Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாந­கர சபை உறுப்­பி­னர் மணி­வண்­ணனின் – உறுப்­பு­ரி­மையை நீக்­கக்­கோரி வழக்கு!!

Featured Replies

மாந­கர சபை உறுப்­பி­னர் மணி­வண்­ணனின் – உறுப்­பு­ரி­மையை நீக்­கக்­கோரி வழக்கு!!

 

yyyy.png

 
 
 
 

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தேசிய அமைப்­பா­ளர் வி.மணி­வண்­ண­னின் யாழ்ப்­பாண மாந­கர சபை உறுப்­பு­ரி­மையை நீக்­கக் கோரி நேற்று முன்­தி­னம் கொழும்பு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர், தெரி­வத்­தாட்சி அலு­வ­ல­கர் உள்­பட்­டோரை பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பிட்டு இந்த மனுத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

யாழ்ப்­பாண மாந­கர சபை எல்­லைக்­குள் நிரந்­த­ர­மாக வதி­யாத ஒரு­வர் உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுத்து அனுப்­பப்­பட்­டமை உள்­ளூ­ராட்சி தேர்­தல் விதியை மீறும் செயல் என மனு­தா­ரர் மனு­வில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

 

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் மாந­கர சபை உறுப்­பி­னர் வி.மணி­வண்­ண­னின் முக­வ­ரியை தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டம் ஊடாக அறி­வ­தற்கு முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு இருந்­தன என்ற தக­வல்­கள் வெளி­யாகி இருந்­தன.

http://newuthayan.com/story/09/மாந­கர-சபை-உறுப்­பி­னர்-மணி­வண்­ணனின்-உறுப்­பு­ரி­மையை-நீக்­கக்­கோரி-வழக்கு.html

  • தொடங்கியவர்

கொழும்பில் வசித்தவர் – நாடாளுமன்றம் போகலாம் – வடக்கில் முதலமைச்சர் ஆகலாம்…

நான் மாநகர சபையில் உறுப்பினராக முடியாதாம்..
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Manivannan_9407-1.jpg?resize=800%2C534

 

கொழும்பில் நிரந்தமாக வசித்து வந்த ஒருவர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஆகலாம் , அதேபோல மற்றுமொருவர் வடமாகாண முதலமைச்சர் ஆகலாம் ஆனால் யாழ்,மாவட்டத்தில் நிரந்தமாக வசிக்கும் நான் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஆக இருக்க முடியாது என வழக்கு தொடுத்துள்ளார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வசிக்காதவர் , மாநகர சபை உறுப்பினராக இருக்க முடியாது அதனால் மாநகர சபை செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்க வேண்டும் எனவும் , நிரந்தமாக உறுப்புரிமை நீக்கப்பட வேண்டும் எனவும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எனக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

யாழ்.குருநகர் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரின் பெயரிலையே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குறித்த நபருக்கு இவ்வாறு மனு தாக்கல் செய்யலாமா என்பது தெரியுமோ என்பதே எமக்கு சந்தேகமாக உள்ளது. அந்நபர் ஒரு அம்பு அதனை எய்தவர்கள் வேறு நபர்கள் என நம்புகின்றோம். அந்த மனு தொடர்பில் நீதிமன்றினால் எமக்கு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. எப்போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்பது தொடர்பில் தற்போது எதுவும் தெரியாது.

வழக்கு எப்போது விசாரணைக்கு வந்தாலும் அதனை எதிர்க்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். மக்களுக்கு எதிரான பல விடயங்கள் நடைபெற்று வரும் வேளையில் அவற்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாது. இந்த விடயத்திற்கு வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள் எனில் யாழ்.மாநகர சபையில் எமது பிரசன்னத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது.என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/86406/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.