Jump to content

ஒரு நிமிடக் கதைகள்


Recommended Posts

பதியப்பட்டது

ஒரு நிமிடக் கதைகள்

 

white_spacer.jpg

ஒரு நிமிடக் கதைகள் white_spacer.jpg
title_horline.jpg
 
white_spacer.jpg
 
p42a.jpg பார்த்துப் பார்த்து...

அம்மாவுக்குப் பட்டுப்புடவை, தங்க வளையல், அப்பா வுக்கு விலை உயர்ந்த கைக் கடிகாரம், பாலியெஸ்டர்வேட்டி எனப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்திருந்தாள், மூத்த மகள் சங்கரி. ஆனால், அதற்காகப் பெரிதும் மகிழவில்லைஅவள் பெற்றோர், அன்று மாலை சங்கரியின் தங்கை நீலா வந்தாள்.

‘‘இந்தாம்மா... பித்த வெடிப்பு மருந்து. ராத்திரி படுக்கப் போறப்ப காலை வெந்நீர்ல கழுவிட்டு இதைப் போட்டுக்கோ. ரெண்டே நாள்ல சரியாகிடும். அப்பா, இந்தாங்க, உங்களுக்குப் பன்னீர்ப் புகையிலையும், வாசனை சுண் ணாம்பும். இது கண் மருந்து. ராத்திரி போட்டுவிடறேன். இந்தாம்மா, உனக்குப் பிடிச்ச மலைப் பழம். இது வெங்காய பக்கோடா... அப்பாவுக்கு!’’

நீலா தன் பையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து நீட்ட, அப்பா அம்மாவின் முகத்தில் எழுந்த சந்தோஷத்துக்குக் காரணம் புரிந்தது சங்கரிக்கு!

- புள்ளமங்கலம் ரா.லதா

 

 

 

p42.jpg நல்லதாக நாலு!

தாத்தா பெரிய கல்விமான். அவர் சாகும் போது தன் பேரனை அருகில் அழைத்து, “தந்தை சொல் படி நடக்காதே; தாயின்செலவுக் குப் பணம் தராதே; உட்கார்ந்து சாப்பிடாதே; படுத்துத் தூங்காதே! இந்த நான்கையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் முன்னேறுவாய்’’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஏதோ உளறுகிறார் என்று நினைத்தார்கள். அங்கே வந்திருந்த தமிழ் ஆசிரியர்தான் விளக்கினார்.

“சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் உன் தாத்தா! உன் தந்தை என்ன சொல்வார்... ஒழுங்காகப் படி, நல்ல பையன் என்று பேர் எடு என்றுதானே? அவர் அப்படிச் சொல்லும்படி ஏன் வைத்துக்கொள் கிறாய்? அதற்கு முன் நீயாகவே அப்படி நடந்துகொண்டுவிடு! அதுபோல், தாயின் செலவுக்கு நீ பணம் தராதே. உன் சம்பளத்தைத் தாயிடம் அப்படியே கொடுத்துவிட்டு, உன் செலவுக்கு அவரிடம் கேட்டு வாங்கிக்கொள்! பிறர் உழைக்க, அதில் நீ உட்கார்ந்து சாப்பிடாதே! சோம்பேறிதான் படுக்கையில் புரண்டுவிட்டுப் பின் தூங்குவான். கடினமாக உழைத்தால், படுப்பதற்கு முன்பே தூக்கம் கண்ணைச் சுழற்றும்! புரிகிறதா?’’

- ஆ.கிருஷ்ணன்

 

 

 

 

 
p128d.jpg புத்தி!

ஷேர் மார்க்கெட்டில் புகுந்து விளையாடுபவன் தருண். அவன் மனைவி சாந்தி கிராமத்துப் பெண்... பாவம், ஒன்றும் தெரியாத அப்பிராணி. அவளிடம் இவன் தன் மேதாவித்தனத்தை அடிக்கடி காட்டி, மக்கு, மடசாம்பிராணி என்று அவளை மட்டம் தட்டிப் பேசுவான்.

அன்றைக்கு டி.வி-யில் செய்திகள் பார்த்துக்கொண்டு இருந்த தருண், திடீரென ‘‘சே! என்னத்த செய்தி சொல்றாங்களோ? வணிகச் செய்திகளை வாசிக்காம, வெறுமே வாசகங்களை மட்டும் போடுறாங்களே, உன்னை மாதிரி மரமண்டைகள் எப்படிப் படிச்சுப் புரிஞ்சுக்கும்?’’ என்றான்.

குபீரென்று கிளம்பிய எரிச்சலைஅடக்கிக்கொண்டு சாந்தி சொன்னாள்... ‘‘என்னைப் போல மர மண்டைகளுக்கு எதுக்குங்க வணிகச் செய்தி? அதெல்லாம் உங்களைப் போலப் படிச்சுட்டு பிஸினஸ் செய்யறவங்களுக்கும், பங்குச் சந்தையில் இருக்கிறவங்களுக்கும்தானே? அதை எழுத்துல போட்டா போதாதா? எங்களுக்குத் தேவையான செய்தி களா இருந்தா கண்டிப்பா வாசிப்பாங்க’’ என்றாள்.

அடுத்த விநாடி, ‘தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்- வழங்குபவர்கள்...’ என ஓங்கி ஒலித்தது டி.வி.

- ஆர்.தங்கராஜ்

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.