Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் உரையால் சபையில் ​கோஷம்

Featured Replies

ரணிலின் உரையால் சபையில் கோஷம்
 
 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவருடைய, உரைக்கு ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிகள் சிலர், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு கோஷமெழுப்பனர்.

இதன் சபையில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. எனினும், பிரதமரின் உரைக்கு பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில், அவரிடம் கேட்டறிந்துகொள்வதற்கு, கொழும்புக்கு அழைத்துள்ளேன். அவர், சுகயீனம் காரணமாக, யாழ்ப்பாணத்தில் உள்ளார்.

இன்றையதினம் கொழும்புக்கு வருகைதருவதாக உறுதியளித்தார். அவர், வந்தவுடன், அவரிடம் கேட்டறிந்துகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கியத்தை பாதுக்காக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது. எல்.ரி.ரி.ஈ, தடைச்செய்யப்பட்ட இயக்கமாகும். அவ்வியக்கத்தை மீண்டும் உருவாக்கவேண்டிய தேவை எமக்கில்லை.

பௌத்தத்துக்கான முன்னுரிமை அவ்வாறே பேணி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை பெற்றுகொடுக்கவேண்டும். அத்துடன் அடிப்படை பிரச்சினை, அதிகார பகிர்வு ஆகியன தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும்.

காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்குக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எங்களுடைய அரசியல் குழு, நேற்றிரவு கூறியது, விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரணிலின்-உரையால்-சபையில்-கோஷம்/175-218493

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘கலா’ விவகாரம்: ரணிலின் உரையால் சபையில் கோஷம்
 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவருடைய, உரைக்கு ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிகள் சிலர், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு கோஷமெழுப்பனர்.

இதன் சபையில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. எனினும், பிரதமரின் உரைக்கு பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய, விசேட அறிவிப்பொன்றை விடுத்ததை அடுத்தே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துரைத்தார்.

“இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில், அவரிடம் கேட்டறிந்துகொள்வதற்கு, கொழும்புக்கு அழைத்துள்ளேன். அவர், சுகயீனம் காரணமாக, யாழ்ப்பாணத்தில் உள்ளார்” என்றார்.

இன்றையதினம் கொழும்புக்கு வருகைதருவதாக உறுதியளித்தார் என்று தெவித்த பிரதமர், அவர், வந்தவுடன், அவரிடம் கேட்டறிந்துகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

“அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கியத்தை பாதுக்காக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது. எல்.ரி.ரி.ஈ, தடைச்செய்யப்பட்ட இயக்கமாகும். அவ்வியக்கத்தை மீண்டும் உருவாக்கவேண்டிய தேவை எமக்கில்லை” என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

“பௌத்தத்துக்கான முன்னுரிமை அவ்வாறே பேணி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை பெற்றுகொடுக்கவேண்டும். அத்துடன் அடிப்படை பிரச்சினை, அதிகார பகிர்வு ஆகியன தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும்” என்றும் தனதுரையில் குறிப்பிட்டார்.

காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்குக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஞாபகப்படுத்திய அவர், எங்களுடைய அரசியல் குழு, நேற்றிரவு கூறியது, விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றார்.

“பயங்கரவாத்தை தோற்கடிப்பதற்கு, முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் என்ற பேதமின்ற, உயிர்கொடுத்தனர். இந்நிலையில், அவ்வியகத்தை மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய தேவை யாருக்கும் இல்லை” என்றார்.

“நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீசி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைப்பதற்கு முயற்சித்தனர். அன்றிருந்த பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்த மற்றும் சபாநாயகர் கே.பீ.இரத்னாயக்கவுடன் தொடர்புகொண்டு, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நான் கேட்டிருந்தேன்” என்றார்.

ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்களிக்கவிடாமல், புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. பொலிஸார் 600 பேரை கொன்றொழித்த கருணாவுக்கு, கட்சியின் உப-தலைவர் பதவி வழங்கப்பட்டது. எனினும், புலிகளை தோற்கடித்த, இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை, சிறையிலடைத்தனர் என்றார்.

600 பொலிஸாரை கொன்றவருக்கு உப-தலைவர் பதவி, பிரபாகரனை கொன்ற பொன்சேகாவுக்கு சிறையா என தனதுரையில் தெரிவித்தார்.

இதன்போது, சபையிலிருந்த ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் சிலர், கடுந்தொனியில் கோஷமெழுப்பினர். எனினும், சபை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கலா-விவகாரம்-ரணிலின்-உரையால்-சபையில்-கோஷம்/150-218493

  • தொடங்கியவர்

கருணா, பொன்சேகாவை உதராணம் காட்டி விஜயகலாவின் விவகாரத்துக்கு கருத்து தெரிவித்த பிரதமர்

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி பர­வலை திசை ­தி­ருப்­பவே பாரா­ளு­மன்­றத்தை எதிர்க்­கட்­சி­யினர் குழப்பி அடித்­தனர்.  600 பொலி­ஸாரை படு­கொலை செய்த கருணா அம்­மானை சுதந்­திரக் கட்­சியின் உப தலை­வ­ராக்கி விட்டு பிர­பா­க­ரனை கொன்­ற­ பொன்சேகாவை சிறையில் அடைத்­தனர். யுத்­தத்தை வென்­ற­வரை சிறையில் அடைத்து விட்டு தற்­போது வந்து விஜ­ய­க­லாவின் உரை தொடர்பாக எப்­படி எதி­ர­ணி­யினால் சபையில் கூச்­ச­லிட முடியும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் கேள்வி எழுப்­பினார்.

ranil.jpg

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் உரை தொடர்­பாக விசேட கூற்­றொன்றை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

விடு­தலை புலிகள் அமைப்பை நாம் தடை செய்­துள்ளோம். அந்த தடையை மீறி விடு­தலை புலி­களை மீள் உரு­வாக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாட்டின் ஒற்­றை­யாட்­சி­யையும்  பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையையும் நாம் பாது­காப்போம். இந்த  கொள்­கையின் பிர­காரம் நாம் செயற்­ப­டுவோம். அத்­துடன் மூவின மக்­களும் எதிர்­பார்க்கும்  அர­சியல் தீர்வின் ஊடாக  மனித உரி­மை­யையும் பாது­காத்து அதி­கா­ரத்தை பகிர்ந்து தீர்வு வழங்க வேண்­டி­யுள்­ளது. 

அத்­துடன் வடக்கு,கிழக்கு அபி­வி­ருத்தி மிகவும் அவ­சி­ய­மாகும்.காணி விடு­விப்­புக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்­நி­லையில் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் உரையை நான் கேட்­ட­வுடன் இது தொடர்­பாக ஆராய்ந்து பார்த்தேன். இது தொடர்­பாக எமது கட்­சியின் அர­சியல் குழு நேற்று (நேற்று முன்தினம்) கூடி­யது. அவர் மீதான விசா­ரணை தொடர்­பாக தீர்­மானம் எடுத்­துள்ளோம். விஜ­ய­கலா மகேஸ்­வரன் சுக­யீ­ன­முற்று யாழ்ப்­பா­ணத்தில் இருப்­ப­தா­கவும் இன்­றைய தினம் (நேற்று) வரு­வ­தா­கவும்  அவர் எனக்கு அறி­வித்தார்.

நான் அவரை இன்று (நேற்று) சந்­திப்பேன். அதன் பின்னர் விசா­ரித்து உரிய நட­வ­டிக்கை எடுப்பேன்.  எமது பாது­காப்பு படை­யினர் நாட்டை பாது­காக்க உயிரை தியாகம் செய்­தனர். அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் தமிழ் கட்­சி­க­ளிலும் சுதந்­திரக் கட்­சி­யிலும் பல தலை­வர்­களை விடு­தலை புலிகள் அமைப்பு படு­கொலை செய்­தது.ஆகவே இந்த விட­யத்தில் நாம் அனை­வரும் ஒரு கொள்­கையின் கீழ் உள்ளோம். 

நாட்டை பிள­வுப்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மின்றி பாரா­ளு­மன்­றத்தை வலு­வில்­லாமல் செய்­வதே விடு­தலை புலி­களின் பிர­தான நோக்­க­மாக இருந்­தது. நேற்­றைய தினமும் பாரா­ளு­மன்­றத்தில் கூச்­ச­லிட்டு குழப்பி அடித்­தனர். எனினும்  இது தொடர்­பாக யார் கூச்­ச­லி­டு­கின்­றனர். 

600  பொலி­ஸாரை கொலை செய்த கருணா அம்­மானை அழைத்து சுதந்­திரக் கட்­சியின்  உப தலைவர் ஆக்கி விட்டு, பிர­பா­க­ர­னுக்கு பணம் வழங்கி ஜனா­தி­பதி தேர்­தலை வெற்றி கொண்டு விட்டு, விடு­தலை புலி­களை தோற்­க­டித்த இரா­ணுவ தள­ப­தியை சிறையில் அடைத்து விட்டு தற்­போது வந்து விஜ­ய­க­லாவின் உரை தொடர்­பாக எப்­படி  இவர்கள் கூச்­ச­லிட முடியும்.    

சபா­நா­ய­க­ருக்கு தனது தீர்­மா­னத்தை அறி­விக்க உரிமை உள்­ளது. ஆகவே சபா­நா­ய­கரே நீங்கள் காத்­தி­ர­மாக செயற்­பட வேண்டும். அப்­ப­டி­யாயின் அர­சியல் பழி­வாங்கல் தொடர்­பான சரத் பொன்­சே­காவின் நிலைப்­பாட்டை  நாம் அனை­வரும் ஒன்று இணைந்து பரி­சீ­லிக்­க­வேண்டும். ஏன் சரத் பொன்­சேகா கைது செய்­யப்­பட்டார்?.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி தொடர்பாக கதையை திசைதிருப்பவும் அதனை நிறுத்தவுமே பாராளுமன்றத்தை நேற்று (நேற்று முன்தினம்) குழப்பி அடித்தனர்.தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் பயந்து போய் உள்ளனர். 

600 பேரை கொன்றவரை சுதந்திரக் கட்சியின் உப தலைவராக்கி விட்டு பிரபாகரனை கொன்றவரை சிறையில் அடைத்தனர். அதுதானே உண்மை என்றார்.

http://www.virakesari.lk/article/36038

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.