Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கூறவில்லை – விஜயகலா குத்துக்கரணம்

Featured Replies

புலிகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கூறவில்லை – விஜயகலா குத்துக்கரணம்

 

vijayakala-jaffna-1-300x200.jpgவிடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தாம் உரையாற்றவில்லை என்றும், நாக்கு தடுமாறி விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த தொலைபேசி உரையாடலை ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டார்.

ரஞ்சன்  –  விடுதலைப் புலிகள் பற்றி நீங்கள் என்ன கூறினீர்கள்?

விஜயகலா – யார் கூறியது?

ரஞ்சன்   – ஏன், நீங்கள் கூறியுள்ளீர்கள். அது தான் எல்லா நாளிதழ்களிலும் உள்ளன.

விஜயகலா – ஐயோ, யார் அந்தப் பொய்யைச் சொன்னது. அந்தக் காலகட்டத்தில் நாங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி இருந்தோம் என்றே நான் கூறினேன்.

ரஞ்சன் – பாடசாலைச் சிறுமி உறவினர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாரா?

விஜயகலா – சகோதரனுக்கும், மாமாவுக்கு எந்த தொடர்புமில்லை. அது போதைப்பொருள் பாவனையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தெற்கைப் போல, இங்கு உறவு முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ரஞ்சன் – காணிகளைத் திரும்பக் கொடுத்தமைக்கு சிறிலங்கா அதிபருக்கு நீங்கள் நன்றி தெரிவித்திருந்தீர்கள்.

விஜயகலா – அவர் தனது கட்சியை வளர்க்கவே யாழ்ப்பாணம் வந்தார். அவரது வெற்றிக்கு நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்.

தேர்தலில் தான் ஒரு மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மகிந்த ராஜபக்ச என்னிடம் கூறியிருந்தார். ஒரு பில்லியன் ரூபா பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக எனக்குக் கூறினார். ஆனாலும் அவரை ஆதரிக்கவில்லை.

ரஞ்சன் – உங்களின் கணவன் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டாரா?

விஜயகலா – இல்லை. என்ன முட்டாள்தனம். எல்லாப் பிரச்சினைகளுக்கும் சந்திரிகாவும் மகிந்தவும் தான் காரணம்.

ரஞ்சன் – இந்தப் பிரச்சினைக்கான உங்களின் தீர்வு தவறானது.

விஜயகலா – விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நான் கூறவில்லை. அந்தக் காலத்தில் நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம். உற்சாகத்தில், நான் தவறுதலாக கூறி விட்டேன் . யாரும் திரும்பி வரமாட்டார்கள்.

ரஞ்சன் – விடுதலைப் புலிகள் திரும்பி வரவேண்டும் என்று கூறாதீர்கள். அது நல்லதல்ல.

விஜயகலா – இல்லை, இல்லை ரஞ்சன், இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பதற்கான ஊடகங்களின் வேலை.

ரஞ்சன்  – அப்படியான அறிக்கைகளை வெளியிட வேண்டாம். அது அரசாங்கத்துக்கு நல்லதல்ல.

விஜயகலா – இல்லை, ரஞ்சன் விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நான் கூறவில்லை.

http://www.puthinappalakai.net/2018/07/04/news/31713

  • தொடங்கியவர்

விஜயகலாவை கைதுசெய்யக் கோரி  மூன்று முறைப்பாடுகள்

 

 
 

(எம்.எப்.எம்.பஸீர்)

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தொடர்பில் அவரை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு நேற்யை தினம் மூன்று முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. 

police.jpg

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் அலு­வ­ல­கத்தில்  இம் மூன்று முறைப்­பா­டு­களும் நேற்று  பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பொலிஸ் மா அதிபர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யினை எடுப்பார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர்  விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நடந்­து­கொண்­டுள்­ளதால் அவரை உடன் கைது செய்­யு­மாறு சிங்­ஹல ராவய அமைப்பு முறைப்­பாடு ஊடாக பொலிஸ் மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

அத்துடன் பிவித்துரு ஹெலஉறுமய சார்பிலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர­சி­ய­ல­மைப்பை மீறும், பயங்­க­ர­வாத தடைச் சட்டம், தண்­டனை சட்டக் கோவை, சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் தண்­டனைக்குரிய குற்­றத்தை இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புரிந்­துள்­ள­தாக கூறி அவரை உடன் கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி உண்­மையை கண்­ட­றியும் அமைப்பு பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பா­ட­ளித்­துள்­ளது. 

 நேற்று காலை கோட்­டையில் உள்ள பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு சென்ற சிங்­ஹல ராவய அமைப்பின் தேசிய அமைப்­பாளர் மாகல்­கந்தே சுதத்த  தேரர் உள்­ளிட்ட தேரர்கள், பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­ல­கத்தில்  இரா­ஜாங்க அமைச்சர்  விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக முறைப்­பா­ட­ளித்­தனர்.

 

 மூன்று நாட்­க­ளுக்குள்  குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றினால், அடுத்­த­கட்­ட­மாக தாம் நீதி­மன்றை நாட­வுள்­ள­தாக முறைப்­பா­ட­ளித்த பின்னர் மாகல்­கந்தே சுதத்த தேரர் கூறினார்.

 இதே­வேளை சட்­டத்­த­ர­ணி­களை உள்­ள­டக்­கிய உண்­மையை கண்­ட­றியும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சீ தொல­வத்த தலை­மையில் பொலிஸ் தலை­மை­யகம் சென்ற சட்­டத்­த­ர­ணிகள் குழுவும் நேற்று  பொலிஸ் மா அதி­ப­ருக்கு விஜ­ய­கலா மகேஸ்­வரன் தொடர்பில் முறைப்­பாடு செய்­தது.

 அத்த முறைப்­பாட்டில் , இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை அம்­சத்தை மீறி­யுள்­ள­தா­கவும் நாட்டின் ஒரு­மைப்­பாட்டை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

  பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழும் , தண்­டனை சட்டக் கோவையின் 114, 115 ஆம் அத்­தி­யாயங்­களின் கீழும்  விஜ­ய­கலா மகேஸ்­வரன் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்தை புரிந்­துள்ளார். அவரின் கூற்­றா­னது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின்  பிர­கா­ரமும் இனங்­க­ளுக்கிடையே விரி­சலை ஏற்­ப­டுத்தும் தண்­டனைக்குரிய குற்­ற­மாகும்  என்று    சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் சாதாரண ஒருவர் இக்குற்றங்களை செய்தால் பொலிஸார் எவ்வாறான கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களோ அதனை விஜயகலா மகேஸ்வரனின் விடயத்திலும் நடை முறைப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

http://www.virakesari.lk/article/35968

  • தொடங்கியவர்

விஜயகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஞானசார

 

விஜயகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஞானசார

வடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டம் என நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது. நாட்டில் ஒரே சட்டமே இருக்க வேண்டும். இதன்படி இனவாத கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் சிலருக்கு வழங்கப்பட்டதை போன்ற தண்டனையையே விஜயகலாவுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன்படி அவருக்கு வழங்கப்படும் தண்டனை என்னவென்பதனை அரசாங்கம் கூற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். -(3)

http://www.samakalam.com/செய்திகள்/விஜயகலாவுக்கு-எதிராக-போ-2/

  • தொடங்கியவர்

விமர்சனங்களுக்கு அப்பால் 20 நிமடத்தில் தெற்கிற்கு யாழ்ப்பாணத்தை காட்டிய விஜயகலா…

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் – யாழ்ப்பாணம்… காணொளி இணைப்பு…

 

சிங்களம் தெரிந்தவர்கள் முழுமையாக கேட்க வேண்டியது… – றஞ்சன் றாமநாயக்கா VS விஜயகலா..

நட்பு ரீதியாக விஜயகலாவுக்கு எடுத்த, தனிப்பட்ட அழைப்பை ஊடக சந்திப்பில் போட்டுடைத்த றஞ்சன் றாமநாயக்க…

விமர்சனங்களுக்கு அப்பால் தனக்கு தெரிந்த சிங்களத்தில் யாழ்பாணத்தை படம் பிடித்து தெற்கிற்கு காட்டிய விஜயகலா

ஊடகங்கள் பொய்யை எழுதிவிட்டன என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். கொழும்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார்.

அதன் போது மகளீர் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டும் என தெரிவித்த கருத்து தொடர்பில் தனது கையடக்க தொலைபேசியில் இராஜங்க அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்டார். அதன் போதே தனது கருத்து தொடர்பில் தன்னிலை விளக்கம் கொடுத்த பின்னர் இராஜாங்க அமைச்சர் சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசி ஊடாக உரையாடினார். இந்த உரையாடலை ஊடக சந்திப்பில் வெளிப்படையாக அனைவரும் கேட்பதற்கு தொலைபேசியின் ஒலி அமைப்பை அழுத்தியுள்ளார். எனினும் இவ்வாறு ஊடக சந்திப்பில் விஜயகலாவுடனான உரையாடலை வெளிப்படுத்துவது பற்றி றஞ்சன் விஜயகலாவிடம் அனுமதி பெறவில்லை.  இது தமிழர்களை பெரும்பான்மையினத்தவர் எவ்வாறு கிள்ளுக் கீரையாக பயன்படுத்துகிறார்கள் என்பதனை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு என பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் முன்னுக்கு பின்னான முரண்பட்ட நடவடிக்கைகள், உரைகள், செயற்பாடுகள், அனுபவம் அற்ற அரசியல் நடவடிக்கைகள், மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் பேச்சுக்கள் என பல முரண்பாடுகளுக்கு அப்பால், றஞ்சன் ராமநாயக்கவுடனான உரையாடலில் வடக்கின் உண்மை நிலவரங்கள் பலவற்றை துல்லியமாக வெளிப்படுத்தி உள்ளார்.

யுத்தத்தின் பின்னரான மக்களின் நிலை –

யுத்தத்தின் பின்னரான வறுமை..

யுத்தத்தின் பின்னரான வேலைவாய்ப்பின்மை..

யுத்தத்தின் பின்னரான சமூக சீர்கேடுகள்…

யுத்தத்தின் பின்னரான  இரணுவம் – பொலிசாரின் அத்து மீறல்கள்..

யுத்தத்தின் பின்னரும் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கின்றமை..

யுத்தத்தின் பின்னரான வாழ்வெட்டு கலாசாரமும் பின்னணியில் படையினர் இருப்பதும்…

யுத்தத்தின் பின்னராக போதைப்பொருட்களின் ஆதிக்கம்…

போதைப்பொருட் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் – பாதுகாப்பு தரப்பினரின் பங்கு…

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு…

என யாழ்ப்பாணத்தின் அவலத்தை தனக்கு தெரிந்த சிங்களத்தில் தெரிந்தோ – தெரியாமலோ – துணிந்தோ – துணியாமலோ கொழும்பின் ஊடகங்கள் கூடிய சந்திப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த உரையாடல் சில இடங்களில் நகைச்சுவையாகவும், சில இடங்களில் குழைவாகவும், சில இடங்களில் நட்பாகவும் இருந்த போதும் இந்த உரையாடலில் தெறித்த  பல  விடயங்கள் தெற்கின் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் உறைக்கக் கூடியவை என்பதுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பகிரங்க வாக்குமூலமாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.. வழமைபோல்  விஜயகலாவை கலாய்பதற்கு அப்பால் அவர் சொன்ன விடயங்கள் உற்று நோக்கப்பட வேண்டியவை…

 

http://globaltamilnews.net/2018/86243/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.