Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலி நாளை அனுட்டித்தவர்கள் கைதுசெய்யடும் ஆபத்தில்

Featured Replies

கரும்புலி நாளை அனுட்டித்தவர்கள் கைதுசெய்யடும் ஆபத்தில்

 

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலி நாள் அனுட்டிக்கப்பட்டதற்கு எதிராக கடும் கண்டனங்களைவெளியிட்டுள்ள தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் கரும்புலி நாளை நினைவுகூறிய அனைவரும்கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியான வன இலாக அமைச்சர்பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், இதனை உடனடியாக செய்யாவிட்டால் வடக்குகிழக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது போய்விடும் என்றும்எச்சரித்திருக்கின்றார்.

 

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலியான கப்டன்மில்லர் யாழ்ப்பாணம் நெல்லியடியில் இருந்த இராணுவ முகாம் மீது தாக்கதல் நடத்திவீரச்சாவடைந்த நாளான யூலை ஐந்தாம் திகதியை கரும்புலி நாளாக பிரகடனப்படுத்தியவிடுதலைப் புலிகள் அதனை வருடாந்தம் நினைவுகூறி வந்தனர்.

எனினும் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் கரும்புலி நாள்அனுட்டிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றைய தினம் புனர்வாழ்வு அளிக்கப்படடதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற கட்சியினரான முன்னாள் போராளிகள் கப்டன் மில்லிரின்நினைவிடம் அமைந்துள்ள நெல்லியடி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின்சொந்த ஊராக வல்வெட்டித்துறை மற்றும் மேலும் பல இடங்களில் கரும்புலி நாளைநினைவுகூறியிருந்தனர்.

இதற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த ஆளும் தரப்பினரும், எதிரணியினரும்கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளமுன்னாள் இராணுவத் தளபதியான அமைச்சர் சரத் பொன்சேகா, கரும்புலிநாளை அனுட்டிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் கரும்புலி நாளை அனுட்டித்த அனைவரையும் கைதுசெய்துசட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அமைச்சர் சரத்பொன்சேகா இதனை அரசாங்கம் செய்யாது மௌனம் காக்குமானால் கடந்தகாலங்களில் இடம்பெற்றதுபோல் ஒரு மோசமான நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும் என்றும்எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றிலும் கரும்புலி நாள்நினைவகூறப்பட்டதற்கு எதிராக கடும் கண்டனங்களை மஹிந்த அணியின் முக்கியஸ்தரானநாடாளுமன்ற உறுப்பினர்விமல் வீரவன்ச வெளியிட்டார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த வீரவன்ச...

“ வடக்கில் பல இடங்களில்தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை படையான கரும்புலிகள் தினம் நினைவுகூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை வீதிகளின் இருமருங்கிலும்தொங்கவிட்டு, அவர்களின் சின்னங்களை அடையாளப்படுத்தியே இந்தநினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுடன்பாடசாலைக்கு வெளியில் வந்து விளக்குகளை ஏற்றியும் உள்ளனர். அதேவேளை ஆவா கும்பல்உட்பட பல கும்பல்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வடக்கில் தமது கட்டுப்பாடுகளைபலப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான கொடூரங்கள் எந்தவித தடையும் இன்றி தொடர்வதால்வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக சீர்குழைந்து வருகின்றது.

இதன் தாக்கம்காரணமாக அண்மையில் விஜயகலா மகேஸ்வரன் பகிரங்கமாக விடுதலைப்புலிகள் மீளஉருவாக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. கரும்புலிகளைசுதந்திரமாக நினைவுகூறுவதற்கும், வன்முறைக் கும்பல்கள்சுதந்திரமாக செயற்படுவதற்கும் அனுமதி அளித்து மீண்டும் வடக்கில் பயங்கரவாதம்தலைதூக்குவதற்கு இடமளித்துள்ளதன் நோக்கம் என்ன என்று கேட்க விரும்புகின்றேன்.வடக்கில் பொலிசாருக்கு விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் பொலிசார்சட்டத்தை நிலைநாடட முடியாது தடுமாறுகின்றனர். மறுமுனையில் இராணுவத்தின்எண்ணிக்கையை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை 100 இராணுவமுகாம்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. வடக்கு கிழக்கில் மாத்திரம் பெரும்பாலான இராணுவ முகாம்கள் மூடப்படுகின்றன.

அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கைகளைஎடுக்கும் போதே விஜயகலா தமிழீழ விடுதலைப்புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த உரையின் மூலம் நாட்டின்அரசியலமைப்பை மீறியதாக விஜயகலாவே பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கின்றார். ஆனால்இந்த பிரச்சனை எழுந்த போது சட்டமா அதிபர் ஊடாக நீங்களும் அரசியலமைப்புமீறப்பட்டுள்ளதா என வினவியிருந்தீர்கள். உங்களுக்கு சடடமா அதிபர் திணைக்களத்திடம்இருந்து பதில் கிடைத்ததா. அல்லது எப்போது பதில் கிடைக்கப் போகின்றது" என்றார்.

அதேவேளை விஜயகலா மகேஸ்வரனது நாடாளுமன்ற உறுப்புரிமைபறிக்கப்படுவதுடன், அவருக்கு எதிராக டுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

“ தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில்கதைப்பதை தவறு என நாங்கள கூறவரவில்லை. தமிழ் மக்களுக்கு என விசேடமாக அநீதிகள்இழைக்கப்படும் என்றால் அதற்காக யாரும் குரல்கொடுக்கலாம். அதனை நாம்எதிர்க்கவில்லை. ஆனால் பயங்கரவாதத்தை மீள உருவாக்க கதைப்பது பாரதூரமானகுற்றமாகும்.

அதனால் பிரிவினைவாதம் தொடர்பில் கதைத்த விஜயகலாவிற்கு எதிராக என்னநடவடிக்கை எடுத்தீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவே தான் அரசியல் அமைப்பைமீறியதாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் கரும்புலி நாள் வடக்கில்நினைவகூறப்படுகின்றது.

இராணுவத்தின் எண்ணிக்கையை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கைஎடுக்கின்றனர். 100 இராணுவ முகாம்கள் மூடப்படுகின்றன. இவை அனைத்தும் இடம்பெறும்போது பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தூண்டும் வகையில் கதைத்த விஜயகலாமகேஸ்வரன் உட்பட எவருக்கும் ஆனுமதிக்க முடியாது. அதனால் அவர்களுக்கு எதிராக என்னநடவடிக்கை எடுக்கப்பட போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்றும் தெரிவித்தார் விமல் வீரவன்ச.

இதன்போது பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரியவடக்கின் பாதுகாப்பு நிலமை குறித்து பதிலளிப்பதற்கு தான் பாதுகாப்பு அமைச்சர் அல்லஎன்று கூறியதுடன், பிரதமர் அதற்கு விரைவில் பதிலளிப்பார் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில்மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் கூறிய சபாநாயகர்கரு ஜயசூரிய, எனினும் ஒரு சர்வாதிகாரியைப் போல் செயற்பட முடியாது என்றும்குறிப்பிட்டார். அத்துடன் டடமா அதிபர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில்விசாரணை நடத்திவருவதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

https://www.ibctamil.com/security/80/102967

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.