Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பை உருவாக்குங்கள்....சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தல்

Featured Replies

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பை உருவாக்குங்கள்

8-1bcf0898ded6f77f38d4f212b0c9d71b60467865.jpg

 

சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தல்

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மக்களின் ஜனநாயகத்தை பலப்படுத்த தேர்தலை மாத் திரம் நடத்துவது ஏற்புடையதாக அமையாது. அதிகார பரவ லாக்கல் உறுதிப்படுத்தப்பட்டு மக்களே மக்களை ஆளும்  அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே, மாகாண சபை தேர்தலை நடத்த முன்னர் புதிய அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும். அரசாங்கம் சபையில் புதிய அரசியல  மைப்பினை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  

அதிகாரப் பரவலாக்கல் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்ட தலைவர்கள் இன்றுவரை அதனை நிறைவேற்றாதது ஏன் என்பது கேள்வியாகவே உள்ளது எனவும் அவர் குறிப் பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாகாணசபை தேர்தல் குறித்த சபை ஒத்திவைப்பு  வேளை பிரேரணை மீதான விவாதத்தில் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

 அவர் மேலும் உரையாற்றுகையில் அரசாங்கம் உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தவில்லை. இது அரசாங்கத்தின் ஜனநாயக போக்கு மீதான கேள்வியை எழுப்புகின்றது. மாகாணசபை தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாமையினால் ஜனநாயகத்தை அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்ற சந்தேகமும் எழுகின்றது. ஆகவே தேர்தல் உரிமையை நிலைநாட்ட வேண்டும். அதன் மூலமாக மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அதிகாரக பரவலாக்கல் என்பதை மிக நீண்டகாலமாக கலந்துரையாடி வருகின்றோம். நீண்ட காலமாகவே இது ஒரு கோரிக்கையாக பேசப்பட்டு வருகின்றது. அதிகார பரவலாக்கல் வேண்டும் என்பதை மக்கள் ஒரு காத்திரமான கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர்.  

1920களில் இருந்தே இந்த கோரிக்கைகள் அதனுடன் கூறிய புரட்சிகள் அழுத்தங்கள் எழுந்த போதிலும் இப்போது நூறு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில் இன்றுவரையில் அதற்கான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.

நம்பகத்தன்மை மிக்க, வினைத்திறனுடன் கூடிய அதிகார பகிர்வை இன்று வரையில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிகார பகிர்வை பொறுத்த வரையில் வெறுமனே மாகாணசபை தேர்தலை மாத்திரம் நடத்துவதில் ஜனநாயகம் வெற்றிகொள்ளப்போவதில்லை. தேர்தலை தாண்டிய மக்கள் குரல், அவர்களின் தேவை, மக்களே மக்களை ஆளும் திறன் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 1987-1988 களில் இருந்து மக்களின் குரலை அழுத்தமான குரலாக அவதானிக்க முடிந்தது. ஜே.ஆர். இன் ஆட்சியில் அதன் பின்னர் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 13 ஆம் திருத்தம் குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுடன் 13 ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்ற அதிகாரப்பகிர்வு குறித்தும் பேசப்பட்டது. மக்களின் ஜனநாயகம் பலமடைய அதிகார பகிர்வு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டது. மங்கள முனசிங்க குழுவின் அறிக்கையை அவதானித்தால் அதன் உண்மைத்தன்மை என்னவென்பது தெரியும். மாகாண சபைகளின் அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் அமைப்பின் தேவைப்பாடு என்னவென்பதையும் அறிய முடிந்தது.

13 ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று செயற்பட வேண்டும் என்ற நோக்கம் இருந்தது அவதானிக்க முடியும். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க வின் ஆட்சியில் இதே கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு 1997 ஆம் ஆண்டு சில பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அரசியலமைப்பு சீர்திருத்தம் அவசியம், அதில் அதிகார பரவலாக்கல் பெரும் முக்கியத்துவம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது மஹிந்த ராஜபக் ஷ, மைத்திரிபால சிறிசேன போன்ற அமைச்சர்கள் அந்த யோசனையை ஏற்றுகொண்டனர். 2000 ஆம் ஆண்டு பிரேரணையும் முன்வைக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியிலும் சர்வகட்சி குழு அமைக்கப்பட்டு அதிகார பரவலாக்கல் செய்யும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டது. அதியுச்ச அதிகாரப்பகிர்வு வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஆட்சியிலும் ஆரம்பம் முதற்கொண்டு அதே நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆகவே இதுவரை காலமாக சகல ஜனாதிபதிகளும் இப்போதைய ஆட்சியாளர்களும் அதிகாரப் பரவலாக்கல் அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளனர். 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகார பரவலாக்கலை வழங்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. எனினும் இந்த முயற்சிகள் ஏன் வெற்றிபெறவில்லை என்பது புதிராகவே உள்ளது.

அனைவரும் முயற்சிகள் எடுத்தும் அதிகார பரவலாக்கல் வேண்டும் என்ற காரணிகளை ஏற்றுக்கொண்டும் ஏன் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்ற கேள்வி எழுகின்றது. இன்று பிரதான இரண்டு கட்சிகளின் ஆட்சி இடம்பெறுகின்றது, வழிநடத்தல் குழுவின் கூட்டங்களில் ஒரு சிலரை தவிரை அனைவரும் புதிய அரசியல் அமைப்பு குறித்து இணக்கம் தெரிவித்துள்ளனர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த காரியங்களை வெற்றிகொள்ள முடியும். எதிர்க்கட்சியின் பூரண ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நகர்வுகள் குறித்து முன்னேற்றகரமாக நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

பிரிபடாத நாட்டுக்குள் அரசியலமைப்பின் மூலமாக அதிராக பரவலாக்கல் ஒன்றினை பெற்றுக்கொண்டு அதன் மூலமாக சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதையே நாம் உறுதியான கோரிக்கையாக வலியுறுத்தி வருகின்றோம். இதன் மூலமாக நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும். இதுவரை காலமாக நாம் விட்ட தவறுகளை திருத்திக்கொள்ள இது சரியான ஒரு சந்தர்ப்பமாகும்.

கடந்த கால தவறுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட ஆரோக்கியமான நகர்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்காது விட்டால் நாட்டுக்கு எந்த விடிவுகளும் இல்லை. தீர்வுகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று அவசியம். இதையே நாம் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகின்றோம். இது குறித்து சிந்தித்து இறுதித் தீர்வு ஒன்றை பெறுவது குறித்து ஏன் சிந்திக்காது உள்ளீர்கள். ஏன் இன்றுவரை விடை கிடைக்காது உள்ளது. பிளவுபடாத நாட்டுக்குள் நிரந்தரத் தீர்வு ஒன்று எமக்கு வேண்டும். மாகாணசபைகள் உயிரோட்டம் உள்ளதாக அமைய வேண்டும். மாகாண அரசு, மாகாண ஆட்சி அமையப்பெற வேண்டும்.

ஆகவே மாகாண சபைத் தேர்தகள் நடத்தப்பட முன்னர் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். சபைக்கு புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவர வேண்டும். மாகாணசபை முறைமைகள், அதிகார பரவலாக்கல், அதியுச்ச அதிகார பகிர்வு அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தபட வேண்டும். தேர்தல்கள் காலதாமதல் இல்லாது இடம்பெற வேண்டும். மக்களின் ஜனநாயகம் பலமடைய வேண்டும். அதன் மூலமாக மக்களே தம்மை ஆளும் ஜனநாயக சூழல் பலமடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.