Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூட்டமைப்பிடம் இதனைக் கூறினேன்: மனோ கணேசன்

Featured Replies

த.தே.கூட்டமைப்பிடம் இதனைக் கூறினேன்: மனோ கணேசன்

 

 

அபிவிருத்தியையும், அரசியல் தீர்வினையும் இரண்டு கண்கள் போன்று செயற்பட தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உயர்தரத்தில் சித்திபெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள், கா.பொ.த.சாதாரண தரத்தில் சித்திபெற்ற மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவர்கள் என பல்வேறு சாதனைகளை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இந்த ஆண்டுடன் ஓய்வுபெற்றுச்செல்லும் பாடசாலை அதிபர் திலகவதி ஹரிதாஸ், பாடசாலை சமூகம் மற்றும் அமைச்சரினால் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்,

எனது பணியை நான் கொழும்புக்குள் மட்டும் சுருக்கிக்கொள்ளவில்லை. நான் அமைச்சராக வருவதற்கு முன்பிருந்தே எனது பணியை நாடு பூராவும் மேற்கொண்டு வருகின்றேன்.

தமிழர்கள் வேறுவேறு பகுதிளிலும், மாவட்டங்களிலும், மாகாணங்களிலும் வாழ்ந்து கொண்டிருந்தாலும்கூட நாங்கள் அனைவரும் தமிழர்களாகும். எங்களுக்குள் ஓடுவது ஒரே இரத்தம் இதனை யாரும் மறந்துவிடக்கூடாது.

யுத்தம் முடிந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி பத்து வருடங்களுக்கு முன்னர் கூறினார். அந்த யுத்தத்தின் கொடுமையினை, இழப்பினை சந்தித்தவர்கள் வடகிழக்கு தமிழ் மக்களாகும்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களில் நடைபெற்ற அபிவிருத்திகளில் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு சமத்துவமான அபிவிருத்தி நடைபெற்றதா, சமத்துவமான வளப்பங்கீடு வழங்கப்பட்டதா என்று கேட்டால் நான் இல்லையென்றே கூறுவேன்.

வடகிழக்கு இணைந்த அரசியல்தீர்வு வரவேண்டும், சமஸ்டி ஆட்சி தரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தே வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றது. இன்று அரசியல் தீர்வு வருமா, வருமா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. அதன் குழுவில் நானும் இருக்கின்றேன். அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் உள்ளனர். அது அரசாங்கத்தின் செயற்பாடு அல்ல. நாட்டின் செயற்பாடு.

தீர்வு வரும் வரையில் காத்திருக்காமல் அபிவிருத்தியையும், வளப்பங்கீட்டையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுங்கள் என்று நான் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கூறியிருக்கின்றேன்.

இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்களை இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களும் வாக்களித்துதான் உருவாக்கியுள்ளர்.

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகள் இந்த அரசாங்கத்தினை அமைப்பதற்கு பெரும் பங்கினை வழங்கியுள்ளது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

தமிழ் மக்களின் பெருமைகளையும், சாதனைகளையும், வரலாறுகளையும் தமிழர்களே மறந்துசெல்லும் நிலையே காணப்படுகின்றது. தமிழர்களுக்கு அதனை மனோ கணேசன் வந்து ஞாபகப்படுத்தும் நிலையே இருக்கின்றது.

அதன் காரணமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அபிவிருத்திகள் எல்லாம் வேறு பக்கம் செல்லும் நிலையிருக்கின்றது.

ஏனைய சமூகங்களின் உரிமைகளையும் அவர்களுக்கு உரியவைகளையும் நாங்கள் ஒருபோதும் தட்டிப்பறிக்ககூடாது.அதேபோன்று தமிழர்களின் உரிமைகளையும், தமிழர்களுக்கு உரியவற்றையும் தட்டிப்பறிக்க இடமளிக்கமுடியாது.

தமிழினம் யாதும் ஊரே யாவரும்கேளீர் என்று வாழ்ந்த இனம். தமிழர்களின் தாராள மனம் காரணமாக அவர்கள் அனைத்தையும் அள்ளிவழங்கிவிடுவார்கள். இது வடகிழக்கு மலையகத்திலும் இருந்தது. இன்று மலையத்தில் அவற்றினை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம்.

மலையகத்தில் இன்று உரிமைகளை தட்டிக்கேட்டு பெற்றுக்கொள்ளும் புதிய கலாசாரத்தினை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதேபோன்ற ஒரு காற்று கிழக்கு மாகாணத்திலும் வீச வேண்டும் என விரும்புகின்றோம்.

இங்கு தனிநாடு கிடையாது. தனிநாடு கிடையாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவித்து விட்டார். ஒரே நாட்டில் வாழ்ந்து வருகின்றோம்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் ஒரே நாட்டுக்குள்ளேயே வாழவிரும்புகின்றோம். ஒன்றுபட்ட நாட்டுக்குள் நாங்கள் வாழவேண்டுமானால் இங்கு ஐக்கியம் ஏற்படவேண்டும்.

சமத்துவம் இருக்கும்போதுதான் ஐக்கியம் ஏற்படும். ஒரு பகுதி மக்கள் மத்தியில் அதிக வளர்ச்சியும் இன்னுமொரு பகுதி மக்கள் மத்தியில் குறைந்த வளர்ச்சியும் இருந்தால் அங்கு சமத்துவம் இல்லையென்றே அர்த்தம் கொள்ளவேண்டும். அந்த நிலமையினை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் பார்க்கின்றேன்.

இந்த அரசாங்கத்தினை உருவாக்கிய தமிழ் மக்களுக்கு இந்த வளபங்கீட்டை கேட்டுவாங்ககூடிய, கேட்டு பெறக்கூடிய உரிமையிருக்கின்றது. அதிகாரம் இருக்கின்றது. அதிகார பரவலாக்கல் என்றால் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இருக்க வேண்டும் என்றார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/187617?ref=home-feed

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.