Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு

Featured Replies

பிராந்திய பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு
 
 

- எம்.றொசாந்த், டி.விஜிதா

யாழில் இருந்து வெளிவரும் பிராந்திய பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான செல்வராசா இராசேந்திரம் (வயது 56) இன்று (28) அதிகாலை இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் கொழும்புத்துறை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நான்கு மோட்டார் சைக்கிளில் துணியால் முகத்தை முடிக்கட்டிக் கொண்டு வந்த வாள்வெட்டுக்கும்பல், குறித்த நபர் மீது வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பிராந்திய-பத்திரிகையின்-ஊடகவியலாளர்-மீது-வாள்வெட்டு/71-216668

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளரும், காலைக்கதிர் பத்திரிகை விநியோக முகாமையாளருமான 56 வயதுடைய செல்வராசா இராசேந்திரம் என்பரே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கிலக்காகி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

குறித்த வாள்வெட்டு சம்பவம் கொழும்புத்துறை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிளில் முகத்தை முடிக்கட்டிவந்த வாள்வெட்டுக்கும்பல் குறித்த நபர்மீது வாளால் வெட்டிவிட்டு தப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.வாள்வெட்டுக்கிலக்கானவர் கோப்பாய் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையாவார் என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/81079/

  • தொடங்கியவர்

"துப்பாக்கிக்கு பதிலாக வாள்வெட்டு ஆரம்பமாகியுள்ளது"

 

ஊடகவியலாளர்கள் மீது கடந்த காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில்  ஊடகவியலளார்கள் மீது வாள் வெட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் கனகராசா சரவணன் தெரிவித்தார்.

repoter.jpg

யாழில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு தேவராசா முதல் 2009 ஆம் ஆண்டு சசிமதன் வரை இதுவரை 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 45 ஊடகவியலாளர்களுள் 36 பேர் தமிழ் ஊடகவியலாளர்கள் ஆவர். எனினும் இவர்களது படுகொலை சம்பந்தமாக இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமையானது வேதனை அளிக்கிறது. 

இந் நிலையில் நாட்டில் தற்போது துப்பாக்கிக்கு பதிலாக வாள்வெட்டு மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

http://www.virakesari.lk/article/34018

  • தொடங்கியவர்

இராஜேந்திரன் மீதான தாக்குதல் மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையா?

jaffna-press.jpg?resize=550%2C366

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையோவென யாழ்.ஊடக அமையம் சந்தேகம் கொண்டுள்ளது.

 

பிரதேச செய்தியாளரும், பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் யாழ்.ஊடக அமையம் கோருகின்றது.

தெற்கில் முன்னைய ஆட்சியாளர்கள் கதிரைக்கனவுடன் அலைந்து திரிய அவர்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றினால் ஊடகவியலாளர்கள் படுகாலை செய்யப்படுவரென தற்போதைய ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களும் படுகொலையான தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் வாய் திறக்க மறுத்தேவருகின்றனர்.

கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை நாம் வலியுறுத்துகின்ற போதெல்லாம் தெற்கிலிருக்கின்ற அரசுகள் அனைத்துமே தொடர்ந்தும் கள்ள மௌனத்தையே சாதித்துவருகின்றன.

யாழ்.மாநகரின் புறநகர் பகுதியான கொழும்புத்துறை துண்டி பகுதியில் இன்று திங்கள் காலை இடைமறித்த 10 பேர் கொண்ட குழு பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன மீது சரமாரியாக வாள்களால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளது.எனினும் தாக்குதலாளிகள் கொலை செய்யும் நோக்கிலிருக்கவில்லையென தெரியவருகின்றது.அச்சமூட்டும் வகையினிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இலங்கை பிரதமர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கின்ற நிலையில் எத்தகைய நோக்கத்திற்காக தாக்குதலை நடத்தியுள்ளனரென்ற சந்தேகம் அனைத்து மட்டங்களிலும் விரவி காணப்படுவதுடன் நிச்சயமாக மீண்டுமொரு செய்தியை தமிழ் ஊடகப்பரப்பிற்கு சொல்ல தாக்குதலாளிகள் சொல்லமுற்பட்டிருப்பதாக யாழ்.ஊடக அமையம் கருதுகின்றது.

கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் ;நாம் சோர்ந்து போகாது தொடர்ந்தும் குரல் எழுப்பியே வருகின்றோம். அவ்வகையில் செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த குரல் கொடுப்போமென்பதை அறியத்தருகின்றோம்.

யாழ்.ஊடக அமையம்

http://globaltamilnews.net/2018/81242/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.