Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா.சம்பந்தனை சந்தித்தார் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ்

Featured Replies

இரா.சம்பந்தனை சந்தித்தார் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ்

 

 

இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

PHOTO-2018-07-03-12-35-23_2.jpg

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த அநேக விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்தார.

அதேவேளை இலங்கை அரசாங்கமானது இந்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாது இந்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு மேலதிக கால அவகாசத்தினையும் கோரியிருந்த போது அக்கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்று அனுமதித்தும் இருந்தது ஆகவே அரசாங்கமானது தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது என்பதனையும் வலியுறுத்தினார். 

கடந்தகால சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதி செய்யும் முகமாக ஒரு புதிய அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்படுவதின் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் உள்ள அம்சங்களில் இது உள்ளடக்கப்பட்டுள்ளதனையும் எடுத்துக்காட்டினார். 

புதிய யாப்பு தொடர்பில் 1988 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு கருமங்கள் இடம்பெற்று வந்துள்ளதினை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் தற்போது இதனை முன்னெடுத்து செல்வதற்கு அரசியல் விருப்பும் தைரியமுமே தேவைப்பாடாக உள்ளதனையும் சுட்டிக்காட்டினார். 

PHOTO-2018-07-03-12-35-23_1.jpg

இந்த விடயங்களில் தமது சொந்த மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக தேவைப்படும் அணைத்து அழுத்தங்களையும் கொடுக்கும் அதேவேளை தொடர்ந்தும் இந்த கருமங்களில் எமது ஈடுபாட்டினை கொண்டிருப்போம் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் மந்த கதியில் இடம்பெறும் காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் எமது காணிகளில் இராணுவம் பண்ணைகள் நடாத்துவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் எமது மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும்  இத்தகையான பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் காணி விடுவிப்பு தொடர்பிலான முடிவுகள் எடுப்பதனை தனியே ஆயுதப்படையினரிடம் கையளிக்காமல் அரசாங்கமானது முடிவுகளை எடுத்து அவற்றினை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். 

மேலும் கருது தெரிவித்த இரா. சம்பந்தன் அரசாங்கமானது தீவிரவாத போக்காளர்களின் பேச்சுக்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தினை கொடுக்கின்றமையானது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கு தடையாக அமைகின்றமையையும் எடுத்துக்கூறினார்.

இந்த அரசாங்கத்தினை பதவிக்கு கொண்டுவருவதில் பெரும்பங்காற்றிய எமது மக்கள் கடந்த காலத்தில் அரசாங்கம் பாரிய முன்னேற்றங்களை வெளிக்காட்ட முடியாமையினால் அதிருப்தி அடைத்துள்ளார்கள் என தெரிவித்த இரா சம்பந்தன் எமது இளைஞர்கள் தொடர்ந்தும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதனையும் வலியுறுத்தினார். 

PHOTO-2018-07-03-12-35-23.jpg

மேலும் ஒரு சில விடயங்கள் செய்யப்படுவதன் முக்கியத்துவத்தினை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது அந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  

பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் நாங்கள் முழு இராணுவத்தினையும் குற்றவாளிகள் என்று கூறவில்லை ஆனால் நிச்சயமாக பாரிய குற்றங்களை இழைத்த இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார். 

மனித உரிமைகள் பேரவையில் இருந்து ஐக்கிய அமெரிக்கா விலகியிருந்தாலும் 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான சர்வதேசத்தின் ஈடுபாடு தொடர்ந்தும் மாற்றமடையாமல் இருக்கும் என இதன்போது கருது வெளியிட்ட ஐ நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி தெரிவித்தார். 

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரோடு கூட்டமைப்ப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

http://www.virakesari.lk/article/35961

  • தொடங்கியவர்

குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்

 

Terence-D.-Jones-sampanthan-2-300x200.jpபாரிய குற்றங்களை இழைத்த சிறிலங்கா இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்சிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்காக ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ், நேற்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நாடாளுமன்றத்தில் உள்ள, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், “ ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், குறிப்பிடப்பட்டிருந்த அநேகமான விடயங்கள் குறித்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கம், இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாது, இதனை நிறைவேற்றுவதற்கு மேலதிக காலஅவகாசத்தையும் கோரியிருந்தது.

அந்தக் கோரிக்கையை அனைத்துலக சமூகம் ஏற்று அனுமதித்தும் இருந்தது. ஆகவே சிறிலங்கா அரசாங்கம், தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது.

கடந்தகால சம்பவங்கள் மீளநிகழாமையை உறுதி செய்வதற்கு,  ஒரு புதிய அரசியலமைப்பு, அங்கீகரிக்கப்படுவது அவசியம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில், உள்ள அம்சங்களில் இதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 1988 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு கருமங்கள் இடம்பெற்று வந்துள்ளன.  தற்போது இதனை முன்னெடுத்து செல்வதற்கு அரசியல் விருப்பும் தைரியமுமே தேவைப்பாடாக உள்ளது.

இந்த விடயங்களில் தமது சொந்த மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் அனைத்து அழுத்தங்களையும் கொடுக்கும், அதேவேளை தொடர்ந்தும் இந்த கருமங்களில் எமது ஈடுபாட்டினை கொண்டிருப்போம்.

வடக்கு – கிழக்கில் காணிகள் விடுவிப்பு மந்த கதியிலேயே நடக்கிறது. எமது காணிகளில் சிறிலங்கா இராணுவம் பண்ணைகள் நடத்துவதனை அனுமதிக்க முடியாது.

Terence-D.-Jones-sampanthan-2-1024x683.j

Terence-D.-Jones-sampanthan-3-1024x683.jஅவர்கள் எமது மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் இத்தகைய பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம், தீவிரவாத போக்காளர்களின் பேச்சுக்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தைக் கொடுப்பது, இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கு தடையாக அமைகின்றது.

இந்த அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வருவதில் பெரும்பங்காற்றிய எமது மக்கள், கடந்த காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் பாரிய முன்னேற்றங்களை வெளிக்காட்ட முடியாமையினால் அதிருப்தி அடைத்துள்ளார்கள்.

எமது இளைஞர்கள் தொடர்ந்தும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் சில விடயங்கள் செய்யப்படுவதன் முக்கியத்துவத்தை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

பொறுப்புக்கூறல் விடயத்தில், நாங்கள் முழு இராணுவத்தினையும் குற்றவாளிகள் என்று கூறவில்லை. ஆனால், நிச்சயமாக பாரிய குற்றங்களை இழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் இணைந்து பங்கேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கருத்து வெளியிடுகையில், “காணிகள் விடுவிப்பு தொடர்பாக முடிவுகள் எடுப்பதனை தனியே ஆயுதப்படையினரிடம் கையளிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் முடிவுகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பு நீடித்தமை குறிப்பிடத்தக்கது

http://www.puthinappalakai.net/2018/07/04/news/31715

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.