரா­க­வி­ருந்த அன்­ரன் பால­சிங்­கம் கூட, சந்­தி­ரிகா அரச தலை­வ­ராக இருந்­த­போது உரு­வாக்­கிய பிராந்­திய ஒன்­றி­யம் எனும் கட்­ட­மைப்­பில் நல்ல நல்ல விட­யங்­கள், தீர்­வுத் திட்­டங்­கள் இருந்­துள்­ளன என்­ப­தைக் காலங்­க­டந்­து­தான் கூறி­யி­ருந்­தார்.

இந்­தத் திட்­டத்தை உரு­வாக்­கி­ய­தில் சம்­பந்­தன், கலா­நிதி நீலன் திருச்­செல்­வம் போன்­றோர் சிற்­பி­க­ளாக செயற்­பட்­டமை யாவ­ரு­ம­றிந்­த­தொரு விட­யம்.

இப்­பொ­ழுது சம்­பந்­த­னுக்கு அறளை பிடித்­து­விட்­ட­தெ­னக் கூறும் அணி­யி­னர் அன்­றைய உரு­வா­கத்­தி­லும் அறளை பிடித்த நிலையில்தானா உரு­வாக்­கி­னார் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் இந்­திய அர­சின் பாது­காப்பு ஆலோ­ச­கர் மேனன் தமது இலங்­கைப் பய­ணத்­தின்­போது தமிழ்த் தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­போது ‘‘வட­கி­ழக்கு இணைப்பை மேசை­யில் தற்­கா­லி­க­மாக வைத்­து­விட்டு மத்­திய அர­சி­டம் மாகாண அர­சுக்­கு­ரிய அதி­கா­ரங்­க­ளைப் பெற்று கொள்­ளுங்­கள் எனக் கூறி­யி­ருந்­தார்.

மேலும் புதிய அர­ச­மைப்­பின் இடை­வ­ரவு அறிக்­கை­யில், பிரிவு 153,154 ஆகி­ய­வற்­றில் இலங்­கை­யின் இரு­மா­கா­ணங்­கள் அங்கு வாழும் மக்­க­ளது தீர்ப்பின் அடிப்­ப­டை­யில் ஒன்­றி­ணை­வதை அர­சமைப்பு பாது­காக்­கும் என குறிப்­பி­டப்­பட்­டி­ ருப்­பது எதிர்ப்பு அர­சி­ய­லால் உரு­வாக்­கப்­பட்­டதா அல்­லது இணைந்த அர­சி­ய­லால் உரு­வாக்­கப்­பட்­டதா? என்­பதை பெப்­ர­வரி 10ஆம் திகதி தமிழ் மக்­கள் சிந்­திக்க வேண்­டும்.

அத்­தோடு மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மத்­திய அர­சால் மீளப் பெற­மு­டி­யாது என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் கூறி­யுள்­ளார். அப்­படி மீளப் பெறும் நிலை இருந்­தால் அதனை எத்­த­கைய விதத்தில் என்­ப­தனை எதி­ர­ணி­யி­னர் தமது அறிக்­கை­யில் எடுத்து காட்­டு­வது அவர்­க­ளது அர­சி­யல் கொள்­கை­க­ளுக்­குப் புது மெரு­கூட்­டு­வ­தா­கவே அமை­யும்.

புதிய அர­ச­மைப்பு, பிரச்­சி­னைக்­குப் பூரண
தீர்­வா­கு­மென எவ­ரும் நம்­ப­வில்லை

மேலும் புதிய அர­ச­மைப்பு நூறு­வீ­தம் நாட்­டின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் எனத் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்போ, ஜே.வி.பியோ கூற­வில்லை.

வடக்கு கிழக்கு மக்­க­ளால் மட்­டு­மன்றி சிங்­கள மக்­க­ளின் பெரும்­பான்மை வாக்­கு­க­ளா­லும் இணைத்தே புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென உறு­தி­நி­லை­யில் சம்பந்தன் இருக்­கி­றார் என ஜே.வி.பி உறுப்­பி­னர் பிமல் ரத்­நா­யக்கா நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றும்­போது குறிப்­பிட்­டி­ ருந்­தார்.

இன்று சிறு­பான்மை இன மக்­க­ளின் உரி­மை­கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டுக்கு ஜே.வி.பியினர் இறங்­கி­வ­ரும்­போது , வட­ப­கு­தி­யில் ஒரு கடும் போக்கு உரு­வா­கு­வது தான் வேடிக்­கை­யாக இருக்­கி­றது.

எமது உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் எதி­ரணி பரப்­பு­ரை­யின்­போது, கடந்த கால சம்­ப­வங்­க­ளுக்கு எல்­லாம் பன்­னாட்டை கொண்டு உதைக்­கப் போகி­றோம். ஐக்­கிய நாடு­கள் சபை இலங்­கைத் தமி­ழர் விட­யத்­தில் தலை­யி­ட­வுள்­ள­து என்று கூப்­பாடு போடு­வது சிறுப்­பிள்­ளைத்­த­ன­மான விட­யம்.

இதற்­குப் பொருத்­த­மான பழ­மொ­ழி­யுண்டு. ‘‘சிறு­பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’’ என்­பதே அது. விடு­த­லைப் புலி­கள் – அரசு ஒஸ்லோ பிர­க­ட­னத்­தில் ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள் அதா­வது, பிரி­ப­டாத ஒரு இலங்­கைக்­குள் சமஷ்டி அடிப்­ப­டை­யில் பிரச்­சி­னைக்கு தீர்வு பற்­றிய ஆராய்­தல் என்பது­தான் அடிப்­படை விட­யம். அதா­வது இலங்கை எனும் தீவி­னுள் இரு இனங்­க­ளும் பூரண உரி­மை­க­ளு­டன் வாழ்­தல் என்­று­தான் ஒரு பாமர மக­னுக்கு இந்த விட­ யத்தை விளங்க வைக்­க­லாம். அவ­னுக்கு சுய­நிர்­ண­யம், தன்­னாட்சி, கூட்­டாட்சி என்­பவை குறித்து விளங்க வைக்க முடி­யாது.

அர­சி­யல் சாணக்­கி­யம் அந்­தந்த
வேளை­க­ளில் அவ­சி­ய­மா­னதே

இந்­திய மத்­திய அர­சின் பாது­காப்பு அமைச்­சர் மேனன் ‘‘இலங்­கை­யின் வடக்கு– கிழக்கு மாகா­ணங்­கள் இணைப்பை மேசை­யில் வைத்­து­விட்டு, மாகா­ணங்­க­ளுக்­கு­ரிய அதி­கா­ரங்­களை மத்­திய அர­சி­ய­ட­மி­ருந்து பெறுங்­கள்’’ எனக் கூறியதற்கொப்ப, மோத­கமா கொழுக்­கட்­டையா சிறந்­த­தென்­பதை விட , மேற்­கூ­றிய இரண்­டின் உள்­ள­டக்­கம் வித்­தி­யா­ச­மா­னது என ஒரு பாம­ர­ம­க­னுக்கு எம்­மால் புரிய வைக்க முடி­யுமா? நிலைமை இவ்­வி­த­மி­ருக்க இலங்கை கட­லி­னால் சூழப்­பட்ட ஒரு தீவு என்­ப­து­தான் முடிந்த முடிவு. இதை எந்த ஒரு பாம­ர­னும் ஏற்­றுக் கொள்­வான்.

இந்­தத் தீவி­னுள் மாகாண ஆட்சி என்­றா­லும் சரி, மாநில சுயாட்சி என்­றா­லும் சரி, பிராந்­திய ஒன்­றி­யம் என்­றா­லும் சரி, எப்­ப­டிப்­பட்ட சொற்­ப­தம் உரு­வகங்­க­ளாக அமை­யப்­பெற்­றா­லும், அத்­த­கைய உரு­வகங்­க­ளுக்­குள்ள வரை­யறை என்­ப­து­தான் முக்­கி­யமே தவிர, உரு­வ­க­மும் சொற்­ப­த­மும் முக்­கி­ய­மல்ல. அர­சி­யல் தேர்­தல் லாபத்­துக்­காக எத்­த­கைய ஆடை­களை அணிந்தும் கூத்­தா­ட­லாம். ஆனால் இனத்­தின் உரிமை என்ன என்­ப­தில் எல்­லோ­ரும் ஒன்­று­பட்­டால்தான் உண்டு வாழ்வு என்­பது தான் ஒரு­மித்த கருத்து ஆகும்.

மேலும் மகாத்மா காந்தி இரண்­டாம் உல­கப் போரில் பிரிட்­டிஷ் படை­களுடன் இணைந்து மருத்­து­வப்­படை ஒன்றை உரு­வாக்­கி­ய­போது காந்­தி­யின் தொண்­டர்­க­ளுக்கு அது அதிர்ச்­சி­யை­யும் ஆச்­ச­ரி­யத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­ன. அன்­றைய கால­கட்­டத்­தின் தேவை யாக, இந்­திய மக்­க­ளுக்கு அது தவிர்க்­கப்­பட முடி­யா­தி­ருந்­ததை பின்­பு­தான் தொண்­டர்­க­ளும் மக்­க­ளும் உணர்ந்­தார்­கள்.

இத்­த­கை­ய­தொரு விட­யத்­தையே 2002ஆம் ஆண்­டில் விடு­த­லைப் புலி­கள் – அரசு சமா­தான உடன்­ப­டிக்­கை­யின் பின்பு பன்­னாட்­டுப் பேச்­சுக்கு செல்­வ­தற்கு ஆயத்­தப்­ப­டுத்­தி­ய­போது புலி­க­ளது அர­சி­யல் ஆலோ­ச­கர் அன் ரன் பால­சிங்­கம் கூறி­ய­போது, ‘‘பிரி­வினை பேசிக் கொண்டு பேச்­சுக்­குச் செல்­ல­மு­டி­யாது. எங்­கள் கொள்­கை­க­ளி­லும் எது­வித மாற்­ற­மும் இல்லை. இன்­றைய காலத்­தில் நடப்­பு­முறை இது­தான்’’ எனக் கூறியிருந்தார்.

இலங்­கை­யில் போர் முடி­வுக்கு வரும்­போது, இலட்­சக்­க­ணக்­கான உயிர்­கள் காவு கொள்­ளப்­ப­டும் என்­பது உலக நாடு­க­ளுக்கு நன்கு புரிந்­தி­ருந்­தும், போரை முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தில் உல­கம் ஒன்­றி­ணைந்­தி­ருந்­தது மட்­டு­மல்­லாது, உறு­தி­யா­க­வும் இருந்­தது. இன்று இலங்­கை­யில் சிறு­பான்மை இனங்­க­ளது உரி­மை­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்­ப­தி­லும் உல­கம் உறு­தி­யா­க­வும் தார்மீக அடிப்­ப­டை­யி­லும் இலங்கை அர­சு­டன் தொடர்­பில் இருக்­கி­றது. ஆனால் அர­சுக்கு அவர்­களால் தீர்­வொன்­றைத் திணிக்க முடி­யாது.

ஏனெ­னில் இலங்கை இறை­மை­யுள்ள தொரு நாடு. 1956 ஆம் ஆண்­டில் பண்டா– செல்வா ஒப்­பந்­தத்­தில் இரு பிராந்­தி­யங்­கள் தேவை­யேற்­ப­டும் பட்­சத்­தில் ஒன்­றாக இணை­தல் என்ற அம்­சம் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்ததால் தென்­னி­லங்கை கடும் போக்­கா­ளர்­க­ளால் அது கிழித்­தெ­றி­யப்­பட்­டது. 1965 டட்லி செல்வா ஒப்­பந்­தம். அது­வும் தென்­னி­லங்கை கடும் போக்­கா­ளர்­க­ளால் கிழித்­தெ­றி­யப்­பட்­டது. 1995ஆம் ஆண்­டில் சந்­தி­ரி­கா­வுக்­கும் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பி­ன­ருக்­கு­மி­டையே ஏற்­பட்ட புரிந்து ணர்­வின் அடிப்­ப­டை­யில் கொண்டு வரப்­பட்ட தீர்­வும் தென்­ப­குதி கடும் போக்­கா­ளர்­க­ளால் கிழித்­தெ­றி­ யப்­பட்­டது.

ஈழத் தமிழ் மக்­க­ளது ஒற்­றுமை குலை­ய­வில்லை என நிரூ­பிப்­பது
இன்­றைய தேவை

இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­த­தன் பின்­னர் பல தேர்­தல்­க­ளும் ஒப்­பந்­தங்­க­ளும் இடம்­பெற்­றி­ருந்­தா­லும், தற்­போது ஆட்­சி­யி­லி­ருக்­கும் அர­சும், இலங்­கை­யின் பெரும்­பான்மை சமூ­கத்­தைச் சேர்ந்த முக்­கிய கட்­சி­கள் இரண்­டைச் சேர்த்து அமைக்­கப்­பட்ட அர­சா­கும். ஆளும் கட்­சி­யும்­எ­திர்க்­கட்­சி­யும் சேர்ந்து ஆக்­கப்­பட்ட சிறு­பான்மை மக்­க­ளுக்­கான வரப்­பி­ர­சா­தம் கொண்ட தீர்­வுப் பொதி­யைத் தற்­போது தென்­னி­லங்கை கடும் போக்­கா­ளர்­கள் தமது அர­சி­யல் இலா­பத்­துக்­காக, நாடு புதிய அர­ச­மைப்­பி­னால் துண்­டா­டப்­ப­டப் போகி­றது எனக் கூக்­கு­ர­ லிட்­டுக் குழப்ப முனை­கின்­ற­னர்.

அதற்கு ஆத­ர­வாக வட­ப­கு­தி­யி­லும் ஒரு கூக்­கு­ரல் எழும்புகின்றது. இது இலங்கை வர­லாற்­றில் உண்­மை­யில் ஒரு புது­யு­கம்தான். கார­ணம், தமி­ழர்­க­ளுக்கு ஏதா­வது வழங்­கு­வோம் என சிங்­கள மக்­கள் முன்­வ­ரு­கின்­ற ­போது அது பிழை­யென்­றும் ,ஒன்­று­மில்­லை­யென்­றும் கூறி அதை எதிர்ப்­பது தமி­ழி­னத்­தின் ஒரு சாபக்­கே­டாக அமை­யா­மல் இருக்க வேண்­டு­மா­னால், நாங்­கள் பெப்­ர­வரி 10ஆம் திக­தி­யன்று தமி­ழர்­கள் ஒன்­று­பட்­ட­தொரு நிலை­யில் இருக்­கி­றார்­கள் என்­பதை தென்­னி­லங்கை மக்­க­ளுக்­கும், பன்­னாட்­டுக்­கும் வெளிப்­ப­டுத்த கிடைத்த சந்­தர்ப்­ப­மாக இந்த உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அமைய எங்­கள் கரங்­கள் உரிய சின்­னத் துக்­கு­ரிய கூட்­டி­னுள்ளே புள்­ள­டி ­யி­டச் சங்­கற்­பம் பூணு­வோம்
1948இல் பத்து லட்­சம் இந்­திய தமிழ் சகோ­தர்­கள் இந்த நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட எம்­மி­னத்­தி­லுள்ள ஒரு சிலர் உடந்­தை­யாக செயற்­பட்­டது போன்று செயற்­ப­டாது, தமி­ழி­னத்­தின் ஒற்­று­மை­யைக் காப்­பாற்­று­வது ஒவ்­வொரு தமி­ழ­னின் கட­மை­யா­கும்.

பெப்­ர­வரி 10ஆம் திகதி தமி­ழி­னம் ஆப்பி ழுத்த குரங்­காக மாறா­மல் இருக்­கட்­டும். தமி­ழி­னம் தமது உறு­தி­யை­யும் ஒற்­று­மை­யை­யும் பன்­னாட்­டக்கு காட்­டு­வ­தற்கு எமக்கு தந்தை செல்­வா­வின் கீழ் வளர்ந்த பழுத்த அர­சி­யல் தலை­வர்­கள் தமி­ழி­னத்தை ஏற்­றிச் செல்­லும் விமா­னங்­க­ளின் விமா­னி­க­ளாக செயற்­ப­டும்­போது, விமா­னத்­தி­னுள் இருக்­கும் பய­ணி­க­ளா­கிய நாம் விமா­னம் இறங்­கும்­வரை எமது இடுப்­புப்­பட்­டியை இறுக்­கிக் கொண்டு இருக்க வேண்­டி­ய­து­தான் எங்­க­ளின் பய­ணத்­தின் வெற்­றி­யாக அமை­யும். அதா­வது பெப்­ர­வரி 10ஆம் திகதி எல்­லோ­ரும் எமது ஒரு­மித்த ஆத­ரவை வெளிக்­காட்ட வேண்­டும்.

நாம் இப்­போது போரின் பின் தென்­ற­லாக அர­சி­யல் சூழ்­நிலை எம்மை அழைக்­கின்­ற­போது, எமக்கு எதி­ராக எதிர்ப்பு அர­சி­யல் தொடங்­கி­யுள்­ளது. இதனை நிரா­க­ரித்து, தந்தை செல்வா காட்­டிய வழி­யில் தொடர்ந்­தும் பய­ணிப்­போம். ஒன்­று­சேர்ந்து ஒற்­று­மையை வெளிக்­காட்­டுங்­கள். விமா­னம் சரி­யான பாதை­யில்­தான் செல்­கின்­றது.

http://newuthayan.com/story/67365.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.