Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெ.ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

தெ.ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் இன்று மோதல்

 
 
STEVESMITHjpg

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு டர்பனில் தொடங்குகிறது.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் டர்பன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரையும், தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்ற நிலையில் இந்தத் தொடரை சந்திக்கின்றன. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்க அணியும், 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் மோதும் இந்த டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு அணியும் வேகப்பந்து வீச்சை பிரதானமாக நம்பி உள்ளதால் வலுவான போட்டி நிலவக்கூடும். கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என வென்றிருந்தது. இதற்கு இம்முறை ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும். மேலும் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலிய அணி இதுவரை டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் களமிறங்கிய அதே அணியே இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் 4 பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் என்பதால் இம்முறை தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் போட்டியை அணுகக்கூடும் என கருதப்படுகிறது. 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் பட்சத்தில் ரபாடா, பிலாண்டர், மோர்னே மோர்கல் ஆகியோர் இடம் பெறுவார்கள். காயத்தில் இருந்து மீண்டுள்ள டு பிளெஸ்ஸிஸ் மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். இதேபோல் உடல் தகுதியை பெற்றுள்ள டி வில்லியர்ஸூம் களமிறங்க உள்ளார். குயிண்டன் டி காக்கின் பேட்டிங் பார்ம் கவலை அளிக்கும் நிலையில் ஹென்ரிச் கிளாசென் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலிய லெவன்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பான் கிராஃப்ட், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஸ் ஹசல்வுட். - ஏஎன்ஐ

http://tamil.thehindu.com/sports/article22888441.ece?homepage=true

  • தொடங்கியவர்

தென்ஆப்பிரிக்கா மண்ணில் வார்னர் தொடர்ச்சியாக 6 அரைசதம் அடித்து சாதனை

 

தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடர்ச்சியாக 6 இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து டேவிட் வார்னர் சாதனைப் படைத்துள்ளார். #SAvAUS #Warner

 
 
தென்ஆப்பிரிக்கா மண்ணில் வார்னர் தொடர்ச்சியாக 6 அரைசதம் அடித்து சாதனை
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் வார்னர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 72 பந்தில் அரைசதம் அடித்த வார்னர் 79 பந்தில் 51 ரன்கள் எடுத்து பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த இன்னிங்சில் அரைசதம் அடித்ததன்மூலம் தொடர்ச்சியாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் 6 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

201803011624100835_1_warner-s._L_styvpf.jpg

இதற்கு முன் கல்லீஸ் 2002-ம் ஆண்டு ஐந்து முறை தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதேபோல் டபிள்யூ ஹமண்ட் 1930-31-ம் ஆண்டில் 5 முறை அரைசதம் அடித்துள்ளார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/01162413/1148401/David-Warner-Fifty-plus-scores-in-most-successive.vpf

  • தொடங்கியவர்

 

2.png&h=42&w=42

203/5 * (71.1 ov)
 
  • தொடங்கியவர்

டர்பன் டெஸ்ட்- ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்

 

 

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் 76 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

 
டர்பன் டெஸ்ட்- ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பான் கிராப்ட் 5 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். கவாஜா 14 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

201803012054249889_1_philander-s._L_styvpf.jpg

3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த அரைசதம் மூலம் தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடர்ச்சியாக 6 அரைசதங்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அரைசதம் அடித்த வார்னர் முதல்நாள் மதிய உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 27 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், ஸ்மித் உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் 94 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஷேன் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

201803012054249889_2_davidwarner-s._L_styvpf.jpg

6-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் விக்கெட் கீப்பர் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது.

ஆஸ்திரேலியா 76 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. அப்போது மிட்செல் மார்ஷ் 32 ரன்னுடனும், பெய்ன் 21 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/01205425/1148437/Durban-Test-Australia-225-runs-1st-day-agains-south.vpf

  • தொடங்கியவர்

நாராச வசைகள் கேட்க வேண்டாம்... ஸ்டம்ப் மைக்கை ஆஃப் செய்யுங்கள்: ஆஸி. அணி வலியுறுத்தல்

 

 
SMITH-ANDERSON

ஸ்மித், ஆண்டர்சன், இடையில் நடுவர் அலீம்தார்.   -  கோப்புப் படம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் ஆஸ்திரேலியா அணி போட்டிக்கு முன்னதாக ‘ஸ்லெட்ஜிங்’ பற்றி குறிப்பிடும் விதமாக போட்டியின் போது ஓவர்களுக்கிடையே ஸ்டம்ப் மைக்கை ஆஃப் செய்து விடுமாறு கோரிக்கை வைத்தனர்.

1991-ல் தென் ஆப்பிரிக்கா மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தது முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காத ஆஸ்திரேலியா இந்தத் தொடரிலும் அந்த சாதனையைத் தக்க வைக்க எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதை இந்த ஸ்டம்ப் மைக் ஆஃப் விவகாரம் எடுத்தியம்புவதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா எதிரணி வீரர்க்ளை கடுமையாக ஸ்லெட்ஜ் செய்வது பலமுறை ஸ்டம்ப் மைக்குகளின் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் தங்களது நாராச வசைகள் வெளியுலகிற்குத் தெரியவேண்டாம் என்று ஆஸி. கருதுகிறது.

சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஜானி பேர்ஸ்டோவை ஒட்டுமொத்த ஆஸி. அணியும் கடுமையாக ஸ்லெட்ஜ் செய்து அதில் அவரை வீழ்த்தி வெற்றியும் கண்டது. அதாவது ஆஸி.தொடக்க வீரர் பேங்கிராப்டை, பேர்ஸ்டோ பார் ஒன்றில் தலையால் முட்டிய விவகாரத்தைத் திரும்பத் திரும்பக் களத்தில் அவரிடம் கூறிக்கூறி வெறுப்பேற்றி அது கடைசியில் பேர்ஸ்டோவின் அவுட்டில் முடிந்தது.

எங்கள் சகாக்களை நீங்கள் தலையால் முட்டக்கூடாது என்று டேவிட் வார்னர், பேர்ஸ்டோவிடம் கூறியது ஸ்டம்ப் மைக் மூலம் தெரியவந்தது. அதன் பிறகே அவர் விக்கெட்டை இழந்தார், போட்டியின் அந்தத் தருணத்தில் அது திருப்பு முனையாக அமைந்துள்ளது.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஸ்டம்ப் மைக்கை ஆஃப் செய்யாதது குறித்து ஸ்டீவ் ஸ்மித் பிசிசிஐ மீது கடும் விமர்சனங்களை வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் ஸ்லெட்ஜிங் நாராசங்கள் வெளியில் தெரியவேண்டாம் என்று ஆஸி.கிரிக்கெட் வாரியம் இந்த கோரிக்கையை வைத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article22906445.ece

  • தொடங்கியவர்

டர்பன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 351 ரன்கள் சேர்ப்பு

 

மிட்செல் மார்ஷின் அதிரடி ஆட்டத்தால் டர்பன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 351 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SAvAUS

 
 
டர்பன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 351 ரன்கள் சேர்ப்பு
விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் ரபாடா
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்று வருகிறது. டேவிட் வார்னர் (51), கேப்டன் ஸ்மித் (56) ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் மார்ஷ் 32 ரன்னுடனும், பெய்ன் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் மேலும் நான்கு ரன்கள் எடுத்து பெய்ன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கம்மின்ஸ் 3 ரன்னில் வெளியேறினார். 8-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 25 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது.

201803021719091879_1_starc-s._L_styvpf.jpg
ஸ்டார்க்கை மிரட்டிய பவுன்சர்

ஸ்டார்க் ஆட்டமிழந்ததும், மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 300 ரன்னைத் தாண்டியது. மிட்செல் மார்ஷ் சதத்தை நோக்கிச் சென்றார். ஆனால் 96 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக லயன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 110.4 ஓவரில் 351 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

201803021719091879_2_mitchellmarsh-s._L_styvpf.jpg
சதத்தை தவறவிட்ட மிட்செல் மார்ஷ்

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் 5 விக்கெட்டும், பிலாண்டர் 3 விக்கெட்ம், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். #SAvAUS #MitchellMarsh

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/02171909/1148625/SAvAUS-durban-Test-Australia-351-all-out.vpf

  • தொடங்கியவர்

ஸ்டார்க் அபார பந்துவீச்சு

மார்ச் 02, 2018.
 Comments  
 
 
 
starc

டர்பன்: டர்பன் டெஸ்டில் மிட்சல் மார்ஷ், 96 ரன் விளாச, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்கள் குவித்தது. பின், மிட்சல் ஸ்டார்க் ‘வேகத்தில்’ மிரட்ட, முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 162 ரன்னுக்கு சுருண்டது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. முதல் நாள்  ஆட்டநேர முடிவில்,  முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. மிட்சல் மார்ஷ் (32), பெய்ன் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

மார்ஷ் அபாரம்

நேற்று, 2ம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் பெய்ன் (25), ரபாடா ‘வேகத்தில்’ வெளியேறினார். மகராஜ் ‘சுழலில்’ கம்மின்ஸ் (3) சிக்கினார். அபாரமாக ஆடிய மிட்சல் மார்ஷ், அரைசதம் கடந்தார். மிட்சல் ஸ்டார்க் (35) ஓரளவு கைகொடுத்தார். மிட்சல் மார்ஷ், 96 ரன் எடுத்திருந்த போது பிலாண்டர் பந்தில் அவுட்டானார். நாதன் லியான் (12) ஏமாற்றினார்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 351 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஹேசல்வுட் (2) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் கேஷவ் மகராஜ், 5 விக்கெட் கைப்பற்றினார்.

டிவிலியர்ஸ் அரைசதம்

பின் முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு டீன் எல்கர் (7), ஆம்லா (0) ஏமாற்றினர். மார்க்ரம் (32), ஆறுதல் தந்தார். பொறுப்பாக ஆடிய டிவிலியர்ஸ் அரைசதம் கடந்தார். ஸ்டார்க் ‘வேகத்தில்’ கேப்டன் டுபிளசி (15), டி புருயின் (6), பிலாண்டர் (8), ரபாடா (3), மார்னே மார்கல் (0) அவுட்டாகினர். முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 162 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. டிவிலியர்ஸ் (71) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், 5 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

http://sports.dinamalar.com/2018/03/1520008621/starc.html

  • தொடங்கியவர்

டர்பன் டெஸ்டில் 402 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

 
அ-அ+

டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 402 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. #SAvAUS

 
டர்பன் டெஸ்டில் 402 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் நேற்று முன்தினம் (கடந்த 1-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா வார்னர், ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அரைசதங்களால் 351 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் 5 விக்கெட்டும், பிலாண்டர் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் ஆகியோரின் அபார பந்து வீச்சால் 162 ரன்னில் சுருண்டது. டி வில்லியர்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து 71 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் 12 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்திற்குள்ளானது. ஸ்டார்க் 10.4 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார். நாதன் லயன் 3 விக்கெட் வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆனதுடன் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 189 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக பான்கிராப்ட், வார்னர் களம் இறங்கினார்கள். வார்னர் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவாஜா 6 ரன்னிலும், கேப்டன் ஸ்மித் 38 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 33 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் பான்கிராப்ட் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

201803032018388493_1_Rabada-s._L_styvpf.jpg

முதல் இன்னிங்சில் 96 ரன்கள் எடுத்த, மிட்செல் மார்ஷ் 6 ரன்னிலும், பெய்ன் 14 ரன்னிலும், ஸ்டார்க் 7 ரன்னிலும், லயன் 2 ரன்னிலும் ஆட்டமிழக்க 9 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. கம்மின்ஸ் 17 ரன்னுடனும், ஹசில்வுட் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்னே மோர்கல், மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் 189 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 402 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா உடனடியாக கடைசி விக்கெட்டை இழக்க வாய்ப்புள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா சுமார் 420 ரன்கள் என்ற இலங்கை சேஸிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/03201838/1148828/Durban-test-australia-402-runs-leads-against-south.vpf

  • தொடங்கியவர்

 

2.png&h=42&w=42

351 & 227
 

 

3.png&h=42&w=42

162 & 63/4 * (22 ov, target 417)
 

Day 4: South Africa require another 354 runs with 6 wickets remaining

  • தொடங்கியவர்

டர்பனில் வேகப் புயல்களை எதிர்த்து சதமடித்தார் மார்கிராம்

 

 
 

டர்பனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க வீரர் மார்கிராம் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். #SAvAUS

 
 
 
 
டர்பனில் வேகப் புயல்களை எதிர்த்து சதமடித்தார் மார்கிராம்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 351 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 162 ரன்களும் சேர்த்தது. பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 227 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் 189 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம், டீன் எல்கர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்கோர் 29 ரன்னாக இருக்கும்போது தென்ஆப்பிரிக்கா முதல் விக்கெட்டை இழந்தது. டீன் எல்கர் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.

201803042011117814_1_markram2-s._L_styvpf.jpg

அதன்பின் வந்த அம்லா 8 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் எல்படபிள்யூ ஆனார். அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் பரிதாபமாக ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 49 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது.

இதனால் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் வேகத்தில் தென்ஆப்பிரிக்கா குறைந்த ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் நங்கூரம் போன்று நின்ற மார்கிராம் உடன் டி ப்ரூயின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது.

201803042011117814_2_markram3-s._L_styvpf.jpg

குறிப்பாக மார்கிராம் அணியின் நிலைமையை புரிந்து தவறு செய்யாமல் சிறப்பாக விளையாடினார். தென்ஆப்பிரிக்கா 136 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ப்ரூயின் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் மார்கிராம் அரைசதம் அடித்து களத்தில் நின்றார். 6-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்தியா தொடர் மற்றும் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக், இந்த இன்னிங்சில் நம்பிக்கையுடன் விளையாடினார். களத்தில் நிற்க நிற்க டி காக் ஆட்டத்தில் அனல் பறந்தது. மும்மூர்த்திகளின் பந்தை எளிதாக எதிர்கொண்டார்.

201803042011117814_3_markram4-s._L_styvpf.jpg

டி காக் நம்பிக்கையுடன் விளையாட ஆரம்பித்ததும், மார்கிராம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடி அவர் 171 பந்தில் 14 பவுண்டரியுடன் சதம் அடித்தார். ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகிய வேகத்தை எதிர்த்து சிறப்பாக விளையாடி சதம் அடித்த மார்கிராம் அனைவரின் கரகோஷத்தை பெற்றார். அவர் சதம் அடித்த சிறுது நேரத்தில் டி காக் 68 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

68 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிராம் 128 ரன்னுடனும், டி காக் 65 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த இருவரும் இன்னும் 20 ஓவர் தாக்குப்பிடித்தால், போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/04201111/1148941/SAvAUS-aiden-markram-century.vpf

 

3.png&h=42&w=42

162 & 293/9 * (89 ov, target 417)
 

Day 4: South Africa require another 124 runs with 1 wicket remaining

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டர்பன் டெஸ்டில் வெற்றியை நெருங்கியது ஆஸ்திரேலியா

 

 
 

டர்பனில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. #SAvAUS #AUSvSA

 
 
 
 
டர்பன் டெஸ்டில் வெற்றியை நெருங்கியது ஆஸ்திரேலியா
 
ஜொகன்னஸ்பர்க்:

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 351 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 162 ரன்களும் சேர்த்தது. பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 227 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் 189 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 417 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்தது. இதையடுத்து தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்கோர் 29 ரன்னாக இருக்கும்போது தென்ஆப்பிரிக்கா முதல் விக்கெட்டை இழந்தது. டீன் எல்கர் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.

201803050316172788_1_ausvssa-0403-2._L_styvpf.jpg

அதன்பின் வந்த அம்லா 8 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் எல்படபிள்யூ ஆனார். அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் பரிதாபமாக ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 49 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது.

201803050316172788_2_ausvssa-0403-1._L_styvpf.jpg

இதனால் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் வேகத்தில் தென்ஆப்பிரிக்கா குறைந்த ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் நங்கூரம் போன்று நின்ற மார்கிராம் உடன் டி ப்ரூயின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது.

குறிப்பாக மார்கிராம் அணியின் நிலைமையை புரிந்து தவறு செய்யாமல் சிறப்பாக விளையாடினார். தென்ஆப்பிரிக்கா 136 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ப்ரூயின் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் மார்கிராம் அரைசதம் அடித்து களத்தில் நின்றார். 6-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்தியா தொடர் மற்றும் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக், இந்த இன்னிங்சில் நம்பிக்கையுடன் விளையாடினார். களத்தில் நிற்க நிற்க டி காக் ஆட்டத்தில் அனல் பறந்தது. மும்மூர்த்திகளின் பந்தை எளிதாக எதிர்கொண்டார்.

டி காக் நம்பிக்கையுடன் விளையாட ஆரம்பித்ததும், மார்கிராம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடி அவர் 171 பந்தில் 14 பவுண்டரியுடன் சதம் அடித்தார். ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகிய வேகத்தை எதிர்த்து சிறப்பாக விளையாடி சதம் அடித்த மார்கிராம் அனைவரின் கரகோஷத்தை பெற்றார். அவர் சதம் அடித்த சிறுது நேரத்தில் டி காக் 68 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்கிராம் 143 ரன்களில் மிச்செல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சரியாக பயன்படுத்திகொண்ட ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஸ்டார்க் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

வெர்னான் பிளாண்டரை 6 ரன்களிலும், கேஷவ் மகராஜ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரை ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் ஸ்டார்க் ஆட்டமிழக்க செய்தார். இதனால் தென்ஆப்ரிக்கா அணி 290 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. அதன்பின் மார்னே மார்கல் களமிறங்கினார். அவர் 27 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் இருந்த நிலையில் நேற்றைய ஆட்டம் 4-வது நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

டி காக் 81 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. அதே சமயம் டி காக் - மார்னே மார்கல் இருவரும் நிலைத்து நின்று விளையாடி இன்னும் 124 ரன்கள் சேர்த்தால் தென்ஆப்ரிக்கா அணி வெற்றி பெறும். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. #SAvAUS #AUSvSA
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/05031617/1148964/Australia-inches-closer-to-win-over-South-Africa-in.vpf

  • தொடங்கியவர்

டி வில்லியர்ஸை நோக்கி பந்தை வீசி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட லயன்

டர்பன் டெஸ்டில் டி வில்லியர்ஸை ரன்அவுட் ஆக்கிய நாதன் லயன், அவரை நோக்கி பந்தை வீசி ஒழுங்கீனமான நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. #SAvAUS

 
டி வில்லியர்ஸை நோக்கி பந்தை வீசி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட லயன்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்றது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின்போது 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்அப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

12-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை மார்கிராம் எதிர்கொண்டார். எதிர்முனையில் டி வில்லியர்ஸ் நின்றிருந்தார். மார்கிராம் பந்தை லெக் சைடு அடித்தார். பந்து நேராக வார்னர் கைக்கு சென்றது.

இந்த நேரத்தில் டி வில்லியர்ஸ் ரன் எடுக்க வேகமாக ஓடினார். அப்போது மார்கிராம் ஓடிவர விரும்பவில்லை. இதனால் டி வில்லியர்ஸ் வேகமாக திரும்பினார். அதற்குள் பந்து நாதன் லயன் கைக்கு வந்து விட்டது. ரன்அவுட்டில் இருந்து தப்பிக்க டி வில்லியர்ஸ் பாய்ந்தார். அப்போது தரையில் விழுந்து க்ரீஸை அடைந்தார். அதற்குள் நாதன் லயன் ரன்அவுட் ஆக்கினார்.

201803051604028994_1_lyon001-s._L_styvpf.jpg

அத்துடன் கையில் இருந்த பந்தை டி வில்லியர்ஸை நோக்கி எறிந்தார். அப்போது டி வில்லியர்ஸ வயிற்றுப் பகுதிக்கு அருகில் பந்து விழுந்தது. இதை டி வில்லியர்ஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கிரிக்கெட் ரசிகர்களும் இதை விரும்பவில்லை. அதேவேளையில் வார்னர் அளவுக்கு மீறிய வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

நாதன் லயன் நடவடிக்கை குறித்து போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் ஆய்வு செய்தார். அப்போது நாதன் லயன் செய்தது குற்றம் என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் வீரர்கள் நன்னடத்தையில் இது முதல் நிலை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாதன் லயனுக்கு அபராத் விதிக்க வாய்ப்புள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/05160403/1149122/SAvAUSLyon-charged-for-de-Villiers-incident.vpf

  • தொடங்கியவர்
தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் வென்றது அவுஸ்திரேலியா
 

image_769ddea8bb.jpg

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டேர்பனில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் இன்றைய ஐந்தாம் நாளின் ஆரம்பத்திலேயே 118 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வென்றது.

417 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 9 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்களைப் பெற்றவாறு இன்றைய ஐந்தாம் நாளை ஆரம்பித்த நிலையில், மேலும் ஐந்து ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் இறுதி விக்கெட்டையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், ஏய்டன் மர்க்க்ரம் 143, குயின்டன் டி கொக் 83, தெனியுஸ் டி ப்ரூன் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார்க் 4, ஜொஷ் ஹேசில்வூட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக மிற்செல் ஸ்டார்க் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 351/10 (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 96, ஸ்டீவ் ஸ்மித் 56, டேவிட் வோணர் 51, ஷோன் மார்ஷ் 40, மிற்செல் ஸ்டார்க் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 5/123, வேர்ணன் பிலாந்தர் 3/59, கஜிஸோ றபடா 2/74)

தென்னாபிரிக்கா: 162/10 (துடுப்பாட்டம்: ஏ.பி டி வில்லியர்ஸ் ஆ.இ 71 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 5/34, நேதன் லையன் 3/50)

அவுஸ்திரேலியா: 227/10 (துடுப்பாட்டம்: கமரோன் பான்குரோப்ட் 53, ஸ்டீவ் ஸ்மித் 38, ஷோன் மார்ஷ் 33, பற் கமின்ஸ் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 4/102, மோர்னி மோர்கல் 3/47)

தென்னாபிரிக்கா: 298/10 (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் 143, குயின்டன் டி கொக் 83, தெனியுஸ் டி ப்ரூன் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 4/75, ஜொஷ் ஹேசில்வூட் 3/61)

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/தென்னாபிரிக்காவுக்கெதிரான-முதலாவது-டெஸ்டில்-வென்றது-அவுஸ்திரேலியா/44-212308

  • தொடங்கியவர்

டி வில்லியர்ஸை நோக்கி பந்தை வீசிய லயனுக்கு அபராதம்

 

 
 

டர்பன் டெஸ்டில் டி வில்லியர்ஸை நோக்கி பந்தை வீசி ஒழுங்கீனமான நடந்து கொண்ட நாதன் லயனுக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. #SAvAUS #AUSvSA #NathanLyon

 
 
 
 
டி வில்லியர்ஸை நோக்கி பந்தை வீசிய லயனுக்கு அபராதம்
 
ஜொகன்னஸ்பர்க்:

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இப்போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின்போது 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்அப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

201803060401289697_1_nathan-lyon-1._L_styvpf.jpg

12-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை மார்கிராம் எதிர்கொண்டார். எதிர்முனையில் டி வில்லியர்ஸ் நின்றிருந்தார். மார்கிராம் பந்தை லெக் சைடு அடித்தார். பந்து நேராக வார்னர் கைக்கு சென்றது.

இந்த நேரத்தில் டி வில்லியர்ஸ் ரன் எடுக்க வேகமாக ஓடினார். அப்போது மார்கிராம் ஓடிவர விரும்பவில்லை. இதனால் டி வில்லியர்ஸ் வேகமாக திரும்பினார். அதற்குள் பந்து நாதன் லயன் கைக்கு வந்து விட்டது. ரன்அவுட்டில் இருந்து தப்பிக்க டி வில்லியர்ஸ் பாய்ந்தார். அப்போது தரையில் விழுந்து க்ரீஸை அடைந்தார். அதற்குள் நாதன் லயன் ரன்அவுட் ஆக்கினார்.

அத்துடன் கையில் இருந்த பந்தை டி வில்லியர்ஸை நோக்கி எறிந்தார். அப்போது டி வில்லியர்ஸ வயிற்றுப் பகுதிக்கு அருகில் பந்து விழுந்தது. இதை டி வில்லியர்ஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கிரிக்கெட் ரசிகர்களும் இதை விரும்பவில்லை. அதேவேளையில் வார்னர் அளவுக்கு மீறிய வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

நாதன் லயன் நடவடிக்கை குறித்து போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் ஆய்வு செய்தார். அப்போது நாதன் லயன் செய்தது குற்றம் என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் வீரர்கள் நன்னடத்தையில் இது முதல் நிலை என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக நாதன் லயனுக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நாதன் லயன், தான் செய்தது தவறு என ஒப்புகொண்டதாகவும், அதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. #SAvAUS #AUSvSA #NathanLyon

 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/06040129/1149195/Australia-Lyon-fined-by-ICC-for-breach-of-conduct.vpf

  • தொடங்கியவர்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்- வார்னர் - பான்கிராப்ட் சிறப்பான தொடக்கம்

 

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் வார்னர், பான்கிராப்ட் சிறப்பான ஆட்டததை வெளிப்படுத்தினர். #SAvAUS

 
 
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்- வார்னர் - பான்கிராப்ட் சிறப்பான தொடக்கம்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கெண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் கடந்த வாரம் டர்பனில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் இன்று போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்கியது. ஆடுகளம் புற்கள் நிறைந்து பச்சைபசேல் என்று காணப்பட்டது. இதனால் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும் என்று இரு அணிகளும் எதிர்பார்த்தனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ், நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பீல்டிங்தான் தேர்வு செய்திருப்போம் என்றார்.

ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நியூ பந்த் ஸ்விங் ஆகியதால் பிலாண்டர், ரபாடா ஆகியோர் பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்தார். ஆனால் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ரன்கள் அடிக்காவிடிலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

8-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பான்கிராப்ட் பவுண்டரி அடித்தார். இதுதான் ஆஸ்திரேலியாவின் முதல் பவுண்டரி.

201803091553032911_1_bancroft-s._L_styvpf.jpg

13-வது ஓவர் வரை ஆஸ்திரேலியா 18 ரன்கள் எடுத்தது. அதன்பின் வார்னர், பான்கிராப்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நெகிடி வீசிய 16-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும், ரபாடா வீசிய 17-வது ஓவரில் மூன்று பவுண்டரிகளும், நெகிடி வீசிய 18-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் விளாசினார்கள்.

25-வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த வார்னர் 69 பந்தில் அரைசதம் அடித்தார். மதிய உணவு இடைவெளிக்கான கடைசி ஓவரில் பான்கிராப்ட் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 26.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 69 பந்தில் 59 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/09155303/1149918/SAvAUS-Port-Elizabeth-2nd-Test-warner-pancroft-great.vpf

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல்அவுட்- ரபாடா 5 விக்கெட்டு வீழ்த்தினார்

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ரபாடா 5 விக்கெட் வீழ்த்தினார். #SAvAUS

 
ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல்அவுட்- ரபாடா 5 விக்கெட்டு வீழ்த்தினார்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் வார்னர், பான்கிராப்ட் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடினார்கள்.

வார்னர் அரைசதத்தால் ஆஸ்திரேலியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 26.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் சேர்த்தது. பான்கிராப்ட் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வார்னர் 50 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் வார்னர், கவாஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினார்கள். கவாஜா 4 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். வார்னர் 63 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

201803092037353268_1_ngidi-s._L_styvpf.jpg

4-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குபிடித்து விளையாடியது. தேனீர் இடைவேளைக்கு சற்று முன் ஸ்மித் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரபாடா வீசிய 52-வது ஓவரின் கடைசி பந்தில் எல்.டபிள்யூ. ஆனார். 54-வது ஓவரை ராபாடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷேன் மார்ஷ் அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 4-வது பந்தில் பவுண்டரி அடித்து ஐந்தாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது.

தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தொடங்கினார். டபாடா 54-வது ஓவரின் கடைசி பந்தை வீசினார். இதில் கம்மின்ஸ் ஆட்டமிழந்தார். இதனால் ரபாடா 7 பந்தில் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றி, ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்தார். ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களுக்கு எடுத்திருந்த ஆஸ்திரேலியா 170 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது.

8-வது விக்கெட்டுக்கு பெய்ன் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க்கை 8 ரன்னில் வீழ்த்தி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார் ரபாடா. 9-வது விக்கெட்டுக்கு பெய்ன் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். நாதன் லயனை வைத்துக் கொண்டு பெய்ன் ரன்கள் அடிக்க சேர்க்க ஆரம்பித்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 200 ரன்னைத் தாண்டியது.

201803092037353268_2_lyonn-s._L_styvpf.jpg

ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 212 ரன்னாக இருக்கும்போது லயன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 10-வது விக்கெட்டுக்கு பெய்ன் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்தது. பெய்ன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஹசில்வுட் 10 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 21 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். நிகிடி 13.3 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/09203735/1149970/South-africa-vs-australia-australia-243-all-out-rabada.vpf

 

 

7 பந்தில் 4 விக்கெட்- ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த ரபாடா

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் 7 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி ரபடா ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்தார். #SAvAUS

 
7 பந்தில் 4 விக்கெட்- ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த ரபாடா
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலியா தொடக்க வீரர்கள் வார்னர், பான்கிராப்ட் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடினார்கள்.

வார்னர் அரைசதத்தால் ஆஸ்திரேலியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 26.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் சேர்த்தது. பான்கிராப்ட் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வார்னர் 50 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் வார்னர், கவாஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினார்கள். கவாஜா 4 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். வார்னர் 63 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குபிடித்து விளையாடியது. தேனீர் இடைவேளைக்கு சற்று முன் ஸ்மித் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரபாடா வீசிய 52-வது ஓவரின் கடைசி பந்தில் எல்.டபிள்யூ. ஆனார்.

201803091859427603_1_rabada1-s._L_styvpf.jpg

54-வது ஓவரை ராபாடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷேன் மார்ஷ் அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 4-வது பந்தில் பவுண்டரி அடித்து ஐந்தாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது.

தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தொடங்கினார். டபாடா 54-வது ஓவரின் கடைசி பந்தை வீசினார். இதில் கம்மின்ஸ் ஆட்டமிழந்தார். இதனால் ரபாடா 7 பந்தில் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றி, ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்தார்.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களுக்கு எடுத்திருந்த ஆஸ்திரேலியா 170 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/09185942/1149956/SAvAUS-Rabada-fire-spell-4-wickets-just-7-balls.vpf

  • தொடங்கியவர்

தென்ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்- தேனீர் இடைவேளை வரை 153-2

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. #SAvAUS

 
 
தென்ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்- தேனீர் இடைவேளை வரை 153-2
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ரபாடாவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் 71.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரபாடா 96 ரன்கள் விட்டுகொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ரிவரி்ஸ் ஸ்விங் மூலம் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை நிலைகுலையச் செய்தார்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 11 ரன்னுடனும், நைட்வாட்ச்மேன் ரபாடா 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ரபாடா 29 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு டீன் எல்கர் உடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மிகவும் பொறுமையாக விளையாடியது. இதனால் ஸ்கோர் மிகவும் மந்தமான நிலையில் உயர்ந்தது.

201803101901104218_1_deanelgar-s._L_styvpf.jpg

33 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட தென்ஆப்பிரிக்கா, 61.1 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. அம்லா 122 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடனும், டீன் எல்கர் 164 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடனும் அரைசதம் அடித்தனர்.

2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 66 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா 54 ரன்னுடனும், டீன் எல்கர் 57 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. அம்லா (56), டீன் எல்கர் (57) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தென்ஆப்பிரிக்கா 70 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. #SAvAUS #AUSvSA #Amla #Elgar

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/10190110/1150169/SAvAUS-2nd-Test-amla-elgar-half-century-south-africa.vpf

 

3.png&h=42&w=42

263/7 * (95 ov)
 
  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் முன்னிலை பெற்றது தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர், ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் அரை சதம்

 

 
11CHPMUAMLA

மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறிய ஹசிம் ஆம்லா.   -  படம்: ஏஎப்பி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி போராடி முன்னிலை பெற்றது. டீன் எல்கர், ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

போர்ட்எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 63, பான்கிராப்ட் 38, டிம் பெய்ன் 36, ஸ்டீவ் ஸ்மித் 25, ஷான் மார்ஷ் 24 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5, நிகிடி 3, பிலாண்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

முதல் விக்கெட்டுக்கு வார்னர் - பான்கிராப்ட் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த போதிலும் மற்ற வீரர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்கள். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 11 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

டீன் எல்கர் 11, ரபாடா 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. ரபாடா 40 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 29 ரன் கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஹசிம் ஆம்லா, எல்கருடன் இணைந்து நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.

இந்த ஜோடி ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை கவனமாக எதிர்கொண்டது. ஆம்லா 122 பந்துகளில், 6 பவுண்டரிகளுடனும், எல்கர் 164 பந்துகளில், 6 பவுண்டரிகளுடனும் அரை சதம் கடந்தனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை மிட்செல் ஸ்டார்க் பிரித்தார். அபராமாக வீசப்பட்ட ரிவர்ஸ் ஸ்விங்கில் ஆம்லா ஆஃப் ஸ்டெம்பை பறிகொடுத்தார். ஆம்லா 148 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார். எல்கருடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு ஆம்லா 88 ரன்கள் சேர்த்தார்.

சிறிது நேரத்தில் எல்கரும் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 197 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் ஹசல்வுட் பந்தில் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டீன் எல்கர். அப்போது ஸ்கோர் 155 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 9, தியூனிஸ் டி பிரைன் 1 ரன் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷின் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குயிண்டன் டி காக் 9 ரன்களில் நாதன் லயன் பந்தில் போல்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த போதும் மறு முனையில் அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 62 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். 91-வது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 243 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.

நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 95 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும், பிலாண்டர் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ், மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 20 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி கைவசம் 3 விக்கெட்கள் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடு கிறது.

http://tamil.thehindu.com/sports/article23038614.ece

  • தொடங்கியவர்

3 வருடத்திற்குப் பிறகு டி வில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தல்

 
அ-அ+

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போர்ட் எலிசபெத் டெஸ்டில் டி வில்லியர்ஸ் சதம் அடித்து அணியை முன்னிலைப் பெற செய்துள்ளார். #SAvAUS

 
3 வருடத்திற்குப் பிறகு டி வில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தல்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. வார்னர் 63 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் (57), ஹசிம் அம்லா (56) அரைசதம் அடித்து அவுட்டானார்கள். அதன்பின் வந்த முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த போதிலும், அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டி வில்லியர்ஸ் அரைசதம் அடிக்க நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும், பிலாண்டர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201803111502434500_1_Devilliers1-s._L_styvpf.jpg

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 300-ஐ தாண்டியது. அணியின் ஸ்கோர் 311 ரன்னாக இருக்கும்போது பிலாண்டர் 36 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து மகாராஜ் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய டி வில்லியர்ஸ் 109-வது ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 22-வது சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சதம் அடித்திருந்தார்.

அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதுதான் சதம் அடித்துள்ளார். இவரது சதத்தால் தென்ஆப்பிரிகா முதல் இன்னிங்சில் 100-க்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. #SAvAUS #AUSvSA

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/11150243/1150245/SAvAUS-De-Villiers-century-after-3-years.vpf

  • தொடங்கியவர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 180/5

 

 
 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. #SAvAUS

 
 
 
 
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 180/5
 
போர்ட் எலிசபெத்:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாளில் ஆஸ்திரேலியா 71.3 ஓவர்களில் 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரபாடா 96 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

201803120116396800_1_s9ms2wkz._L_styvpf.jpg

அதன்பின், தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 11 ரன்னுடனும், நைட்வாட்ச்மேன் ரபாடா 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளில் அம்லா 56 ரன்களுடனும், டீன் எல்கர் 57 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். ஆட்டநேர முடிவில், தென்ஆப்பிரிக்கா அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும்,
பிலெண்டர் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பிலாண்டர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய  மகாராஜ் அதிரடியாக விளையாடி 24 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் அடித்து அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் சதமடித்து அசத்தினார். இது அவரது 22-வது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.

அடுத்து நிகிடி 5 ரன்னில் ரன்அவுட் ஆக தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 118.4 ஓவரில் 382 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டி வில்லியர்ஸ் 126 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 139 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், மிச்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஸ்டார்க், லியான் ஆகியோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதன்பின், ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பான்கிராப்டும், வார்னரும் களமிறங்கினர். வார்னர் 13 ரன்களும், பான்கிராப்ட் 24 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அவரை தொடர்ந்து இறங்கிய உஸ்மான் கவாஜா பொறுப்புடன் விளையாடினார். ஆட்டமிழந்தார். ஸ்மித் 11 ரன்னிலும், ஷான் மார்ஷ் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். நிதானமாக ஆடிய கவாஜா 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய மிச்செல் மார்ஷும், டிம் பைனும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து, ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. மிச்செல் மார்ஷ் 39 ரன்களுடனும், டிம் பைன் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகாராஜ், நிகிடி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்காவை விட 41 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #SAvAUS #AUSvSA

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/12011639/1150320/australia-1805--against-south-africa-in-second-test.vpf

  • தொடங்கியவர்

239 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்காவிற்கு 101 ரன்கள் இலக்கு

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 101 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #SAvAUS

 
239 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்காவிற்கு 101 ரன்கள் இலக்கு
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வார்னர் 63 ரன்கள் அடிக்க, ரபாடா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா டி வில்லியர்சின் அபார சதம் (126 அவுட் இல்லை), டீன் எல்கர் (57), அம்லா (56) அரைசதங்களால் 382 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

201803121516085591_1_warner2-s._L_styvpf.jpg

பின்னர் 139 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. வார்னர் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். பான்கிராப்ட் 24 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் க்ளீன் போல்டானார். நட்சத்தி வீரர் ஸ்மித் 11 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 1 ரன்னிலும் வெளியேற, ஆஸ்திரேலியா 86 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 3-வது வீரராக களம் இறங்கிய கவாஜா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

201803121516085591_2_rabada001-ssa._L_styvpf.jpg

6-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் விக்கெட் கீப்பர் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 39 ரன்னுடனும், பெய்ன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பெய்ன் தாக்குப்பிடித்து விளையாட மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கம்மின்ஸை 5 ரன்னில் வெற்றியேற்றினார். இதன்மூலம் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார்.

201803121516085591_3_Devilliers-ssss._L_styvpf.jpg

அடுத்து வந்த ஸ்டார்க் 1 ரன்னிலும், நாதன் லயன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 211 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது. கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஹசில்வுட் 17 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பெய்ன் 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 6 விக்கெட்டும், மகாராஜ், நிகிடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 139 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஒட்டுமொத்தமாக சரியான 100 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 101 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #SAvAUS #Rabada

https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/12151608/1150466/SAvAUS-2nd-Test-australia-101-runs-target-to-south.vpf

  • தொடங்கியவர்

2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

 

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SAvAUS

 
2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வார்னர் 63 ரன்கள் அடிக்க, ரபாடா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா டி வில்லியர்சின் அபார சதம் (126 அவுட் இல்லை), டீன் எல்கர் (57), அம்லா (56) அரைசதங்களால் 382 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

139 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கவாஜா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 75 ரன்கள் எடுத்தார். இவரது ஆட்டத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 39 ரன்னுடனும், பெய்ன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பெய்ன் தாக்குப்பிடித்து விளையாட மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கம்மின்ஸை 5 ரன்னில் வெற்றியேற்றினார். இதன்மூலம் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார்.

அடுத்து வந்த ஸ்டார்க் 1 ரன்னிலும், நாதன் லயன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 211 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது. கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஹசில்வுட் 17 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பெய்ன் 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 6 விக்கெட்டும், மகாராஜ், நிகிடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

201803121838353936_1_deanelgar2-s._L_styvpf.jpg

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 139 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஒட்டுமொத்தமாக சரியாக 100 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 101 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

101 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எய்டன் மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.  தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 22 ரன்னாக இருக்கும்போது எல்கர் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய மார்கிராம் 21 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த அம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி முறையே 27, 28 ரன்கள் எடுத்தனர். டி வில்லியர்ஸ் அவுட்டாகும்போது தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.

201803121838353936_2_rabada-sssss._L_styvpf.jpg

5-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் டி ப்ரூயின் ஜோடி சேர்ந்தார். அப்போது தென்ஆப்பிரிக்காவிற்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. டு பிளிசிஸ் நிதானமாக விளையாட, டு பரூயின் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 15 ரன்கள் எடுக்க, தென்ஆப்பிரிக்கா 22.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 11 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

201803121838353936_3_nathannnn-s._L_styvpf.jpg

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுனில் 22-ந்தேதி தொடங்குகிறது. #SAvAUS

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/12183835/1150519/SAvAUS-south-africa-beats-australia-by-6-wickets.vpf

  • தொடங்கியவர்

எதிர்பார்த்தது போல் ரபாடாவிற்கு 2 போட்டியில் விளையாட தடை

 

ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் துணைக் கேப்டனுடன் மோதிக் கொண்ட ரபாடாவிற்கு 2 போட்டியில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. #SAvAUS

 
எதிர்பார்த்தது போல் ரபாடாவிற்கு 2 போட்டியில் விளையாட தடை
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. நான்காவது நாளான இன்றுடன் முடிவடைந்த இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு ரபாடா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா, 2 இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

முதல் இன்னிங்சில் ஸ்மித்தை எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்மித் வெளியேறிய போது, மகிழ்ச்சியில் ரபாடா ஸ்மித் மீது தோள்பட்டையை வைத்து இடித்தார். இதனால் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2-வது இன்னிங்சில் வார்னரை க்ளீன் போல்டாக்கினார். வார்னர் அவுட்டானதும் அவரது முகம் அருகில் சென்று கொக்கரித்தார். இதனாலும் குற்றம்சாட்டப்பட்டது.

201803122144243472_1_rabadaa2-s._L_styvpf.jpg

ஸ்மித்திற்கு எதிரான குற்றச்சாட்டிற்காக மூன்று டிமெரிட் புள்ளிகளும், வார்னருக்கு எதிராக குற்றாச்சாட்டில் ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஐந்து டிமெரிட் புள்ளிகள் பெற்றிருந்ததால் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஸ்மித் விவகாரத்தில் போட்டியின் சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #SAvAUS
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/12214424/1150536/Kagiso-Rabada-suspended-for-two-Tests-by-ICC.vpf

  • தொடங்கியவர்

ஜீனியஸ் டி வில்லியர்ஸின் அந்த ஷாட்... ரபாடாவின் 11 விக்கெட்... தென்னாப்பிரிக்கா வென்றது எப்படி? #SAvsAUS

 
 

மீண்டும் ஒருமுறை தென்னாப்பிரிக்கா திருப்பி அடித்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் டி வில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார்.  ரபாடா `டேஞ்சரஸ் பெளலர்’ எனப் பெயரெடுத்திருக்கிறார். முதன்முறையாக இந்தத் தொடரில் டி வில்லியர்ஸை ஆஸ்திரேலிய பெளலர்கள் அவுட்டாக்கியிருக்கிறார்கள். தொடர் 1-1 சமநிலை அடைந்திருக்கிறது. கேப் டவுனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதன்முறையாகத் தங்கள் மண்ணில் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு கணிந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது. #SAvsAUS

SAvsAUS

 

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல் என்றாலே களத்தில் அனல் பறக்கும். ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் களத்துக்கு வெளியிலும் அனல் அடித்தது. டர்பன் டெஸ்ட் போட்டியில் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் செல்லும் வழியில் டி காக், டேவிட் வார்னர் பர்சனலாகத் திட்டிக்கொண்டது, இரு நாடுகளைக் கடந்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. போதாக்குறைக்கு ரன் அவுட் செய்துவிட்டு, கீழே விழுந்து கிடந்த டி வில்லியர்ஸ் அருகே நாதன் லியான் பந்தைப் போட்டுச் சென்று அவமதித்த பஞ்சாயத்தும் ஒரு பக்கம் சூடேற்றியது. `ஆஸ்திரேலியர்கள் எப்போதுமே அப்படித்தான்...’ எனத் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி பிரஸ் மீட்டில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். 

ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றிருந்ததால், போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் `நாங்கள் யார்னு காட்றோம்’ எனும் முனைப்பில் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. டர்பன் டெஸ்ட்டில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவையான நேரத்தில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது நாள் ஆட்டத்தின் முதலிரண்டு செஷன்களில் எல்கர் - ஆம்லா ஆடியதுதான் யதார்த்தமான டெஸ்ட் கிரிக்கெட்.

#SAvsAUS Hashim Amla

எல்கர் - ஆம்லா ஜோடியைப் பிரிப்பதற்குள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் படாதபாடுபட்டார். ஸ்டார்க், கம்மின்ஸ், மிச்செல் மார்ஷ், ஹேசில்வுட் என்ற வேகப்புயல்கள் போட்டுத் தாக்கினர். நாதன் லியான் என்னென்னமோ வித்தை காட்டினார். ம்ஹும்... ஆம்லா அசையவில்லை. அடித்தால்தானே அவுட்டாவதற்கு. ஆம்லாவுடன் போட்டி போட்டு நங்கூரம் போட்டார் எல்கர். ரன்ரேட் 1.65-ஐத் தாண்டவில்லை. இருவரும் இணைந்து  88 ரன்கள் எடுக்க சந்தித்த பந்துகள் 278. ஆம்லா 148 பந்துகளில் 56 ரன்களும், எல்கர் 197 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து `டெஸ்ட்னா இப்படித்தான் ஆடணும்’ என வகுப்பெடுத்துச் சென்றனர். கூடவே வெகு விரைவாக ஆல் அவுட் செய்துவிடலாம் என்ற ஸ்டீவ் ஸ்மித்தின் கனவில் மண் அள்ளிப் போட்டனர். 

டெஸ்ட் கிரிக்கெட் செஷன்களால் ஆனது. ஒரு செஷனில் ரன்கள் குவியும். அடுத்த செஷனில் விக்கெட்டுகள் சரியும். மதிய உணவு - டிரிங்ஸ் இரண்டுக்குமான இடைவெளியில் அதாவது இரண்டாவது செஷனில், இரண்டு பவுண்டரிகளுடன் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த தென்னாப்பிரிக்கா, டிரிங்ஸ் - End of the day இடைவெளியில் இழந்தது ஐந்து விக்கெட்டுகள். அதாவது ஆம்லா, எல்கர், டு பிளெஸ்ஸி, டி ப்ரயுன், டி காக் என முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாம் பெவிலியன் திரும்பி விட்டனர்.  ஆனால், முந்தைய செஷன் போல இல்லை. இந்த முறை 110 ரன்கள் வந்திருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது. மிச்செல் ஸ்டார்க் அசுர வேகத்தில் பயமுறுத்திக்கொண்டிருந்தார். ஆனால், அதை அநாயசமாகக்  கடந்து போய்க்கொண்டிருந்தார் ஒருவர். அவர் பெயர் டி வில்லியர்ஸ். 

SAvsAUS De villiers

டி வில்லியர்ஸ் சாதாரண பேட்ஸ்மேன் இல்லை. எதிரணியின் கேப்டனிலிருந்து கிரிக்கெட் நிபுணர் வரை சொல்லும் வார்த்தை இது. ஏனெனில், அவர் களத்தில் ரிலாக்ஸாக இருப்பதில்லை. எதிரணியினரை ரிலாக்ஸாக இருக்க அனுமதிப்பதில்லை. அக்ரசிவ், பாசிட்டிவ் என அவ்வளவு எனர்ஜியுடன் இருப்பார். அவரிடம் வேகம் எடுபடாது, ஸ்பின் எடுபடாது, ரிவர்ஸ் ஸ்விங் எடுபடாது. வாய்ப்புக் கிடைத்தால் முதல் பந்திலிருந்தே அடிக்க ஆரம்பித்து விடுவார். அது எந்த பெளலராக இருந்தாலும் சரி, எந்த வேகத்தில் வந்தாலும் சரி, எந்த லைனில் வந்தாலும் சரி, எந்த லென்த்தில் விழுந்தாலும் சரி... அடிக்க நினைத்தால் அடி. 

அப்படித்தான் வந்ததும் வராததுமாக மிச்செல் ஸ்டார்க் பந்தில் ஒரு கவர் டிரைவ் அடித்தார். அதுவரை ஆம்லா - எல்கரின் டிஃபன்ஸிவ் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் உற்சாகம் அடைந்தனர். அதே சூட்டோடு ஒரு ஃபுல் ஷாட். பந்து ஸ்கொயர் லெக் பக்கம் இருந்த கயிற்றைத் தாண்டி உருண்டது. பேட் கம்மின்ஸ் பந்தில் ஒரு ஸ்கொயர் கட், ஒரு ஃபுல் ஷாட், ஒரு ஆன் டிரைவ் என ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து வெரைட்டி காட்டினார். ஸ்டீவ் ஸ்மித் தலைமேல் கை வைத்தார். புதிய பந்தை எடுத்தார். அதை நாதன் லியான் கையில் கொடுத்தார். `ஓ ஸ்பின்னா... வரட்டும் வரட்டும்’ என அதையும் வெளுத்துக் கட்டினார். கண்ணுக்கு குளிர்ச்சியாக ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் தட்டிவிட்டார். டி வில்லியர்ஸ் மறு அவதாரம் எடுத்தார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்கா 263/7 (டி வில்லியர்ஸ் 74, பிலாந்தர் 14).

 

மறுநாள் எப்படியும் டி வில்லியர்ஸ் சதம் அடித்து விடுவார் என எதிர்பார்த்தனர். அது நடந்தது. பேட் கம்மின்ஸ் பெளன்ஸராக வீசியதை அலட்டாமல் தேர்ட் மேன் ஏரியாவில் பவுண்டரி தட்டிவிட்டு சதம் கடந்தார் டி வில்லியர்ஸ். வர்ணனையில் இருந்த கிரீம் ஸ்மித்  வர்ணனை செய்வதை மறந்து பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டிருந்தார். இருக்காதே பின்னே...! 2015 ஜனவரிக்குப் பின் முதன்முறையாக டி வில்லியர்ஸ் டெஸ்ட்டில் சதம் அடிக்கிறார். சர்வதேச அரங்கில் 22-வது சதம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6-வது சதம். வாட் டே இன்னிங்ஸ்... வர்ணனையாளர்கள் புகழ்கின்றனர். ஆம், என  டேவிட் வார்னரும் கைதட்டி ஆமோதிக்கிறார். வாட் டே பிளேயர். ட்விட்டர் பாராட்டுகிறது. எல்லோரும் தடுமாறும்போது எழுந்து நிற்பது டி வில்லியர்ஸ் பியூட்டி. மற்றவர்கள் எல்லாம் ரிவர்ஸ் ஸ்விங்கில் தடுமாறியபோது அதை வெளுத்துக்கட்டி அடித்த இந்த சதம், டி வில்லியர்ஸின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் இன்னிங்ஸ். இரண்டாவது இன்னிங்ஸில் டி வில்லியர்ஸ் அதிக நேரம் களத்தில் இல்லை என்றாலும், ஹேஸில்வுட் பந்தில் அடித்த அந்த ஒரு ஸ்ட்ரெய்ட் டிரைவ் போதும். அதெல்லாம் ஜீனியஸ்களுக்கு மட்டுமே உரித்தான ஷாட்.

SAvsAUS De villiers

போதும் டி வில்லியர்ஸ் புராணம். ரபாடா மட்டும் குறைந்தவரா என்ன? முதல் இன்னிங்ஸில் 5. இரண்டாவது இன்னிங்ஸில் 6. மொத்தம் 11 விக்கெட்டுகள். தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று பேர் மட்டுமே நான்குக்கும் மேற்பட்ட முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 86 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய ஸ்டெயின் ஐந்து முறையும், 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிதினி நான்கு முறையும் இதற்கு முன் அந்தச் சாதனையைப் படைத்திருந்தனர். ரபாடா 22 வயதில், 28-வது டெஸ்ட் போட்டியிலேயே அந்த மைல்கல்லை எட்டிவிட்டார். 

ரபாடா இந்த டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், முதல் இன்னிங்ஸில் அவர் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபுள்யு முறையில் அவுட்டாக்கியதும், இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னரை போல்டு செய்ததும்தான் அவரது பெளலிங்கின் உச்சம். அதிலும் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டெல்லாம் வெற லெவல்.  அவுட்டாக்கிவிட்டு yes yes yes... என ஆக்ரோஷமாகக் கத்தியதும், நடந்து சென்று கொண்டிருந்தபோதே ஸ்டீவ் ஸ்மித்தின் பின்னால் தோளில் உரசியதும், ஆக்ரோஷத்தின் அடுத்த கட்டம். இதற்காகவே அவர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டார். தற்போது ரபாடாவுக்கு அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆக்ரோஷத்தை மட்டும் கட்டுப்படுத்திக்கொண்டால் ரபாடா `ஒன் ஆஃப் தி பெஸ்ட் டெஸ்ட் பெளலர்’ எனப் பெயரெடுப்பார்.

ஆஸி இப்போது அடிபட்ட புலி. கேப் டவுனில் அவர்கள் இன்னும் உக்கிரமாக இருப்பார்கள். எப்படியோ, டெஸ்ட் கிரிக்கெட் இதுபோன்ற மோதல்களால்தான் உயிர்ப்புடன் இருக்கிறது! 

https://www.vikatan.com/news/sports/119021-rabadas-11-wicket-haul-puts-south-africa-in-command.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கேப்டவுன் டெஸ்ட்- தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #SAvAUS

 
கேப்டவுன் டெஸ்ட்- தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த இரண்டு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் கேப்டவுன் நியூலேண்டு மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். தென்ஆப்பிரிக்கா ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் என்பது மிகவும் முக்கியமான. தொடரை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் முக்கியமான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்றுள்ளது.

201803221354035407_1_Morkel-ss._L_styvpf.jpg

தென்ஆப்பிரிக்கா அணியில் ப்ரூயின், நிகிடி நீக்கப்பட்டு பவுமா, மோர்னே மோர்கல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டீன் எல்கர், 2. மார்கிராம், 3. ஹசிம் அம்லா, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. டு பிளிசிஸ், 6. டெம்பா பவுமா, 7. டி காக், 8. பிலாண்டர், 9. மகாராஜ், 10. ரபாடா, 11. மோர்னே மோர்கல்.

ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டேவிட் வார்னர், 2. பான் கிராஃப்ட், 3. உஸ்மான் கவாஜா, 4. ஸ்மித், 5. ஷேன் மார்ஷ், 6. மிட்செல் மார்ஷ், 7. டிம் பெய்ன், 8. பேட் கம்மின்ஸ் 9. மிட்செல் ஸ்டார்க், 10. நாதன் லயன், 11. ஹசில்வுட். #SAvAUS #AUSvSA #SportNews

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/22135403/1152500/SAvAUS-Cape-Town-Test-south-africa-won-toss-select.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.