Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்’- அப்ரீடி ட்வீட்டால் பரபரப்பு: சமூக வலத்தளங்களில் விளாசல்

Featured Replies

‘இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்’- அப்ரீடி ட்வீட்டால் பரபரப்பு: சமூக வலத்தளங்களில் விளாசல்

 

 
afridi

அப்ரீடி. | படம். அகிலேஷ் குமார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரீடி இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர், என்றும் சுயநிர்ணய உரிமை தேவை என்றும் ட்வீட் செய்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

அவர் தனது ட்விட்டரில், “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியினால் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை, விடுதலைக் குரல்களை ஒடுக்க காஷ்மீரில் அப்பாவிகள் பலியாகின்றனர். எங்கே சென்றது ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை?” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

 

Appalling and worrisome situation ongoing in the Indian Occupied Kashmir.Innocents being shot down by oppressive regime to clamp voice of self determination & independence. Wonder where is the @UN & other int bodies & why aren't they making efforts to stop this bloodshed?

காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் 13 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பிறகு ஷாகித் அப்ரீடியின் டிவீட் வெளியாகியுள்ளது. இதே சண்டையில் 3 ராணுவ வீரர்கள் 4 அப்பாவிப் பொதுமக்களும் பலியானார்கள்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் அடையாளம் காணப்பட்ட இருவர் ரயீஸ் அகமட் தோக்கர், இஷ்பாக் அகமட் மாலிக் ஆகியோர்களாவர். இவர்கள் இருவர் மே 2017-ல் ராணுவ அதிகாரி உமர் ஃபயாஸை அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியே காஷ்மீர் என்பதுதான் இந்தியத் தரப்பாகும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று கூறப்படுவது போல் இவரும் இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று ட்வீட் செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து ஷாகித் அஃப்ரீடி முதல் முறையாக இப்படி கூறவில்லை.

கடந்த 2016-ல் மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த காஷ்மீர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/article23425831.ece

  • கருத்துக்கள உறவுகள்

** ஆக்கிரமிப்பாளன் 1 (இந்தியா) மீது ஆக்கிரமிப்பாளன் 2 (பாகிஸ்தானி) குற்றம் சுமத்தினார். :(

** பாதிக்கப்பட்ட நபர் ஆக்கிரமிப்பாளன் 3 (காஷ்மீரி). :unsure:

** காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்ட  பூர்வகுடி தமிழன் ஐபிஎல் பார்ப்பதில் பிசி. tw_blush:

  • தொடங்கியவர்

அப்ரீடியின் காஷ்மீர் ‘கொதிப்பு’க்கு கவுதம் கம்பீரின் கடும் கலாய்ப்பு ட்வீட்

 
gambhir

கவுதம் கம்பீர்   -  படம். | சி.வெங்கடாசலபதி

ஷாகித் அப்ரீடி மீண்டுமொரு முறை காஷ்மீர் பற்றி பேசி சமூக வலைத்தளவாசிகளின் ட்ரோல்களில் சிக்கிக் கொண்டார். கவுதம் கம்பீர் தன் பங்குக்கு அவரை கடுமையாகக் கிண்டல் செய்து பதில் ட்வீட் செய்துள்ளார்.

ஷாகித் அப்ரீடி “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்” என்றும் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை என்றும் விடுதலைக் குரலை நசுக்கும் அடக்குமுறை என்றும் ஐநா அதாவது UN உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? என்றும் தன் ட்விட்டரில் கொதிப்படைந்துள்ளார்.

 

இதற்குக் கவுதம் கம்பீர் தன் ட்விட்டர் பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளார்:

ஷாகித் அப்ரீடி ட்வீட் குறித்து ஊடகங்கள் என் எதிர்வினையைக் கோருகின்றன. என்னத்தைச் சொல்வது? அப்ரீடியின் குறைபாடுடைய அகராதியில் UN என்பது "UNDER NINTEEN" (his age bracket) என்பதாக அர்த்தமாகியிருக்கும். ஊடகங்கள் ரிலாக்ஸாக இருங்கள். நோ-பாலில் அவுட் ஆனதற்கு கொண்டாட்டம் போட்டவர்தானே அப்ரீடி.

என்று கடுமையாகக் கிண்டல் செய்து ட்வீட் செய்திருப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

Media called me for reaction on @SAfridiOfficial tweet on OUR Kashmir & @UN. What’s there to say? Afridi is only looking for @UN which in his retarded dictionary means “UNDER NINTEEN” his age bracket. Media can relax, @SAfridiOfficial is celebrating a dismissal off a no- ball!!!

 

 

http://tamil.thehindu.com/sports/article23426914.ece

  • தொடங்கியவர்

காஷ்மீர்: சமூக ஊடகத்தில் இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மோதல்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பான மோதல் தற்போது இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களிடையிலான மோதலாக சமூக ஊடகத்தில் பிரதிபலிக்கிறது.

கௌதம் கம்பீர் மற்றும் அஃப்ரிடிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவும், பாகிஸ்தானும் மாறி மாறி உரிமைகோரி வருகின்ற காஷ்மீர் பகுதி தொடர்பாக டுவிட்டரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாஹித் அஃப்ரிடியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீரும் வார்த்தைகளால் மோதியுள்ளனர்.

'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில்' நிலைமை பயங்கரமாக, கவலைக்குரியதாக உள்ளது என்று செவ்வாய்க்கிழமை அஃப்ரிடி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். சுய நிர்ணய உரிமை மற்றும் விடுதலைக்கான குரலை ஒடுக்குவதற்காக, ஆதிக்க அரசினால் அப்பாவிகள் சுட்டு வீழ்த்தப்படுவதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் ஏன் ரத்தக்களரியை நிறுத்த முயற்சி எடுக்கவில்லை என்றும் அவர் கேட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், அஃப்ரிடி ஐ.நா.வைத் தேடுகிறார். அவரது குறைபாடுள்ள அகராதியில் யு.என். என்பதற்கு 'அன்டர் நைன்டீன்' (19 வயதுக்கு கீழுள்ளவர்கள்) என்று பொருள் என்றும், அது அஃப்ரிடியின் வயதைக் குறிப்பதாகவும் கிண்டல் செய்துள்ளார். நோ பாலில் அவுட் செய்துவிட்டு கொண்டாட்டத்தில் உள்ளார் அஃப்ரிடி என்றும் அவர் தமது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

60 ஆண்டுகளுக்கு மேலான காஷ்மீர் பிரச்சனை வன்முறையை உருவாக்குவதாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் இரண்டு போர்களை நடத்தியுள்ளன.

ஸ்ரீநகரின் தென் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டைகளில் இந்தியப் படையினர் குறைந்தது 3 பேரும், தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் 13 பேரும் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதல்களால் ஏற்பட்ட போராட்டங்களில் குடிமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர், 200க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர்.

 
 

Appalling and worrisome situation ongoing in the Indian Occupied Kashmir.Innocents being shot down by oppressive regime to clamp voice of self determination & independence. Wonder where is the @UN & other int bodies & why aren't they making efforts to stop this bloodshed?

 
 


IO9HJOkv_normal.jpg

 

Media called me for reaction on @SAfridiOfficial tweet on OUR Kashmir & @UN. What’s there to say? Afridi is only looking for @UN which in his retarded dictionary means “UNDER NINTEEN” his age bracket. Media can relax, @SAfridiOfficial is celebrating a dismissal off a no- ball!!!

 
 
 

 

இன்னொரு ட்வீட் மூலம் அஃப்ரிடி பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களோடு அஃப்ரிடி நின்று எடுத்திருந்த புகைப்படத்தோடு இந்த முறை பதில் வந்தது. நாம் எல்லோரையும் மதிக்கிறோம். இது (புகைப்படம்) விளையாட்டு வீரராக ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், மனித உரிமை என்று வரும்போது (இதுபோன்ற ஆதரவை) அப்பாவி காஷ்மீரிகளுக்கும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் பதிலளித்தார்.

 
 

We respect all. And this is an example as sportsman. But when it comes to human rights we expect the same for our innocent Kashmiris.

 
 
 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் காஷ்மீர் பற்றி சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டவர் அஃப்ரிடி மட்டுமல்ல. அரசியல்வாதியாக மாறிய கிரிக்கெட் வீரர் இம்ரான்கானும் ஐக்கிய நாடுகள் அவை தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி திங்கள்கிழமை ட்வீட் செய்திருந்தார்.

 
 

Strongly condemn the brutality of Indian forces against innocent Kashmiris and the killing of unarmed civilians in IOK. The people of Pak stand with the Kashmiris democratic struggle for self determination. The UNSC must act against Indian aggression in IOK.

 
 
 

 

காஷ்மீர் பிரச்சினை இந்தியர்களுக்கும், பாகிஸ்தானியருக்கும் இடையில் கடும் எதிர்வினைகளை உருவாக்குகிறது.

1980களின் பிந்தைய ஆண்டுகள் தொடங்கி, இந்திய ஆட்சிக்கு எதிராக பிரிவினைவாதிகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நடைபெறுகின்ற மோதல்களால் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக அதீதமான பலப்பிரயோகம் செய்யப்படுவதாக இந்தியப் பாதுகாப்புப் படைகள் அடிக்கடி குற்றஞ்சாட்டப்படுகின்றன. இதை இந்திய அரசு மறுத்து வருகிறது.

காஷ்மீர் பிரச்சினை

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னரே, காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்தது.

இந்திய சுதந்திர சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பிரிவினை திட்டத்தின் கீழ், இந்தியா அல்லது பாகிஸ்தானோடு இணைவதற்கான சுதந்திரம் காஷ்மீருக்கு இருந்தது.

காஷ்மீரை ஆண்டு வந்த மகாராஜா ஹரி சிங் இந்தியாவோடு இணைய முடிவு செய்தார். இதையடுத்து யுத்தம் மூண்டு இரண்டாண்டுகள் நடந்தன.

1965ம் ஆண்டு இன்னொரு போர் நடைபெற்றது. 1999ம் ஆண்டு பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற படைப்பிரிவுகளோடு சிறிய, ஆனால் கசப்பான போரை இந்தியா நடத்தியுள்ளது.

இதனிடையே, இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களை அணு ஆயுதசக்திகளாக அறிவித்துக்கொண்டுள்ளன.

http://www.bbc.com/tamil/sport-43641806

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.