Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீட் தேர்வு பயண தூரத்தில் சீனா - வட கொரியா இடையே 3 முறை போகலாம் - வரைபட விளக்கம்

Featured Replies

நீட் தேர்வு பயண தூரத்தில் சீனா - வட கொரியா இடையே 3 முறை போகலாம் - வரைபட விளக்கம்

 

ஒரு தமிழக மாணவர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூருக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தூரத்திற்கு, இரண்டு முறை கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று மீண்டும் கனடா திரும்பலாம்.

நீட்படத்தின் காப்புரிமைGOOGLE MAPS

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, இந்தியா முழுவதும் நாளை நடக்க உள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழத்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது மேலும் ஒரு இடியாகப் பல தமிழக மாணவர்களுக்கு, ராஜஸ்தான், கேரளா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீட்படத்தின் காப்புரிமைPRAKASH SINGH

சேலத்தை சேர்ந்த ஒரு மாணவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள தேர்வு மையத்திற்குச் சாலை வழியாக சென்றால் 2,232 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். சென்னையில் இருந்து வான் வழியாக செல்ல வேண்டும் என்றால், சேலத்தில் இருந்து சாலை வழியாக 339 கிலோ மீட்டர் பயணித்து சென்னை வர வேண்டும். பிறகு சென்னையில் இருந்து 1,606 கிலோ மீட்டர் வான் வழியாக பயணித்து ஜெய்பூர் செல்ல வேண்டும். இதற்கு கிட்டதட்ட 2,000 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.

அதே போல சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர் சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு 2,343 கிலோ மீட்டர் பயணித்து செல்ல வேண்டும்.

இந்தியா பரப்பளவில் மிகப்பெரியா நாடாக இருப்பதால், சராசரியான இந்த 2,000 கிலோ மீட்டர் என்பது ஒரே நாட்டிற்குள் இருக்கிறது. இதுவே உலகின் வேறு பகுதிகளில் 2,000 கிலே மீட்டர் பயணம் என்பது பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் பயணமாக இருக்கும்.

தமிழகத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கும், சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிற்கு பயணம் செய்யும் தூரத்தை வேறு சில நாடுகளில் இருந்து மேற்கொள்ளும் பயணமாக இருந்தால், அது எப்படி இருக்கும்? சில எடுத்துக்காட்டுகள்:

நீட்படத்தின் காப்புரிமைGOOGLE MAPS

கனடா நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் இருந்து, அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கிற்கு 540 கிலோ மீட்டர். ஒரு தமிழக மாணவர் ராஜஸ்தான் செல்லும் தூரத்திதில், இரண்டு முறை ஒட்டாவாவில் இருந்து நியூயார்க் சென்று திரும்பலாம்.

நீட்படத்தின் காப்புரிமைGOOGLE MAPS

வட கொரியாவின் தலைநகரான பியாங்காங்கில் இருந்து சீனத் தலைநகர், பெய்ஜிங்கிற்கு 808 கிலோ மீட்டர். சீனாவில் இருந்து இரண்டு மணி நேர விமானப் பயணத்தில் பியாங்யாங் சென்றுவிடலாம். சென்னையில் இருந்து கிக்கிம் சென்றால் 2,343 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். ஆனால், 2,424 கிலோ மீட்டரில் பெய்ஜிங்கில் இருந்து பியாங்யாங் சென்று திரும்பி மீண்டும் ஒரு முறை பியாங்யாங் சென்றுவிடலாம்.

நீட்படத்தின் காப்புரிமைGOOGLE MAPS

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஹம்பர்க் நகரத்திற்கு 1,800 கிலோ மீட்டர் பயணத்தில் சென்றுவிடலாம். அதே போல், 1808 கிலோ மீட்டரில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றுவிடலாம்.

நீட்படத்தின் காப்புரிமைGOOGLE MAPS

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு 1,263 கிலோ மீட்டர் தூரம். சென்னையில் இருந்து சிக்கிம் செல்லும் தூரம், லண்டனில் இருந்து மாட்ரிட் சென்று மீண்டும் லண்டன் திரும்பும் தூரத்துக்கு சமம்.

நீட்படத்தின் காப்புரிமைGOOGLE MAPS

இந்தியத் தலைநகர் டெல்லியில் இருந்து செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திற்கு 3051 கிலோ மீட்டர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளை கடந்து செளதி அரேபியாவிற்கு செல்ல வேண்டும். சென்னையில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சென்று நீட் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் சென்னை வந்து சேரும் தூரம் இது.

நீட்படத்தின் காப்புரிமைGOOGLE MAPS

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரசிலாவில் இருந்து, அர்ஜண்டீனா தலைநகர் ப்யூனோஸ் அயர்சுக்கு செல்லும் தூரமும், சென்னையில் இருந்து சிக்கிம் செல்லும் தூரமும் கிட்டத்தட்ட சமம்.

நீட்படத்தின் காப்புரிமைGOOGLE MAPS

தென் ஆஃப்ரிக்க தலைநகரான கேப்டவுனில் இருந்து, ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவுக்கு 2,180 கிலோ மீட்டர். இடையில் போஸ்ட்வானா என்ற நாட்டைக் கடந்து செல்லவேண்டும். இது சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் தூரம்.

நீட்படத்தின் காப்புரிமைGOOGLE MAPS

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு விமானத்தில் பயணித்தால் 1,120 கிலோ மீட்டர். சென்னையில் இருந்து ஜெய்பூருக்கு விமானத்தில் பயணித்தால் 1600 கிலோ மீட்டர்.

https://www.bbc.com/tamil/india-44014856

  • தொடங்கியவர்

நீட் தேர்வு..! சி.பி.எஸ்.இ விதித்துள்ள கட்டுப்பாடுகள்

 
 

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

4da30676-dd4b-40c9-8153-8069d7dcffc5_081

  • நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் ஹால்டிக்கெட், மற்றும் இரண்டு பாஸ்போட் அளவு புகைப்படங்களை எடுத்துச் செல்லவேண்டும். 
  • ஒரு புகைப்படம், ஹால்டிக்கெட்டில் ஒட்டுவதற்கும் மற்றொன்று வருகைப் பதிவில் ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும்.  
  • தேர்வு மையத்துக்குள் வரும் மாணவ, மாணவிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுவார்கள். 
  • கால்குலேட்டர், பர்ஸ்கள், பேனா, துண்டுத்தாள்கள் ஆகிய பொருள்கள் அனுமதிக்கப்படாது. 
  • 9.30 மணிக்கு மேல் வரும் மாணவர்கள், தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அறைக் கை உடை மட்டுமே அணிந்து வரவேண்டும். ஹேர் கிளிப் உள்ளிட்டவற்றை அணிந்து வரக்கூடாது. ஆடைகளில் பெரிய அளவிலான பட்டன்கள் இருக்கக் கூடாது.  
  • தண்ணீர் பாட்டில்கள், பேக்குள் உள்ளிட்டவைகளும் தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை. 
  • ஹீல்ஸ் செருப்புகள், ஷூக்கள் அணிந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மோதிரம், கொலுசு, காதணிகள் போன்றவைகளுக்கும் அனுமதியில்லை.

8050701a-6949-4109-bcd8-657d0a42e0f7_082

0d132767-bbf1-4094-a0c6-ee66d63b495e_085

நீட் தேர்வு..! கடுமையான சோதனைகளுடன் மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுமதி

 
 

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களில் ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்றவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

3830affe-31fb-4934-a1ba-0767bc8bcad4_082

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த‍த் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்த‍த் தேர்வுக்காக நாடு முழுவதும் 2,255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் ஏ-பிரிவு, பி-பிரிவு என்று வழங்கப்பட்டுள்ளது.

b9bb0d18-a96e-4312-9d08-018fed62ae88_084

ஏ-பிரிவு மாணவர்கள் காலை 7.30 மணி முதல் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். காதணிகள், கொலுசுகள் அணிந்திருந்த மாணவிகள், அவற்றை கழற்றிய பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான சோதனைகள் கடுமையாக நடைபெற்றுவருகிறது. 

b78a4df7-dea5-44d9-a4f2-ada354c192dd_080

கலாச்சாரம் சார்ந்த உடைகள் அணியும் மாணவர்கள் 8.30 மணிக்கே தேர்வு அறைக்கு வரவேண்டும். தமிழகத்தில் 170 மையங்களில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். 

நீட் தேர்வு: மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை.!

 

கோவையில் நீட் தேர்வு எழுதவந்த மாணவர்களின் காதுகளுக்குள் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டது.

நீட்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு தொடங்கியுள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற பகுதிகளில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், நெல்லை உள்ளிட்ட 10 இடங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

இதில், கோவையில் மட்டும் 32 மையங்களில்  தேர்வு நடக்கிறது. கோயம்புத்தூரில் மட்டும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளின், தலைகளில் போடப்பட்டிருந்த ஹேர் பேண்டுகள் எடுக்கப்பட்டன. அதேபோல, மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த  கயிறுகள், ஸ்டைல் பேண்டுகள், பெல்ட்டுகள் போன்றவைகளும் எடுக்கப்பட்டன. குறிப்பாக, தேர்வு எழுத வந்த மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், மாணவிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படவில்லை.

https://www.vikatan.com/

 

 

பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும்.. ’பாவப்பட்ட’ நீட் தேர்வு மாணவர்களும்!

 
 

80d415fa-d6fa-4a56-9f62-836ae8c0a41c_083

எர்ணாகுளம் சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளியில் நீட் தீர்வு எழுதவிருக்கும் மாணவர்கள்

வெளிமாநிலத்துக்குச் சென்றுதான் நீட் தேர்வு எழுதவேண்டும் என நிர்பந்திக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்குத் தனி நபர்களாக ஆங்காங்கே பொதுமக்களே களமிறங்கி உதவிவருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் பணியும் அந்த மட்டத்திலேயே இருப்பதா? தமிழக மாணவர்கள் மட்டும் எதிர்கொண்டுள்ள இப்பிரச்னையை முன்னரே மாநில அரசு அறிந்து தடுத்திருக்க வேண்டாமா எனும் கொந்தளிப்பு பரவலாகக் காணப்படுகிறது. 

கடந்த 2016 ம் ஆண்டில் கல்வியமைச்சராக மாஃபா பாண்டியராஜன் இருந்தபோதே இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, விவகாரமாகவே இருந்துவருகிறது. சட்டரீதியாக நீட் தேர்வை ரத்துசெய்யவைப்போம் என்று போகிற இடங்களிலெல்லாம் புன்னகையோடு உறுதிமொழியைத் தந்தவருக்கு, கட்சியில் ஏற்பட்ட கோலத்தால் அமைச்சர் பதவியே பறிபோய்விட்டது. அதன்பிறகு, மருத்துவக் கல்வி துறைக்குப் பொறுப்பான சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் தேர்வு தொடர்பான உறுதிமொழிகளை வழங்கத் தொடங்கினார். தமிழகச் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவானது, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுவரை அதற்கு எந்தப் பதிலும் இல்லை. அதன் நிலை என்னவென்று அறியவே விசாரணை ஆணையங்களை நியமிக்கவேண்டியதைப்போல அவ்வளவு கமுக்கமாக, டெல்லியில் மேல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன! 

எதிர்க்கட்சிகள், மாணவர்கள், சமூகநீதி அமைப்புகளின் தொடர் போராட்டத்தை அடுத்தே, தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவானது, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படாமல் உள்துறை அமைச்சகத்திடமே தேங்கிநிற்பது தெரியவந்தது. அதன் நிலையில் மாற்றமில்லாமல் இருந்துவந்தநிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வேலைகள் இன்னொரு பக்கம் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. மே 6 ம் தேதியன்று நடக்கும் நீட் தேர்வுக்கான தேர்வுக்கூடச் சீட்டுகள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டன. அதில்தான், தமிழக மாணவர்களுக்கு மட்டும் சம்பந்தமில்லாமல் கேரளம் மட்டுமல்லாமல், ராஜஸ்தான், சிக்கிம் போன்ற வெளி மாநிலங்களில் உள்ள தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டது தெரியவந்தது. 

தேர்வுக்குக் குறுகிய காலமே இருக்கும்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் குடும்பத்தினர், பிரச்னையைச் சமூக, அரசியல் அமைப்புகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் கடந்த மாதம் 27-ம் தேதியன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவரவர் ஊர்களுக்கு அருகிலிருக்கும் தேர்வுமையங்களில் இடத்தை ஒதுக்கவேண்டும்; மாநிலத்துக்கு உள்ளேயே அவர்களைத் தேர்வு எழுதவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதை எதிர்த்து, நீட் தேர்வை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மேல்முறையீடு செய்தது. அதில் கடந்த 3-ம் தேதி தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. மேலும், தமிழக மாணவர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்டுள்ள வெளி மாநிலத் தேர்வு மையங்களில்தாம் நீட் தேர்வை எழுதியாக வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. 

தமிழகத்தையே கொந்தளிக்கவைத்த இந்தத் தீர்ப்புக்கு முன்னரும் பின்னரும் தமிழக அரசு என்ன செய்துவருகிறது என்பதுதான், ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் இருக்கும் மனக்குமைச்சலின் உச்சகட்டக் கேள்வி! ஏனென்றால் 5 ம் தேதி மாலைவரை, நீட் தேர்வை வெளிமாநிலத்தில் எழுதும் தமிழக மாணவர்களைப் பற்றிய விவரங்களைக்கூட மாநில அரசால் அணுகமுடியவில்லை. அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொண்டதாகத் தகவல் இல்லை. 

செய்தி ஊடகத்தினர் சென்னை, அண்ணா நகரிலுள்ள மத்திய இடைநிலைக் கல்விவாரிய- சி.பி.எஸ்.இ. இயக்குநரிடம் கேட்டால், தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதால் டெல்லி அதிகாரிகளே பதிலளிக்கமுடியும் என்கிறார். உண்மைதான்! நீட் தேர்வை நடத்துவதற்காக சி.பி.எஸ்.இ. இயக்குநர் ஒருவர் தனியாக அமர்த்தப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர, நீட் தேர்வு நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்க பொறுப்பான எவரும் இல்லை. கவனிக்க... இவையெல்லாம் நீட் குளறுபடிகள் தொடர்பாக அறிவதற்காக, செய்தி ஊடகத்தினர் மேற்கொண்ட முயற்சிகளே தவிர, எட்டுக் கோடி மக்கள்தொகைக்குப் பொறுப்புடைமை கொண்ட தமிழக அரசு ஒரு கேள்வியைக்கூட கேட்டுச் சொல்லவில்லை. 

அரசாங்கம் தொடர்பாக நடந்துவரும் அத்தனை சங்கதிகளைப் பற்றியும் சொல் விளையாட்டு நடத்தாதகுறையாக விளக்கம் தரும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்கூட மாணவர்களின் பிரச்னை குறித்து சாதகமான எந்தத் தகவலையும் கூறவில்லை. 

தமிழகத்தின் வருங்கால மருத்துவர்களான ஆயிரக்கணக்கான இளம் பிள்ளைகளும் பெற்றோரும் செய்வதறியாமல் திகைத்துப்போனார்கள். முழுக்கைச் சட்டையைக் கத்திரித்த கடந்த ஆண்டு நீட் தேர்வுக் கூத்துகள் இன்னும் மறந்துபோகாதநிலையில், மாணவர்களும் பெற்றோரும் உறவினர்களும், ஆம், அவர்களும்தாம் பதற்றமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கவேண்டிய தேர்வுக்காக இரண்டரை மணி நேரத்துக்கு முன்னரே தேர்வு மையத்துக்கு வரச்சொன்னால், மாவட்டத்தைவிட்டுத் தாண்டாத மாணவரும் பெற்றோரும் எவ்வளவு பதற்றப்படவேண்டியிருக்கும்?

நீட் தேர்வு

பொறியியல் படிப்புச் சேர்க்கைக் கலந்தாய்வுக்காக தலைநகர் சென்னைக்கு வரவே தமிழக மாணவர்கள் திணறுவது நின்றபாடில்லை; இதில் வேறு மாநிலம், அதுவும் கோடைவெயில் புழுதிப்புயல் அடிக்கும் ராஜஸ்தான், போக்குவரத்து வசதிகள் குறைந்த, மலைப் பகுதியான சிக்கிம் போன்ற மாநிலங்களுக்குச் சென்று, நீட் தேர்வு மையத்தைத் தேடிப் பிடிப்பது, தங்கும் இடத்தைக் கண்டறிவது, பிறகு தேர்வுக்குத் தயாராவது என சராசரி பொதுசனம் யோசித்தால்கூட, பதற்றத்தைத் தரக்கூடிய காட்சிகள் மனக்கண் முன் வந்து நிற்கும்! 

போர்க்கால நடவடிக்கையாக தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்துக்கு உள்ளேயே நீட் தேர்வை எழுதச்செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் பலவும் வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தன. இடதுசாரிகளும் சமூகநீதி அமைப்புகளும், சில திரைக்கலைஞர்களும் தனிநபர்களும் எப்பாடுபட்டாவது வெளிமாநிலத்துக்கு அனுப்பப்பட்ட மாணவர்களைத் தேர்வெழுதவைக்க அவர்களாலான உதவியைச் செய்வதில் தீவிரம் காட்டினர். 
ஆனால், மாநில அரசாங்கம்? 

முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இன்னொரு முக்கியமான காரியத்தில் இருந்தார்கள். வரும் கல்வியாண்டுக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சிதான், அந்தக் `காரியம்’ என்பது தெரிந்ததே! புதிய புத்தக உருவாக்கத்துக்குப் பின்னால் இருக்கும் எத்தனையோ பேரின் உழைப்பும் திறனும் தனித்து அங்கீகரிக்கப்பட்டு வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுவதற்குப் பதிலாக, நீட் பதற்றத்தைத் தணிக்கும் நிகழ்வாகவே அது காட்சியளித்தது. 

அதன் பிறகாவது இரண்டு ஆட்சிமணியாளர்களும் அசைந்தார்களா, அசைத்தார்களா என்றால் இல்லவே இல்லை! 

சமூக ஊடகங்களில் புழங்கும் சிறுபிள்ளை முதல் முதியவர்வரை  உலுப்பி எடுத்துவிட்டார்கள். அசரவேண்டுமே... ஊகூம்.. இரண்டு முதல்வர்களும் ஒரு சொல் உதிர்க்கவில்லை!

என்னதான் செய்தார்(கள்)? 

இந்தியாவிலேயே முதல் முறையாக இப்படியொரு முதலமைச்சர் அறிவிப்பை இப்போதுதான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. நீட் தேர்வெழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி தரப்படும் எனும் முதலமைச்சர் பழனிசாமியின் அறிக்கையின் தொடக்கமே, பல அர்த்தங்களையும் அதிர்ச்சியையும் தருகிறது. 

அந்த வாசகம் இதுதான்: 

``எதிர்வரும் நீட் தேர்வுக்காக ஒரு சில தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிரமங்களுக்கு உள்ளாவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் இந்த மாணவர்களுக்கு உதவுவதற்காகக் கீழ்க்கண்டவாறு நான் ஆணையிட்டுள்ளேன்:.......”.

நீட்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரலும் தொனியும் ஏகமாக ஒலிக்கும் இந்த அறிக்கையில், குருவை விஞ்சும் வேகம் இருந்தாலும், ``பொறுப்பு” உணர்வைக் காணவில்லை. சாமானிய தமிழக மக்களும் பாதிக்கப்படும் நீட் தேர்வர் பிள்ளைகளுக்காக உதவமுயன்றுகொண்டிருக்க, எட்டுக் கோடி மக்களுக்குத் தலைமைதாங்கும் அரசாங்கம், சம்பந்தப்பட்ட விவரங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறமுடியாதா? எப்படி முடியும் என எதிர்க்கேள்வி போடுகிறார்கள், எதிர்க்கட்சிகள் தரப்பில். 

``நெடுஞ்சாலைகளில் அரசு மதுக்கடைகளுக்குத் தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணையில் அன்றாடம் வழக்கறிஞர்களை அமர்த்திய தமிழக அரசு, நீட் வழக்கில் வழக்கறிஞரைக்கூட அனுப்பவில்லை எனும் பெரும் குற்றச்சாட்டைச் சம்பாதித்திருக்கிறார்கள், பழனியும் பன்னீரும்..” என அவர்கள் முடிக்கும்முன்பே, விளங்கிவிடுகிறது!   

 

``யாரும் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொண்டே இருங்கள்; அவை எதையும் நாங்கள் பொருட்படுத்தாமல் நினைத்ததைச் செய்துகொண்டே இருப்போம்” என்பதே அரசின் பதிலாக இருக்கும் என்றால், இந்த அரசாங்கம் இருப்பதன் அர்த்தம்தான் என்ன? 

https://www.vikatan.com/news/coverstory/124209-tn-cm-announces-train-fare-for-neet-students-is-it-fair.html

  • தொடங்கியவர்

வடமாநில நீட் மையங்கள் மாணவர்களே தேர்வு செய்ததா? சிபிஎஸ்இ

ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலுள்ள நீட் தேர்வு மையங்களை தமிழக மாணவர்கள் யாருக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒதுக்கவில்லை என்றும், அந்தந்த மாணவர்கள் விரும்பி தேர்வு செய்த மாநிலங்களில் மட்டுமே அவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

2018ம் ஆண்டு நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தாங்கள் தேர்வு செய்த தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் வட இந்தியாவிலுள்ள சில மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, சிபிஎஸ்இ செய்தி தொடர்பாளர் ரமா ஷர்மா அளித்திருக்கும் புதிய விளக்கத்தில், தமிழக மாணவர்கள் தேர்ந்தெடுத்த நீட் தேர்வு மையங்களையே சிபிஎஸ்இ ஒதுக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 31 சதவீத தமிழக மாணவர்கள் அதிகமாக பதிவு செய்துள்ளனர்.

waiting in front of NEET exam centre. Image captionநீட் தேர்வு மையத்துக்கு முன்பாகக் காத்திருக்கும் பெற்றோர், மாணவர்கள்

எனவே, 2017ம் ஆண்டு தமிழகத்தில் இருந்த 149 நீட் தேர்வு மையங்களை இந்த ஆண்டு 170தாக சிபிஎஸ்இ அதிகரித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்களுக்கு இந்த 170 மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கியுள்ளார்.

2017ம் ஆண்டோடு ஒப்பிட்டால், மேலும் அதிகமாகியிருக்கும் 25 ஆயிரத்து 206 மாணவர்களையும் தமிழகத்தில் தேர்வு எழுதச் செய்ய எங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டோம்.

இந்த ஆண்டு தமிழ் நாட்டில் நீட் தேர்வு எழுத விரும்பியோரின் எண்ணிக்கை அதிகரித்ததை உள்வாங்கி கொண்டு நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டோம். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் குறைவாகவே இருந்தன.

மாணவர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதனால், மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த மூவாயிரத்து 685 தமிழக மாணவர்களுக்கு, சென்னையிலுள்ள தேர்வு மையங்களை விட அருகிலுள்ள தேர்வு மையமான எர்ணாகுளம் வழங்கப்பட்டது என்கிறார் அவர்.

முந்தைய ஆண்டுகளில் செய்ததுபோல, பிற மாநிலங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கும் இதே மாதிரி அருகிலுள்ள தேர்வு மையங்களே வழங்கப்பட்டன.

தமிழக மாணவர்கள் தங்களே விரும்பி தெரிவு செய்திருந்தாலே தவிர, ராஜஸ்தான், கர்நாடகா, சிக்கிம், இன்னும் பிற மாநிலங்களில் உள்ள நீட் தேர்வு மையங்களை சிபிஎஸ்இ ஒதுக்கவில்லை என்று ரமா ஷர்மா கூறியுள்ளார்.

மேலும், 2018ம் ஆண்டு நீட் தேர்வு எழுதுகின்ற 24 ஆயிரத்து 720 தமிழக மாணவர்களில் தமிழ் மொழியில் தேர்வு எழுத தெரிவு செய்திருக்கும் அனைவருக்கும் தமிழில் வினாத்தாள் வழங்கப்படும்.

இரு பெண் மாணவர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அத்தகைய மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டிற்குள்ளே நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் ராமா ஷர்மா கூறியுள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு வட மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை என்ற சிபிஎஸ்இ-யின் இந்த கூற்றை, மாணவர்களுக்காக பொது நல வழக்கு நடத்தி, உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் மறுத்துள்ளார்.

நீட்

''இது பொய்யான தகவல். எங்களுடைய மருத்துவ மாணவர்கள் யாரும் வெளிமாநில நீட் தேர்வு மையங்களை தெரிவு செய்யவில்லை.'' என்று மயிலவன் கூறினார்.

மேலும், தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தானில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை என்று சிபிஎஸ்இ பொய்யான தகவலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து, தீர்ப்பை பெற்றிருக்கிறது என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக, மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்

https://www.bbc.com/tamil/india-44018661

  • தொடங்கியவர்

அப்பா எங்கே? எனக் கேட்ட கஸ்தூரி! நீட் பரீட்சை எழுத மகனை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற தந்தை மரணம்!

31957034_232816527470133_181973042873971
நீட் பரீட்சைக்காக மகனுடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்ற தமிழகம் திருவாரூரை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ள நிகழ்வு இந்தியாவின் நீட் பரீட்சை வீமான விமர்சனத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.

இந்தியா முழுவதும் நீட் பரீட்சை நடைபெற்றது. இதற்காக திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவனுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பரீட்சை நிலையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்றே மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றுள்ளார்.

 

31944768_232816484136804_136379958418210

இன்று காலை தேர்வெழுத மகாலிங்கம் சென்றுவிட்ட நிலையில், விடுதியில் இருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். தந்தை மரணமடைந்தது தெரியாமல் மகாலிங்கம் பரீட்சை எழுதிய நிகழ்வு அனைவரையும் பெரும் நெகிழ்வுக்கு உள்ளாக்கியது.

இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் எர்ணாகுளம் சிட்டி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரது மைத்துனர் அன்பரசன் என்பவரிடம் இன்று  ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
நீட் பரீட்சை எழுத மகனை அழைத்துச் சென்ற தந்தை உயிரற்ற உடலை திரும்புவது கிருஷ்ணசாமியின் மனைவி பிள்ளைகளை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் நீட் பரீட்சைக்கு எதிராக பல்வேறு தமிழகத்தில் இருந்த எதிர்ப்பு தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. இந்த மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
31947494_1689083437811666_4991702298120931950382_1734747703230113_64175121219064

http://globaltamilnews.net/2018/77988/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.