Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசைமாறி பயணிக்கும் தேசிய அரசாங்கம்

Featured Replies

திசைமாறி பயணிக்கும் தேசிய அரசாங்கம்

 

 ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வு­ரையும் மேதின அறை கூவலும் தேசிய அர­சாங்­கத்­துக்குள் எழுந்­துள்ள சவால்­களை வெளிப்ப­டுத்திக் காட்­டு­வ­துடன் ஜனா­தி­ப­தியும் அவர் தலை­மை­யி­லான அர­சாங்­கமும் எதிர்­கா­லத்தில் எதை நோக்கி நக­ரப்­போ­கி­றார்கள் என்ற விவ­கா­ரத்தை விளக்­கு­வ­தா­கவே காணப்­ப­டு­கி­றது.

  ஜனா­தி­ப­தி­ய­வர்கள் கடந்த 8 ஆம் திகதி பார­ாளு­மன்றில் நிகழ்த்­திய கொள்கை விளக்­க­வு­ரை­யா­னது இன்­றைய அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டு போக்­கையும் அது செய்­யத்­த­வ­றிய முக்­கிய விட­யங்­க­ளையும் தெளிவுபடுத்­து­வ­தாக காணப்­ப­டு­கி­றது. தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட­்சி­க­ளுக்­கி­டையே காணப்­படும் அதி­கார மோதல்­க­ளையும் அர­சாங்­கத்­துக்கும் எதிர்க்­கட்­சிக்­குமி­டையே காணப்­படும் அதி­காரப் போட்­டி­க­ளையும் சம­நி­லைப்­ப­டுத்­த­வேண்டும் என மிகுந்த ஆதங்­கத்­துடன் தனது கருத்தை தெரி­வித்­துள்ளார்.இக்­க­ருத்­தா­னது எதைக்­காட்­டு­கி­ற­தென்­றால்­என்ன இலக்கு கருதி நல்­லாட்சி உரு­வாக்­கப்­பட்­டதோ அந்த நோக்­கையும் இலக்­கையும் மறந்­துபோய் தேசிய அர­சாங்கம் வேண்­டாத திசை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­ற­தென்ற உண்­மையை அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார் ஜனா­தி­பதி.

அர­சியல் தீர்வு விவ­கா­ரத்தில் தமிழ் மக்­களை இன்னும் நாம் ஏமாற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றோ­மென்­பதை ஜனா­தி­பதி தனது உரையில் வெளிப்­ப­டை­யா­கவே ஏற்­றுக்­கொண்­டுள்ளார் என்­பதை அவ­ரது உரை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. எவ்­வா­றான விமர்ச­னங்கள் எழுந்த போதிலும் வடக்கு, கிழக்கு மக்­களின் பொறு­மை­யி­ழப்­பினை நிரந்­த­ர­மாக சம­ர­சப்­ப­டு­த­்த வேண்­டு­மாயின் அந்த மக்­களின் விருப்­பத்­தையும் இணக்­கப்­பாட்­டையும் பெற்று அர­சியல் வேலைத்திட்­ட­மொன்றை ஆரம்­பித்­தல்­வேண்டும் என்று கூறி­யுள்ளார். அவரின் கருத்­துப்­படி செய்­ய ­வேண்­டி­ய­வை­க­ளி­லி­ருந்து தேசிய அரசு விலத்தி நிற்­கி­றது என்ற பொரு­ளையே அவர் உரை சுட்­டிக்­காட்­டு­கி­றது. ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வு­ரை­யுடன் மேதின உரை­யை­யும் அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மேதின உரை­க­ளையும் ஒப்­பிட்­டுப்­பார்ப்­போ­மாயின் அடுத்­த­கட்ட நகர்வை நோக்கி ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நகர்ந்து கொண்­டி­ரு­க்­கி­றார்கள் என்­பது புலப்­படும்.

சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆகி­ய­வற்­றின் மேதின அறை­கூ­வல்கள் அதனை கட்­டியம் கூறு­கின்­றன. இவ்­விரு கட்­சி­க­ளது மேதின பிர­க­ட­ னங்கள் மக்­க­ளுக்கு சொல்­லக்­கூ­டிய செய்தி யாதெனில், 2020ஆம் ஆண்டில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகிய இரு­ தேர்தல்­க­ளிலும் யாரால் ஆட்­சியை கைப்­பற்ற முடியும் என்ற பலப்­ப­ரீட்­சையை நோக்­கிய நகர்­வா­கவே காணப்­ப­டு­கி­றது.

2020இல் நான் இளைப்­பா­றப்போ­வ­தில்­லை­யென ஜனா­தி­ப­தியும் அடுத்த தேர்தலில் ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்­சியின் தனி­யாட்சி உரு­வாகும் என பிர­த­மரும் கூறி­யி­ருப்­பது தேசிய அர­சாங்­க­மாக பெய­ர­ளவில் இயங்கிக்கொண்­டி­ருக்­கும்­ இ­ரு­ கட்­சி­க­ளுக்­கி­டை­யே­யுள்ள முரண்­பாட்­டையும் முறுகல் நிலை­யையும் எடுத்துக் காட்­டு­வ­தா­கவே அமை­கிறது.

20 வரு­டங்கள் ஆட்சி செய்­யக்­கூ­டி­ய­ள­வுக்கு உள்­நாட்­ட­ள­விலும் சர்­வ­தேச அள­விலும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி செல்­வாக்குப் பெற்று நிற்­கி­றது. அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அள­வுக்கு மக்கள் செல்­வாக்கு வளர்ந்­துள்­ள­தென ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மா­கிய ரணில் விக்­கி­ரமசிங்க மேதினக் கூட்­டத்தில் அறை­கூவல் விடுத்துள்ளார். அதேபோல் அதி­கா­ரத்­துக்­காக மட்டும் மக்­களை ஏமாற்­றா­தீர்கள் இந்த நாட்­டுக்கு நான் செய்ய வேண்­டிய பணிகள் நிறை­ய­வுள்­ளன. மக்­களின் மனச்­சாட்­சி­களை புரிந்து கொள்­ள ­வேண்டும். எனவே 2020ஆம் ஆண்டு நான் இளைப்­பா­றப்போ­வ­தில்லை என ஆவே­ச­மாக ஜனா­தி­பதி மேதின உரையை நிகழ்த்­தி­யி­ருப்­பது இரு­த­லை­வர்­க­ளு­டைய அந்­த­ரங்க ஆத்­மாக்­களை வெளிக்காட்­டு­வ­தாக இருக்­கி­றது.

இரு­வ­ரது உரை­யிலும் ஒரு­வி­டயம் புலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. மீண்டும் தான் ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்தெடுக்­கப்­ப­டு­ம­ள­வுக்கு தனக்கு மக்கள் செல்­வாக்கு வளர்ந்­துள்­ள­தென ஜனா­தி­ப­தியும் உள்­நாட்­ட­ளவில் ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்சி மக்கள் பலம் பெற்­றி­ருப்­ப­து ­போ­லவே சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கையையும் ஆத­ர­வையும் பெற்­றுள்­ளது.இந்­நி­லையில் அடுத்த ஆட்­சி­யா­ளர்கள் நாங்­க­ளென பிர­த­மரும் அழுத்­த­மாக கூறி­யுள்­ளனர். இவர்கள் இரு­வ­ரது கருத்­துக்­களும் மறை­மு­க­மான ஒரு செய்­தியை சொல்­லு­கி­ன்றன. அது ­யா­தெனில் நாங்கள் இரு­வரும் தனித்­தனி பாதையை நோக்கி பய­ணிக்­க­வேண்­டிய காலம் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது என்ற மறை­பொருள் உண்­மை­யையே அவர்­களின் பேச்­சி­லி­ருந்து புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

ஜனா­தி­பதி தனது உரையில் இன்­னொன்­றையும் கூறி­யுள்ளார். எனது ஓய்வு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரு­கின்­றனர். 2020ஆம் ஆண்டு நான் ஓய்வு பெறப்­போ­வ­தில்லை. செய்­து­மு­டிக்­க­வேண்­டிய கட­மைகள் இன்னும் பல­வுள்­ள­தென கார­ணத்தை பகிர்ந்­துள்ளார்.

ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகிய இரு­வ­ரு­டைய கருத்­தா­னது தங்கள் தங்கள் கட்­சி­களின் பெரு­மை­க­ளையும் அக்­கட்­சி­களின் எதிர்­கால பயணத்தையும் கூறு­வ­ன­வாக இருக்­கி­றதே தவிர தேசிய அர­சாங்­கத்தின் இலக்­குப்­பற்­றியோ அதன் அடைவு மழுங்­கிப்போன நிலை­பற்­றியோ கவ­லைப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. தேசிய அர­சாங்கம் ஆரம்­பிக்­கப்­பட்ட இலக்­கு­களும் நோக்­கங்­களும் மறைந்­துபோய் அவ்­வ­ர­சாங்கம் இன்­னொரு திசையில் நகர்ந்­து­கொண்­டி­ருக்­கி­ன்ற­தென்ற விட­யமே தெளிவு­பெற்று நிற்­கி­றது.

ஜனா­தி­ப­தி­ய­வர்கள் அடுத்த தேர்தலில் போட்­டி­யிடமாட்டார். புதி­ய­வர்­ ஒ­ரு­வரே நிறுத்­தப்­ப­டுவார் என்று பேசப்­பட்டு வந்த வதந்­தி­க­ளுக்கு ஆப்பு வைப்­ப­துபோல் அடுத்த ஜனா­தி­பதி தேர்தலில் தான் கள­மி­றங்க காத்­தி­ருக்­கிறேன் என ஜனா­தி­பதி வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்கும் உண்­மை­யா­னது பல விட­யங்­க­ளுக்கு தீனி­போ­டு­கின்ற செய்­தி­யாக மாறலாம். தான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டது ஒரு எதிர்­பா­ராத சம்­பவம் இன்­னு­மொ­ரு­ முறை வேட் ­பா­ள­ராக நிற்­கப்­போ­வ­தில்லையென கூறி­வந்த ஜனா­தி­ப­தி­ய­வர்கள் திட்­ட­வட்­ட­மாக தான் அடுத்த தேர்தலில் போட்­டி­யிட தயா­ரா­க­வுள்ளேன் என பகி­ரங்­க­மாக கூறி­யி­ருப்­பது இலங்கை அர­சி­ய­லுக்கு ஒரு புது செய்தி மாத்­தி­ர­மல்ல அர­சி­ய­லுக்கு விவ­கா­ரங்­களை உண்­டாக்கும் செய்­தி­யா­கவும் ஆகலாம்.

ஒரு­ பொ­து ­வேட்­பா­ளராக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு இரு­கட்­சிகள் மற்றும் சிறு பான்மை சமூ­கத்தின் பலத்த ஆத­ர­வுடன் தனது வெற்­றியை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்ட ஜனா­தி­ப­தி­ய­வர்கள் புதி­ய­வர்­க­ளுக்கு விட்­டுக்­கொ­டுப்பார் என்று எதிர்­பார்த்­தி­ருந்த அர­சியல் களத்தில் இச்­செய்தி ஆச்­ச­ரி­யத்­துடன் சங்­க­டங்­களை உரு­வாக்­கக்­கூ­டிய செய்­தி­யா­கவும் பேசப்­ப­டலாம்.

இலங்­கையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­யொன்று கொண்­டு­வ­ரப்­பட்­டபின் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்த்­தனா இரு பரு­வங்­க­ளுக்கு ஜனா­தி­பதி கதி­ரையில் அமர்ந்­தி­ருந்தார். 1978, 1989. ஜனா­தி­பதி ஆர். பிரே­ம­தாச இரு­முறை ஜனா­தி­ப­தி­யாக வரக்­கூ­டிய வாய்ப்­பி­ருந்தும் 1993இல் படு­கொலை செய்­யப்­பட்­ட­தன் ­கா­ர­ண­மாக 1989–1993வரை பதவி வகித்தார். 1994ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட சந்­தி­ரிகா அம்­மையார் இரு­ ப­ரு­வங்­களும் 1994, 2005 முழுப்­ப­ரு­வமும் பதவி வகித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்்ஷ 2005 முதல் 2015வரை இரு­முறை பதவி வகித்தார். தனது பத­விக்­கா­லத்தை நீட்­டு­வ­தற்கு கொண்­டு­வ­ரப்­பட்ட 18 ஆவது திருத்தம் அவ­ருக்கு சத்­தி­ரா­தி­யாக மாறி­யது. இந்த நிலை­யில்தான் மைத்­திரி­பால சிறி­சேனவும் இரண்டாம் முறை போட்­டி­யி­டு­வ­தற்­கான தனது அறி­வித்­தலை முதல் முதல் வெளியிட்­டுள்ளார்.இரண்­டாம் தடவை தான் நிற்­க­ வேண்­டிய கார­ணத்தை அவர் குறிப்­பி­டும்­போது தேசி­யப்­பி­ரச்­சினைக்கு தீர்வு காணப்­ப­ட­ வேண்டும். மீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் இடம்­பெ­று­வதை தடுக்கும் தெளிவான வேலைத்­திட்­ட­மொன்றை முன்­னெ­டுக்க இன்னும் முடி­யாது போயுள்­ளது. நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்த நாம் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டு­களை சிலர் விமர்­சிக்­கின்­றனர். தேசி­யப்­பி­ரச்­ச­ினை­யைத்­தீர்க்க பல­ருக்கு உடன்­பா­டில்லை. உண்­மை­யான சமா­தா­ன­மொன்றை உரு­வாக்க சகல கட்­சி­களும் நேர்மையாக செயற்­ப­ட­ வேண்டும். இந்த நாட்டில் நேர்மையான தலை­வர்­களை காண­மு­டி­ய­வில்லை. கள்­வர்கள், கொலை­யா­ளிகள், ஊழல்­வா­திகள் இல்­லாத மக்­களை அர­வ­ணைக்கும் அர­சியல்வாதி­களே வேண்டும். சிலர் 2020ஆம்­ ஆண்டு புதிய ஆட்­சியை அமைக்க கனவு காணு­கின்­றார்­கள். ­எ­மது அணியை சேர்ந்­த­வர்­களும் அவ்­வாறு கூறு­கின்­றனர் என பரந்த விளக்­க­மொன்றை ஜனா­தி­பதி கொடுத்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் ஆதங்­கத்தில் தேசி­யப்­பி­ரச்­ச­ினைக்கு தீர்வு காணும் முயற்­சியில் தனது அர­சுக்கு போதிய ஆத­ரவு கிடைக்­க­வில்லை. நேர்மையான தலை­வர்­களை காண முடி­ய­வில்­லை­யென அப்­பட்­ட­மான உண்­மை­யொன்றை விளம்­பி­யுள்ளார். அவ­ரின் ­க­ருத்­துப்­படி அவ்­வா­றா­ன­தொரு முயற்­சியை அடுத்த காலங்­க­ளில்தான் கொண்­டு­வ­ர­மு­டி­யு­மென்ற மறை­ பொ­ரு­ளான கருத்து அவர் பேச்சில் வெளிப்­பட்டு நிற்­கி­றது.

ஜனா­தி­ப­தியின் கருத்தில் உண்­மை­யுள்­ளதா-? இல்­லையா--? என்­ப­தற்­கப்பால் தேசிய அர­சாங்கம் அமைக்கப்­பட்ட நோக்­கத்தை நிறை­வேற்ற முடி­ய­வில்லை. அதில் நாம் தோல்­வி­யையே தழு­வி­யுள்ளோம் என்­பதை ஜனா­தி­பதி வெளிப்­ப­டை­யா­கவே ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

தமிழ் மக்­க­ளைப்­பொ­றுத்­த­வரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட­்சியில் அதி­க­ளவு நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளா­கவே ஆரம்பம் முதல் இருந்து வந்­துள்­ள­ போ­திலும் அந்த நம்­பிக்கை கரைந்து நிர்­மூ­ல­மா­கி­விட்­டது என்­பதே யதார்த்தம். இவ்­வா­றான சூழலில் ஜன­ாதி­ப­தி­ய­வர்­களை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்ற தயா­ராக இருக்­கின்­றார்­களா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரிய விடயம். மீண்டும் மஹிந்த ராஜ­ப­க் ்ஷவை ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரு­வ­தன்­ மூ­லமே சர்­வ­தேச அளவில் தமிழ் மக்­க­ளுக்­கான பல­மான ஆத­ரவை பெற­மு­டியும் என்ற கருத்­தைக்­கொண்­டி­ருந்­த­வர்­களும் புலம்­பெ­ய­ரா­ளர்­களும் இருந்­துள்­ளனர். மைத்­தி­ரியின் அரசு வரு­வதன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு எந்த விடிவும் கிடைக்­கப்­போ­வ­தில்­லை­யென அடித்­துக்­கூ­றி­ய­வர்களும் உண்டு. அவர்கள் கூறி­யது போலவே பொரி­மாத்­தோண்­டியின் கதை­யைப்­போல எல்­லாமே பூஜ்­ஜி­ய­மா­கிய நிலையே காணப்­ப­டு­கி­றது. இன்னும் வர்­ணிப்­போ­மானால் இல­வு­காத்­த ­கி­ளி­க­ளைப்­போல இன்று தமி­ழர்­களின் நிலை ஆகி­விட்­டது.

மைத்­தி­ரியின் வெற்­றிக்­காக வட­கி­ழக்கு மக்கள் தங்கள் வாக்­கு­களை அள்­ளி­வீ­சி­னார்கள். மீண்டும் அத்­த­கை­ய­தொரு சூழலை உரு­வாக்க முடி­யுமா என்­பது முடி­யாத காரி­ய­மென்றே எண்­ண­வேண்­டி­யுள்­ளது. இந்­த ­வி­ட­யத்தில் எந்த தமிழ் தலை­மை­களும் பொறுப்­பேற்­றுக்­கொள்­ளு­ம­ள­வுக்கு நிலை­மைகள் சீரா­க­வில்­லை­யென்­பதை புரிந்து கொள்­ள­வேண்டும்.

ஜனா­தி­ப­தியை ஆட்சிபீடம் ஏற்ற உழைத்­த­வர்­களில் முஸ்லிம் மக்­களின் பங்­க­ளிப்பும் மலை­யக மக்­களின் ஆத­ரவும் எவ்­வ­ளவு இருந்­தது என்­பதை எல்­லோரும் அறிவர். அப்­ப­டி­யி­ருக்­கும் ­நி­லையில் முஸ்லிம் மக்­க­ளுக்கு முன்­னை­ய­ கா­லத்தில் இல்­லாத அள­வுக்கு இந்த அர­சாங்­கத்தில் கொடு­மைகள் நடந்த வண்ணம் உள்­ளன. என்­பது முஸ்லிம் மக்­களின் அபிப்­பி­ரா­ய­மாகும். இன்­னொரு பக்கம் பார்ப்பின் அண்­மையில் சீர­மைக்­கப்­பட்ட மந்­திரி சபையில் மலையகம் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனரென்­பது மலை­யக மக்­களின் கவ­லை­யாகும். அண்­மையில் இதுபற்றி கருத்து தெரி­வித்­தி­ருந்த மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் இரா­தா­கி­ருஷ்ணன் மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு மலை­யக அமைச்சர் பதவி வழங்­கப்­ப­ட­வில்லை. அது­மட்­டு­மன்றி பிரதி அமைச்­சர்­க­ளாகக்கூட நிய­மிக்­கப்­ப­ட­வில்லை என்ற தனது ஆதங்­கத்தை தெரி­வித்­தி­ருந்தார். இது மலை­யக மக்கள் மத்­தியில் கடு­மை­யான தாக்­கத்தை ஏற்­படுத்தும் கருத்­தாகும். அது­வ­ுமின்றி தேசிய அர­சாங்­கத்தில் என்­று­மில்­லா­த­வாறு மலை­யகம் புறக்­க­ணிக்கப்­ப­டு­கி­றது என்ற கருத்தும் பரவி வரு­கிற நிலையில் மலை­ய­கத்­த­வரின் முழு­மை­யான ஆத­ர­வைப்­பெ­றக்­கூ­டிய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்­லை­யெ­ன்ற கருத்து ஆழ­மாக பரவி வரும் சூழலில் இது அடுத்த ஜனா­தி­பதி தேர்தலில் கணி­ச­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­ப­தற்கு மாற்றுக்கருத்து இருக்­கப்­போ­வ­தில்லை.

இவை­யெல்­லா­வற்­றுக்கும் அப்பால் தேசிய அளவில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­கு­ரிய வாக்கு வங்­கியை பெறக்­கூ­டி­ய­ள­வுக்கு நிலை­மைகள் சாத­க­மாக இருக்கு மென்று கூற­மு­டி­யாது. பொது­ வே­ட்­பாளர் இல்­லாத நிலையில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்றும் பொது எதி­ர­ணி­யினர், ஜே.வி.பி. ஆகி­ய­வற்றை உடைத்­துக்­கொண்டு வாக்­கு­களை பெறக்­கூ­டி­ய­ள­வுக்கு நாட்டில் அபி­வி­ருத்தி திட்­டங்­களோ வேலை­வாய்ப்­புக்­களோ பொரு­ளா­தார வளர்ச்­சியோ எட்­டப்­ப­ட­வில்­லை­யென்­பது இந்த அர­சாங்­கத்­துக்கு எதி­ரான விமர்­ச­னங்­க­ளாக முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோ­ருக்கு நாட்டை நிர்­வ­கிக்கும் திற­னில்லை. இதன் ­கா­ர­ண­மா­கவே நாட்டில் தற்­பொ­ழுது பொரு­ளா­தார பயங்­க­ர­வாதம் ஏற்­பட்­டுள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் முறை­யான பொரு­ளா­தார திட்­டங்­க­ளில்லை. ரூபாவின் பெறு­மதி நாளுக்குநாள் வீழ்ச்­சி­ய­டைந்து வரு­கி­றது. இதன் ­கா­ர­ண­மா­கவே கடந்த உள்­ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­க­ட்சி, ஐக்­கிய தேசி­யக்­கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய மூன்று தரப்­பி­ன­ரையும் தோற்­க­டித்­தோ­மென கூட்டு எதிர்க்­க­ட்­சி­யினர் குற்றம் சுமத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர். மொத்­தத்தில் ஜனா­தி­ப­தியின் ஆட்­சி­பற்­றிய மதிப்­பீ­டுகள் சிறு­பான்மை சமூ­கத்­தின் ­மத்­தி­யிலும் பெரும்­பான்மை சமூ­கத்தின் மத்­தி­யிலும் விழுக்­காடு அடைந்து வரு­கி­ற­தென்ற விமர்­ச­னங்­களே மேலோங்கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இந்த அகப்­புற சூழ்­நி­லையில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மீண்டும் வரக்­கூ­டிய வாய்ப்பொன்றை எஞ்­சி­யி­ருக்கும் காலத்­தி­லா­வது உரு­வாக்­கு­வாரா என்­பதே கேள்வி.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவுக்கும் ஜனா­தி­ப­திக்கும் நல்­லாட்சி அர­சாங்கம் ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்த புரிந்­து­ணர்­வுகள் இன்று சொல்­லக்­கூ­டி­ய­ள­வுக்கு இல்­லை­யென்­பதே யதார்த்தம். அது­வு­மன்றி ஐக்­கிய தேசி­யக்­க­ட­்சிக்குள் தற்­பொ­ழுது ஏற்­பட்­டி­ருக்கும் உட்­க­ட்சி முர­ண்­பாட்­டுக்கு முக்­கிய காரணம் பிர­தமர் நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு விட்டுக் கொடுத்து செயற்­ப­டு­கிறார். இதனால் கட­்சிக்கு மக்கள் மத்­தியில் வீழ்ச்சி நிலை ஏற்­பட்டு வரு­கி­றது. தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து முறித்­துக்­கொண்டு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தனிக்­கட்சி அர­சாங்­கத்தை அமைக்­கும்­படி கட்­சியின் அமுக்­கக்­குழு தொடர்ந்தும் பிர­த­ம­ருக்கு அழுத்­தங்­களை கொடுப்­ப­துடன் கட்சி விமர்­ச­னத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­டு­ வ­ரு­வ­தையும் காண­மு­டி­கி­றது.

இவ்­வா­றான சூழ்­நி­லை­யில்தான் பிர­தமர் தனது மேதின உரையில் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி வெற்­றி­பெற்று தனி ஆட்­சி­யொன்று அமைக்­கப்­படும். அது மட்­டு­ம­ன்றி அந்த அர­சாங்கம் தொடர்ந்து 20 வரு­டங்கள் நீடித்து நிற்கும் என்று எதிர்வு கூறி­யுள்ளார். இது நேர­டி­யா­கவே சுதந்­தி­ரக்­க­ட­்சி­யி­ன­ருக்கும் அதன் தலை­வ­ரான ஜனா­தி­ப­திக்கும் விழுந்த சாட்டை அடி­யாகும்.

அது மட்­டு­மன்றி தற்­போது ஜெனி­வாவில் இலங்­கைக்கு எதி­ராக யாரு­மில்லை. சரத்­வீ­ர­சே­க­ரவும் லண்­ட­னி­லுள்ள ஒரு சில தமிழ் அமைப்­பினர் மட்­டுமே ஜெனி­வாவில் எதிர்ப்பை வெளியி­டு­கின்­றனர். எனினும் சாவ­தேச நாடு­களில் எங்கள் இரு­வ­ருக்கும் பெருத்த ஆத­ரவு இருந்து வரு­கி­ன்ற­தென சூளு­ரைத்­துள்ளார்.இது தமிழ் தரப்­பி­ன­ருக்கும் புலம்­பெயர் சமூ­கத்­துக்கும் விடுக்­கப்­பட்­டி­ருக்கும் பாரிய சவா­லாகும். எந்­த­வொரு கார­ணத்­தைக்­கொண்டும் இலங்­கைக்ெக­தி­ராக யாரும் சேறு பூச முடி­யாது. ஜெனிவா பிரச்­சினையை நாம் முறிய­டித்­து­ விட்டோம் என்ற தொனி­ப்பொ­ருளில் பிர­தமர் இக்­க­ருத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

பிர­த­மரின் கருத்தை இரு­ கோ­ணத்தில் நோக்­க­ வேண்டும். ஒன்று அடுத்த ஜனா­தி­பதி தேர்தலில் பிர­த­மரும் தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் எதிர்ப்­போட்­டி­யா­ளர்­க­ளாக நிற்­கப்­போ­கி­றார்களா? மற்­றை­யது அடுத்த ஆட்­சியைக் கைப்­பற்றும் செல்­வாக்கு சுதந்­தி­ரக்­கட்­சியை சேரப்­போ­கி­றதா? இல்லை ஐக்­கி­ய­ தே­சி­யக்­க­ட்­சிக்கு உரி­யதா? என்­ப­தாகும்.

அடுத்த ஜனா­தி­பதி தேர்தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி யாரை கள­மி­றக்­கப்­போ­கி­ற­தென்­பதை வைத்­துக்­கொண்டே வெற்றி பற்றி தீர்மானிக்க முடியும். 2005ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் ஜனாதிபதி வேட்பாளராக நின்றபோதும் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு காரணமாக வெற்றி பிரதம ருக்கு தட்டுப்பட்டுப்போனதுபற்றி அனை வரும் அறிவர். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை தோற்கடிக்கக்கூடியவராக பீல் மார்ஷல் சரத்பொன்சேகா கண்டுபிடிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் மீது நம்பிக்கையில்லாக்காரணங்களினால் பொது வேட்பாளர் சிறிசேன களமிறக் கப்பட்டார். அதில் சிறுபான்மை சமூகமும் அதிருப்தியாளர்களும் எதிர்பார்த்த வெற்றியும் கிடைத்தது.

ஆனால் அன்றைய தெரிவு தவறா னது ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப் பட்டிருந்தால் இன்று தவறான தலைவர் ஆட்சி செய்யும் நிலை வந்திருக்காதென அமைச்சர் சரத்பொன்சேகா சாடியிருப்ப தையும் காணுகிறோம். அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிற்கும் தகுதியை தான் பெறவேண்டும் என்பதற்காக பிரதமர் சீரமைப்புக்களையும் திட்டங்களையும் வகுத்துக்கொண்டிருப்பது நாடறிந்த விடயம். ஆனால் அந்த வாய்ப்பை இவர் பெறுவாரா என்பது பற்றி பல சந்தேகங்கள் உள்ளன. தமிழ் மக்களைப்பொறுத்தவரை தீர்வுத்திட்டம் இழுபறி நிலை பெறுவதற்கு மறைமுகமான காரணம் இவர் என்ற அபிப்பிராயம் பொதுவாகவே விரவி வருகிறது. ஏலவே சந்திரிகா அம்மையார் காலத்து அனுபவங்கள் இரைமீட்டி பார்க்கப்படும் நிலையே காணப்படுகிறது.

இவருடைய மாமனார் முன்னாள் ஜனாதி பதி ஜே.ஆர். ஜயவர்த்தன இலங்கையின் பிரதமராக வருவதற்கு பலமுறை முயற்சித்த வர். டி.எஸ்.சேனநாயக்கா, டட்லி சேனநா யக்கா மரணித்தபோது அதன்பின் என பலமுறை முயற்சித்தபோதும் கட்சிக் குள்ளும் மற்றும் சிறுபான்மை கட்சிக ளின் ஆதரவு இன்மை காரணமாக 1977 ஆம் ஆண்டுக்கு முன் அவரால் நாட் டின் தலைவராக வரமுடியவில்லை. இது போன்றதொரு நிலைதான் பிரதமருக்கு ஏற்படக்கூடும் என்ற அபிப்பிராயம் பரவலாகவேயுள்ளது. இவ்வாறானதொரு நிலை மாறவேண்டுமாயின் பிரதமர் இதய சுத்தியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்பது தமிழ் மக்க ளுடைய எதிர்பார்ப்பாகும்.

தமிழ் மக்கள் பிரதமரையோ அல்லது ஜனாதிபதியையோ நம்புகிறார்கள், நம்ப வில்லை என்பதற்கப்பால் நீண்ட கால தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் அனைத்து தரப்பினரா லும் வலியுறுத்தப்பட்டு வருகிற விடயமாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-12#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.