Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுடன் மாகாண சபை உறுப்பினர்கள் – மொட்டவிழ்க்க வருகிறார் கோத்தா…

Featured Replies

மகிந்தவுடன் மாகாண சபை உறுப்பினர்கள் – மொட்டவிழ்க்க வருகிறார் கோத்தா…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

slpp.sri-.lanka-.podujana.jpg?resize=760

 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள உள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களுக்கு அங்கத்துவ அட்டைகளை வழங்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதனிடையே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் முதல் முறையாக இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்திற்கு வரவுள்ளார். அரசியல் நடவடிக்கையில் முதல் முறையாக பங்கேற்கும் கோத்தபாய ராஜபக்ச பொதுஜன முன்னணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பதவிக்காலம் முடிந்துள்ள மூன்று மாகாண சபைகள் உட்பட 9 மாகாண சபைகளை சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 90 வீதமான உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள உள்ளனர். அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள வருமாறு அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/86323/

  • தொடங்கியவர்

முக்கிய இடத்தில் கோத்தா

 

 
 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று முதல்தடவையாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

கட்சியின் தலைவரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் அழைப்பு விடுத்திருந்ததை தொடர்ந்தே இன்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கோத்தபாய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.

gotaaaaaaaaaaaaaa.jpg

இன்று இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு கோத்தபாயராஜபக்ச விஜயம் மேற்கொண்டுள்ளதை ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார் என்பதற்கான ஆரம்ப சமிக்ஞையாக கருதலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/36008

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.