Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்­கப்­பூரில் பிர­தமர் ரணிலை பின்­தொ­டர்ந்தால் : அர்­ஜுன மகேந்­தி­ரனை கண்­டு­பி­டிக்­கலாம்

Featured Replies

சிங்­கப்­பூரில் பிர­தமர் ரணிலை பின்­தொ­டர்ந்தால் : அர்­ஜுன மகேந்­தி­ரனை கண்­டு­பி­டிக்­கலாம்

city-1-colourGMGPage1Image0012-1ff0fe0c913cdd76765417826bc4605942b1aa4a.jpg

 

(ஆர்.யசி)

அர்­ஜுன மகேந்­தி­ரனை கைது செய்ய வேண்டும் என்றால் அல்­லது அவர் இருக்­கு­மி­டத்தை கண்­ட­றிய வேண்டும் என்றால் சிங்­கப்பூர் சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பின் தொட­ர­வேண்டும். அவ்­வாறு பின் தொடர்ந்தால் இல­கு­வாக கண்­ட­றிய முடியும் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.  

தேசிய கணக்­காய்வு சட்­ட­மூ­லத்தை பல­வீ­னப்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­றுவே பிர­தமர் முயற்­சிக்­கின்றார் எனவும் அக்­கட்சி குற்றம் சுமத்­தி­யது.

மக்கள் விடு­தலை முன்­னணி நேற்று அதன் தலை­மை­ய­கத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே ஜே.வி.பி. யின் உறுப்­பினர் சுனில் ஹந்­து­நெத்தி இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

தேசிய கணக்­காய்வு சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இது மிகவும் முக்­கி­ய­மான சட்­ட­மாகும். குறிப்­பாக 100 நாட்கள் ஆட்­சியில் இந்த சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தாக அர­சாங்கம் வாக்­கு­றுதி கொடுத்­தது. தகவல் அறியும் சட்­ட­மூலம் போன்று அதற்கு சம­மா­ன­தாக இதனை கொண்­டு­வ­ரு­வ­தாக வாக்­கு­றுதி கொடுத்­தனர். எனினும் மிகவும் காலம் கடந்தே இந்த சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆரம்­பத்தில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் இதனை தடுக்க பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில் நாம் அழுத்தம் கொடுத்­தது மட்டும் அல்­லாது, அர­சாங்கம் கொண்­டு­வ­ரா­த­போது நாம் தனி நபர் பிர­ர­னை­யாக இதனை கொண்­டு­வ­ரவும் தயா­ராக இருந்தோம்.

அர­சாங்கம் தனது அர­சியல் தேவைக்கு அமைய இந்த சட்­ட­மூ­லத்தை தயா­ரித்து வைத்­துள்­ளது. இதில் கணக்­காய்வு திணைக்­களம் சுயா­தீ­ன­மாக செயற்­பட எந்த வாய்ப்­பு­களும் வழங்­கப்­ப­ட­வில்லை. கணக்­காய்­வாளர் நாய­கமும் சுயா­தீ­ன­மாக செயற்­பட இட­ம­ளிக்­க­வில்லை. ஒரு சட்டம் இருக்­கின்­றது என்­பதை காட்­டவே இன்று அர­சாங்கம் இதனை நிறை­வேற்­றி­யுள்­ளது. சட்டம் மட்­டுமே இருந்தும் எந்த பலனும் இல்லை. இது தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த சட்­ட­மாக கரு­தப்­பட வேண்டும். இதன் மூல­மாக பல்­வேறு ஊழல்­களை தடுக்க முடியும். பிர­தேச சபைகள், மாகா­ண­ச­பைகள், பாரா­ளு­மன்ற, அரச நிறு­வ­னங்கள் மட்­டு­மல்­லாது தனியார் நிறு­வ­னங்­களின் விசா­ர­ணை­களை நடத்­தவும் அதி­காரம் வழங்­கப்­பட வேண்டும் என்ற தன்­மைக்கு அமை­யவே கணக்­காய்வு சட்­ட­மூலம் உரு­வாக்­கப்­பட்­டது.

ஆனால் நிறை­வேற்றும் போது இவை அனைத்­துமே பறிக்­கப்­பட்டு வெறு­மனே காலத்தை கடத்தும் செயற்­பா­டாக அமைந்­துள்­ளது. கணக்­காய்­வாளர் தனது அதி­கா­ரங்­களை செயற்­ப­டுத்த முடி­யாது அமைச்­ச­ரவை தீர்­மானம் மூல­மாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளக கணக்­காய்­வு­களை செய்ய முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. தேசிய ரீதியில் உரு­வாக்­கப்­பட்ட இந்த சட்­டத்தில் இவை பறிக்­கப்­பட்­டுள்­ளன. அரச அதி­காரி ஒருவர் பொய்­யான கருத்­தினை விசா­ர­ணை­களில் முன்­வைத்தால் அது தவறு என நிரு­பிக்­கப்­பட்டால் அவ­ருக்­கான உய­ரிய தண்­டனை 1 இலட்சம் என்று இந்த சட்டம் கூறி­யுள்­ளது. இந்த திட்­டத்தை 5 ஆயி­ர­மாக குறைக்க அர­சாங்­கமே யோச­னையை கொண்­டு­வந்­துள்­ளது.

சட்­டத்தில் உள்ள கோரிக்­கை­யையும் நிரா­க­ரித்து அர­சாங்கம் குற்­ற­வா­ளி­களை பாது­காக்கும் பக்­கமே நிற்­கின்­றது. இந்த சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வதன் மூல­மாக குற்­ற­வா­ளி­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். சட்­டத்­தையே பல­வீ­னப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் கையாள்­கின்­றது. நாம் 16 திருத்­தங்­களை முன்­வைத்தோம். ஆனால் அவற்றில் ஒரு சில­வற்றை ஏற்­று­கொண்ட போதும் எமது யோச­னை­களை அவர்­களின் யோச­னை­க­ளாக முன்­வைத்­தனர்.

எனது ஆடையை வேறு ஒருவர் அணிந்­து­கொண்டு அவ­ரது ஆடை­யாக கூறு­வது போன்­றதே இந்த அர­சாங்கம் செய்­து­கொண்ட விட­ய­மாகும். இந்த சட்­டத்தை பல­வீ­ன­ப­டுத்­திய பிர­தான பொறுப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே சாரும். ஊழல் வாதி­களை காப்­பாற்ற, ஊழலை மறைக்க பிர­தம அமைச்­சரும் ஏனைய அமைச்­சர்­களும் இணைந்து சூழ்ச்சி செய்­து­விட்­டனர். அமைச்­சர்­களின் தேவைக்­காக அரச அதி­கா­ரிகள் செய்யும் தவ­று­களை இன்று அமைச்­சர்கள் காப்­பாற்­று­கின்­றனர்.

கென்யா நாட்டின் கணக்­காய்வு சட்­டத்தை பார்த்தால், கணக்­காய்­வா­ள­ருக்கு அதீத அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஊழல் குற்­றங்­களில் நேர­டி­யாக பொலி­ஸுக்கு முறைப்­பாடு செய்­யவும் அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் அவ்­வாறு ஒன்றும் இல்லை, வெறு­மனே பாரா­ளு­மன்­றத்தில் தெரி­விக்க முடியும். அதை தாண்டி எத­னையும் செய்ய முடி­யாது. மேலும் பிர­த­ம­ரது சிங்­கப்போர் விஜயம் எதற்­காக என்­பது எமக்குத் தெரி­யாது.

எனினும் மேமு­தலாம் திக­தியில் இருந்து நடை­மு­றைக்கு வந்­துள்ள சிங்­கபூர் உடன்­ப­டிக்கை குறித்து கண்­டிப்­பாக இந்த விஜ­யத்தில் கலந்­து­ரை­யா­டப்­படும் என நம்ப முடியும். ஆனால் அர்­ஜுன மஹேந்­தி­ரனை மீண்டும் இலங்­கைக்கு கொண்­டு­வர பிர­தமர் போக­வில்லை என்­ப­தையும் கூற முடியும். எனினும் அர்­ஜுன மஹேந்­திரன் எங்கு ஒளிந்­துள்ளார் என்­பதை தெரிந்­து­கொள்ள வேண்டும் என்றால் பிர­தமர் பின்னால் ஒருவர் பின்­தொ­டர்ந்தால் அவரை பிடிக்க முடியும். ஊட­கங்­களும் அதனை செய்ய முடியும். அப்­போது அவரை கண்­ட­றிய முடியும். சில­வே­ளை­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உத­யங்க வீர­துங்­கவை வர­வ­ழைப்­ப­தாக கூறி­யதை போன்று பிர­தமர் அர்­ஜுன மஹேந்­தி­ரனை வர­வ­ழைக்க சென்­றாரோ தெரி­ய­வில்லை. நீ உத­யங்­கவை வர­வ­ழைத்தால் என்னால் அர்­ஜு­ன­வையும் வர­வ­ழைக்க முடியும் என்ற நேரடி சவால் ஏதும் உள்­ளதா என்­பதும் தெரி­ய­வில்லை.

கேள்வி:- விஜ­ய­கலா மகேஸ்­வரன் குறித்து ஜே.வி.பியின் நிலைப்­பாடு என்ன?

பதில் இது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் நாம் எமது நிலைப்­பாட்டை தெரி­வித்தோம். ஊடக சந்­திப்பை நடத்தி எமது நிலை­பாட்டை கூறினோம். அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் இன்­று­வரை விமர்சனங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இது வெறும் அரசியல் கருத்து மட்டுமேயாகும். விஜயகலா கூறிய விடயங்களை நாம் கண்டிக்கின்றோம். மக்கள் பிரதிநிதியாக அவர் அந்தக் கருத்தினை முன்வைக்க முடியாது. கட்சியாகவும், அரசாங்கமும் அவருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை தவற விட்ட காரணத்தினால் தான் இன்று நெருக்கடிகள் எழுந்துள்ளன. கடந்த காலத்தில் அவர் நடந்துகொண்ட விதம் எமக்கும் தெரியும். அவரது கருத்துக்கு நாம் பதில் கூறவேண்டிய தேவை இல்லை. மக்கள் செல்வாக்கு குறையும் நிலையில் அனைவரும் கையாளும் யுக்தியையே அவரும் கையாண்டுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.