Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் புற்றுநோயாகியுள்ள நுண்கடன் கலாசாரமும் அதிகரித்துவரும் தற்கொலைகளும்

Featured Replies

முல்லைத்தீவில் புற்றுநோயாகியுள்ள நுண்கடன் கலாசாரமும் அதிகரித்துவரும் தற்கொலைகளும்

 

மூன்று தசாப்­த­கால போரினால் உற­வுகள், உடமைகள், வாழ்­வா­தாரம் என அனைத்­தையும் இழந்து, கேள்­விக்­கு­றி­யாகிப்போன எதிர்­கா­லத்­தோடு வாழ்ந்­து­வரும் வடக்கு, கிழக்கு மக்கள் தற்­போது மற்­று­மொரு பேர­ழிவில் சிக்கி மாண்டு வரு­கின்­றனர். நுண்­கடன் நிதி­நி­று­வ­னங்கள் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களை குறி­வைத்து கடன் வழங்கல் மூலம் தொடுத்­துள்ள மிக மோச­மான ஆக்­கி­ர­மிப்­பினால் தற்­கொ­லையை முடி­வாக்­கிக்­கொள்ளும் சமூகம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. இதனை மாபெரும் சமூகச் சீர­ழி­விற்­கான ஆரம்ப அறி­கு­றி­யா­கவே கருத முடி­கி­றது.

குறிப்­பாக முல்­லைத்­தீவு மாவட்­டத்தைச் சேர்ந்த மக்கள் யுத்­தத்­தினால் பெரு­ம­ள­வான பாதிப்­புக்­க­ளுக்கு உட்­பட்டு, தமது வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் பெரும் துன்­பங்­களை அனு­ப­வித்து வரும் தரு­ணத்தில் இந்த நுண்­கடன் நிதி­நி­று­வ­னங்கள் அவர்­களை இலக்கு வைத்து தமது கடன் வழங்கல் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. என்­பதை விடவும், தமது நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்து, அதில் வெற்­றியும் கண்­டு­விட்­டன என்­பதே மிகப்­பொ­ருத்தம்.

போதிய கல்­வி­ய­றிவு அற்ற, விரை­வான நிதித்­தே­வை­யினை எதிர்­கொண்­டுள்ள சமூ­கத்­தி­னரை இலக்கு வைத்து நுண்­கடன் நிதி­நி­று­வ­னங்கள் கடன்­களை வழங்­கு­கின்­றன. அரச மற்றும் தனியார் வங்­கி­களில் கடன் பெறு­வதை விடவும் இவ்­வா­றான நுண்­கடன் நிறு­வ­னங்­களில் கடன் பெறு­கைக்­கான நடை­மு­றைகள் மிக இல­கு­வாக இருப்­ப­த­னாலும், விரை­வாகக் கடனைப் பெற்­றுக்­கொள்ள முடி­வ­த­னாலும் போதிய விளக்­க­மற்ற மக்கள் இக்­கடன் திட்­டத்­தினை நோக்கி ஈர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

ஆனால் கடன் பெறுநர் கடனைப் பெற்றுக்கொண்­டதன் பின்­னர்தான் நுண்­கடன் நிதி­நி­று­வ­னங்கள் தமது முகத்தின் மீது அணிந்­தி­ருந்த முக­மூ­டி­களைக் கழற்­று­கின்­றன. கடனை வழங்­கு­வ­தற்கு முன்பு கடன்­தொ­கையை மாத்­திரம் கடன் பெறு­வோ­ரிடம் தெரி­விக்கும் நுண்­கடன் நிறு­வனம், பின்னர் கட­னுக்­கான வட்டி, வட்­டிக்கு வட்டி, கடன் செலுத்த வேண்­டிய காலம், உரிய காலத்தில் கடன்­தொ­கையை மீளச்­செ­லுத்­தா­விடின் நிலுவைக் கடன்­தொகை என பல்­வேறு விதி­மு­றை­களை கடன் பெறு­நரின் மீது சுமத்­து­கின்­றது. கட­னுக்­கான வட்­டி­யினை செலுத்­தாத பட்­சத்தில் அதனை வசூலிக்­கையில் கடன் பெறு­நரை மிகவும் மோச­மாக நடத்­து­கின்­றார்கள் நிறு­வன ஊழி­யர்கள்.

இவ்­வாறு கடன்­தொகை, கடன்­தொ­கைக்கு மேலான வட்டி, அதனை உரிய நேரத்தில் செலுத்­தா­விடின் ஊரார் மத்­தியில் மரி­யா­தை­யின்றி நடத்­தப்­ப­டலாம் எனும் அச்சம், பாலியல் ரீதி­யான துன்­பு­றுத்­தல்கள், கடனை மீளச்­செ­லுத்­து­வ­தற்கு தம்­மி­ட­மி­ருந்த சொத்­துக்­களை விற்கும் நிலை என யாவும் ஒரு­மித்து அவர்­களைத் தற்­கொ­லையை நோக்கி நகர்த்­து­கின்­றது. நுண்­கடன் இடர்­களால் இது­வ­ரையில் வடக்குக் கிழக்கில் சுமார் 60 வரை­யான தற்­கொ­லைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக சிவில் சமூக அமைப்­புக்கள் தெரி­விக்­கின்­றன. இதன் உண்மைத் தன்­மை­யினை அறியும் நோக்கில் யுத்­தத்தின் பின்னர் இன்­னமும் முறை­யான புனர்­வாழ்வு நட­வ­டிக்­கை­க­ளுக்குத் திரும்­பாத முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் சில குடும்­பங்­களை சந்­தித்தோம். (பாது­காப்புக் கருதி பாதிக்­கப்­பட்­டோரின் பெயர்கள் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன)

தேவி­புரம் பகு­தியைச் சேர்ந்த 43 வய­தான ஜெய­சு­தாவின் கணவர் சத்­தி­ய­மூர்த்தி கடன் பிரச்­சினை கார­ண­மாக சில மாதங்­க­ளுக்கு முன்பு தற்­கொலை செய்­து­கொண்டார். 5 பிள்­ளை­க­ளுக்குத் தாயா­ரான ஜெய­சுதா கடனை முழு­வ­து­மாகக் கட்­டி­மு­டிக்க இய­லாத நிலையிலுள்ளார். நுண்­கடன் என்­கிற சொல்லைப் பயன்­ப­டுத்­தியபோது புரி­யாமல் விளித்­தவர், கிழமை லோன்" என்­றதும் புரிந்­து­கொண்டு தொடர்ந்து பேசினார்.

போருக்கு பிறகு ஏதா­வது சுய­தொழில் செய்­யலாம் என்­றுதான் கடன் எடுத்­தனான். ஆனால் சாதா­ரண வங்­கி­களைவிட கட­னுக்கு வட்டி அதிகம். வட்­டிக்கு வட்டி என்றும் அற­வி­டு­வார்கள். எனக்கு 4 பிள்­ளைகள். அவர்­களில் மூத்­தவன் தான் பாண்­வண்டி சார­தி­யாக வேலை செய்து கடனை கட்­டுறான். காலையில் பாண் ­வண்டி வியா­பாரம் முடிந்­ததும்தான் பாட­சா­லைக்கு போவான். நாங்க கட­னாக எடுத்த காசை விட நிறைய வட்டி கட்­டி­யாச்சு. ஆனால் இன்னும் 94 ஆயிரம் ரூபா நிலுவை என்று சொல்­லு­கினம். இப்ப கண­வனும் இல்ல. கட­னாக எடுத்த காசும் இல்ல. சுய­தொ­ழிலும் இல்ல. ஒன்றும் இல்­லாம நடுத்­தெ­ரு­வில நிக்­கிறம்" என்றார்.

போருக்குப் பின்னர் புனர்­வாழ்வு நட­வ­டிக்­கைகள், சுய­தொ­ழி­லுக்­கான உத­விகள் என்­ப­னவற்றை அர­சாங்கம் முழு­மை­யாக வழங்­க­வில்லை. அரச வங்­கி­களை விடவும் இவ்­வா­றான நுண்­கடன் நிதி­நி­று­வ­னங்­களில் கடன் பெறும் நடை­முறை இல­கு­வா­னது என்­பதால் அதனை நோக்கி ஈர்க்­கப்­பட்ட ஜெய­சுதா தற்­போது அனைத்­தையும் இழந்து தவிக்­கின்றார். அர­சாங்கம் சுய­தொ­ழி­லுக்­காக ஒரே வங்­கியின் மூலம், குறித்­த­வொரு திரட்­சி­யான நிதி­யினைக் கட­னாகப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி­ய­போது அவ­ரு­டைய குரல்­கள் எம்மை நோக்கி இறைஞ்­சி­யது.

அதே பிர­தே­சத்தைச் சேர்ந்த திருக்­கு­மரன் வாகினி நுண்­கடன் நிறு­வ­னங்­களின் நெருக்­கு­தல்­களால் தற்­கொ­லைக்கு முயன்­றவர். அய­ல­வர்­களால் காப்­பற்­றப்­பட்ட பின்­னரும் தற்­கொ­லைக்கு முயற்­சித்த அவர் தற்­போது தனது மகளின் எதிர்­காலம் கருதி வாழ்­கின்றார்.

வறுமை, குடும்பக் கஷ்டம் எல்லாம் கடன் எடுக்க வேண்­டிய நிலை­மையை உரு­வாக்கி விட்­டது. ஆரம்­பத்தில் இந்த நிறு­வ­னங்கள் எல்லா விப­ரங்­க­ளையும் சொல்­லேல. அதனால் நாங்­களும் கடன் எடுத்­துட்டம். பிறகு வட்டி, வட்­டிக்கு வட்டி என்று அந்த நிறு­வனம் தந்த நெருக்­கு­தலில் கடனை செலுத்­து­ற­துக்கு இன்­னொரு மாத லோன் நிறு­வ­னத்தில் கடன் வாங்­கினன்.அப்­பிடி கடனை திரும்ப கட்­டு­ற­துக்­கா­கவே இது­வ­ரைக்கும் ஐந்­துக்கு மேலான நிறு­வ­னங்­களில் கடன் வாங்­கி­யாச்சு. இன்னும் கட்டி முடிக்­கேல. கடன் வசூலிக்க 5 மணிக்குப் பிறகு வரு­வினம். வந்து காது கொடுத்து கேட்க முடி­யாத மாதிரி வார்த்­தை­க­ளால ஏசு­வினம். என்­னு­டைய ஆம்­பிளைப் பிள்­ளைகள் எப்­பி­டியும் சமா­ளித்துக்கொள்­ளு­வினம். ஆனால் இந்த பொம்­பிளைப் பிள்­ளைக்­காகத்தான் நான் இப்ப உயி­ரோட இருக்­கிறன்" என்­ற­வரின் கண்­களில் தென்­பட்ட இய­லாமை நுண்­கடன் நிறு­வ­னங்­களின் மோச­மான அணு­கு­மு­றை­யினை உணர்த்­தி­யது.

விசு­வ­ம­டுவைச் சேர்ந்த 46 வய­தான கதி­ரேசன் மீனாட்சி விவ­சாயம் செய்­வ­தற்­கென நுண்­கடன் நிறு­வ­ன­மொன்றில் கடன் பெற்­றி­ருக்­கின்றார். ஒரு வருடம்வரை ஒழுங்­காகக் கடனைச் செலுத்­தி­யு­மி­ருக்­கின்றார். திடீ­ரென ஓர் நாள் பயி­ரிட்­டி­ருந்த மர­வள்ளி, வாழை உட்­பட அனைத்துப் பயிர்­க­ளையும் யானை சேதப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அதில் பெரும் நஷ்­ட­ம­டைந்த மீனாட்சி வட்­டிக்கு வட்டி முறை­மையால் தற்­போது பாரிய கடன்­சு­மைக்கு ஆளா­கி­யி­ருக்­கின்றார். 10 லீற்றர் வரை பால் கறக்கும் பசு­மாடு, மோட்டார் வாகனம், வங்கி மீதி என யாவற்­றையும் இழந்தும்கூட கடனை முழு­வ­து­மாகச் செலுத்த முடி­ய­வில்லை என்­கின்றார் மீனாட்சி.

இந்த கடன் கொடுக்கும் நிறு­வ­னங்­க­ளையும், கடன் வழங்கல் முறை­மையையும் ஒழுங்­கு­ப­டுத்த நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி இங்கு வந்­த­போது வாக்­கு­றுதி கொடுத்தார். ஆனால் மேற்­கொண்டு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட்­டது போல தெரி­யேல" எனத் தெரி­வித்த அவர், கடனை மீள வசூ­லிப்­ப­தற்கு நுண்­கடன் நிறு­வ­னங்கள் கையாளும் விதம் பற்றிக் குறிப்­பிட்ட போது கலங்­கிய கண்­களைக் கட்­டுப்­ப­டுத்திக் கொண்டார்.

நுண்­கடன் நிறு­வ­னங்­களின் தொடர்ச்­சி­யான கடன் வசூலிப்பு முறை­களால் தற்­கொ­லைக்கு முயன்று, தற்­போதும் அந்த எண்­ணத்­தி­லி­ருந்து முழு­வ­துமாக மீட்­சி­ய­டை­யாத 43 வய­து­டைய லலிதா வெறு­மனே 4 தக­ரங்­களால் மறைக்­கப்­பட்ட ஒரு வீட்டில் வாழ்­கின்றார். சமைத்து வயி­றார உண்­ட­தற்­கான அடை­யா­ளங்கள் ஏதும் அந்த வீட்டில் இல்லை. தற்­போதும் கடன் நிறு­வ­னங்கள் மீதான அச்­சத்­தோடு வாழும் லலிதா 5 நுண்­கடன் நிறு­வ­னங்­களில், மொத்­த­மாக 280 000 ரூபாயைக் கட­னாகப் பெற்­றி­ருக்­கின்றார்.

இவ்­வாறு முழு­மை­யான விப­ரங்­களை அறிந்து கொள்­ளாமல் நுண்­கடன் நிறு­வ­னங்­க­ளிடம் கடன் பெற்று, தற்­போது மீளச்­செ­லுத்தி முடிக்க இய­லாத நிலை­யி­லுள்ள பெண்கள் தொடர்பில் செயற்­பட்­டு­வரும் தேவி­புரம் மாதர்­சங்கத் தலைவி சுந்­த­ர­லிங்கம் கலைச்­செல்­வி­யிடம் இவ்­வி­டயம் தொடர்பில் வின­வினோம்.

போருக்குப் பின்னர் வடக்­கிலே பெரு­ம­ள­வான பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்கள் உரு­வா­கி­யுள்­ளன. அர­சாங்­கத்­தினால் அக்­கு­டும்­பங்­க­ளுக்­கான புனர்­வாழ்வு, தொழில் வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டாமை நுண்­கடன் நிதி­நி­று­வ­னங்­க­ளுக்கு வாய்ப்­பாக மாறி­யுள்­ளன. நிதி­யு­தவி அவ­சி­ய­மான பெண்­க­ளுக்கு இல­கு­வாகக் கடன் வழங்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால் கடன் வழங்கும்போதே அவை தொடர்­பான முழு­மை­யான விப­ரங்­களும் தெரி­விக்­கப்­ப­டு­வ­தில்லை. பின்னர் கடனை வசூலிப்­ப­தற்கு அந்­நி­று­வன ஊழி­யர்கள் பின்­பற்றும் வழி­மு­றைகள் பெண்­களை இழி­வு­ப­டுத்தும் வகையில் அமை­கின்­றன. அத­னா­லேற்­படும் அவ­மா­னத்தின் கார­ண­மாக தற்­கொ­லைக்குத் தூண்­டப்­ப­டு­கின்­றார்கள். எனவே இவ்­வி­டயம் தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தோடு, விரைந்து தீர்­வு­காண வேண்­டி­யது அவ­சியம் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

மற்­று­மொரு பெண்கள் சார்­பான செயற்­பாட்­டா­ளரும், சிறுவர் பாது­காப்­புக்­குழு மற்றும் மாதர் கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்தின் உப­த­லை­வி­யு­மான காசி­நாதன் தேவாம்­பிகை தெரி­விக்­கையில்,

இங்கு நுண்­க­டன்­களால் ஏற்­படும் தற்­கொ­லைகள் பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளன. ஒரு நிறு­வ­னத்­திடம் பெற்ற கடனை செலுத்­து­வதற்கு மற்­றொரு நிறு­வ­னத்­திடம் கடன் பெறு­கின்­றனர். வங்­கிகள் கடனை மீளச்­செ­லுத்தும் இய­லு­மை­யினைக் கருத்­திற்­கொண்டே கடன் வழங்கும். எனினும் இவ்­வா­றான நுண்­கடன் நிதி­நி­று­வ­னங்கள் அவ்­வா­றான விதி­களைப் பின்­பற்­றாமல் கடனை வழங்­கு­வதும், பின்னர் அதனை வசூலிப்­ப­தற்கு முறை­யற்ற விதத்தில் செயற்­ப­டு­வதும் தற்­போது அதி­க­ரித்து வரு­கின்­றது. இவ்­வா­றான நுண்­கடன் நிதி­நி­று­வ­னங்கள் தொடர்பில் கிராம மட்­டத்தில் விப­ரங்­களைத் திரட்டி அவற்றை முற்­றாகத் தடை செய்­வ­துடன், இவ்விடயம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

புற்றுநோயைப் போல படிப்படியாக மக்களைக் கொல்லும் இந்த நுண்கடன் நிறுவனங்களின் கடன் வழங்கல் முறைமை சீரமைக்கப்பட வேண்டும். சாதாரண அரச, தனியார் வங்கிகளில் கடன் வழங்கல் தொடர்பில் பேணப்படும் நடைமுறைகள் நுண்கடன் வழங்கல் நிறுவனங்களினாலும் பேணப்பட்டிருப்பின் நிச்சயம் பல உயிர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதை விடவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முறையான புனர்வாழ்வு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருப்பின் அம்மக்கள் கடன் பெறும் நிலையினை நோக்கித் தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நுண்கடன் நிதிநிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கு துணைபோவதை விடுத்து, மக்களின் பக்கம் நின்று சிந்திக்க வேண்டும். நுண்கடன்களால் இனியும் தற்கொலைகள் இடம்பெறாமல் இருப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், அம்மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.  

ஒரு நேரடி ரிப்போர்ட் -
(நா.தனுஜா) 
(படப்­பி­டிப்பு : தினெத் சமல்க) 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-07#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.