Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்?

Featured Replies

அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்?

Ireland Cricket Getty image
 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டு ஐ.சி.சி யின் முழு அங்கத்துவ நாடுகளாக இவ்விரு அணிகளும் உள்வாங்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் அயர்லாந்து அணி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் 11 ஆம் திகதி எதிர்கொள்கிறது.

 

1993 ஆம் ஆண்டு முதல் .சி.சி இன் இணை உறுப்பு நாடாக இருந்த வந்த அயர்லாந்து அணி தமது முதலாவது ஒரு நாள் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு விளையாடியது. இத்தொடரில் பலம் மிக்க பாகிஸ்தான் அணியை அதிர்ச்சித் தோல்வியில் வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வரலாற்றில் இடம் பிடித்தது அயர்லாந்து அணி.

தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியையும் 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளையும் வெற்றியீட்டி தமது திறமைகளை சிறப்பாகவே வெளிக்காட்டியது என்றால் மிகையாகாது. எனவே, .சி.சி 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கி .சி.சி இன் முழு அங்கத்துவ நாடாக அறிவிக்கப்பட்டது.

நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டி, அயர்லாந்து ஆண்கள் அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும், ஏற்கனவே அயர்லாந்து மகளிர் அணி 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டு இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி கடந்த காலங்களில் மிஸ்பா உல் ஹக் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான மிஸ்பா உல் ஹsக் மற்றும் யூனுஸ் கான் ஆகியோரின் ஓய்வினைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சரிவினைக்கண்டு .சி.சி இன் தற்போதைய டெஸ்ட் தர வரிசையில் 7 ஆம் இடத்தில் உள்ளது.  

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் இத்தொடரில் பல புது முக வீர்ரகளை இணைத்துக்கொண்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய அணியாக களமிறங்கும் அயர்லாந்து அணி அனுபவம் மிக்க பாகிஸ்தான் அணியை எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றது என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வரலாற்று சிறப்பு மிக்க போட்டிக்காக இரு அணிகளும் தமது வீர்ர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அயர்லாந்து அணி

வில்லியம் போர்டபீல்ட் (தலைவர்), அன்ரோ பல்பரேனி, எட் ஜோய்ஸ், டிரோன் கேன், அன்ரோ மக்பரேன், டிம் முர்டாக், கெவின் ஒப்ரைன், நீல் ஒப்ரைன் (விக்கெட் காப்பாளர்), போய்ட் ரன்கின், ஜேம்ஸ் ஷன்னோன், நதன் ஸ்மித், போல் ஸ்டேர்லின், ஸ்டுவர்ட் தொம்ப்சன், கேரி வில்சன்.

பாகிஸ்தான் அணி

சர்ப்ராஸ் அஹமட் (தலைவர், விக்கெட் காப்பாளர்), அஸாத் ஷபீக், அஸார் அலி, பாபர் அஸாம், பஹீம் அஷ்ரப், பகர் ஸமான், ஹரிஸ் சொஹைல், ஹஸன் அலி, இமாமுல் ஹக், மொஹமட் அப்பாஸ், மொஹமட் ஆமிர், ரஹட் அலி, ஸாத் அலி, சமி அஸ்லம், சடாப் கான், உஸ்மான் சலாஹுத்தீன்.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்
அயர்லாந்தின் முதலாவது டெஸ்ட் இன்று
 

image_166395314b.jpg

வரலாற்றில் முதற்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் அயர்லாந்து இன்று விளையாடவுள்ளது. டப்ளினில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதன் மூலமே வரலாற்றில் முதற்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் அயர்லாந்து விளையாடவுள்ளது.

அந்தவகையில், ஆப்கானிஸ்தானுடன் சேர்த்து கடந்தாண்டு ஜூனில், சர்வதேச கிரிக்கெட் சபையால் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே, பங்களாதேஷ் 2000ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டதன் பின்னர் முதலாவது அணியாக டெஸ்ட் அறிமுகத்தை அயர்லாந்து மேற்கொள்கிறது.

இப்போட்டியில் விளையாடவுள்ள அயர்லாந்துக் குழாமில், இங்கிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய பொய்ட் றாங்கின் இடம்பெற்றிருப்பது அவ்வணிக்கு பலத்தை வழங்குவதுடன் எட் ஜோய்ஸ், நைஜல் ஓ பிரயன், டிம் முர்டாக், கெவின் ஓ பிரயன், அணித்தலைவர் வில்லியம் போர்ட்பீல்ட், போல் ஸ்டேர்லிங், அன்டி போல்பிரயன் போன்ற சிரேஷ்ட வீரர்களும் அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, தமது சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் அயர்லாந்துக்கு மேலும் சற்று சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ள பாகிஸ்தான் குழாம் பெரும்பாலும் இளம் வீரர்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. அதுவும் தொடர்ச்சியாக உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களைப் பெற்று வருகின்ற பவட் அலாமை விட்டு துடுப்பாட்ட வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர்.

பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட இமாம்-உல்-ஹக் இப்போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து, பாகிஸ்தானின் முதன்மை சுழற்பந்துவீச்சாளர் யசீர் ஷா காயமடைந்துள்ள நிலையில், அவரைக் குழாமில் பிரதியீடு செய்துள்ள ஷடாப் கான் பயிற்சிப் போட்டிகளில் பிரகாசித்தபோதும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான நிலைமைகளில் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாகவேயுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/அயர்லாந்தின்-முதலாவது-டெஸ்ட்-இன்று/44-215733

  • தொடங்கியவர்

அயர்லாந்து டெஸ்ட்- முதல் இன்னி்ங்சில் பாகிஸ்தான் 310 ரன்கள் சேர்த்து டிக்ளேர்

 

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. #IREvPAK

 
அயர்லாந்து டெஸ்ட்- முதல் இன்னி்ங்சில் பாகிஸ்தான் 310 ரன்கள் சேர்த்து டிக்ளேர்
 
அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டெஸ்ட் தொடங்கியது. மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் முழுவதும் தடைபட்டது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அசார் அலி, இமாம்-உல்-ஹக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 4 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ஹரிஸ் சோஹைல் 31 ரன்னும், ஆசாத் ஷபிக் 62 ரன்னும் எடுக்க 2-வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. சதாப் கான் 52 ரன்னுடனும், ஃபஹீம் அஷ்ரப் 61 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

201805131818133892_1_shadabkhan-s._L_styvpf.jpg
சதாப் கான்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சதாப் கான் 55 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டானதும் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜாய்ஸ் 4 ரன்னிலும், போட்டர்பீல்டு 2 ரன்னிலும், பால்பிரைனி டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அயர்லாந்து 6.1 ஓவரில் 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/13181813/1162711/IREvPAK-Test-pakistan-310-runs-declared-first-innings.vpf

  • தொடங்கியவர்

அறிமுக டெஸ்டில் அயர்லாந்து தோல்வி

IRELAND

பாகிஸ்தான் அணிக்கு எதிரான அறிமுக டெஸ்ட்டில் அயர்லாந்து அணி தோல்வியடைந்தது.

ஐசிசி-யின் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியை சொந்த நாட்டில் டப்ளின் நகரில் விளையாடியது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 96 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பஹீம் அஸ்ரப் 83, ஆஷாத் ஷபிக் 62, ஷதப் கான் 55 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் முர்டாஹ் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 47.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு சுருண்டு பாலோ -ஆன் பெற்றது. அதிகபட்சமாக கெவின் ஓ’பிரையன் 40 ரன்கள் எடுத்தார்.

 

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4, ஷதப் கான் 3, முகமது அமீர் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 129.3 ஓவர்களில் 339 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கெவின் ஓ’பிரையன் 118, தாம்ப்சன் 53 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 5, முகமது அமீர் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 45 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 59, அசார் அலி 2, ஹரிஸ் சோகைல் 7, ஆசாத் ஷபிக் 1, சர்ப்ராஸ் அகமது 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். இமாம் உல்-ஹக் 72, ஷதப் கான் 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை கைப்பற்றியது.

http://tamil.thehindu.com/sports/article23899500.ece

  • தொடங்கியவர்

பாகிஸ்தானை பாடாய்படுத்திய அயர்லாந்து... முதல் டெஸ்ட்டில் இதுதான் நடந்தது!

 
 

2011 உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டம்... பெங்களூரு மைதானத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 327 ரன்கள் குவித்தது. அயர்லாந்தும் 25 ஓவரில் 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, தான் ஒரு கத்துக்குட்டி அணி என்பது போலவே ஆடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அணிக்கு ஒரு பாகுபலியாக கெவின் ஓ ப்ரைன் எனும் வீரர் 50 பந்துகளில் சதமடிப்பார். கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றியைப் பதிவு செய்யும்.

2015 உலகக் கோப்பையின் `பி’ பிரிவில் 3 வெற்றி 3 தோல்விகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது அயர்லாந்து. 2019 உலகக் கோப்பை கனவு சமீபத்தில் நடந்த தகுதிச் சுற்றுடன் பொய்யானது. ``பெரிய அணிகளை வைத்தே விளையாடுங்கள். அவர்கள் மூலம் பணம் பாருங்கள். நாங்கள் வெறும் பாக்கெட்டுடன் இங்கிருந்து வெளியேறுகிறோம்'' என்று ஐசிசிக்கு எதிரான குரலை அயர்லாந்து கேப்டன் பதிவு செய்தார்.

 

இப்போது அயர்லாந்துக்கும், ஆஃப்கானிஸ்தானுக்கும் டெஸ்ட் அங்கீகாரம் வழங்கியுள்ளது ஐசிசி. அயர்லாந்து பாகிஸ்தானோடும், ஆஃப்கான் இந்தியாவோடும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஆடும் என்று அறிவித்தது. இதற்கு பின்னாலும் அரசியல் இருக்குமோ என்பதுதான் சர்வதேசப் போட்டி அட்டவணை கூறும் தகவல். ஆம், அயர்லாந்து தொடருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து தொடர் இருக்கிறது. அதேபோல் ஆஃப்கான் தொடருக்குப் பின்பு இந்தியாவுக்கு இங்கிலாந்து தொடர் இருக்கிறது. இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டிக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு திரும்புகின்றன. இதற்கு பயிற்சி ஆட்டம்தானா இந்த டெஸ்ட் போட்டிகள் என்பது விடைதெரியா கேள்வி.

அயர்லாந்து

எது எப்படியோ, முதல் டெஸ்ட்டை பாகிஸ்தானுடன் ஆடிவிட்டது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அயர்லாந்து அணியில் 11 பேரில் 10 பேருக்கு இதுதான் முதல்போட்டி. ரான்கின் மட்டும் இங்கிலாந்துக்காக ஒரேயொரு போட்டி ஆடியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பீட்டர் சிடில் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

முதல்நாள் மழையால் ரத்தானது. இரண்டாவது நாளில் அயர்லாந்தின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க பாகிஸ்தான் திணறியது. 169 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஷகதாப்கான் மற்றும் அஷ்ரஃபின் அரைசதத்தால் 310/9 என்ற நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அயர்லாந்து தரப்பில் முர்தாப், தாம்சன் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரான்கின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கெவின் ஓ ப்ரைன்

பந்துவீச்சில் ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்ட அயர்லாந்து, பேட்டிங்கில் முதல் போட்டி என்பதால் கொஞ்சம் பதற்றத்துடன் ஆடியது. 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. கெவின் ஓ ப்ரையனின் 40, வில்சனின் 33 ரன்கள் என்று 130 ரன்களுக்கு ஆல் -அவுட். ஃபாலோ ஆன் வாங்கி மீண்டும் பேட் செய்தது. அவ்வளவுதான் எளிதில் அயர்லாந்து ஆட்டம் முடிந்துவிடும் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இரண்டாவது இன்னிங்ஸில் இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கமாக உருவெடுத்தது. 69 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், பின்னர் கொஞ்சம் சரிவு. அடுத்து கெவின் ஓ பிரையனின் சதம் என மாஸ் காட்டியது அயர்லாந்து. 339 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாகிஸ்தானுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் பாகிஸ்தானுக்குப் படம் காட்டியது அயர்லாந்து. 200 நிமிடங்கள் ஆடவைத்து 5 விக்கெட்டுகளை இழந்து 5வது நாளில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். 

கெவின் ஓ ப்ரைன்

கெவின் ஓ பிரையன்தான் ஆட்ட நாயகன். அயர்லாந்து கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் சதம் இவரால் அடிக்கப்பட்டது என்ற பெருமை வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. `` மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூரில் அடித்த சதம்தான் என் வாழ்க்கையின் முக்கியமானது'' என்கிறார் கெவின். 

அயர்லாந்து இனி யாருடனெல்லாம் டெஸ்ட் ஆடும், முன்னணி அணியாக வலம் வருமா? இல்லை வெறும் ஒன்லி டெஸ்ட் ஆடிக்கொண்டிருக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை என வரிசையாகக் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் கெத்துக் காட்டியிருக்கிறது அயர்லாந்து. இப்போது ஐசிசி எனும் பேட்டைக்காரனுக்கு அறிமுக டெஸ்ட் மூலம் சொல்லியிருக்கும் பதில் ``அண்ணே! என் சேவப் பந்தயம் அடிக்கும்ணேங்கறது'' தான்.

ஆட்டத்தில் தோற்றாலும் சிறப்பான பந்துவீச்சு, பேட்டிங் என அறிமுக டெஸ்ட்டில் அதிரடி காட்டிய அயர்லாந்து கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை வென்றது. வாழ்த்துகள் அயர்லாந்து!

https://www.vikatan.com/news/sports/125197-irelands-first-test-against-pakistan.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.