Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் சுனாமி

Featured Replies

அரசியல் சுனாமி

 

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வு­க­ளினால் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு முடிவு காணப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள போதிலும், நிலை­மைகள் சீர­டைந்­தி­ருக்­கின்­ற­னவா என்­பது தெளி­வற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

நல்­லாட்சி அர­சாங்­கமே தொடர்ந்து பத­வியில் இருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி விலக வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை அமைச்­ச­ர­வையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படுமெனவும் ஐக்­கிய தேசி­ய­ கட்சி மறு­சீ­ர­மைக்­கப்­படும் என்ற அறி­வித்­தல்­களும் வெளி­வந்­தி­ருக்­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து பத­வியில் இருப்­ப­தற்கு ஜனா­தி­பதி அங்­கீ­காரம் அளித்­துள்­ள­தாகவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கிறது. 

அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு முடிவு காணப்­பட்டு அர­சாங்­கத்தை ஸ்திரப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அர­சாங்­கத்தின் நிலை­மைகள் குறித்து விளக்­க­ம­ளிப்­ப­தற்­காக ஜனா­தி­பதி ஊட­கங்­களின் ஆசி­ரி­யர்கள், பிர­தா­னி­க­ளுடன் வெள்­ளிக்­கி­ழமை காலை நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சந்­திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்­யப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டது. 

ஊட­கங்­க­ளு­ட­னான ஜனா­தி­ப­தியின் சந்­திப்பு திட்­ட­மிட்­ட­வாறு நடை­பெ­ற­மாட்­டாது என்ற அறி­வித்­தலும் அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு முடிவு காணப்­பட்­டு­விட்­டது என்ற அறி­வித்தல் குறித்து பல்­வேறு சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அது­மட்­டு­மல்­லாமல் அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு சுதந்திரக்கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியினர் அறிவித்துள்ளனர்.

 உண்­மை­யி­லேயே உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் எதிர்­பா­ராத முடி­வு­க­ளினால் நல்­லாட்சி அர­சாங்கம் பெரும் நெருக்­க­டிக்குள் நசிந்து தவிக்க நேர்ந்­தி­ருந்­தது. ஒரு­போதும் இல்­லாத வகையில் இந்த நெருக்­கடி சுனாமி பேர­லையைப் போன்று பொங்கி எழுந்து தாக்­கி­யி­ருந்­தது.

இந்த நெருக்­க­டியிலிருந்து மீள்­வ­தற்கு வழி­ய­றி­யாமல் அரச தலை­வர்கள் இன்று தடு­மாறி நின்­றி­ருந்­தார்கள். 

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன பெற்ற வெற்­றி­யினால் மும்­முனை அர­சியல் நெருக்­கு­தல்கள் மட்­டு­மல்­லாமல் சட்டச்சிக்­கல்­க­ளும்­கூட இந்த நெருக்கடி­களில் பின்னிப் பிணைந்­தி­ருந்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தேர்தல் முடி­வு­க­ளின்­படி, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 239 சபை­களைக் கைப்­பற்றி அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. ஆனால் நாட்டின் பிர­த­மரைத் தலை­வ­ராகக் கொண்ட ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் 42 சபை­க­ளையே கைப்­பற்ற முடிந்­தி­ருக்­கின்­றது. இது கிட்­டத்­தட்ட பொது­ஜன பெர­மு­ன­விலும் பார்க்க ஆறு மடங்கு குறை­வா­கும். அரசின் பங்­கா­ளிக்­கட்­சி­யா­கிய ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்சி, ஐக்­கிய தேசிய கட்­சி­யிலும் பார்க்க நான்கில் ஒரு பங்­கா­கிய பத்து சபை­களை மட்­டுமே கைப்­பற்­றி­யுள்­ளது.

 எதிர்க்­கட்சி அந்­தஸ்து கூட இல்­லாத, பொது எதி­ர­ணி­யி­ன­ரா­கிய பொது­ஜன பெர­மு­ன­விடம் அர­சாங்கக் கட்­சிகள் இரண்டும் அடைந்­துள்ள படு­தோல்வி, அர­சியல்ரீதி­யாக அவ­மா­னத்தின் அடை­யாளம். ஏனெனில் எதேச்­ச­தி­காரப் போக்­குடன், குடும்ப அர­சி­யலை வளர்த்து ஊழல்­களின் உறை­வி­ட­மாகக் கரு­தப்­பட்ட முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தைத் தோற்­க­டித்து நாட்டில் நல்­லாட்­சியை நிறு­விய தலை­வர்­க­ளாகக் கரு­தப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு­வ­ரையும் நாட்டு மக்கள் இத் தேர்­தலில் தூக்கி எறிந்­துள்­ளார்கள். இதனால் நாட்டு மக்­களின் ஆத­ரவை இழந்து அர­சாங்­கத்தை நடத்த முடி­யாத ஓர் இக்­கட்­டான நிலை­மைக்குள் இத் தலை­வர்கள் தள்­ளப்­பட்­டி­ருந்­தார்கள். 

ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்கை, அர­சாங்­கத்தின் தோல்­விக்கு முக்­கிய கார­ண­மாகக் கூறப்­ப­டு­கின்­றது. அதே­வேளை சிங்­கள மக்கள் ஆழ­மாக ஊறிப்­போ­யுள்ள சிங்­கள–பௌத்த அர­சியல் உள­வி­ய­லுக்கு எதி­ரான போக்கை நல்­லாட்சி அர­சாங்கம் கடைப்­பி­டித்­த­தா­கவும் அதனால் சிங்­கள மக்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக ஏற்­பட்­டி­ருந்த பாது­காப்­பற்ற அச்ச உணர்வும் இத் தோல்­விக்கு அடிப்­படைக்காரணம் என்றும் தென்­ப­குதி அர­சியல் வட்­டா­ரங்­களில் கரு­தப்­ப­டு­கின்­றது. 

சிங்­கள–பௌத்த அர­சியல் சிந்­த­னைக்கு முர­ணான வகையில் நல்­லாட்சி அர­சாங்கம் காரி­யங்­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக இன­வாதப் போக்கில் மஹிந்த ராஜ­பக் ஷ அணி­யினர் முன்­னெ­டுத்­தி­ருந்த தீவி­ர­மான அர­சியல் பிர­சா­ரங்கள் சிங்­கள மக்­களை அர­சுக்ெகதி­ராக அணிதிரள்­வ­தற்கு தூண்­டி­யி­ருந்­தன என்­பது தென்­னி­லங்கை அர­சியல் அவ­தா­னி­களின் கணிப்பாகும்.

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காக அர­சாங்­கத்­தால் மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சியை விடு­த­லைப்­பு­லி­களின் நிகழ்ச்சிநிர­லுக்கு அமைய நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டைத் துண்­டா­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றது என்ற மஹிந்த அணி­யி­ன­ரின் பிர­சாரம் சிங்­கள மக்­க­ளு­டைய மனங்­களில் ஆழ­மாகப் பாய்ந்­தி­ருந்­தது. தேர்­தலில் சிங்­கள மக்கள் அர­சாங்கத் தரப்பை புறந்­தள்­ளு­வ­தற்கு இந்த மன­மாற்றம் அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருந்­தது என்­பது இன்­னு­மொரு கணிப்­பாகும். 

ஆயினும் ஊழல்­க­ளுக்கு முடிவு கட்டி நல்­லாட்சி புரி­வ­தா­கவும் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பது உள்­ளிட்ட ஆணை­களை நிறை­வேற்­று­வதில் கடைப்­பி­டிக்­கப்­பட்ட மந்த கதி­யி­லான அர­சியல் போக்கே இந்த அர­சாங்­கத்­திற்கு வினை­யாக மாறி­யது என்­பதே பொது­வான கருத்­தாகும்.  

நடந்து முடிந்த தேர்­தலில் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தமது பிர­தி­நி­தி­களை தெரிவு செய்த அதே­வேளை, நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது தங்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை என்ற செய்­தியை தமது வாக்­களிப்பின் மூலம் மக்கள் அழுத்­த­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். 

நாட்டு மக்­களின் ஆத­ரவை இழந்து ஒரு பொழு­தேனும் ஓர் அர­சாங்கம் பத­வியில் இருக்க முடி­யாது. இத­னால்தான் 2015 ஆம் ஆண்டு தேர்­தலில் தூக்கியெறிந்த அதே மக்­களின் அமோ­க­ ஆத­ரவைப் பெற்­றுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தைக் கலைத்து உட­ன­டி­யாக பொதுத் தேர்­தலை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்­தி­ருந்தார். ஆயினும் அர­சாங்­கத்தை மாற்­று­வது என்­பதும் இல­கு­வான காரி­ய­மல்ல என்­பதை அவர் உணர்ந்­தி­ருந்தார். அதன் கார­ண­மா­கவே அந்த அழைப்பைத் தொடர்ந்து வலி­யு­றுத்தி தனது கோரிக்­கையை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு அவர் துணி­ய­வில்லை. 

திரி­சங்கு நிலை

பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஓர் அர­சாங்­கத்தை அதன் காலம் முடி­வ­டை­வ­தற்கு முன் எடுத்தேன்–கவிழ்த்தேன் என்று கலைத்­து­விட முடி­யாது. ஓர் அர­சாங்­கத்தைக் கலைப்­ப­தற்­கென சட்டவிதி­களும் நடை­மு­றை­களும் வகுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. பத­வி­யேற்று நான்கரை வரு­டங்கள் முடி­வ­தற்கு முன் பத­வியிலுள்ள ஓர் அர­சாங்­கத்தைக் கலைக்க முடி­யாது. 

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மிக மிக அவ­ச­ர­மான மிகத் தீவிர நெருக்­க­டி­யான அர­சியல் சூழல் ஒன்­றின்­போது அர­சாங்­கத்தைக் கலைப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு அதி­காரம் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை இல்­லா­தொ­ழிப்­ப­தாக சூளு­ரைத்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் கொண்டு வரப்­பட்ட 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் இந்த அதி­கா­ரத்­துக்கு குறுக்­கே உள்­ளது. இதனால் மக்­க­ளின் நம்­பிக்­கையை இழந்­துள்ள அர­சாங்­கத்தை – மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்டுள்ள அர­சாங்­கத்தை  கலைக்க முடி­யாமல் கைகள் கட்­டப்­பட்ட நிலை­மைக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தள்­ளப்­பட்­டி­ருந்தார். 

அர­சாங்­கத்தைக் கலைப்­ப­தற்கு முன் பத­வியிலுள்ள பிர­த­மரைப் பத­வியில் இருந்து நீக்க வேண்டும். அதற்கு,  பிர­தமர் பத­வியிலிருப்­பவர் தானா­கவே முன்­வந்து தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­வதன் மூலம் இத்­த­கைய பதவி நீக்கம் இடம்­பெ­ற­லாமே தவிர, ஜனா­தி­பதி தன்னிஷ்டத்­துக்குப் பிர­த­மரைப் பதவி நீக்கம் செய்­ய முடி­யாது. பிர­தமர் தானே விரும்பி பத­வி­ நீங்­கி­னாலும் ஜனா­தி­பதி தன்­னிச்­சை­யாக மாத்­திரம் அர­சாங்­கத்தைக் கலைத்­து­விட முடி­யாது. அதற்கு மூன்றிலிரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் கூடிய பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றி­ருந்தல் அவ­சியம். 

இத்­த­கைய மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்தைப் பெறக்­கூ­டிய சூழலும் காணப்­ப­ட­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருப்­ப­வர்கள் இல­குவில் தமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை விட்­டுக்­கொ­டுக்க விரும்ப மாட்­டார்கள்.

அதிலும் புதி­தாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தின் பதவிக் கால­மா­கிய ஐந்து வரு­டங்களில் 4 வருடங்கள் முழு­மை­யாகப் பிர­தி­நி­தி­யாக இருந்தால் மட்­டுமே அவர்­க­ளுக்கு ஓய்­வூ­தியம் உள்­ளிட்ட நலன்­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். இதனால், அரை­கு­றையாக தமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை உத­றித்­தள்­ளி­விட்டுச் செல்­வ­தற்கு அவர்கள் முன்­வ­ர­மாட்­டார்கள். 

அத்­துடன், பொதுத்தேர்தல் ஒன்று நடக்­கு­மானால் மீண்டும் தமது தொகு­தியில் பிர­தி­நி­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட முடி­யாத அர­சியல் சூழல் உள்­ள­வர்­களும் இடை நடுவில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்குத் துணை­போகத் துணி­ய­மாட்­டார்கள். இந்த நிலையில் மூன்றிலிரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் கூடிய பாராளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்று அர­சாங்­கத்தைக் கலைப்­பதென்பது குதிரைக் கொம்­பா­கவே காணப்­பட்­டது. 

அது மட்­டு­மல்­லாமல் ஐக்­கிய தேசிய கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள இந்த அர­சாங்­கத்தில் இரு கட்­சி­க­ளுக்­குமி­டையில் முரண்­பா­டுகள் எழுந்­துள்ள நிலையில், பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்கள் பெரு­ம­ன­தோடு முன்­வ­ரு­வார்கள் என்று கூறு­வ­தற்­கில்லை. இந் நிலையில் தேர்­தலின் பின் ஏற்­பட்­டி­ருந்த  அர­சியல் கொதி­நி­லையைத் தணித்து நாட்டில் அர­சியல் ஸ்திரத்தன்­மையை ஏற்­ப­டுத்­து­வதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திரி­சங்கு நிலை­மைக்கே தள்­ளப்­பட்­டி­ருந்தார்.  

மறு­பு­றம் மக்­க­ளிடம் மட்­டு­மல்­லாமல் அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­யா­கிய ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ர­ கட்­சி­யி­ன­ரதும் தனது சொந்தக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளி­னதும் நம்பிக்­கையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இழக்க நேர்ந்­தி­ருந்­தது. இதனால், பிர­தமர் பத­விக்கே ஆபத்து உரு­வா­கி­யி­ருந்­தது. அதி­ருப்­தி­யா­ளர்கள் வெளிப்­ப­டை­யா­கவே அவரைப் பதவி வில­கு­மாறு கோரும் அள­வுக்கு அவ­ரு­டைய நிலைமை மோச­ம­டைந்­தி­ருந்­தது. 

சர்­வ­தே­சத்தின் கரி­சனை 

அர­சாங்கம் அத்­தி­வா­ரத்­தி­லேயே ஆட்டம் கண்டு நாட்டில் உரு­வா­கி­யுள்ள ஸ்திர­மற்ற அர­சியல் நிலை­மையை சீர் செய்­வ­தற்­காக அதி­ர­டி­யான பல மாற்­றங்­களைச் செய்ய வேண்­டிய நிர்ப்­பந்தம் ஜனா­தி­ப­திக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. இத­னால்தான் பிர­தமர் பத­வியைத் துறந்து வேெறாரு­வ­ருக்கு அச் சந்­தர்ப்­பத்தை வழங்க வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் நேர­டி­யா­கவே கேட்­டி­ருந்தார். ஆயினும் பிர­த­ம­ரு­டைய நெருங்­கிய ஆத­ர­வா­ளர்கள் இதனை விரும்­ப­வில்லை. பிர­த­மரும் அதற்கு உடன்­ப­ட­வில்லை.

தேர்தல் முடி­வுகள் நாட்டில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த அர­சியல் நெருக்­கடி நிலை குறித்து இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் இரா­ஜ­தந்­தி­ரிகள் மட்­டத்தில் தீவி­ர­மாக ஆராய்ந்­தி­ருக்­கின்­றன.

அத்­துடன் இரு நாடுகளி­னதும் இலங்­கைக்­கான தூது­வர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து பேச்­சுவார்த்தை நடத்­தி­யிருந்­தார்கள். மூன்று வரு­டங்­க­ளுக்கு முன் 2015 ஆம் ஆண்டு இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்குப் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­டி­ருந்த சர்­வ­தே­சத்­தையும் கூட நாட்­டையே புரட்டிப் போட்­டுள்ள இவ் உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் அதிர்ச்­சி­ய­டையச் செய்­தி­ருந்­தன என்­பதை இச் சந்­திப்பு வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

சீனா மற்றும் பாகிஸ்தான் சார்பு நிலை யைக் கடைப்­பி­டித்­தி­ருந்த முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வின் அர­சியல் போக்கை சர்­வ­தேசம் விரும்­ப­வில்லை.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும் என்ற விடு­த­லைப்­பு­லி­களின் அர­சியல் இலக்­குக்கு அப்பால் பயங்­க­ர­வா­தத்தை இல்­லாமல் செய்ய வேண்டும் என்ற போர்­வையில் வெறு­மனே ஓர் ஆயுதக்குழுவின் செயற்­பா­டாகக் கரு­தப்­பட்ட ஆயுதப் போராட்­டத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு இந்­தியா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடுகள் மஹிந்த ராஜ­பக் ­ஷவுக்கு உறு­து­ணை­யாகச் செயற்­பட்­டி­ருந்­தன. ஆயினும் யுத்த வெற்­றி­யையே தனது உள்ளூர் மற்றும் சர்­வ­தேச அர­சி­ய­லுக்­கான முத­லீ­டாகப் பயன்­ப­டுத்தி, மஹிந்த ராஜ­பக் ஷ   சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளுடன் ஏற்­ப­டுத்­திக்­கொண்ட அர­சியல் நல்­லு­றவை குறிப்பாக பிராந்­திய வல்­ல­ர­சா­கிய இந்­தியா மற்றும்  பூலோக பொலிஸ் என வர்­ணிக்­கப்­பட்ட அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடுகள் விரும்­ப­வில்லை. 

பிராந்­திய, இரா­ணுவ, அர­சியல், பொரு­ளா­தார நலன்­களின் அடிப்­ப­டையில் இலங்­கையில் தமது போக்­கிற்கு ஆத­ர­வான ஓர் அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லேயே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு இந் நாடுகள் உள்­ளிட்ட சர்­வ­தேச சக்திகள் பின்­ன­ணியிலிருந்து மிகுந்த கரி­ச­னை­யோடு செயற்­பட்­டி­ருந்­தன.  ஆனால் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மக்கள் மஹிந்த ராஜ­பக்­ ஷவை ஆத­ரித்து, ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரைப் புறந்­தள்­ளி­யி­ருக்­கின்­றனர். இந்­திய–அமெ­ரிக்க சார்­பு­டைய அல்­லது அந்த நாடுகள் உள்ளிட்ட சர்­வ­தே­சத்தின் நலன்­க­ளுக்கு ஆத­ர­வான அர­சாங்­கமே இலங்­கையில் அதி­கா­ரத்திலிருக்க வேண்டும் என்ற சர்­வ­தே­சத்தின் விருப்­பத்­தையும் நோக்­கத்­தையும் இலங்கை மக்கள் இதன்மூலம் நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றார்கள். சர்­வ­தேசம் ஒன்று நினைக்க, இலங்கை மக்கள் வேறு ஒன்றை நாடி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதை தேர்தல் முடி­வுகள் பளிச்­சென காட்­டி­யி­ருக்­கின்­றன.  

தேர்தல் முடி­வு­க­ளினால் அர­சாங்கம் ஆட்டம் கண்­டி­ருந்­த­தை­ய­டுத்து இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் தரண்­ஜித் சிங் சந்து, இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷாப் ஆகிய இரு­வரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேர­டி­யாகச் சந்­தித்து பிர­தமர் பத­வியில் இருந்து  ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அகற்ற முயற்­சிக்க வேண்டாம் என கோரி­யி­ருந்­தனர். அத்­துடன் தற்­போ­தைய ஸ்திர­மற்ற அர­சியல் நிலை­மையைப் போக்கி சுமு­க­மான நிலை­மையை உரு­வாக்­கு­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்றும் கோரி­யி­ருந்­தார்கள். 

இட­து­சாரி அணு­கு­மு­றை­யையும் வளைந்து கொடுக்­காத அர­சியல் போக்­கையும் கொண்ட மஹிந்த ராஜ­பக் ஷ மீண்டும் அதி­கா­ரத்­திற்கு வரு­வதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பவில்லை என்பதை ஜனாதிபதியுடனான வெளிநாட்டுத் தூதுவர்களின் இச் சந்திப்பும் அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையும் குறித்துக் காட்டியிருக்கின்றன. 

புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழர் தரப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆயுத போராட்டமே அரசியல் மற்றும் இராணுவ பொருளாதார ரீதியாக, இலங்கையை சர்வதேச அரங்கில் கொண்டு சென்று நிறுத்தியிருந்தது. சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்தது மட்டுமல்லாமல் இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்கு சர்வதேச அளவில்  பொறுப்பு கூற வேண்டிய கட்டாய நிலைமைக்கும் இலங்கை அரசாங்கம் ஆளாகியிருந்தது. 

இவ்வாறு சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ள இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சிங்கள தேசியவாதிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். தற்போதைய அரசியல் நெருக்கடிகளிலும் சர்வதேசம் தலையீடு செய்துள்ளது என கூறியுள்ள அவர்கள் இது இந்த நாட்டின் இறைமைக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இது எந்த அளவுக்கு உண்மையானது, சரியானது என்பது விவாதத்துக்கும் ஆய்வுக்கும் உரியது.

ஆயினும், உள்ளூராட்சித் தேர்தலினால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளைத் தணித்து, இயல்புநிலையை உருவாக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும். சுமார் ஒருவார காலமாக நீடித்துள்ள இந் நெருக்கடிகள் கட்சி ரீதியான அரசியல் நலன்கள், தனிப்பட்ட நலன்கள் என்பவற்றுக்கு அப்பால் நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்போடு செயற்பட முன்வர வேண் டியது அவசியமாகும்.

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.