Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்: வியாழேந்திரன்

Featured Replies

தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்: வியாழேந்திரன்

 

 

viyalenran-720x450.jpg

 

நல்லாட்சிக்கு ஆதரவு கொடுத்து இரண்டாண்டுகள் முடிந்துள்ள நிலையில் தமிழர்கள் தொடர்ந்தும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துகின்ற நிலையே காணப்படுவதாக என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாகத் தன்மீது சில அரசியல்வாதிகள் அவதூறுக் குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் போராட்டங்களைப் புறந்தள்ளி இங்கு வருகின்ற அமைச்சர்களுக்கு பின்னால் வால்பிடித்து திரியும் சிலர் என்னை நோக்கி சில விடயங்களை, பொய்யான கதைகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

நல்லாட்சிக்கு முண்டு கொடுத்து இரண்டாண்டுகள் முடிந்துள்ள நிலையில் தமிழர்களுக்கான எந்தவிதமான அங்கிகாரங்களையும் அரசாங்கம் வழங்கவில்லலை.

தமிழ் மக்களை அவர்களது சொந்த தாயக நிலத்திலேயே இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துகின்ற நிலையில் இனிமேலும் நாம் அரசுக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து மக்களுக்காக களத்தில் இறங்கி என்னால் முடிந்தவரை மக்களுடன் நின்று குரல் கொடுத்துவருகின்றேன்.

இதைப் பொறுத்துக் கொள்ளாத சில அரசியல்வாதிகள் என் மீது சேறு பூசி, பொய்களைக் கூறி என்னை ஓரங்கட்ட நினைக்கின்றனர் அது ஒரு காலமும் நடக்காது.

என் தமிழ் மக்களோடு மக்களாக நான் உள்ளேன். என் மக்களுக்கு பிரச்சினை நடக்கும் இடங்களுக்கு உடன் சென்று அவர்களோடு களத்தில் நின்று அவர்கள் உரிமைக்காக போராடுகின்றேன்.

அண்மையில் காணி, புல்லுமலை குடிநீர்ப் பிரச்சினைகள் தொடர்பாக நடந்த போராட்டங்களில் மக்களோடு நின்றேன். அந்த நேரம் அமைச்சர் வந்த போது அவருக்கு பின்னால் வால்பிடித்து திரிந்த சில அரசியல் வாதிகள் தங்களை மக்கள் மத்தியில் நல்லவர்களாக இனங்காட்ட இரட்டை அர்த்தத்தில் பேசுகிற கேவலம் சில காலங்களாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது” என அவர் மேலும் தெரிவித்ததுள்ளார்.

http://athavannews.com/?p=699829-தமிழர்கள்-இரண்டாந்தரப்-பிரஜைகளாக-நடத்தப்படுகின்றனர்:-வியாழேந்திரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.