Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை திரும்பிப்பார்க்க வைத்த அரசியல் சந்திப்பு

Featured Replies

உலகை திரும்பிப்பார்க்க வைத்த அரசியல் சந்திப்பு

 

இந்த 2018ஆம் ஆண்டின் தலை­யாய அர­சியல் நிகழ்வு என்றால் ஜுன் மாதம் 12ஆம் திகதி சிங்­கப்­பூரில் நடை­பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட­கொ­ரிய அதிபர் கிம் ஆகி­யோ­ருக்­கி­டையில் நடை­பெற்ற உச்­சி­ மா­நாடு என்­பது எவரும் எளிதில் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய விட­ய­மாகும். உலகின் அர­சியல், பொரு­ளா­தார ஆற்­றல்­களில் மிகப்­ப­ல­மான அமெரிக்க நாட்டின் பத­வி­யி­லி­ருக்கும் ஜனா­தி­ப­தியும்,கம்­யூனிச ஆட்சி நடை­பெறும் நாட்டின் வெளியு­லகில் பெரு­ம­ளவில் பய­ணிக்­காத தலை­வரும் சந்­தித்­தனர். உச்­சி­ம­ா­நாடு நடத்­தினர் என்­பது உலக சமா­தா­னத்தை நேசிக்கும் எவரும் பெரு­மைப்­ப­டத்­தக்க நிகழ்ச்­சி­யாகும். ஜூன் 12ஆம் திகதி உச்­சி­ ம­ா­நாட்டை நேர­டி­யாக ஊட­கங்­க­ளுக்கு அறிக்­கை­யி­டு­வ­தற்கும் தொலைக்­காட்­சியில் ஒளிப­ரப்­பவும் ஆயி­ரக்­க­ணக்­கான ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிங்­கப்பூர் ஹோட்­டல்களில் முகா­மிட்­டி­ருந்­தனர். சிங்­கப்பூர் நேரம் காலை 09.00 மணிக்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த உச்­சி­மா­நாட்டின் முத­லா­வது காட்சி ட்ரம்ப், கிம் ஆகியோர் மட்டும் கைகு­லுக்­கி­ய­தாகும். இரண்­டா­வது காட்சி உத­வி­யா­ளர்­க­ளின்றி மொழி­பெ­யர்ப்­பா­ளர்­களின் துணை­யோடு இரு­த­லை­வர்கள் மட்டும் சந்­தித்­த­மை­யாகும். மூன்றாம் காட்சி தத்தம் அரச உய­ர­தி­கா­ரிகள் சகிதம் இரு தலை­வர்­களும் சந்­தித்து பேச்சுவார்த்தை நடத்­தி­ய­மை­யாகும். அமெ­ரிக்க தரப்பில் பாது­காப்பு, வெளிவி­வ­கார அமைச்­சர்­களும், வட­கொ­ரிய சார்பில் சில அமைச்­சர்­களும் தத்தம் தலை­வர்­க­ளுடன் இணைந்து பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டனர். இரண்­டா­வது காட்சி அதா­வது உத­வி­யா­ளர்கள் சகிதம் பங்­கு­பற்­றிய பேச்சுவார்த்தை மதி­ய­போ­சன பேச்சுவார்த்தை என அர­சியல் இரா­ஜ­தந்­திர பாஷையில் கூறப்­ப­டு­கி­றது. சிங்­கப்பூர் அர­சாங்­கத்தின் சிறப்­பான ஏற்­பா­டு­களின் கீழ் நடை­பெற்ற இரண்டு பேச்சுவார்த்­தை­களும் வெற்­றி­ய­ளித்­த­னவா? ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தா­கினால் இரு நாடு­க­ளையும் முரண்­பட வைத்த அர­சியல், இரா­ணுவ விவ­கா­ரங்கள் முற்றுப்பெறும் வாய்ப்­புக்கள் தெரி­கின்­றதா? தொடர் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­றுமா? இரா­ஜ­தந்­திர உறவு நில­வாத இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஆரம்­பிக்­கப்­ப­டுமா? தென்­கொ­ரி­யாவில் இருந்து அமெ­ரிக்க படை­யினர் விலக்கிக் கொள்­ளப்­ப­டு­வார்­களா? வட­கொ­ரிய அதிபர் அணு­ஆ­யுத உற்­பத்தி முயற்­சி­களை பூர­ண­மாக இல்­லா­தொ­ழிப்­பாரா என்­பது போன்ற வினாக்கள் பல­ராலும் குறிப்­பாக பல நாட்டுத் தலை­வர்­க­ளாலும் கேட்­கப்­ப­டு­கின்­றன. 

ஜூன் 12ஆம் திகதி காலை முத­லா­வது காட்சி நிறை­வே­றிய சற்­று­நே­ரத்தில் முன்னாள் மத்­திய புல­னாய்வு அமைப்பு (சீ.ஐ.ஏ) தலைவர் பத்­தி­ரி­கை­க­ளுக்கு செவ்வி ஒன்றை வழங்­கி­யி­ருந்­தார். அமெ­ரிக்கா என்­கின்ற உல­கப்­புகழ் பெற்ற ஜன­நா­யக நாட்டின் தலைவர் உலகின் மிகப்­பெரும் சர்­வா­தி­கா­ரியும் மனித உரி­மை­களை எள்­ள­ள­வேனும் மதிக்­காத வட­கொ­ரிய தலை­வ­ருடன் ஒன்­றி­ணைந்து இரண்டு நாட்டுத் தேசிய கொடிகள் பின்­ன­ணியில் பறக்க கைலாகு கொடுத்­த­மையை பார்க்க சகிக்க முடி­ய­வில்லை என்றார். அமெ­ரிக்க அதி­ப­ருக்கு பெருமை சேர்க்கக் கூடிய விட­ய­மல்ல என்றும் அமெ­ரிக்க தேசியக் கொடியை வட­கொ­ரிய தேசியக் கொடிக்கு அரு­கா­மையில் சம­னாக பறக்க விடப்­பட்­டமை அமெ­ரிக்­கா­வுக்கு அவ­மானம் என்றார் .எனினும் அமெ­ரிக்க நலன்­களும் அமெ­ரிக்­காவின் நட்பு நாடு­களும் பாது­காக்­கப்­ப­டு­மானால் ஒப்­பந்தம் வர­வேற்கக் கூடி­யது என்றார்.

இரு தலை­வர்­களும் உச்­சி­ம­ா­நாட்­டுக்கு பின்னர் கைச்­சாத்­திட்டு ஒப்­பந்தம் ஒன்றை வெளியிட்­டுள்­ளனர். ஐக்­கிய அமெ­ரிக்க நாடுகள் என அழைக்­கப்­படும் அமெ­ரிக்­கா­விற்கும் ஜன­நா­யக மக்கள் கொரிய குடி­ய­ரசு என அழைக்­கப்­படும் வட­கொ­ரியாவுக்­கு­மி­டை­யி­லான ஒப்­பந்­த­மாகும். இரு­நாட்டு மக்­களின் சமா­தானம், செழிப்பு ஆகி­யவை தொடர்­பான அபி­லா­சை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக ஒப்­பந்தம் செய்­யப்­ப­டு­கி­றது என முன்­னு­ரையில் கூறப்­ப­டு­கின்­றது. ஒப்­பந்­தத்தின் பிர­தான அம்­சங்கள் ஆவன.

கொரிய தீப­கற்­பத்தில் நிலை­யா­னதும் நீடிக்­கக்­கூ­டி­ய­து­மான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வதில் இரு­நா­டு­களும் இணைந்­துள்­ளன.

27.04.2018ஆம் திக­திய பன்­ முன் ஜொம் பிர­க­ட­னத்தை வட­கொ­ரியா மீளவும் உறு­திப்­ப­டுத்­து­கி­றது.அதா­வது கொரிய தீப­கற்­பத்தில் அணு­ஆ­யுத ஒழிப்­பிற்கு வட­கொ­ரியா உத்­த­ர­வாதம் அளிக்­கின்­றது.

1950–1953 அமெ­ரிக்க, கொரிய மக்கள் குடி­ய­ரசு ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் நிகழ்ந்த யுத்­தத்தின் போது சிறை­பி­டிக்­கப்­பட்ட கைதி­க­ளையும், யுத்த நட­வ­டிக்­கை­களின் போது காணாமல் போன­வர்கள் தொடர்­பான எஞ்­சி­யி­ருக்கும் விட­யங்கள் மீது தொடர் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளவும், இனங்­கா­ணப்­பட்­ட­வர்­களை அந்­தந்த நாடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கவும் அமெ­ரிக்­காவும் கொரிய ஐக்­கிய மக்கள் குடி­ய­ரசும் இணங்­கு­கின்­றன.

பல சகாப்­தங்­க­ளாக நில­விய பகை­மை­களும், முரண்­பா­டு­களும், பதற்­றங்­களும் இரு­நா­டு­களுக்­கு­மி­டையில் நிறை­வேற்­றப்­படும் முத­லா­வதும் வர­லாற்று புகழ்­மிக்க ஒப்­பந்­தத்­துடன் முடி­வுக்கு வரு­கின்­றது என்ற நிலைப்­பாட்டை பூர­ண­மாக ஏற்றுக்கொண்டு ஒப்­பந்­தத்தில் குறித்­து­ரைக்­கப்­பட்­டுள்ள நிபந்­த­னை­களை இரு­நாட்டுத் தலை­வர்­களும் இத­ய­சுத்­தி­யுடன்,அர்ப்­ப­ணிப்­புடன் நிறை­வேற்ற இணங்­கி­யுள்­ளனர். ஒப்­பந்­தத்தில் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள தொடர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு அமெ­ரிக்க வெளிநாட்டு அமைச்சர் பொம்­பியோ அமெ­ரிக்­காவின் தரப்­பிலும் அவ­ருக்கு சம­னான கொரிய அமைச்சர் கொரிய தரப்­பிலும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். 

வர­லாற்றுப் புகழ்­மிக்க ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்ட பின்னர் அமெ­ரிக்க, வட­கொ­ரிய, தென்­கொ­ரிய மற்றும் சர்­வ­தேச ஊட­கங்கள் வெவ்­வேறு வித­மான கருத்­துக்­களை வழங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. வட­கொ­ரிய செய்தி ஸ்தாபனம் வெளியிட்ட கருத்­துக்கள் முக்­கி­ய­மா­னவை. அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்க–- தென்­கொ­ரிய கூட்டு இரா­ணுவ ஒத்­தி­கைகள் பயிற்­சிகள் யாவற்­றையும் நிறுத்த இணங்­கி­யுள்­ளார் என்ற செய்­திக்கும் வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான பொரு­ளா­தாரத் தடை­களை தளர்த்­தவும் இணங்­கி­யுள்ளார் என்ற செய்­திக்கும் முக்­கி­யத்­துவம் அளித்­துள்­ளன. அத்­துடன் இரு­நாட்டுத் தலை­வர்­களும் பரஸ்­பர அழைப்­பி­தழை வழங்கி தத்தம் நாட்­டுக்கு இராஜாங்க விஜயம் மேற்­கொள்ளும் படி கேட்­டுக்கொண்டுள்­ளனர். இரு தலை­வர்­களும் கொள்­கை­ய­ளவில் இணங்­கி­யுள்­ளனர். அவ்­வா­றான விஜயம் எப்­போது நிகழும் என்­கின்ற திட்­டங்கள் தற்­போது வெளியி­டப்­ப­ட­வில்லை. அமெ­ரிக்க அதிபர் தென்­கொ­ரி­யா­வுடன் மேற்­கொள்ளும் கூட்டு இரா­ணுவ ஒத்­தி­கைகள், பயிற்­சி­களை படிப்­ப­டி­யாக நிறுத்­து­வ­தற்கு இணங்­கி­யுள்­ளார் என்­பது தெளிவா­கின்­றது. தென்­கொ­ரிய அதிபர் அமெ­ரிக்க அதி­பரின் விட்­டுக்­கொ­டுப்­பிற்கு புக­ழுரை வழங்­கி­யுள்ளார். விடாக்­கண்டன், கொடாக்­கண்­ட­னாக சர்­வ­தேச வில்­ல­னாக சித்­த­ிரிக்­கப்­பட்ட வட­கொ­ரிய அதிபர் கிம், அமெ­ரிக்க அதி­ப­ருடன் ஒரே மேசையில் அமர்ந்து பேச இணங்­கி­யமை ட்ரம்பின் இரா­ஜ­தந்­திர முயற்­சிக்கு கிடைத்த வெற்­றி­யாகும்.

உச்சிமா­நாட்­டுக்கு முன்­னரே இரு­த­ரப்பு உயர்­மட்ட பேச்­சு­வார்த்­தைகள் மூலம் சில தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வது இரா­ஜ­தந்­திர நடை­மு­றையில் சாதா­ர­ண­மாக பின்­பற்­றப்­படும் நட­வ­டிக்­கை­யாகும். ஒப்­பந்­தங்கள் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் விட­யங்கள் ஒரே நாளில் மேற்­கொள்­ளப்­ப­டு­பவை அல்ல. இந்த அடிப்­ப­டையில் அமெ­ரிக்க தரப்­பினால் முன்­னரே வட­கொ­ரிய தரப்­புக்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட முக்­கி­ய­மான விட­யங்­களில் ஒன்­றாக அமெ­ரிக்க–தென்­கொ­ரிய கூட்டு இரா­ணுவ ஒத்­திகை பயிற்சி, நிறுத்தல் கரு­தப்­ப­டு­கி­றது. வட­கொ­ரிய அதிபர் வெறுங்கையுடன் தமது நாட்­டுக்கு திரும்­பு­வதை ஒரு போதும் விரும்­ப­மாட்டார். அமெ­ரிக்கா தனது உலக ஒரே வல்­ல­ரசு என்­கின்ற பெரும் அந்­தஸ்­தி­லி­ருந்து கீழே இறங்கி விட்­டுக்­கொ­டுப்­புக்­களை செய்ய இணங்­கி­யது என்­பது வட­கொ­ரி­யா­வுக்கு பெரும் வெற்­றி­யென்­பதில் சந்­தே­க­மில்லை. வட­கொ­ரியா தமது அர்ப்­ப­ணிப்பில் அணு­ஆ­யு­தங்­களை ஒழிப்­பது தொடர்­பாக தெளிவாக எத­னையும் குறிப்­பி­ட­வில்லை. கொரிய தீப­கற்­பத்தில் நிலை­யா­னதும் நீடிக்கக் கூடி­ய­து­மான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வதில் இரு­நா­டு­களும் இணைந்­துள்­ளன எனவும் கொரிய தீப­கற்­பத்தில் அணு­ஆ­யுத ஒழிப்­புக்கு வட­கொ­ரியா உத்­த­ர­வா­த­ம­ளிக்­கி­றது என்ற வாச­கங்கள் ட்ரம்பின் இரா­ஜ­தந்­திர முயற்­சிக்கு கிடைத்த வெற்றி என பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப் நட்பு நாடு­களை கைவிட்­டு­விட்டார் என்ற குற்­றச்­சாட்­டு­களும் எழு­கின்­றன. கொரிய யுத்தம் 1950களில் ஆரம்­பிக்­கப்­பட்ட பின்னர் அமெ­ரிக்க படைகள் தென்­கொ­ரி­யா­விலும் ஜப்­பா­னிலும் நிலை கொண்­டி­ருந்­தன. தொடர்ச்­சி­யாக கூட்டு ஒத்­தி­கைகள், பயிற்­சிகள் இடம்பெற்­றன. 

பன்­ முன் ஜொம் பிர­க­டனம் பற்றி வாச­கர்களுக்கு தெளிவு­ப­டுத்த வேண்டும். சித்­திரை 28ஆம் திகதி 2018ஆம் ஆண்டு இரு கொரிய தலை­வர்­களும் வட, தென் கொரிய எல்­லை­களைப் பிரிக்கும் பன்­ முன் ஜொம் என்ற பிர­தே­சத்தில் சந்­தித்து உல­கையே ஆச்­ச­ரி­யப்­பட வைத்­தனர். இரு தலை­வர்­களும் சந்­தித்து கொரிய தீப­கற்­பத்தில் அமைதி, செழிப்பு, கொரிய வளை­கு­டாவை இணைத்தல் ஆகிய விட­யங்­க­ளுக்­காக இணைந்து செயற்­பட வேண்­டு­மென அர்ப்­ப­ணிப்பு ஒன்றை ஏற்றுக்கொண்­டனர். இது பன்­ முன் ஜொம் பிர­க­டனம் என அழைக்­கப்­ப­டு­கி­றது. ட்ரம்ப்–கிம் கூட்­ட­றிக்­கையில் பன்­ முன் ஜொம் பிர­க­ட­னத்தின்படி செயற்­ப­டுவோம் என்­கின்ற உறுதிமொழி கூறப்­பட்­டுள்­ளது. ட்ரம்ப் உச்சிமாநாட்­டுக்கு செல்­வ­தற்கு முன் ஜீ 7 கைத்­தொழில் நாடு­களின் உச்சிமா­நாட்­டுக்கு சென்று அங்­கி­ருந்து சிங்­கப்­பூருக்கு புறப்­பட்டார். அமெ­ரிக்க அதிபர் ஐரோப்­பிய நாடு­க­ளையும் கன­டா­வையும் நேர்­மை­யற்ற வர்த்­தக முறை­களில் ஈடு­ப­டு­கி­றார்கள் என சாடினார். கனடா பிர­தமர் நேர்­மை­யற்­றவர், நீதி­யற்ற வர்த்­த­கத்தை ஊக்­கு­விக்­கின்றார் என கண்­டித்து ஜீ 7 மா­நாடு முடி­வ­டை­வ­தற்கு முன்னர் மா­நாட்டை விட்டு ட்ரம்ப் கிளம்­பி­விட்டார். ட்ரம்பின் செயல் ஐரோப்­பிய நட்பு நாடு­க­ளிலும் கன­டா­விலும் அதி­ருப்­தியை தோற்­று­வித்­துள்­ளது. உண்­மையில் ஜீ 8 நாடு­களின் உச்சிமா­நாடு ரஷ்யா, கிரி­மியா பிரச்­சி­னையின் கார­ண­மாக தற்­கா­லி­மாக வெளியேற்­றப்­பட்­டதால் ஜீ 7 உச்சிமா­நாடு என அழைக்­கப்­ப­டு­கி­றது. காலம் கால­மாக அமெ­ரிக்­காவின் நட்பு நாடு­க­ளான ஜேர்­மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடு­களை சினப்­ப­டுத்தி ட்ரம்ப் புதிய கூட்­டா­ளி­யுடன் உச்சிமா­நாட்­டுக்கு புறப்­பட்டுச் சென்­றமை ஐரோப்­பிய தலை­வர்­க­ளி­டையே ட்ரம்­புக்கு எதி­ரான உணர்­வலைகளைத் தோற்­று­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

வேறு வார்த்­தை­களில் கூறினால் ட்ரம்ப், கிம்­மு­ட­னான சந்­திப்­புக்கு மிக முக்­கி­யத்துவ­ம­ளித்­துள்ளார் என்­பது புல­னா­கி­றது.அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்­கொண்ட முயற்சி அமை­திக்­கான தொடர் முயற்சி எனக் கூறலாம். 1996ஆம் ஆண்டு ஐப்­பசி மாதம் முன்னாள் அதிபர் பில்­ கி­ளின்ரன் வட­கொ­ரிய அர­சுடன் ஒப்­பந்­த­மொன்றைச் செய்தார். அணு­ ஆ­யுத கட்­ட­மைப்­புக்­களை முடக்­கவும் படிப்­ப­டி­யாக இல்­லாது ஒழிக்­கவும், சர்­வ­தேச பரி­சோ­த­னைக்கு அணு உற்­பத்தி நிலை­யங்­களை பரி­சோ­த­னை­யி­டவும் இணங்­கப்­பட்­டது. ஆனால் பின்னர் அந்த ஏற்­பாடு முறி­வ­டைந்­து­விட்­டது. இது தொடர்­பான ஒப்­பந்தம் 950 சொற்கள் அடங்­கிய ஒப்­பந்தம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

2003 இல் ஜோர்ஜ் புஷ் ஜனா­தி­ப­தி­யான ஆட்­சிக்­கா­லத்தில் அமெ­ரிக்கா, வட, தென் கொரிய நாடுகள், சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய 6 நாடு­களின் கூட்டுப் பேச்­சு­வார்த்­தை­யிலும் வட­கொ­ரியா விட்­டுக்­கொ­டுப்­புக்கு இணங்­கி­யது.ஆனால் அந்த ஏற்­பாடும் முறி­வ­டைந்­தது. இந்தப் பின்­ன­ணியில் ஜூன் 12ஆம் திகதி உச்சி மா­நாட்டு ஒப்­பந்தம் நிறை­வேற்­றப்­ப­டுமா? என சில ஆய்­வா­ளர்கள் கேள்வி எழுப்­பு­கி­றார்கள். பில்­ கி­ளின்­ர­னு­ட­னான ஒப்­பந்தம் 950 சொற்­களைக் கொண்­டது, அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை ஜூன் 12ஆம் திகதி ஒப்­பந்தம் 350 சொற்­களைக் கொண்ட ஒப்­பந்தம் வெற்­றி­ய­ளிக்­குமா? என விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

எது எவ்­வா­றா­யினும் 2018ஆம் ஆண் டில் சர்­வ­தேச அர­சியல், பொரு­ளா­தார சூழலும், பூகோ­ளத்தில் புதிய ஆதிக்க மையங்கள் உரு­வாகும் சூழ­லையும் கவ­னத்­துக்கு எடுக்க வேண்­டிய கட்­டா யம் எந்த அர­சுக்கும் உள்­ளது. வட­கொ­ரி­யாவைப் பொறுத்­த­மட்டில் மூடிய பொரு­ளா­தார முறை­மையும் உலகில் தனித்­து­வி­டப்­பட்ட நாடு போன்று இயங்­கு­வதும், சீனாவில் பெரிதும் தங்­கி­யுள்ள நாடு என்­பதும், வட­கொ­ரிய மக்கள் ஒப்­பிட்டு ரீதி­யாக பின்­தங்கி வாழ்­கி­றார்கள் என்­பதும், வட­கொ­ரிய பொரு­ளா­தாரம் சீனாவின் பொரு­ளா­தார அடிப்­ப­டையில் மாற­வேண்­டிய அவ­சியம் இருப்­ப­தையும் ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றார்கள்.

இந்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒப்­பந்தம் நிறை­வேற்­ற­ப­ட்­டது தொடர்­பாக பல வித­மான கருத்­து­ரைகள் நில­வு­கின்­றன.ஆசிய கண்­டத்தைப் பொறுத்­த­ளவில் இந்த ஒப்­பந்தம் சீனா­வுக்கு பெரும் நன்மை என கூறப்­ப­டு­கின்­றது. 1950 இல் வட­கொ­ரிய கம்­யூ­னிசக் கட்­சிக்கு ஆத­ர­வாக மாவோ தலை­மை­யி­லான சீனா அமெ­ரிக்கப் படை­களை விரட்டி அடிப்­ப­தற்­காக சீனச் செம்­ப­டை­களை அனுப்­பி­யது மட்­டு­மல்ல, ஆயி­ரக்­க­ணக்­கான சீனப்­ப­டை­யினர் உயிர்­நீர்த்­தனர். எந்த வித­மான யுத்த நிறுத்த ஒப்­பந்­த­மின்றி யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு வட-,தென் கொரிய எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­பட்­டன. அமெ­ரிக்கப் படைகள் தென் கொரி­யா­விலும் ஜப்­பா­னிலும் நிலை­கொண்­டன. இவ் அமெ­ரிக்கப் படைகள் சீனா­விற்கு ஒரு சவா­லாக அமைந்­தன. புதிய ஒப்­பந்­தத்தின் மூலம் அமெ­ரிக்கா, தென் கொரியா, ஜப்­பா­னி­லி­ருந்து படை­களை விலக்­கு­வதால் சீனாவை நோக்கி ஏற்­ப­டுத்­தப்­பட்ட இரா­ணுவ அச்­சு­றுத்­தல்கள் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­படும். அத்­துடன் தென் சீனக் கடலில் பலர் உரி­மை­ பா­ராட்­டு­வதும் குறிப்­பாக ஜப்பான் உரிமை கோரு­வதும் அமெரிக்கா படைகளை விலக்கிய பின்னர் சீனாவின் விஸ்தரிப்பினை கேள்விக்குட்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகலாம். அத்துடன் சீனா வடகொரியாவின் நம்பத்தகுந்த நட்பு நாடு என்ற ரீதியிலும் அயல் நாடு என்ற ரீதியிலும் அமெரிக்க வடகொரிய தலைவர்கள் சந்திப்பிற்குப் பின்னணியில் செயலாற்றிய நாடு என்ற ரீதியில் சீனாவிற்கு இந்த ஒப்பந்தம் ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. 

தென்கொரிய அதிபர் வடகொரிய அதிபரின் நம்பிக்கையை பெற்றபடி யால் தான் வட,தென் கொரிய அதிபர் களின் சந்திப்பும் வடகொரிய–அமெ ரிக்க தலைவர்களின் சந்திப்பும் சாத்திய மாயிற்று.மேலும் கொரிய மக்கள் தங்களுக்கிடையில் மோதும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. தென்கொரிய பொருளாதாரப் பலம் வட கொரியா வின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க் கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின் றது. தென்கொரிய அதிபர் மூன் வட கொரியாவுடனான இராணுவ முறுக லையோ, அமெரிக்கா வடகொரியா வைத் தாக்குவதையோ விரும்பவில்லை என்பதை தேர்தல் பரப்புரைகளில் கூறி யவை நினைவு கூரத்தக்கது. 

ஜப்பானைப் பொறுத்த மட்டில் இந்த ஒப்பந்தம் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறமுடியும். பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் கை இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஓங்குவது ஜப்பானின் நலன்களுக்கு பாதகமாக அமையுமென நம்பப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்தின் வெற்றியாளர்களாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் வட கொரிய ஜனாதிபதி கிம்மும் என்றால் மிகையில்லை. அரசியல் இராஜதந்திர அனுபவ முதிர்ச்சி குறைந்தவர் என கருதப்படும் ட்ரம்ப் வடகொரிய தலை வரை உச்சி மாநாட்டிற்கு அழைத்து அணு ஆயுத உற்பத்தி தொடர்பான விடயங் களை நிறுத்துவதற்கு கிம்மைச் சம்மதிக்க வைத்தமை ட்ரம்பின் அந்தஸ்தினை உய ர்த்தியுள்ளது என்பது கண்கூடாகும்.


 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-16#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.