Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலாவின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் - ஹக்கீம்

Featured Replies

விஜயகலாவின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் - ஹக்கீம்

 

நாட்டில் தீர்க்கப்படாத விடயங்கள் பல உள்ளன, அதை விடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நீண்ட உரையின் சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாகவுள்ளது என  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப்  ஹக்கீம் தெரிவித்தார்.

hakem.jpg

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்பாராத விதமாக ஒருவார்த்தை பிழையாக கூறியமையினால் அவரை தூக்கிலிட்டு கொல்லவா? இவர்கள் சொல்கிறார்கள். தனது கருத்தை சொல்வதற்கு இருக்கின்ற தனிமனித சிறப்புரிமைக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்தான். 

ஆனால் இப்போது வடக்கில் இருக்கின்ற நிலவரத்தை நாம் சிந்திக்கவேண்டும். அங்கே  சட்டமும் ஒழுங்கும் சீரற்ற நிலையில் காணப்படுகின்றன.  அண்மையில் யாழ்ப்பாணத்தில்  விஜயகலா மகேஸ்வரனின் உறவுக்கார பெண் தனது கணவரின் முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை அங்குள்ளது. சட்டவிரோத குழுக்களின் ஆளுகையும். செயற்பாடும் அங்கு அதிகளவாக இருப்பதனை காணமுடிகின்றது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அவரது மிக நீண்ட உரையின் ஒரு சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாக இருக்கின்றது. அவர் என்ன பேசினார் எவ்வாறான நிலையில் பேசினார் என்கின்ற அடிப்படை அறியாதவர்களே இப்போது வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிகோலுகின்றனர்.

மேலும் இந்த நாட்டில் தீர்க்கப்படாத முக்கிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. எனவே விஜயகலா மகேஸ்வரனின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என நான் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

http://www.virakesari.lk/article/36234

  • தொடங்கியவர்

வடக்­கையும் தெற்­கையும் துரு­வப்­ப­டுத்தும் முயற்சி : இத­னையே தெற்கு அர­சி­யல்­வா­திகள் முன்­னெ­டுத்­துள்­ளனர் -சாடு­கிறார் ஹக்கீம்

city-1-colourGMGPage1Image0016-f1a7b902b23d2187299d62a2b9acb040a05e960b.jpg

 

பெண்­க­ளுக்கு சரி­யான பாது­காப்பு இல்­லாத ஒரு நிலை யாழில் உண­ரப்­ப­டு­கின்­றது. சட்­ட­வி­ரோத குழுக்­களின் ஆளு­கையும் செயற்­பாடும் அங்கு மிகை­யாக இருப்­ப­தனை உண­ர­மு­டி­கி­றது. இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்தில் விஜ­ய­க­லாவின் மிக நீண்ட உரையின் ஒரு சிறு பகு­தியை தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்டு ஆடு­வது வேடிக்­கை­யாக 

 இருக்­கின்­றது. அவர் என்ன பேசினார் எவ்­வா­றான நிலையில் பேசினார் என்­கின்ற அடிப்­படை  அறி­யா­த­வர்­களே இப்­போது வீதி­களில் ஆர்ப்­பாட்டம் செய்து மீண்டும் ஒரு பிரி­வி­னைக்கு வழி­கோ­லு­கின்­றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும்,நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.  

விஜ­ய­கல விவ­கா­ரத்தை பயன்­ப­டுத்தி தெற்­கி­லுள்ள மக்­களின் மனங்­களில் சந்­தே­கங்­களை விதைத்து மீண்டும் வடக்­கையும் தெற்­கையும் துரு­வப்­ப­டுத்­து­கின்ற செயற்­பாட்­டையே தெற்கு அர­சி­யல்­வா­திகள் முன்­னெ­டுத்­துள்­ளனர் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

புத்­தளம் மாவட்டம் முந்தல் மங்­கள எளிய , நவன்டன் குளம் மற்றும் கட்­டைக்­காடு ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு சுத்­த­மான குடி­நீரை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­நி­கழ்த்தும் போதே அமைச்சர் இவ்­வாறு கூறினார்.

 அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்

இன்­றைய ஊட­கங்கள் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் பேச்சு தொடர்பில் கருத்­துக்­கேட்­கின்­றன . அபி­வி­ருத்தி செய்­தி­க­ளை­வி­டவும் இவ்­வா­றான சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்கள் தொடர்பில் தான் ஊட­கங்­களும் அதிகம் ஆர்வம் செலுத்­து­கின்­றன. இது­தொ­டர்பில் கூறு­வ­தென்றால் நாள் முழுக்க கூறலாம். ஆனால் பொறுப்­பு­வாய்ந்த ஒரு கட்­சியின் தலைவர் என்­கின்ற விதத்தில் அந்த பொறுப்பை மனதில் வைத்தே கதைக்­க­வேண்­டி­யுள்­ளது.ஒருவர் ஒரு கருத்தை சொல்­லி­விட்டார் என்றால் அந்த கருத்து தொடர்பில் நாம் நமது நியா­ய­மான பார்­வையை செலுத்­த­வேண்டும். கருத்து சொல்­கின்­ற­வரின் மனோ­நிலை தொடர்பில் நாம் சிந்­திக்க வேண்டும்.

அந்த வகையில் தான் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் கருத்­துக்­க­ளையும் நோக்­க­வேண்­டி­யுள்­ளது. அவ­ரது கருத்­துக்­க­ளுக்கு வெவ்­வே­றான அர்த்­தங்­களை கற்­பித்து சிலர் தமது தேசப்­பற்றை நிரூ­பிக்க முனை­கின்­றனர். உண்­மையில் இவர்­க­ளது தேசப்­பற்­றா­னது வாய்­க­ளிலும், வார்த்­தை­க­ளிலும் மட்­டுமே காணப்­ப­டு­கின்­றது.

கடந்த காலத்தில் விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ரோடு இருக்­கின்­ற­போது பிர­பா­க­ர­னுடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அரச சார்பில் பேசி­ய­வர்­களில் நானு­மொ­ருவன். எமது அர­சாங்கம் நடாத்­திய ஆறு சுற்று பேச்சு வார்த்­தை­களில் அரசின் பிர­தி­நி­யாக நானும் கலந்­துள்ளேன். தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் நாங்கள் மூவர் இருக்­கின்றோம் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சர் நிமல் சிறி­பால டி .சில்வா ஆகி­யோ­ருடன் நானும் இந்த பேச்சு வார்த்­தை­களில் பிர­பா­க­ரனின் அணி­யி­ன­ருடன் ஈடு­பட்டோம். இந்த பேச்சு வார்த்­தைகள் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வெவ்­வேறு கால எல்­லையில் இடம்­பெற்­றன.

பிர­பா­க­ர­னுடன் நேர­டி­யாக நேருக்­கு­நே­ராக சுமார் மூன்று மணித்­தி­யா­லங்கள் நான் தனி­மையில் கதைத்­துள்ளேன். பிர­பா­க­ரனின் எண்ணம் எத்­த­கை­யது என்­ப­தனை இந்த சந்­திப்பின் பின்னர் நான் தெளி­வாக உணர்ந்தேன். பிர­பா­கரன் ஒரு­போதும் இலங்கை அரசின் கீழ் இணங்கி செயற்­பட விரும்­பு­கின்­ற­வ­ராக இல்லை என்­ப­தனை அவ­ரது பேச்­சுக்கள் வலி­யு­றுத்­தின.இலங்கை அர­சோடு பிர­பா­கரன் ஒத்­துப்­போக விரும்­ப­வில்லை என்­ப­தனை அன்­றைய அரச தலை­மைக்கு நாங்கள் தெரி­வித்தோம்.

இருந்தும் தற்­போது மக்­களை குழப்பும் விதத்தில் அவர்­களின் மனத்தில் பொய்­யான சந்­தே­கங்­களை உண்­டு­பண்ணும் நோக்கில் ஊட­கங்கள் முன்­னின்று செயற்­ப­டு­வதை நான் வன்­மை­யாக கண்­டிக்­கிறேன். எதோ ஒரு சந்­தர்ப்ப சூழ்­நி­லையில் இரா­ஜாங்க அமைச்சர் இவ்­வா­றான ஒரு கருத்தை சொல்­லி­யி­ருக்க முடியும். இதற்­காக ஒவ்­வொரு சந்­தி­க­ளிலும் போராட்­டங்­களை நடத்த பொது­மக்கள் தூண்­டப்­ப­டு­கின்­றனர். சில பிர­தே­சங்­களில் சிறு­சிறு குழுக்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­கின்­றன . இந்த ஆர்ப்­பாட்­டங்­களின் பின்­ன­ணியில் சில அர­சியல் வியா­பா­ரிகள் இருக்­கின்­றார்கள். அவர்­க­ளது தேவையும் எப்­போதும் இந்த நாட்டை ஒரு குழப்­ப­மான நிலையில் வைத்­துக்­கொள்ள வேண்­டு­மென்­ப­தே­யாகும். தெற்­கி­லுள்ள மக்­களின் மனங்­களில் சந்­தே­கங்­களை விதைத்து மீண்டும் வடக்­கையும் தெற்­கையும் துரு­வப்­ப­டுத்­து­கின்ற செயற்­பா­டா­கவே இதனை நான் பார்க்­கின்றேன்.

நான் ஒரு சிறு­பான்மை சமூ­கத்தை சேர்ந்­தவன் எனது சமூகம் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்­தது என்­பது உங்­க­ளுக்கு தெரியும் . பல்­லா­யிரம் உயிர்கள், சொத்­துக்கள்,வியா­பார ஸ்தலங்கள் என்று முஸ்லிம் சமூ­கத்­திற்கு அவர்கள் செய்த அநி­யா­யங்கள் இல­குவில் கடந்து போய்­வி­ட­மு­டி­யா­வை­யாகும். இருந்தும் நாம் இப்­போது தேசிய ஒற்­றுமை பற்­றியும் நல்­லி­ணக்கம் தொடர்­பிலும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­ட­வேண்­டிய இந்­த­நே­ரத்தில் தெற்கில் நடத்­தப்­ப­டு­கின்ற இவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்கள் இனங்­க­ளுக்­கி­டையில் இன்னும் விரி­சலை மட்­டுமே ஏற்­ப­டுத்தும்.

எதிர்­பா­ராமல் ஒரு­வார்த்தை பிழை­யாக வெளி­வந்­த­மைக்­காக அவரை தூக்­கி­லிட்டு கொல்­லவா? தனது கருத்தை சொல்­வ­தற்கு இருக்­கின்ற தனி­ம­னித சிறப்­பு­ரி­மைக்கு சில கட்­டுப்­பா­டுகள் அவ­சி­யம்தான். ஆனால் இப்­போது வடக்கில் இருக்­கின்ற நில­வ­ரத்தை நாம் சிந்­திக்­க­வேண்டும். அங்கே சட்­டமும் ஒழுங்கும் சீரற்ற நிலையில் காணப்­ப­டு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்தில் அண்­மையில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் உற­வுக்­கார பெண் தனது கண­வரின் முன்­னா­லேயே பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ளார். பெண்­க­ளுக்கு சரி­யான பாது­காப்பு இல்­லாத ஒரு நிலை அங்கு உண­ரப்­ப­டு­கின்­றது. சட்­ட­வி­ரோத குழுக்­களின் ஆளு­கையும். செயற்­பாடும் அங்கு மிகை­யாக இருப்­ப­தனை உண­ர­மு­டி­கி­றது. இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்தில் அவ­ரது மிக நீண்ட உரையின் ஒரு சிறு பகு­தியை தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்டு ஆடு­வது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. அவர் என்ன பேசினார் எவ்­வா­றான நிலையில் பேசினார் என்­கின்ற அடிப்­படை அறி­யா­த­வர்­களே இப்­போது வீதி­களில் ஆர்ப்­பாட்டம் செய்து மீண்டும் ஒரு பிரி­வி­னைக்கு வழி­கோ­லு­கின்­றனர்.

இந்த பிரச்­சி­னையை அறி­வு­பூர்­வ­மாக அணுக வேண்டும். இதனை இல­குவில் தீர்த்­துக்­கொள்ள வழி இருக்­கின்­றது.அவ­ருக்­கென்று ஒரு கட்சி இருக்­கின்­றது. கட்சி ரீதி­யாக அவரை விசா­ரணை செய்து ஒரு தீர்­மா­னத்­திற்கு வரு­வார்கள். அதற்குள் இப்­போது அவர் தனது அமைச்­சுப்­ப­த­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார். இப்­போது பிர­த­மரின் தலைக்கு குறி­வைக்­கின்­றனர். பிர­தமர் பதவி விலக வேண்டும் என கோஷ­மி­டு­கின்­றனர். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நினைத்­தி­ருந்தால் பிர­பா­கரன் கேட்­டதை கொடுத்­தி­ருக்க முடியும்.பிர­பா­க­ரனின் கோரிக்­கை­கக்கு இணங்­காத கார­ணத்­தினால் தான் 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் தோல்­வி­ய­டைய வேண்டி ஏற்­பட்­டது.

தேர்­த­லுக்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்னால் விடு­தலை புலி­க­ளி­ட­மி­ருந்து ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு தகவல் வந்­தது. எங்­க­ளுக்கு சுயாட்சி தரு­வ­தாக இருந்தால் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்போம் என்ற தகவல் வந்­தது. அதனை ரணில் விக்­ர­ம­சிங்க ஏற்­றுக்­கொள்­வில்லை. அப்­ப­டி­யென்றால் இந்த நாட்டை ரணில் விக்­ரம சிங்க காப்­பாற்­றி­யுள்ளார். இதனால் விடு­தலை புலிகள் வடக்கு மக்­களை பல­வந்­த­மாக வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்து தடுத்­தனர். அந்த தேர்­தலில் அவர் தோல்­வி­யுற்றார். இந்த விட­யத்தை நன்­க­றிந்­தவன் நான். அன்று தேர்தல் வெற்­றியை விடவும் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு இந்த நாட்டின் இறை­மையை காப்­பாற்­ற­வேண்டும் என்­கின்ற எண்­ணமே இருந்­தது அதனால் அன்­றைய தேர்­தலில் தோல்­வி­யுற்றார்.

அவ்­வாறே முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ காலத்தில் விடு­த­லைப்­பு­லிகள் அழிக்­கப்­பட்­டதும்,இந்த நாடு யுத்­த­மற்ற பூமி­யாக மாறி­யதும் நன்­றி­யோடு நினை­வு­கூ­றத்­தக்­கது. அவ­ரது காலத்தில் யுத்தம் நிறை­வுக்கு வந்­தி­ருக்கா விட்டால் இன்னும் நாம் துன்­பத்தை அனு­ப­வித்­துக்­கொண்­டுதான் இருப்போம்.என்னை பொறுத்­த­மட்டில் எல்லா அரச தலை­வர்­களும் எனக்கு ஒன்­றுதான். ஒரு நாட்டின் தலைவர் அந்த நாட்டை காட்­டிக்­கொ­டுக்­கின்ற ஒரு­வ­ராக இருக்­க­மாட்டார். அவர் அந்த நாட்டை பாது­காக்­கின்ற ஒரு­வ­ரா­கவே இருப்பார் அந்­த­வ­கையில் ரணில் விக்­ரம சிங்­க­வா­கட்டும் அல்­லது மகிந்த ராஜ­ப­க்ஷ­வா­கட்டும் இவர்கள் நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் வகையில் செயற்­ப­ட­வில்லை.எங்­க­ளுக்குள் இருக்கும் அர­சியல் முரண்­பா­டு­க­ளுக்­காக உண்­மை­களை மறுக்­க­மு­டி­யாது.

யுத்த நிறுத்த ஒப்­பந்­தத்தில் நாம் கைத்­த­சாத்­திட்­டத்தை நாட்டை காட்­டிக்­கொ­டுத்­த­தாக சிலர் பேசு­கின்­றார்கள். உண்­மையில் இந்த யுத்­தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முக்கிய காரணமே யுத்த நிறுத்த ஒப்பந்தம் தான். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னரே கருணா அம்மான் விடுதலைப்புலிகளை விட்டும் பிரிந்தார். அரசுடன் இணைந்து செயற்பட்டார். அது புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தவெற்றியை தனியொருவர் கொண்டாட முடியாது இதன் பின்னணியில் முப்படைகளின் தியாகம் இருக்கின்றது. அதனை அதனை கௌரவிக்க வேண்டும்.அரசியல் ரீதியாக தீர்மானங்கள் எடுக்கின்றபோது சில நேரங்களில் சிறு தவறுகள் ஏற்படுவதுமுண்டு ஆனால் அவை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படுவதில்லை.

சர்வதேச ரீதியாகவும் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவைகள் இராஜதந்திர ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் பார்க்கப்படவேண்டியவை. எனவே விஜயகலா மகேஸ்வரின் விடயத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என ஊடகங்களை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். அதைவிடவும் முக்கிய பிரச்சினைகள் இந்த நாட்டில் இருக்கின்றன என அவர் கூறினார்  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.