Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான T20 தொடரில் 7 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ்

Featured Replies

இலங்கைக்கு எதிரான T20 தொடரில் 7 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ்

542906_1478212758918951_1302980771537343
 

இலங்கைக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கு பங்களாதேஷ் புதிய குழாம் ஒன்றை அறிவித்துள்ளது. தென்னாபிரிக்க தொடரில் காயம் காரணமாக இடம்பெறாத அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை (10) வெளியிடப்பட்ட 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாமில் ஐந்து புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் காயம் காரணமாக விளையாடாத ஷகீப் அல் ஹஸன் இந்த குழாமுக்கு தலைமை வகிக்கிறார்.

தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற ஏழு வீரர்கள் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த T20 தொடரில் இணைக்கப்படாத நிலையில் அபூ ஜயெத், ஆரிபுல் ஹக், மஹதி ஹஸன், சாகிர் ஹசன் மற்றும் ஹபிப் ஹொஸைன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் இம்ருல் கைஸ், லிடோன் தாஸ், மஹிதி ஹசன், ஷபியுல் இஸ்லாம், மோமினுல் ஹக், நாசிர் ஹொஸைன் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகிய வீரர்களே அணியில் இடம்பெறாதவர்கள் ஆவர்.

குறுகிய கால போட்டிகளுக்கு புதிய கட்டமைப்பு ஒன்றை எதிர்பார்த்தே தாம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்ததாக பங்களாதேஷ் அணியின் தலைமை தேர்வாளர் மின்ஹாஜுல் அபதின் Cricbuzz இணையதளத்திற்கு குறிப்பிட்டுள்ளார். “T20 தொடரின்போது எமது சில திறமைமிக்க வீரர்ககளின் திறன்களை பார்க்க எதிர்பார்க்கிறோம்” என்று மின்ஹாஜுல் குறிப்பிட்டார். “உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த திறமையை வெளிக்காட்டிய இந்த இளம் வீரர்களின் சேவையை பெற்று T20 ஆட்டத்தில் நாங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சித்து பார்க்கவுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

 

பந்துவீச்சில் நேர்த்தியாக தாக்கக் கூடியவரும் பின்வரிசையில் பெறுமதியான துடுப்பாட்ட வீரராகவும் உள்ள ஆரிபுல் ஹக் போட்டியில் செலுத்தும் ஆதிக்கத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக மின்ஹாஜுல் குறிப்பிட்டார். 25 வயதான ஆரிபுல் 2017 பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியில் குல்னா டைடன்ஸ் அணிக்காக சிறப்பாக செயற்பட்டார். அவர் தனது அணிக்காக மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களையும் பெற்றார்.

“ஏழாவது வரிசையில் வந்து வேகமாக துடுப்பெடுத்தாட முடியுமான ஒருவரை தீவிரமாக தேடிவரும் நிலையில் அவர் எமது எதிர்கால எதிர்பார்ப்பாக உள்ளார்” என்றார் மின்ஹாஜுல். “ஏனைய ஒவ்வொரு அணியிலும் இந்த இடத்தில் இருக்கும் வீரர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் ஆட்டத்தை திசை திருப்பக் கூடிய திறமை இருக்கிறது. நாம் இதுவரை பார்த்ததில் அவரிடம் (ஆரிபுல்) அவ்வாறான திறமை இருப்பதாக உணர்கிறோம்” என்றும் அவர் கூறினார்.  

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளதோடு இரண்டாவது போட்டி சில்ஹெட்டில் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.    

பங்களாதேஷ் குழாம்: சகீப் அல் ஹசன் (தலைவர்), தமீம் இக்பால், சௌம்யா சாகர், முஷ்பீகுர் ரஹீம், மஹ்மூதுல்லாஹ், சப்பீர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன், மொஹமது சைபுத்தீன், அபூ ஹைதர், அபூ ஜயெத், ஆரிபுல் ஹக், மஹெதி ஹசன், சாகிர் ஹசன், ஹபீப் ஹொஸைன்.   

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

பங்களாதேஷுடனான டி-20 தொடர் சவாலாக அமையும் – திசர பெரேரா

thisara-696x462.jpg
 

பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த முத்தரப்பு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றிய இலங்கை அணிக்கு நாளை (15) ஆரம்பமாகவுள்ள T-20 தொடர் சவாலாக அமையும் என இலங்கை T-20 அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை ஆட்டக்காரருமான திசர பெரேரா தெரிவித்தார்

 

எனினும், தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி, T-20 தொடரிலும் சிறப்பாக விளையாடி அந்த தொடரையும் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நேற்று (13) நடைபெற்ற பயிற்சிகளின் பிறகு பங்களாதேஷின் டாக்கா ட்ரிபியூன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி – தோல்வி பற்றி முன்னரே எதிர்வு கூற முடியாது. ஆனால் அன்றைய நாளில் குறைந்த அளவு தவறுகளை விடுகின்ற அணிதான் வெற்றியைப் பெற்றுக்கொள்ளும். பங்களாதேஷ் ஏற்கனவே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளதால் T-20 தொடரை கைப்பற்றும் நோக்கில் அனைத்துவித யுக்திகளையும் கையாளும். எனினும், நாளை நடைபெறவுள்ள முதல் T-20 போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்யும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் T-20 தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய திசர பெரேரா, அவ்வணிக்காக சிறப்பாக விளையாடி விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்ததுடன், அவ்வணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

”நான் பங்களாதேஷில் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன். அந்த அனுபவம் நிச்சயம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அணிக்கு மிகவும் பெறுமதிமிக்கதாக அமையும். அதிலும் கடந்த முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் நான் சிறப்பாக விளையாடியிருந்தேன். எனவே நான் எப்பொழுதும் என்னுடைய திறமையில் மாத்திரம் நம்பிக்கை வைத்துள்ளேன். இதற்கு முன் ஏற்பட்ட தவறுகளையோ, தோல்விகளையோ நான் சிந்திக்கவே மாட்டேன். அதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம் எனவும் நான் நம்புகிறேன்” என்றார்.

இந்நிலையில் உபாதைக்கு உள்ளாகியுள்ள பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் தொடர்பில் திசர கருத்து வெளியிடுகையில், “சகிப் மிகவும் திறமையான வீரர் என்பதை அனைவரும் அறிவர். அவரால் நிச்சயம் போட்டியின் போக்கையே மாற்றமுடியும். எனவே சகிப் அல் ஹசன் விளையாடாமை பங்களாதேஷ் அணிக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும் என்பதுடன், இலங்கை அணிக்கு சாதகத்தைப் பெற்றுக்கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.

 

பங்களாதேஷ் அணியுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இலங்கை அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பு வழங்கி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த திசர பெரேரா, 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததுடன், போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாகவும் தெரிவாகியிருந்தார்.

அண்மைக்காலமாக இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் சகல துறையிலும் பிரகாசித்து வருகின்ற அனுபவமிக்க வீரர்களில் ஒருவராக விளங்குகின்ற திசர பெரேரா, கடந்த வருடம் பாகிஸ்தான் அணியுடனான டி-20 தொடரில் இலங்கை அணியை வழிநடத்தியிருந்தார். இதனையடுத்து கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இந்திய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் போது இலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டாலும், குறித்த தொடர்களை இலங்கை அணி இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, தலைமைப் பதவியை இழந்ததன் பிறகு திசர பெரேரா பங்கேற்கவுள்ள முதலாவது T-20 போட்டியாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கையின் வெற்றியோட்டம் பங்களாதேஷுடனான T-20 போட்டிகளிலும் தொடருமா?

Sri Lanka v Bangladesh
 

தாகத்தில் இருந்த ஒருவருக்கு நீர் ஊற்று ஒன்றினைக் கண்டால் எந்தளவுக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ, அதேபோன்று தொடர் தோல்விகள், வீரர்களின் உபாதைகள் என்பவற்றை அடிக்கடி கண்டு பழக்கப்பட்டிருந்த இலங்கை இரசிகர்களுக்கு இலங்கை  அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மூலம் பெற்றுக்கொண்டுள்ள ஒரு நாள், டெஸ்ட் தொடர்களின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியினையும், உற்சாகத்தினையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

 

இப்படியாக அதிரடியான முறையில் இந்த ஆண்டினை ஆரம்பித்திருக்கும் இலங்கை அணிக்கு, அடுத்த சவாலாக பங்களாதேஷுடன் வியாழக்கிழமை (15) டாக்காவில் ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடர் அமையவுள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் T-20 போட்டிகள் வரலாறு

இரண்டு அணிகளுக்குமிடையிலான T-20 போட்டிகளின் கடந்த கால பதிவுகள் குறைவாகவே காணப்படினும் கடந்த கால போட்டி முடிவுகள் இலங்கை அணியின் ஆதிக்கத்தினையே காட்டி நிற்கின்றது.

 

2007 ஆம் ஆண்டிற்கான T-20 உலக கிண்ணத்தின் மூலம் இரு அணிகளும் முதல் தடவையாக T-20 போட்டியொன்றில் சந்தித்திருந்தன. இப்போட்டியில் மஹேல ஜயவர்தன தலைமையிலான இலங்கை அணி பங்களாதேஷை 64 ஓட்டங்களால் தோற்கடித்து இரண்டு அணிகளுக்குமிடையிலான T-20 போட்டியில் முதல் வெற்றியினையும் பதிவு செய்திருந்தது.

இதனையடுத்து இதுவரை இரண்டு அணிகளும் மொத்தமாக 7  T-20 போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. அவற்றில் ஐந்தில் இலங்கை அணி வெற்றி பெற்றிருப்பதுடன், பங்களாதேஷ் அணியினால் இரண்டு வெற்றிகளினை மாத்திரமே பெற முடிந்திருக்கின்றது.

பங்களாதேஷ் அணி T-20 போட்டிகளில் இலங்கைக்கு எதிரான முதல் வெற்றியினை 2016ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்றிருந்த போட்டி மூலம் பெற்றிருந்தது.

இரண்டு அணிகளும் இறுதியாக இருதரப்பு T-20  தொடரொன்றில் கடந்த ஆண்டின் மார்ச் மாதம் விளையாடியிருந்தன. இலங்கையில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளைக் கொண்டதாக அமைந்திருந்த அத்தொடர் 1-1 என சமநிலை அடைந்திருந்தது.  

இலங்கை அணி

மூன்று தடவைகள்  T-20 உலக கிண்ணத் தொடரின்  (2009,2012,2014) இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, ஒரு தடவை (2014)  உலகக் கிண்ண சம்பியனாக நாமம் சூடி ஒரு காலத்தில் T-20 ஜாம்பவனான திகழ்ந்த  இலங்கை அணியினர், தாம் இறுதியாக விளையாடிய எட்டு T-20 போட்டிகளிலும் தோல்வியினையே சந்தித்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு (2017) இலங்கை அணிக்கு மோசமாக மாறியிருந்தமைக்கு, மிகக்குறைவான ஓவர்கள் கொண்ட இவ்வகைப் போட்டிகளின் தோல்விகளும் காரணமாக அமைந்திருந்ததை மறுக்க முடியாது. இப்படியான தோல்விகளினால் T-20 தரவரிசையில் 88 புள்ளிகளுடன்  தற்போது எட்டாம் இடத்தில் இலங்கை காணப்படுகின்றது.

 

இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவிருக்கும் இத்தொடரை இழக்குமெனின், T-20 தரவரிசையில் ஐ.சி.சி இன் அங்கத்துவ நாடாக இருந்து அண்மையில் முழு உறுப்பினராக மாறியிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு பின்னால் செல்ல வேண்டிய நிலை ஒன்று உருவாகும். எனினும், புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் வருகைக்கு பின்னர் படிப்படியாக வழமையான ஆட்டத்திற்கு திரும்பி வரும் இலங்கை அணி இந்த தொடரிலும் நல்ல முடிவுகளையே காட்டி T-20 போட்டிகளிலும் தமது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tharanga-8-300x200.jpgஅஞ்செலோ மெதிவ்ஸின் காயம் அவருக்கு தொடர்ந்தும் இன்னல்களினை தரும் காரணத்தினால் இலங்கை அணியினை இந்த T-20 தொடரிலும் ஏனைய ஒரு நாள், டெஸ்ட் தொடர்கள் போன்று தினேஷ் சந்திமால் வழிநடாத்துகின்றார். மெதிவ்ஸோடு பங்களாதேஷ் அணியுடனான தொடருக்கு பெயரிடப்பட்டிருந்த குசல் பெரேராவும் தற்போது காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருக்கின்றார். பெரேரா தற்போது இருக்கின்ற இலங்கை வீரர்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக T-20 போட்டிகளில் சிறந்த சராசரியுடன் (46) அதிக ஓட்டங்கள் (230) குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவரின் இழப்பு இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாகும்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெரேரா இல்லாத காரணத்தினால் இலங்கை அணி இந்த T-20 தொடரில் உபுல் தரங்கவுடன், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல அல்லது தனுஷ்க குணத்திலக்க ஆகிய இருவரில் ஒருவரினை களமிறக்கலாம். இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க பங்களாதேஷில் கடந்த ஆண்டில் இடம்பெற்ற பி.பி.எல் (BPL) கிரிக்கெட் தொடரில் சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். த்தொடரில் ஆறு போட்டிகளில் பங்கேற்றிருந்த உபுல் தரங்க 41.60 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு மொத்தமாக 207 ஓட்டங்களினை குவித்திருந்தார். தரங்கவின் இந்த அனுபவம் பங்களாதேஷ் ஆடுகளங்களில் அவருக்கு சிறப்பாக செயற்பட உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Thisara-1-200x300.jpgஉபுல் தரங்க தவிர, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை அணித் தலைவர்  தினேஷ் சந்திமால், அதிரடி வீரர் அசேல குணரத்ன, தசுன் சானக்க, (குசல் பெரேராவுக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்ட) குசல் மெண்டிஸ் ஆகியோர் வலுப்படுத்த எதிர்பார்க்க முடியும். இதில், அசேல குணரத்ன அவுஸ்திரேலிய அணியுடன் கடந்த ஆண்டில் இடம்பெற்ற T-20 தொடரினை இலங்கை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த வீரர் என்பதோடு, தசுன் சானக்க இறுதியாக இலங்கை அணி விளையாடிய இந்திய, பாகிஸ்தான் அணிகளுடனான T-20 தொடர்களில் துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஒருவர். 

 

இவர்கள் தவிர இலங்கை அணி இரண்டு சகலதுறை வீரர்களின் பங்களிப்பினையும் இத்தொடரில் எதிர்பார்க்கின்றது. அதில் ஒருவரான திசர பெரேரா, பங்களாதேஷ் அணிக்கெதிராக 55.50 என்கிற துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருப்பதோடு இதுவரை அவ்வணியுடன் மொத்தமாக 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றார். மற்றைய சகலதுறை வீரராக இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் அசத்தி வந்த ஜீவன் மெண்டிஸ் அமைகின்றார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களின் பின்னர் ஜீவன் T-20 போட்டிகளில் தேசிய அணிக்காக விளையாட வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

இத்தொடருக்கான இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறையினை எடுத்து நோக்கும் போது அனுபவமிக்க லசித் மாலிங்க அணியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இலங்கை அணி சார்பாக T-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்கள் (90) கைப்பற்றிய மாலிங்கவின் பொறுப்பினை இத்தொடரில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஷெஹான் மதுசங்க, அசித்த பெர்னாந்து ஆகியோர் எடுப்பர். அறிமுக வீரர்களான இவர்களுக்கு T-20 போட்டிகளின் சிறப்பு நிபுணர்களில் ஒருவரான இசுரு உதான கைகொடுக்கவுள்ளார்.

இத்தொடருக்கான இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர்களாக அகில தனன்ஜய, ஜெப்ரி வென்டர்செய் மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் செயற்படவுள்ளனர். இதில் உள்ளூர் T-20 போட்டிகளில் 13.58 என்கிற மிகச்சிறந்த பந்துவீச்சு சராசரியினைக் கொண்டிருக்கும் அபொன்சோவுக்கும் இது கன்னி T-20 தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணி

“தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், திசர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தசுன் சானக்க, இசுரு உதான, ஷெஹான் மதுசங்க, ஜெப்ரி வென்டர்செய், அகில தனன்ஜய, அமில அபொன்சோ, ஜீவன் மெண்டிஸ், அசித்த பெர்னாந்து”

பங்களாதேஷ் அணி

கடந்த இரண்டு ஆண்டுகளிலும் 23 T-20 போட்டிகளில் விளையாடியிருக்கும் பங்களாதேஷ் அணி அதில் 7 வெற்றிகளை மாத்திரமே சுவைத்திருக்கின்றது. இது பங்களாதேஷ் அண்மைய காலங்களில் T-20 போட்டிகளில் சிறந்த பதிவினை காட்டியிருக்கவில்லை என்பதை காட்டுகின்றது.

Tamim-1-300x200.jpgஎனினும், இலங்கை அணியினர் அவர்களை எளிதானவர்கள் என எடை போட்டுவிடக்கூடாது. ஏனெனில், கத்துக்குட்டி என்ற அந்தஸ்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் பங்களாதேஷ் அணியினர் உள்ளூரில் நடாத்தப்படும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் மூலம் T-20 போட்டிகளில்  அதிக அனுபவத்தினை பெற்றிருக்கின்றனர்.

பங்களாதேஷ் அணிக்கும் இத்தொடரில் நட்சத்திர சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் இல்லாதது பேரிழப்பாகும். கடந்த மாதம் இலங்கை அணியுடன் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் போட்டியில் காயமுற்ற சகீப், இலங்கையுடனான இந்த T-20 தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த போதிலும், காயம் பூரணமாக குணமாகாத நிலையில் அணியில் இருந்து விலகியிருக்கின்றார். சகீப்புக்குப் பதிலாக இதுவரையில் T-20 போட்டிகள் எதிலும் விளையாடாத இடதுகை சுழல் வீரர் நஷ்முல் இஸ்லாமினை பங்களாதேஷ் உள்வாங்கியிருக்கின்றது. இதோடு சகீபின் அணித்தலைவர் பதவியினை மஹ்மதுல்லா எடுத்துக் கொள்வார் எனவும் நம்பப்படுகிறது.  

Mustafizur-200x300.jpgஇலங்கை அணியுடனான இந்த தொடருக்காக பங்களாதேஷ் அணி, தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற அவர்களது இறுதி T-20 சுற்றுப்பயணத்தில் விளையாடியிருந்த குழாத்தில் இருந்து தற்போது எட்டு மாற்றங்களை செய்திருக்கின்றது. பி.பி.எல் தொடரில் சிறப்பாக செயற்பட்ட ஆறு புதுமுக வீரர்களோடு  (அபு ஜாயேத், ஆரிபுல் ஹக், மஹெதி ஹசன், சாகிர் ஹுசைன், அடிப் ஹொசைன், நஸ்முல் இஸ்லாம்) சிரேஷ்ட வீரர்களான தமிம் இக்பால், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரும் இலங்கையுடனான மோதலில் பங்கேற்கின்றனர்.

பங்களாதேஷ் அறிமுகப்படுத்தும் வீரர்களுக்குள் ஆரிபுல் ஹக் பி.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மற்றுமொரு அறிமுக வீரரான வேகப்பந்து வீச்சாளர் அபு ஜாயேத் 2017ஆம் ஆண்டிற்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றியவர்களில் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்தார்.  

Sabbir-Rahman-300x200.jpgஇவர்கள் தவிர பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் அனுபவமிக்க தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, சப்பீர் ரஹ்மான் ஆகியோரில் தங்கியிருக்கின்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் T-20 போட்டிகளில் 1,250 இற்கு மேலான ஓட்டங்கள் குவித்த அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். மறுமுனையில் சப்பீர் ரஹ்மான்  இலங்கை அணிக்கெதிராக அதிக ஓட்டங்கள் (141) பெற்ற வீரராக காணப்படுகின்றார்.

பெரும்பாலும் அறிமுக வீரர்களினையே கொண்டிருக்கும் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுக்கு முஸ்தபிசுர் ரஹ்மான் இருப்பது பெரும் பலமாகும். பல்வேறு நாடுகளின் உள்ளூர் T-20 தொடர்களில் விளையாடிய அனுபவத்தோடு, பங்களாதேஷ் அணிக்காக இதுவரையில் 17 T-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் 27 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு ருபெல் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இலங்கை அணியின் விக்கெட்டுக்களை சாய்க்க உதவுவர்.

பங்களாதேஷ் அணி இத்தொடரில் நிச்சயமாக புதுமுகங்களான மெஹெதி ஹசன் அல்லது நஸ்முல் இஸ்லாம் ஆகியவர்களை சுழல் வீரர்களாக அறிமுகம் செய்யும்.

பங்களாதேஷ் அணி

“மஹ்மதுல்லா (அணித் தலைவர்), தமிம் இக்பால், செளம்யா சர்க்கார், முஷ்பிகுர் ரஹீம், சப்பீர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின், அபு ஹைதர், அபு ஜாயேத், அரிபுல் ஹக், மஹெதி ஹசன்”  

T-20 தொடர் அட்டவணை

முதல் T-20 போட்டி – டாக்கா – இலங்கை நேரப்படி மாலை 4.30 மணி
இரண்டாவது T-20 போட்டி – சில்லெட் – இலங்கை நேரப்படி மாலை 4.30 மணி

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

T-20 இன்று!

 

 

டாக்காவில் இன்று நடைபெறவுள்ள பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் இ-20 போட்டியில், இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சிலர் விளையாட மாட்டார்கள் எனத் தெரியவருகிறது.

6_SL_Ban.JPG

இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன, பங்களாதேஷின் முன்னாள் அணித் தலைவர் முஷ்பிக்குர் ரஹீம் மற்றும் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் ஆகியோர் காயம் காரணம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடப் போவதில்லை என்று தெரியவந்துள்ளது.

தோற்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அசேல இன்று போட்டியில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே காயம் காரணமாக குசல் பெரேரா போட்டியை விட்டு விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக குசல் மெண்டிஸ் சேர்க்கப்பட்டிருந்தார்.

மேலும் அஞ்சலோ மெத்யூஸ் காயம் காரணமாக இன்றைய போட்டியைத் தவறவிடுவார் என்பதால், அவருக்குப் பதிலாக தினேஷ் சந்திமல் இன்றைய போட்டிக்குத் தலைவராகப் பங்கேற்கவுள்ளார்.

இதுபோலவே, பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், மஹ்மதுல்லா அவ்வணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

அவ்வணியைப் பொறுத்தவரை இன்று மொத்தமாக ஐந்து புதுமுக வீரர்கள் களம் காணவிருக்கிறார்கள்.

http://www.virakesari.lk/article/30636

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் முதலில் துடுப்பாட்டம்

 

 

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

ban.jpg

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்நிலையில் பங்களாதேஷின் டாக்கவில் இடம்பெறும் முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

http://www.virakesari.lk/article/30648

  • தொடங்கியவர்

 

25.png&h=42&w=42

193/5
 

 

8.png&h=42&w=42

28/0 * (2.1/20 ov, target 194)
 
  • தொடங்கியவர்
  •  
Sri Lanka won by 6 wickets (with 20 balls remaining)
 
 
  • தொடங்கியவர்

சாதனையுடன் T-20 போட்டிகளின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

Kusal-2-696x464.jpg Image Courtesy - Associated Press
 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நிறைவடைந்திருக்கும், T-20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை இலங்கை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. 

  •  
 

டாக்காவில் இன்று (15) ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹ்மதுல்லா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இப்போட்டிக்காக பங்களாதேஷ் அணி நான்கு அறிமுக வீரர்களை களமிறக்கியிருந்ததோடு (சாகிர் ஹசன், அபிப் ஹொசைன், அரிபுல் ஹக், நஸ்முல் இஸ்லாம்) மறுமுனையில் இலங்கை அணியும் ஷெஹான் மதுஷங்கவுக்கு T-20 போட்டியொன்றில் முதல் தடவையாக விளையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இத்தோடு நான்கு வருடங்களின் பின்னர் T-20 போட்டிகளுக்காக சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிசும் இலங்கை அணிக்கு திரும்பியிருந்தார்.

 

போட்டியின் முதல் துடுப்பாட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு செளம்யா சர்க்கர் அசத்தல் ஆரம்பம் ஒன்றை வழங்கினார். 49 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தனுஷ்க குணத்திலக்கவின் ஓவரில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்த பங்களாதேஷ் அணிக்கு, செளம்யா சர்க்கர் அவரது கன்னி T-20 அரைச் சதம் மூலம் வலுவளித்தார். இதனால், 100 ஓட்டங்களை அவ்வணி போட்டியின் 11 ஆவது ஓவரிலேயே எட்டியிருந்தது.

பின்னர், செளம்யா சர்க்கரை ஜீவன் மெண்டிஸ் LBW முறையில் ஓய்வறை அனுப்பி இலங்கை அணிக்கு இருந்த அச்சுறுத்தல் ஒன்றை இல்லாமல் செய்திருந்தார். சர்க்கர் ஆட்டமிழக்கும் போது 32 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதனையடுத்து, மைதான சொந்தக்காரர்களுக்கு அணித் தலைவர் மஹ்மதுல்லா, விக்கெட் காப்பாளர் முஸ்பிகுர் ரஹீம் ஆகியோர் துரிதகதியிலான துடுப்பாட்டத்தின் மூலம் பங்களிப்பு வழங்க 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேவேளை மஹ்மதுல்லா 43 ஓட்டங்களுடன் அணிக்கு பெறுமதி தந்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக ஜீவன் மெண்டிஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், தனுஷ்க குணத்திலக்க, இசுரு உதான, திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து, 194 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவரான தனுஷ்க குணத்திலக்கவின் அதிவிரைவான பவுண்டரிகள் பெரிய இலக்கு ஒன்றை தொடுவதற்கான நல்ல அடித்தளம் ஒன்றை அமைத்து தந்தது. எனினும், துரதிஷ்டவசமாக தனுஷ்க குணத்திலக்கவின் இன்னிங்ஸ் 30 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டிருந்தது.

 

குணத்திலக்கவின் பங்களிப்பைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் விஸ்ரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தார். அதிரடியாக ஆடி வெறும் 25 பந்துகளில் கன்னி T-20 அரைச் சதத்தினை பூர்த்தி செய்த குசல் மெண்டிசினால் இலங்கை அணி விரைவாக இலக்கை நோக்கி முன்னேறியிருந்தது. எனினும், மெண்டிசின் அதிரடி பங்களாதேஷ் அறிமுக வீரர் அபிப் ஹொசைனின் சுழலில் முடிந்தது. குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 27 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மெண்டிசின் விக்கெட்டை அடுத்து குறுகிய நேர இடைவெளிக்குள் நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க ஆகியோரின் விக்கெட்டுக்களை இலங்கை அணி பறிகொடுத்திருந்தது. இதனால், ஒரு தடுமாற்றம் உணரப்பட்ட போதிலும் மத்தியவரிசை வீரர்களாக வந்த தசுன் சானக்க, திசர பெரேரா அழுத்தங்கள் எதனையும் உணராதவர்கள் போன்று பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்திருந்தனர்.  

இதனால், சவால் கூடிய வெற்றி இலக்கை 16.4 ஓவர்களில் 194 ஓட்டங்களுடன் வெறும் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலங்கை அடைந்தது.

இலங்கை அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற தசுன் சானக்க 24 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களையும், திசர பெரேரா 18 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு உதவியிருந்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் சுழல் வீரரான நஸ்முல் இஸ்லாம் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இந்த வெற்றியின மூலம் இலங்கை அணி, இறுதியாக தாம் விளையாடிய எட்டு டி20 போட்டிகளிலும் பெற்ற தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கின்றது. இத்தோடு, இப்போட்டியில் எட்டப்பட்ட 194 ஓட்டங்கள் இலங்கை அணி T-20 போட்டியொன்றில் தாண்டிய அதிகூடிய வெற்றி இலக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதை குசல் மெண்டிஸ் பெற்றுக் கொண்டார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான T-20 போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) சில்லெட்டில் நடைபெறவுள்ளது.

 

ஸ்கோர் விபரம்

 

ban-bat-2.pngsl-bowl-9.png

ஸ்கோர் விபரம்

 

sl-bat-10.pngban-bowl-3.png

 

முடிவு – இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி : வெற்றி பெறுமா இலங்கை.?

 

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

M5KVE_hw.jpg

இதற்கமைய பங்களாதேஷ் அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

பங்­க­ளா­தே­ஷுக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஆரம்­பத்தில் முத்­த­ரப்பு சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சம்­பி­ய­னாகி கிண்­ணத்தை வென்­றது. அதன்­பின்னர் பங்­க­ளா­தே­ஷு­ட­னான டெஸ்ட் போட்­டியில் 1 – 0 என்ற கணக்கில் வென்று கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

இதை­ய­டுத்து சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிண்­ணத்­தையும் வெல்லும் நோக்கில் இன்­றைய தினம் பங்­க­ளாதேஷ் அணியை இலங்கை அணி எதிர்­கொள்­ள வுள்­ளது.

மிர்­பூரில் நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் அபார வெற்­றி­யீட்­டிய இலங்கை அணி இப்­போட்­டி­யிலும் வெற்றிப்பெற்று கிண்­ணத்தை கைப்­பற்றும் முனைப்பில் கள­மி­றங்­க­வுள்­ளது.

குசல் பெரே­ரா­வுக்குப் பதி­லாக அணியில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட குசல் மெண்டிஸ் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்கி சிறப்­பாகத் துடுப்­பெ­டுத்­தாடி அணியின் வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்தார். போட்­டியின் இறு­தி­வரை நின்ற தசுன் சானக்க, திசர பெரேரா ஆகி­யோரின் அபார துடுப்­பாட்டம் அணியின் வெற்­றிக்கு பெரிதும் உத­வி­யது.

மேலும், நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்னர் அணியில் இணைத்துக் கொள்ளப்­பட்ட சக­ல ­து­றை­ வீ­ர­ரான ஜீவன் மெண்டிஸ், தான் வீசிய முத­லா­வது ஓவரின் முத­லா­வது பந்தில் சிறப்­பாகத் துடுப்­பெ­டுத்­தா­டிக்­கொண்­டி­ருந்த செளம்­மிய சர்க்­காரை ஆட்­ட­மி­ழக்கச் செய்தார். மூன்­றா­வது பந்தில் அறி­முக வீர­ரான மற்றும் ஆபிப் ஹொசைனை  ஆட்­ட­மி­ழக்கச் செய்தார். மூன்று பந்­து­களில் இவ்­விரு விக்­கெட்­டு­கள் வீழ்த்­தப்­பட்­டமை பங்­க­ளா­தேஷின் ஓட்­ட­வே­கத்தை குறைத்­தது.  இதன் மூலம் இலங்கை அணியில் தமது தெரிவு சரி­யா­னது என்­பதை ஜீவன் மெண்டிஸ் உணர்த்­தி­யி­ருந்தார்.  

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்­று­ந­ரான சந்­திக்க  ஹத்­து­ரு­சிங்­கவின் நுணுக்­கங்கள், கள­வி­யூ­கங்கள் மற்றும் திட்­ட­மிடல் போன்­றன தோல்­வியில் துவண்­டு­போ­யி­ருந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு புத்­துயிர் கொடுத்­துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30755

 

8.png&h=42&w=42

85/0 * (8.3/20 ov)
 
  • தொடங்கியவர்

 

8.png&h=42&w=42

210/4 * (20 ov)
 
  • தொடங்கியவர்

இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றிக்கொண்ட இலங்கை அணி

இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றிக்கொண்ட இலங்கை அணி

 

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் அணித்தலைவர் மஹ்மதுல்லா 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணி சார்பில் ஷெஹான் மதுஷங்க மற்றும் தனுஸ்க குணதிலக்க ஆகியோர் தலா 2 விக்கட்களையும், அகில தனஞ்சய, திசர பெரேரா, தசுன் ஷானக, இசுறு உதான, மற்றும் ஜீவன் மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தியுள்ளார்.

ஆகவே பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றிக்கொண்டது.

http://tamil.adaderana.lk/news.php?nid=100063

  • தொடங்கியவர்

மீண்டெழுந்த இலங்கை 3 வகை கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் : இருபதுக்கு - 20 கிண்ணத்தையும் கைப்பற்றியது

 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் பயிற்சியின் கீழ் மற்றுமொரு பெறுமதிமிக்க வெற்றியினை பதிவுசெய்துள்ளது.

sri-lanka-champion.jpg

இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டுகளாக 3 வகை கிரிக்கெட்டிலும்பெரும் பின்னடைவை சந்திந்து வந்த இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் தலைமைப் பயிற்சியின் கீழ் இலங்கை அணி மீண்டெழுந்து 3 வகையான கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது.

அதன்படி பங்களாதேஷில் இடம்பெற்ற சிம்பாப்வே, பங்களாஷே் மற்றும் இலங்கை அகிய அணிகளுக்கிடையிலான மும்முனைத் தொடரில் இலங்கை அணி சம்பியன் ஆகியதுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 1-0 எனவும் தற்போது இடம்பெற்று முடிந்த இருபதுக்கு - 20 தொடரை 2-0 எனவும் கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியதுடன் புதிதாக தலைமைப் பயிற்சியாளராக கடமையேற்றுள்ள ஹத்துரு சிங்கவின் பயிற்றுவிப்புக்கும் கிடைத்த பெரும் வெற்றியென்றும் சொல்லமுடியும்.

இந்நிலையில் பங்களாமேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு  - 20 தொடரில் பங்கேற்று விளையாடியது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றிருந்த நிலையில், இன்று 2 ஆவதும் இறுதியுமான போட்டி இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இந்நிலையில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அதிரடியாக விளையாடி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 210 ஓட்டங்களைப்பெற்று பங்களாதேஷ் அணிக்கு 210 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

இலங்கை அணிசார்பாக அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ் 70 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக 42 ஓட்டங்களையும் அதிரடியாக ஆடிய சானக்க 11 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாசினார்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஜயிட், ரஹ்மான், சர்க்கார் மற்றும் சைபுதீன் ஆகிகோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

211 என் இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப்பெற்று 75 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பாக மஹமதுல்லா 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் குணதிலக மற்றும் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த வருடம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணியை படுதோல்வியடையச் செய்த பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இலங்கை அணி இத் தொடரின் மூலம் சரியான பாடத்தை புகட்டிள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30762

  • தொடங்கியவர்

பங்களாதேஷுடனான T20 தொடரும் இலங்கை வசம்

cricket-6-696x464.jpg
 

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்று முடிந்திருக்கும், T-20 தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை பங்களாதேஷ் அணியை 75 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது.

சில்லெட் நகரில் இன்று (18) ஆரம்பமாகியிருந்த இந்த தீர்மானமிக்க ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்றிருந்த பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹ்மதுல்லா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை (15) நடந்திருந்த இந்த T-20 தொடரின் முதல் போட்டியில் அதிரடி வெற்றியொன்றைப் பெற்றிருந்த இலங்கை அணி, அப்படியான நல்ல ஒரு முடிவை எதிர்பார்த்து இந்தப் போட்டியிலும் தொடரைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியிருந்தது. தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை குழாமில் இன்றைய போட்டிக்காக நிரோஷன் திக்வெல்லவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்ததோடு, அவரின் இடத்தை எடுத்துக் கொண்ட சுழல் வீரரான அமில அபொன்சோ T-20 போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்.

 

பங்களாதேஷ் அணியும் இரண்டு அறிமுக வீரர்களுடன் (அபு ஜாயேத், மஹெதி ஹசன்) தமிம் இக்பால், மொஹமட் மிதுன் ஆகியோரை அணிக்கு உள்வாங்கியிருந்தது. இவர்களுக்கு பதிலாக சப்பீர் ரஹ்மான், ருபெல் ஹொசைன், அபிப் ஹொசைன், ஷாகிர் ஹசன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை இலங்கை அணி ஆரம்பித்தது. தொடக்க வீரர்களான தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ் ஆகியோர் பவுண்டரி எல்லைகளை பதம் பார்த்த வண்ணம் இலங்கை அணிக்கு அட்டகாசமான ஆரம்பத்தை வழங்கியிருந்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இந்த இளம் துடுப்பாட்ட ஜோடியின் இணைப்பாட்டத்தை மொத்த ஓட்டம் நூறை எட்டியிருந்த போதே தடுக்க இயலுமாக இருந்தது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக தனுஷ்க குணத்திலக்க செளம்ய சர்க்காரின் பந்துவீச்சில் தமிம் இக்பாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பெறுமதியான இன்னிங்ஸ் ஒன்றை தந்த தனுஷ்க குணத்திலக்க ஓய்வறை நடக்கும் போது 37 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்க குணத்திலக்கவை அடுத்து மத்திய வரிசை வீரரான திசர பெரேராவை முன்வரிசையில் துடுப்பாட இலங்கை அணி அனுப்பியிருந்தது. களத்தில் நின்ற குசல் மெண்டிசுடன் கைகோர்த்த பெரேரா தனது பங்கிற்கான அதிரடியை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார். மறுமுனையில் குசல் மெண்டிசினால் இத்தொடரில் தொடர்ச்சியான இரண்டாவது அரைச்சதம் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து இலங்கை அணிக்கு வலுவளித்திருந்த திசர பெரேரா, குசல் மெண்டிஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களை அபு ஜாயேத், முஸ்தபிசுர் ஆகியோர் கைப்பற்றியிருந்தனர். இதில் குசல் மெண்டிஸ் 42 பந்துகளுக்கு 6 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்று T-20 சர்வதேசப் போட்டிகளில் தனது சிறந்த துடுப்பாட்டத்தை பதிவு செய்திருந்தார். அத்தோடு திசர பெரேரா 17 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 31 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இவர்களை அடுத்து இலங்கை அணிக்கு உபுல் தரங்க, தசுன் சானக்க ஆகியோர் வழங்கிய அசத்தல் அதிரடியின் மூலம், இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 210 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

 

இலங்கை அணி வலுவான மொத்த ஓட்டங்களைப் பெறுவதில் முக்கிய பங்காற்றிய உபுல் தரங்க 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 25 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, தசுன் சானக்க வெறும் 11 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் செளம்ய சர்க்கர், மொஹமட் சயீபுத்தின், அறிமுக வீரர் அபு ஜாயேத், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை அடுத்து நிர்ணயிக்கப்பட்ட சவால் மிகுந்த வெற்றி இலக்கான 211 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி இலங்கைப் பந்துவீச்சாளர்களால் ஆரம்பம் முதலே சரிவைக் காட்டி முடிவில் 18.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 135 ஓட்டங்களையே பெற்று படுதோல்வியடைந்ததுடன் T-20 தொடரையும் இழந்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் மஹ்மதுல்லா 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவர் தவிர ஏனைய பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் முப்பது ஓட்டங்களையேனும் தாண்டவில்லை.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஷெஹான் மதுசங்க, தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடரின் ஆட்ட நாயகனாகவும் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தெரிவாகியிருந்தார்.

இவ்வெற்றியோடு பங்களாதேஷ் அணியுடனான சுற்றுப் பயணத்தை இலங்கை அணி வெற்றிகரமாக நிறைவு செய்து கொள்கின்றது. இந்த T-20 தொடரோடு இலங்கை, பங்களாதேஷில் இடம்பெற்றிருந்த டெஸ்ட் தொடர் (1-0), முக்கோண ஒரு நாள் தொடர் என்பவற்றையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

Sri-Lanka-Innings.png

 

 

Bangladesh-innings-1.png

Bangladesh-innings-2.png

 

http://www.thepapare.com

முடிவு – இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.