Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; விடுதலைப் புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம்

Featured Replies

இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; விடுதலைப் புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம்

 

 
 

இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது   மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் பொலிஸாரால் மீட்புகப்பட்டுள்ளன. 

eames_3.jpg

மீட்கப்பட்ட பெட்டிகளில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதாகவும் இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள்  பயன்படுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் இன்று மாலை அவரது  வீட்டில்  கழிவு நீர் கிணறு தோண்டியுள்ளார்.  அப்போது சிதைந்த நிலையில் சுமார் 22 பெட்டிகள் கிடைத்துள்ளது.

ra_02.jpg

சந்தேகமான முறையில் இருந்த பெட்டியால் அதிர்ச்சியடைந்த எடிசன் தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷமீனா தலைமையில் 22 பெட்டிகளை சோதனை செய்தனர்.

ramesvam_01.jpg

குறித்த பெட்டிகளில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருந்துள்ளது.  இந்த குண்டுகள் அனைத்தும் சுமார் 8 அல்லது 10 வருடங்களுக்கு முன் புதைத்து வைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள்  பயன்படுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் சம்பவ இடத்தில்   இராமநாதபுரம் பொலிஸார் வீட்டின் உரிமையாளர் எடிசனிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் ஜே.சி.பி மூலம் அந்த இடத்தை தோண்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/35552

  • தொடங்கியவர்

இலங்கை தமிழ் போராளிக்குழுக்களின் ஆயுதக் குவியல் ராமேஸ்வரத்தில் கண்டெடுப்பு

ஆயுத குவியல்

இலங்கையில் செயல்பட்டு வந்த தமிழ் போராளிக்குழுக்களில் ஒன்றான டெலோ அமைப்பு பயன்படுத்திய ஆயுத குவியல், ராமேஸ்வரத்தில் கழிவுநீர் தொட்டி தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டது. 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர், கண்ணிவெடிகள் என தோண்டத்தோண்ட ஆயதங்கள் கிடைத்ததால் காவல்துறையின் பாதுகாப்புடன் இப்பணி நடந்தது.

இங்கு கண்டு எடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாகளையும் வெடிமருந்துகளையும் அப்பகுதியில் மற்றொரு இடத்தில் குழி தோண்டி பாதுகாப்பாக போலீஸார் வைத்துள்ளனர். மேலும் இப்பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், தண்ணீர் ஊற்று, பனைக்குளம், ஆற்றாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியா ஆதரவோடு இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் போராளிக்குழுக்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது. கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் தமிழ் குழுக்கள் பல ஆண்டுகளாக ஆயுத பயிற்சி பெற்றனர்.

அந்த பயிற்சியின் போது தொலைவில் இருப்பவர்களை சுடும் பயிற்சி, கண்ணிவெடிகளை பயன்படுத்துவது, ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது, கையெறி குண்டுகளை பயன்படுத்துவது, கடலில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

ஆயுத குவியல்

கடந்த 1986 ஆம் ஆண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கை தமிழ் குழுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து, பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை புதைத்து விட்டு சென்று விட்டனர்.

ஆயுத குவியல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா பகுதியில் தமிழ் இயக்கங்கள் பயன்படுத்திய அதிநவீன துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதிகளில் கழிவுநீர் தொட்டிக்காக குழித்தோண்டும் போது பெட்டிகள் இருப்பதை கண்ட உடன் மக்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை பார்த்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஆயுத குவியல்

இதனையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்த போது ஆயத குவியல் இருப்பது தெரியவந்தது. வெடி குண்டுகளை செயல் இழக்க வைக்கும் தனிப்படையுடன் வந்த காவல்துறையினர் குழியை பாதுகாப்புடன் தோண்ட தொடங்கினர்.

திங்கட்கிழமை இரவு 9 மணி வரையில் 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், 400 ராக்கெட் லாஞ்சர்கள், 15 பாக்ஸ் கையெறி குண்டுகள், 5 கண்ணிவெடிகள், கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகளுடன் 4 பெட்டிகள் எடுக்கப்பட்டது.

ஆயுத குவியல்

மதுரையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து தோட்டாகளையும் வெடி பொருள்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-44610527

  • தொடங்கியவர்

 

 

ராமேஸ்வரத்தில் தமிழ்ப் போராளிகள் பயன்படுத்திய  ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு:

வீடியோ – படங்கள் இணைப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ராமேஸ்வரத்தில் TELO அமைப்பு பயன்படுத்திய ஆயுத குவியல் கிணறு தோண்டும் போது கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், ரொக்கெட் லோஞ்சர், கன்னிவெடிகள் என தோண்டத்தோண்ட ஆயுதங்கள் வருவதால் பரபரப்பு, காவல்துறையினர் பாதுகாப்புடன் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்,தங்கச்சிமடம்,தண்ணீ ர் ஊற்று,பனைக்குளம்,ஆற்றாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இந்தியா ஆதரவோடு இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் குழுக்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது.  கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் தமிழ் குழுக்கள் பல ஆண்டுகளாக ஆயுத பயிற்சி பெற்றனர்.

அந்த பயிற்சியின் போது தொலைவில் இருப்பவர்களை குறிபார்த்து சூடும் பயிற்சி,கன்னிவெடிகளை பயன்படுத்துவது, ரொக்கெட் லோஞ்சர் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது, கையெறி குண்டுகளை பயன்படுத்துவது,கடலில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, கடந்த 1986 ஆம் ஆண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கையை சோந்த தமிழ் குழுக்கள் அனைத்துk; வெளியேற்றப்பட்டன.

அந்த கால கட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து, பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை புதைத்து விட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா பகுதியில் தமிழ் இயக்கங்கள் பயன்படுத்திய அதி நவின துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன இதனையடுத்து, ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் கிணறு தோண்டும் போது பெட்டிகள் இருப்பதை கண்டவுடன் அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை கண்டவுடன் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

Rameswaram-arms2.jpg?resize=624%2C351

இதனையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்த போது ஆயத குவியல் இருப்பது தெரியவந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனாவுக்க தகவல் தெரிவித்தனர். வெடி குண்டுகளை செயல் இழக்கும் தனிப்படையும் வந்த காவல்துறையினர் குழியை நேற்று(25) பாதுகாப்புடன் தோண்ட தொடங்கினர்.

இரவு 09 மணி வரையில் 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாங்கள்,400 ரொக்கெட் லோஞ்சர்கள்,15 பாக்ஸ் கையெறி குண்டுகள்,5 கன்னிவெடிகள்,கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகள் 4 பெட்டிகள்,எடுக்கப்பட்டன. வெடி குண்டுகள் எடுப்பதால் அந்தப் பகுதயில் உள்ள பொதுமக்களை காவல்துறையினர் அப்புறபடுத்தி பாதுகாப்புடன் ஆயுதங்களை எடுக்கம் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அந்த பகுதியை சுற்றி வெடி குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதிலும் ஆய்வு செய்து இது போன்று வேறு இடங்களில் ஆயுது குவியல் உள்ளதா என ஆய்வு செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Rameswaram-arms3.jpg?resize=624%2C351Rameswaram-arms4.jpg?resize=624%2C351Rameswaram-arms5.jpg?resize=624%2C351

http://globaltamilnews.net/2018/85153/

  • தொடங்கியவர்

`30 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்டதா?’ - ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களின் பின்னணி

 

ராமேஸ்வரம் அருகே போராளிகள் புதைத்துவைத்திருந்த வெடிமருந்துப் பொருள்கள் பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் வகையை சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.  

ராமேஸ்வரம் அருகே, போராளிகள் புதைத்துவைத்திருந்த வெடிமருந்துப் பொருள்கள், பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.

தங்கச்சிமடத்தில் போராளிகள் பதுக்கிவைத்திருந்த வெடிபொருட்களை தேடும் போலீஸார்  

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் அந்தையாவுக்குச் சொந்தமான பண்ணை வீடு, அந்தோணியார்புரத்தில் உள்ளது. அந்தையா இறந்துவிட்டதால், அவரது மகன் எடிசன் என்பவர் தற்போது இந்த வீட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில், நேற்று மாலை இவரது வீட்டின் அருகில் இருந்த கழிவுநீர்த் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்வதற்காகக் குழி தோண்டியுள்ளனர். அப்போது, துருப்பிடித்த நிலையில் இரும்புப் பெட்டிகள் தென்பட்டுள்ளன. அவற்றை வெளியே எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

 

 

போராளிகள் மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்கள் ஆய்வு

 அவர்கள், இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார், அந்தப் பகுதியைச் சுற்றி மேலும் குழி தோண்டினர். அப்போது,  இயந்திரத் துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடிய 10,828 தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஏவுகணையில் பயன்படக்கூடிய வெடிபொருள்கள், நிலக் கன்னிவெடிகள், ஒரே நேரத்தில் 15 டெட்டனேட்டர்களை வெடிக்கும் திறன்கொண்ட டைனமோ, வெடிகுண்டுகளை வெடிக்கப் பயன்படுத்தும் இரும்பு ஸ்லம்புகள், எச்சரிக்கை வெடிகள் என ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

 
 

 

 மதுரையில் இருந்து வந்திருந்த வெடிகுண்டு கண்டுபிடிப்புக் குழுவினர், வெடிப்பொருள்கள் சிக்கிய பகுதிகளில் இன்று நவீன கருவிகள் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வேறு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து,  கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களை வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஆய்வுசெய்தனர். சிக்கிய வெடிபொருள்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை என்பது அப்போது தெரிய வந்தது. பெரிய கட்டடங்கள், பாலங்கள் ஆகியவற்றைத் தகர்க்கும் சக்திகொண்டவை என்றும், ஆனால் இவற்றில் பெரும்பாலானவை சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் இவற்றால் ஆபத்து ஏதும் இல்லை எனவும் ஆய்வில் தெரியவந்தது. மேலும், தரையில் விழுந்தவுடன் வெடிக்கும் தன்மைகொண்ட ஏவுகணை வெடிமருந்துக் குப்பிகள் மட்டும் தனியாகப் பிரித்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் இவை மண்ணில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும், நீதிபதி ஆய்வுக்குப் பின், அவரது உத்தரவுக்குப் பின், இவற்றை பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டுசென்று அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/128934-police-investigates-continuous-over-rameshwaram-explosives-capture-issue.html

  • தொடங்கியவர்

இராமேஸ்வரத்தில் மீட்ட வெடிபொருட்கள் பாலங்களை தகர்க்கும் சக்தி வாய்ந்தவை

 

 
 

இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த வெடிபொருட்கள் அகழ்வு பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில் குறித்த வெடிபொருட்கள் பாலங்களை தகர்க்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை என வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ra_02.jpg

தங்கச்சிமடத்தில் இரண்டாது நாளாக நேற்ற இடம்பெற்ற வெடி குண்டுகள் தேடும் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகளை செயல்யிழக்கும் பணிகளும் இடம்பெற்றன

இந்த அகழ்வின் போது இயந்திர துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், வெடிக்க வைக்கும் கருவி, கையெறி குண்டுகள், கண்ணிவெடிகள், ராக்கெட் லாஞ்சர் குண்டில் பொருத்தப்படும் கருவி, வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் இணைப்பு வயர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தண்ணீர் புகாத அளவுக்கு பிளாஸ்டிக் பைகளில் சுற்றிய நிலையில் காணப்பட்டன.

இதில் தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் இராமநாதபுரம் ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு. மற்ற வெடிபொருட்கள் அனைத்தும் அந்த இடத்திலேயே மணலுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிபொருட்களை மதுரை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரி குணசேகரன் தலைமையிலான நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பிவ் குணசேகரன் தெரிவிக்கையில், இராமேசுவரத்தில் சிக்கிய ஆயுதப்புதையலில் ராணுவத்தில் உள்ள எல்லா வெடிமருந்துகளும் இருந்தன. இதுவரை பார்க்காத 13 வகையான வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 1970-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை.

ramesvam_01.jpg

இந்த வெடிபொருட்கள் போரின் போது பாலங்கள், கட்டிடங்களை தகர்க்க பயன்படுத்தக் கூடியவையாகும். 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஒரே நேரத்தில் சேதப்படுத்தி கவிழ்க்க இந்த வகை குண்டுகள் பயன்படும்.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை பாதுகாக்க வசதி இல்லை. என்பதால் ஓரிரு நாளில் அவற்றை செயலழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தங்கச்சிமடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் வெடிபொருட்கள் அபாயகரமானது என்பதால் இவற்றை அழிப்பதற்கு  திருவாடானை நீதிமன்றத்தில் பொலிஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/35635

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

ராமேசுவரம் அருகில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் போராளிக்குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல்கள் 25 நாட்களுக்குப் பின்னர் அகற்றம்

 

 
a2jpg

ஆயுதக் குவியல்களைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் காவல்துறையினர் | படம்: எல்.பாலச்சந்தர்.

ராமேசுவரம் அருகே இலங்கையைச் சேர்ந்த தமிழ் போராளிக்குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல்களைப் பாதுகாப்பான முறையில் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினர்.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் கடந்த ஜூன் 25 அன்று கழிவு நீர் கால்வாய் கிணறு அமைப்பதற்காக தொழிலாளர்களைக் கொண்டு தோண்டியபோது இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றபோது தமிழகத்தில் பயிற்சி பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஈழப் போராளிக்குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டது.

   
 

ஆயுதக் குவியலிலிருந்து 5,500 எல்என்ஜி ரக துப்பாக்கி குண்டுகள், 4,928 எஸ்எல்ஆர் ரக துப்பாக்கி குண்டுகள், 400 இயந்திரத் துப்பாக்கி குண்டுகள், டெட்டனேட்டர்களை வெடிக்கச் செய்யும் சிலாப் 199, ராக்கெட் லான்சர் பொறிகள் 20, கையெறி குண்டுகள் 15, வயர் ரோல்கள் 8, கன்னி வெடிகள் 2, எக்ஸ்புளோசிவ் மோட்டார் 1 ஆகியன கண்டெடுக்கப்பட்டன.

ஆயுதக் குவியல்களில் வெடிக்கும் தன்மைகளைக் கொண்டவற்றை மட்டும் எடிசன் வீட்டுத் தோட்டத்தில் ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டது. அந்தப் பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவுப் பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிக்கும் சக்தியை இழந்த ஆயுதங்களை மட்டும் ராமநாதபுரம் ஆயுதப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

a1jpg

ஆயுதக் குவியல்களைப் பாதுகாப்பான முறையில் வாகனத்தில் ஏற்றும் காவல்துறையினர் | படம்: எல்.பாலச்சந்தர்

 

மேலும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல்துறையினரால் எடிசனின் வீடு மற்றும் சுற்றிலும் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்து மேலும் வேறு எங்கும் ஆயுதங்கள் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆயுதக்குவியல்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் எடிசன் தனது வீட்டுத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக் குவியல்களை அகற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று செயலிழக்கவோ, அல்லது அழிக்கவோ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன் தங்கச்சிமடம் அந்தோணியார் புரத்திலுள்ள தனது வீட்டிலிருந்து தமது உடமைகளை எடுத்துக்கொண்டு காலி செய்தார். இதனைத் தொடர்ந்து ரமேசுவரம் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பாலமுருகன் தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக் குவியல்களைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த புதன்கிழமை உத்தரவிட்டார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி, ராமேசுவரம் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் எடிசன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக்குவியல்களை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல்துறையினரால் அகற்றி சிவகங்கை மாவட்டம் மேலூரில் உள்ள ஆயுதக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

25 நாட்கள் கழித்து ஆயுதக் குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் தங்கச்சிமடம் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24476239.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.