Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடை­கோ­ரும் விக்­னேஸ்வரனின் மனு­வில் -முறை­யான ஆவ­ணங்­கள் இல்லை உயர் நீதி­மன்று!!

Featured Replies

தடை­கோ­ரும் விக்­னேஸ்வரனின் மனு­வில் -முறை­யான ஆவ­ணங்­கள் இல்லை உயர் நீதி­மன்று!!

 

 

625.500.560.350.160.300.053.800.900.160.

 
 

வடக்கு அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து பா.டெனீஸ்­வ­ரனை நீக்­கி­ய­தற்கு இடைக்­கால தடை விதித்து மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வழங்­கிய உத்­த­ர­வுக்கு தடை­வி­திக்க கோரி, வடக்கு முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன் தரப்­பால் உயர்­நீ­தி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்­கில், ஆவ­ணங்­களை முறை­யா­கச் சமர்­பி­யுங்­கள் என்று உயர்­நீ­தி­மன்­றம் பணித்­துள்­ளது.

சமர்­பிக்­கப்­பட்­டுள்ள ஆவ­ணங்­கள் மூலப் பிர­தி­யாக இல்­லா­மல் உள்­ள­மை­யால், மூலப் பிர­தி­க­ளைச் சமர்­பிக்­கு­மாறு உயர் நீதி­மன்­றம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், கடந்த 4ஆம் திகதி உயர் நீதி­மன்­றில் மேன்­மு­றை­யீடு செய்­தார்.

http://newuthayan.com/story/10/தடை­கோ­ரும்-விக்­னேஸ்வரனின்-மனு­வில்-முறை­யான-ஆவ­ணங்­கள்-இல்லை-உயர்-நீதி­மன்று.html

  • தொடங்கியவர்

இடைக்காலத் தீர்ப்பு விவகாரம்- நீதி­மன்­றப் பதி­வேட்­டில் இல்லை!!

 

 

 

Deniswaran-writes-letter-to-cv-wigneswar

 
 
 
 

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத் தின் இடைக்­கா­லத் தீர்ப்­பைப் பெற்­றுக் கொள்­வ­தற்கு மன்­றுக்கு விண்­ணப்­பிக்­கப்­பட்­டது என்று முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி தெரி­வித்­த­ போ­தும், அவர் விண்­ணப்­பித்­த­மைக்­கான பதிவு எது­வும் நீதி­மன்­றப் பதி­வேட்­டில் இல்லை என்று நீதி­பதி அறி­வித்­தார்.

வடக்கு மாகாண அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்கி­யமை சட்­ட­மு­ர­ணா­னது என்று தெரி­வித்து பா.டெனீஸ்­வ­ரன், முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். இந்த வழக்­கில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் டெனீஸ்­வ­ரன் அமைச்­ச­ரா­கத் தொடர்­கின்­றார் என்ற இடைக்­கால உத்­த­ரவை கடந்த 29ஆம் திகதி வழங்­கி­யது.

இந்த வழக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் சார்­பில் அவ­ரது சட்­டத்­த­ரணி லக்ஸ்­மன் ஜெயக்­கு­மார் முன்­னி­லை­யா­னார். நீதி­மன்­றத்­தின் உத்­த­ரவு தமக்­குக் கிடைக்­க­வில்லை என்று அவர் கூறி­னார். நீதி­மன்­றம் உத்­த­ர­வு­களை அனுப்­பு­வ­தில்லை. இணை­யத் தளத்­தில் பார்­வை­யிட முடி­யும் என்று நீதி­பதி குறிப்­பிட்­டார்.

 

இணை­யத்­த­ளத்­தில் பார்­வை­யிட்­டோம். ஆனால் உறு­திப்­ப­டுத்­திய பிரதி வேண்­டும் என்று முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி கோரி­னார். உறு­திப்­ப­டுத்­திய பிர­தி­யைப் பெற்­றுக் கொள்­வ­தற்கு விண்­ணப்­பித்­தால் உடனே வழங்­கப்­ப­டும் என்று நீதி­பதி குறிப்­பிட்­டார். கடந்த 2ஆம் திகதி விண்­ணப்­பித்­த­போ­தும் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை என்று முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி தெரி­வித்­தார்.

இதன்­போது டெனீஸ்­வ­ரன் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி, நாங்­கள் 2ஆம் திகதி விண்­ணப்­பித்­தோம். 3 ஆம் திகதி நீதி­மன்ற உத்­த­ரவு கிடைத்­தது என்­றார்.

நீதி­மன்­றப் பதி­வே­டு­களை நீதி­பதி ஆராய்ந்­தார். டெனீஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி மாத்­தி­ரமே விண்­ணப்­பித்­துள்­ள­மையை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி விண்­ணப்­பிக்­க­வில்லை என்­றார். இதன்­போது முத­ல­மைச்­சர் தரப்­புச் சட்­டத்­த­ரணி, இல்லை நாங்­கள் விண்­ணப்­பித்­தோம் என்­றார். ஆனால் நீதி­பதி அதற்­கான பதி­வு­கள் இல்லை என்று குறிப்­பிட்­டார்.

http://newuthayan.com/story/10/இடைக்காலத்-தீர்ப்பு-விவகாரம்-நீதி­மன்­றப்-பதி­வேட்­டில்-இல்லை.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டெனீஸ்வரன் விவகாரம் – ஆளு­நர், முத­ல­மைச்­ச­ருக்கு இரு­வா­ரங்கள் கால அவ­கா­சம்!!

625.500.560.350.160.300.053.800.900.160.
 
 

வடக்கு மாகாண ஆளு­நர் மற்­றும் முத­ல­மைச்­சர் ஆகி­யோர் ஆட்­சே­ப­னை­க­ளைத் தாக்­கல் செய்­வ­தற்கு இரு வார காலம் வழங்­கி­யுள்ள மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம், வடக்கு அமைச்­ச­ர­வை­யின் அமைச்­ச­ராக டெனீஸ்­வ­ரன் தொடர்­கின்­றார் என்ற தனது இடைக்­கா­லத் தீர்ப்­பை­யும் எதிர்­வ­ரும் 24ஆம் திகதி வரை­யில் நீடித்­தது.

வடக்கு மாகாண அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­யமை சட்­ட­மு­ர­ணா­னது என்று தெரி­வித்து பா.டெனீஸ்­வ­ரன், முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். இந்த வழக்­கில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் என்ற இடைக்­கா­லத் தடை உத்­த­ரவை கடந்த 29ஆம் திகதி வழங்கி டெனீஸ்­வ­ரன் அமைச்­ச­ரா­கத் தொடர்­கின்­றார் என்று தீர்ப்­ப­ளித்­தது.

இந்த வழக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் சார்­பில் அவ­ரது சட்­டத்­த­ரணி லக்ஸ்­மன் ஜெயக்­கு­மார் முன்­னி­லை­யா­னார். இடைக்­கா­லத் தீர்ப்பை நீடிக்­கக் கூடாது என்­றும், உயர்­நீ­தி­மன்­றில் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று மன்­றில் தெரி­வித்­தார்.

 

டெனீஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி, நீதி­மன்ற உத்­த­ரவு கிடைக்­க­வில்லை என்று முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி மன்­றில் பொய்­யு­ரைக்­கின்­றார். இணை­யத்­த­ளத்­தில் நீதி­மன்ற உத்­த­ர­வைப் பார்த்­துள்­ளார்­கள். அதனை ஒப்­புக் கொண்­டுள்­ள­னர்.

மன்­றில் வழக்கு நடக்­கும்­போது, அவ­ரது சட்­டத்­த­ர­ணி­கள் இருந்து குறிப்­பெ­டுத்­தார்­கள். ஆனால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றின் இடைக்­கா­லத் தீர்ப்பை ஒரு வார கால­மா­கி­யும் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. இவர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­குத் தாக்­கல் செய்­ய­வேண்­டி­யி­ருக்­கும் என்று குறிப்­பிட்­டார்.

வடக்கு மாகாண ஆளு­நர் மற்­றும் முத­ல­மைச்­சர் தரப்­புச் சட்­டத்­த­ர­ணி­க­ளி­டம் ஆட்­சே­ப­னை­களை எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்கு முன்­னர் தாக்­கல் செய்­வ­தற்கு அவ­கா­சம் வழங்­கிய மன்று, நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை தனி­யா­கத் தாக்­கல் செய்­யு­மாறு தெரி­வித்­தது. இந்த வழக்கை எதிர்­வ­ரும் 24ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தது.

http://newuthayan.com/story/10/டெனீஸ்வரன்-விவகாரம்-ஆளு­நர்-முத­ல­மைச்­ச­ருக்கு-இரு­வா­ரங்கள்-கால-அவ­கா­சம்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.