Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை ஆதரித்து பேசிய சம்பந்தனுக்கு நன்றி :பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

Featured Replies

"சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தோல்வியடையவில்லை"

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக போட்டியிட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தோல்வியடையவில்லை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் பிரதிநிதியே இன்று தோற்க்கடிக்கப்பட்டுள்ளார் என சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். 

sudarshini.jpg 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே 53 வாக்குகளை பெற்ற போதிலும் 97 வாக்குகளை பெற்ற ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவானார். 

இதன் பின்னர் சபையில் அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பிரதி சபாநாயகராக என்னை தெரிவு செய்ய ஆதரவாக கருத்து தெரிவித்த நபர்கள் அனைவருக்கும், என்னை பரிந்துரைத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சுயாதீனக் குழுவினர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், அதேபோல் என்னை தெரிவு செய்ய வேண்டும் என சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பிரதி சபாநாயகர் ஒருவராக தெரிவு செய்யப்பட பெண் ஒருவர் போட்டியிட்டதே பாரிய வெற்றியாக கருத வேண்டும். 

எனினும் இன்று  சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே என்ற பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடையவில்லை. மாறாக  பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பேசும் பாராளுமன்றத்தில் தேர்தலில் போட்டியிட்ட ஒரு பெண் பிரதிநிதியே தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்றார்.

 

http://www.virakesari.lk/article/34506

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

என்னை ஆதரித்து பேசிய சம்பந்தனுக்கு நன்றி :பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

city-01GMG-50b9ab9eed20b080e7184e1fc4aa18f2f27ce8da.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

 

பாரா­ளு­மன்­றத்தில் பிரதி சபா­நா­ய­க­ராக போட்­டி­யிட்ட சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே தோற்­ க­வில்லை, பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு பெண் பிர­தி­நிதி  தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ளார் என சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே தெரி­வித்தார்.   

என்னை தெரிவு செய்ய வாக்­க­ளித்த உறுப்­பி­னர்­க­ளுக்கும் என்னை ஆத­ரித்து பேசிய எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கும் எனது நன்­றி­களை தெரி­விக்­கின்றேன் எனவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றதின் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிரதி சபா­நா­யகர் பத­விக்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 உறுப்­பினர் தரப்பில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே 53 வாக்­கு­களை பெற்று போதிலும் 97 வாக்­கு­களை பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆனந்த குமா­ர­சிறி பிரதி சபா­நா­ய­க­ராக தெரி­வானார். இதன் பின்னர் சபையில் உரை­யாற்­றிய சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

பிரதி சபா­நா­ய­க­ராக என்னை தெரிவு செய்ய ஆத­ர­வாக கருத்து தெரி­வித்த நபர்கள் அனை­வ­ருக்கும் எனது நன்­றி­களை நான் தெரி­விக்க வேண்டும். என்னை பரிந்­து­ரைத்த ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி சுயா­தீனக் குழு­வினர் மற்றும் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களு எனது நன்­றி­களை நான் தெரி­விக்­கின்றேன். அதேபோல் என்னை தெரிவு செய்ய வேண்டும் என சபையில் தெரி­வித்த எதிர்க்­கட்சி தலைவர் இரா சம்­பந்­த­னுக்கும் எனது நன்­றி­களை தெரி­விக்­கின்றேன். இலங்கை பாரா­ளு­மன்ற வர­லாற்றில் பிரதி சபா­நா­யகர் ஒரு­வ­ராக தெரிவு செய்­யப்­பட பெண் ஒருவர் போட்­டி­யிட்­ட­தையே பாரிய வெற்­றி­யாக கருத வேண்டும்.

எனினும் இன்று சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே என்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை மாறாக ஒரு பெண் பிர­தி­நிதி தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ளார். பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறித்து பேசும் பாரா­ளு­மன்­றத்தில் தேர்­தலில் போட்­டி­யிட்ட பெண் பிர­தி­நிதி தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ளார். ஆகவே அதுவே வரலாறாக அமையும். எவ்வாறு இருப்பினும் பிரதி சபாநாயகராக தெரிவான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக தெரிவாகிய ஆனந்த குமாரசிறிக்கும் எனது நன்றிகளை தெரிவிகின்றேன் எனக் கூறினார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.