Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கிந்திய தீவுகளை அடுத்து இலங்கைக்கு தென்னாபிரிக்காவின் சவால்

Featured Replies

மேற்கிந்திய தீவுகளை அடுத்து இலங்கைக்கு தென்னாபிரிக்காவின் சவால்

 

 

SLvSA-1st-Test-Preview-696x464.jpg
 

கடந்த ஆண்டு கத்துக் குட்டி அணிகள் தொடக்கம் ஜாம்பவான் அணிகள் வரைக்கும் அனைவரிடமும் வலிதரக் கூ டிய தோல்விகளை சந்திந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு, முன்னணி வீரர்களின் உபாதைகள், போட்டித் தடைகள் என்பன வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வுகளாக இருந்தன.

 

 

இலங்கையின் இந்த தொடர் தோல்விகள் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இருந்தே ஆரம்பித்திருந்தன. 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி அதில் முதற்கட்டமாக இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என தென்னாபிரிக்க அணியினால் வைட் வொஷ் செய்யப்பட்டிருந்தது.

இந்த டெஸ்ட் தொடரினை அடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணுக்கு வந்திருக்கும் தென்னாபிரிக்க அணி வியாழக்கிழமை (12) காலியில் ஆரம்பமாகும் மோதலுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மைதானச் சொந்தக்காரர்களுடன் ஆடவிருக்கின்றது. குறிப்பிட்ட அந்த டெஸ்ட் தொடரின் முன்னோட்டமே இது.

இலங்கைதென்னாபிரிக்க டெஸ்ட் போட்டிகள் வரலாறு

1993 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகின்றன. இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிய இன்றுவரை இரண்டு அணிகளும் மொத்தமாக 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளன. அதில் 14 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும், 5 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியோடு சேர்த்து இதுவரையில் 6 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.

இதேவேளை, இலங்கை தமது சொந்த மண்ணில் வைத்து தென்னாபிரிக்க அணியுடன் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதோடு அவற்றில் 4 வெற்றிகளையும், 5 சமநிலை முடிவுகளையும் பெற்றிருக்கின்றது. அதேநேரம், தென்னாபிரிக்க அணி இலங்கையில் இதுவரையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றியினை சுவைத்திருக்கின்றது.

 

 

கடைசியாக 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணி, அப்போது இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினை 1-0 என கைப்பற்றியிருந்தது.

கடந்த கால போட்டி முடிவுகள் அனைத்தையும் பார்க்கும் நிலையில் இலங்கையுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி ஆதிக்கத்தை காட்டியுள்ளது. அதே தருணத்தில், இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் அவ்வணி சற்று தளர்வுடன் இருந்ததனையும் காணாக் கூடியதாக இருக்கின்றது. எனவே, இலங்கையில் நடைபெறவிருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் யாரின் ஆதிக்கம் மேலோங்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  

இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுடனான தமது அண்மைய டெஸ்ட் தொடரினை வரலாற்று வெற்றியோடு 1-1 என சமநிலை செய்த இலங்கை அணி, அதோடு சேர்த்து இறுதியாக தாம் விளையாடிய நான்கு டெஸ்ட் தொடர்களிலும் சிறப்பான பதிவுகளையே காட்டியிருக்கின்றது.  

.சி.சி. இன் டெஸ்ட் தரவரிசையில் 91 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் காணப்படும் இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றும் எனின் டெஸ்ட் தரவரிசையில் 97 புள்ளிகளுடன், தமது நிலையினை முன்னேற்றிக் கொள்ளும்.

 

 

இந்த டெஸ்ட் தொடரில் இலங்கையை வழிநடாத்த இலங்கை டெஸ்ட் அணியின் வழமையான தலைவர் தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்ட போதிலும், மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை தாமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு போட்டித்தடை விதிக்கப்பட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதனால், அவருக்கு இந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாட முடியாது போகலாம்.  

சந்திமால் இல்லாது போனால் இலங்கை அணியினை தென்னாபிரிக்க தொடரில் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் வழிநடாத்துவதாக கூறப்பட்டிருக்கின்றது. மறுமுனையில் சந்திமாலின் இழப்பு இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறைக்கு ஏற்படப்போகும் பாரிய பின்னடைவாகும்.

இலங்கை அணிக்காக கடந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இதுவரையில் 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் சந்திமால் 48.67 என்கிற சராசரியுடன் மொத்தமாக 1,349 ஓட்டங்களை குவித்திருக்கின்றார். இதில் நான்கு சதங்களும், ஆறு அரைச்சதங்களும் அடங்கும்.

சந்திமால் போன்றே, இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவும் விளையாட்டின் மகத்துவத்தை சீர்குழைக்கும் வகையில் நடந்துகொண்ட

Chandimal-15-300x200.jpgசந்திமால் இல்லாது போனாலும் இலங்கை அணிக்கு ஆறுதல் தரும் விடயமாக மாறியிருப்பது அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவின் மீள்வருகையாகும். இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஆண்டு 1,000இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை கடந்த அவர் காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் ஆடியிருக்கவில்லை. தற்போது அணிக்கு திரும்பியுள்ள கருணாரத்ன தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரிலும் நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dimuth-2-300x200.jpgஇதேவேளை, தென்னாபிரிக்க அணியுடனான பயிற்சிப் போட்டியில் 92 ஓட்டங்களை விளாசிய மெதிவ்ஸ் இலங்கை அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட நம்பிக்கையாகும். இலங்கை அணியின் மத்தியவரிசையினை பலப்படுத்தும் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மெதிவ்ஸிற்கு டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை எட்டுவதற்கு இன்னும் 44 ஓட்டங்களே தேவையாக இருக்கின்றது.

 

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பில் அதிக ஓட்டங்கள் (285) குவித்த குசல் மெண்டிஸ் இலங்கை அணியினால் இந்த டெஸ்ட் தொடரில் எதிர்பார்க்கப்படுகின்ற ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். எதிரணிகளின் எவ்வகைப் பந்து வீச்சாளர்களினையும் கையாளும் திறன் கொண்ட 23 வயதான குசல் மெண்டிஸிற்கு தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு காணப்படுகின்றது.  

Kusal-Mendis-5-300x200.jpgஅதோடு அண்மைய மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்ட தவறிய ரோஷேன் சில்வா, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா போன்றோருக்கு இந்த டெஸ்ட் தொடர் துடுப்பாட்டத்தில் திறமைகளை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும்.

இலங்கை அணியின் பந்து வீச்சுத்துறையினை எடுத்துப் பார்க்கும் போது சுழல் வீரரான ரங்கன ஹேரத் தென்னாபிரிக்க டெஸ்டிற்கான குழாத்தில் உள்ளடக்கப்பட்ட போதிலும் காயம் காரணமாக அவர் இந்த டெஸ்ட் தொடரின் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமான நிலையில் இருக்கின்றது.

ஹேரத் இல்லாத இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுத்துறை தில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, சைனமன் சுழல் வீரர் லக்ஷான் சந்தகன் ஆகியோரினை நம்பி இருக்கின்றது. தென்னாபிரிக்க அணி இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியுடன் இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது சுழல் பந்துவீச்சாளர்களிடமே அதிக விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்த நிலையில் இந்த தொடரில் சுழல் வீரர்களினை இலங்கை அணி பெரிதும் நம்பியிருக்கின்றது

 

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை சுரங்க லக்மால் முன்னெடுக்க அவருக்கு பக்கபலமாக லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் இருக்கவுள்ளனர்.

Kumara-300x200.jpgஇதில் இளம் வேகப் புயலான லஹிரு குமார மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் 17 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கையின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸின் சாதனையை (வெளிநாட்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்) முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, ரொஷேன் சில்வா, தனன்ஜய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, லக்ஷன் சந்தகன், அகில தனன்ஜய, சுரங்க லக்மால் (உப தலைவர்), லஹிரு குமார, கசுன் ராஜித   

தென்னாபிரிக்க அணி

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த அணியாக வலம் வருகின்றது எனக் கூறினால் அது மிகையாகாது. 2016ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒன்பது டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ள தென்னாபிரிக்கா, அதில் ஒரு டெஸ்ட் தொடர் தவிர ஏனைய எட்டு தொடர்களினதும் வெற்றியாளர்களாக மாறியிருக்கின்றது.

.சி.சி. இன் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் தென்னாபிரிக்க அணி இந்த ஆண்டு பலமிக்க இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளையும் டெஸ்ட் தொடர்களில் தோற்கடித்திருப்பதால், இலங்கை அணிக்கு கடுமையான போட்டியாளர்களாக இருக்கப் போகின்றார்கள் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

எனினும், இறுதியாக (2016 ஆம் ஆண்டில்) தமது மண்ணுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆசிய கண்டத்தினை சேராத அவுஸ்திரேலிய அணியினை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என இலங்கை வைட் வொஷ் செய்திருந்ததனையும் தென்னாபிரிக்க வீரர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்

 

 

தென்னாபிரிக்க அணி சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான ஏபி டிவில்லியர்ஸ், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மொர்னே மோர்க்கல் ஆகியோர் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த பின்னர் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.  

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்துறையினை எடுத்து பார்க்கும் போது ஆரம்ப வீரராக களம் வரும் டீன் எல்கார் அவ்வணியின் முதுகெலும்பாக இருக்ககூடிய ஒருவராக காணப்படுகின்றார். இலங்கை அணி இறுதியாக தென்னாபிரிக்கவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் (308) குவித்த எல்கார், தென்னாபிரிக்காவின் அண்மைய அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுடனான டெஸ்ட் தொடர்களிலும் தனது தரப்புக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த முதன்மையானவர்களில் ஒருவராக இருந்தார்.

Dean-Elgar-300x200.jpgஎல்காரோடு சேர்த்து தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்துறை அனுபவமிக்க ஹஷிம் அம்லா, அணித் தலைவர் பாப் டு ப்ளேசிஸ், எய்டன் மார்க்ரம், குயின்டன் டி கொக் ஆகியோருடன் இன்னும் வலுப்பெறுகின்றது. இவர்களில் டெஸ்ட் போட்டிகளில் 9,000ஐ அண்மித்த ஓட்டங்கள் வரையில் பெற்றிருக்கும் ஹஷிம் அம்லா இலங்கை அணிக்கு நெருக்கடி தரும் ஆற்றல் கொண்ட முக்கிய துடுப்பாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்கு எதிராக இதுவரையில் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அம்லா இரண்டு சதங்கள் உட்பட மொத்தமாக 636 ஓட்டங்களினை குவித்திருக்கின்றார்

Hashim-Amla-2-300x200.jpgமேற்குறிப்பிட்ட வீரர்களில் அம்லாவுக்கு அடுத்ததாக இலங்கை அணிக்கு சிக்கல்களை உருவாக்க கூடிய ஏனைய வீரராக இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் எய்டன் மார்க்ரம் உள்ளார்.  

அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் 480 ஓட்டங்களை விளாசிய 24 வயதான மார்க்ரம், இத்தொடரிலும் அதே சிறப்பாட்டத்தினை காட்டுவார் என அனைவராலும் நம்பப்படுகின்றார்.

Markram-300x226.jpg ©Getty Images

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சினை எடுத்து நோக்கும் போது அவ்வணி வேகப்பந்து வீச்சாளர்களினையே பெரிதும் நம்பியிருக்கின்றது. தென்னாபிரிக்க அணியின் அண்மைய டெஸ்ட் வெற்றிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கினை வகித்திருந்தனர். இத்தொடரின் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெய்ன் திரும்பியிருக்கின்றார். தென்னாபிரிக்காவுக்காக 86 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 419 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கும் டேல் ஸ்டெயினின் அனுபவம் அவரது தரப்புக்கு பெரும் பலமாகும்.

Steyn-1-300x200.jpg ©Getty Images

இதேவேளை, டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளரான ககிஸோ றபாடாவினையும் தென்னாபிரிக்க அணி வைத்திருக்கின்றது. ரிவர்ஸ் ஸ்விங் பந்துகள் மூலம் துடுப்பாட்ட வீரர்களை இலகுவாக ஆட்டமிழக்கச் செய்யும் திறமை கொண்டுள்ள றபாடா தென்னாபிரிக்க அணியினால் இத்தொடரில் எதிர்பார்க்கப்படுகின்ற மிக முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த ஆண்டு நடைபெற்றிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (38) சாய்த்த வீராரகவும் றபாடா காணப்படுகின்றார்.

rabada-2-300x200.jpg

 

 

றபாடா தவிர தென்னாபிரிக்க அணி வெர்னோன் பிலாண்டர், லுங்கி ன்கிடி, தியோனிஸ் டி ப்ரெய்ன் ஆகியோரால் தமது வேகப்பந்து வீச்சு துறையினை இன்னும் பலப்படுத்திக் கொள்கின்றது.

தென்னாபிரிக்க அணிக்கு இத்தொடரில் சுழல் வீரர்களாக சேவை புரிய கேசவ் மகராஜ், தப்ரைஸ் சம்சி ஆகியோர் இருக்கின்றனர். இதில் சைனமன் சுழல் வீரரான சம்சி, தென்னாபிரிக்க அணிக்காக இதுவரையில் ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே ஆடியுள்ள போதிலும் இலங்கை கிரிக்கெட் சபை  தலைவர் பதினொருவர் அணியுடன் இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இதேவேளை, கேசவ் மகராஜ் தென்னாபிரிக்க அணிக்காக 74 டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க குழாம்  

பாப் டு ப்ளேசிஸ் (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, டெம்பா பெவுமா, டீன் எல்கார், எய்டன் மார்க்ரம், தியோனிஸ் டி ப்ரெய்ன், கேசவ் மகராஜ், வெர்னோன் பிலாண்டர், தப்ரைஸ் சம்சி, சோன் வொன் பேர்க், குயின்டன் டி கொக், கெயின்ரிச் கிளாசன், லுங்கி ன்டிகிடி, ககிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன்

இறுதியாக

இலங்கை அணி கடந்த ஆண்டு போல் அல்லாது தமது தோல்விகளில் மீண்டு புதிய அத்தியாயம் ஒன்றினை நோக்கி பயணித்து வருகின்றது. தமது தோல்விகளில் இருந்து மீண்டு வருகின்ற இலங்கை அணியின் பலத்தினை ஒரு தடவை பரீட்சித்து பார்க்கும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்காவுடனான இந்த டெஸ்ட் தொடர் ஏற்படுத்தி தரும் என்பதில்  ஐயமில்லை.

டெஸ்ட் தொடர் அட்டவணை

முதல் டெஸ்ட் போட்டிஜூலை 12 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 16 வரைகாலி சர்வதேச மைதானம், காலி

இரண்டாவது டெஸ்ட் போட்டிஜூலை 20 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 24 ஆம் திகதி வரை – SSC மைதானம், கொழும்பு

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை முதலில் துடுப்பாட்டத்தில்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை முதலில் துடுப்பாட்டத்தில்

 

 
 
இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றை போட்டியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலிற்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதால் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=104015

8.png&h=42&w=42

161/6 * (46.2 ov)

2.40pm The rain has stopped, and the umpires are out in the middle, having a look at the conditions. Plenty of puddles on top of the covers at the moment.

  • தொடங்கியவர்

158 ஓட்டங்களை பெற்றார் திமுத் - இலங்கை287

 

தென்னாபிரிக்காவிற்கு எதிராக காலியில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ன 158 ஓட்டங்களை பெற்றுள்ளார்

 இலங்கை அணி தனது முதல்  இனிங்சில் அனைத்து விக்கெட்களையும்  இழந்து 287  ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் திமுத் கருணாரட்ன ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களை பெற்றார்.

first_test.jpg

திமுத் கருணாரட்ண 217 பந்துகளில் தனது 150 ஓட்டங்களை  13 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உதவியுடன் பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் ஓரு கட்டத்தில் 8 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நிலையில் இறுதி இரு விக்கெட்களிற்காகவும் 100 ஓட்டங்களிற்கு மேல் பெற்றுள்ளது.

இறுதி விக்கெட்டிற்காக திமுத் கருணாரட்ணவும் லக்ஸ்மன் சந்தகனும் 63 ஓட்டங்களிற்கு மேல் பெற்றனர்

தென்னாபிரிக்க அணி சார்பில் ரபாடா நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

first_test2.jpg

http://www.virakesari.lk/article/36471

  • தொடங்கியவர்

126 ஓட்டங்களிற்கு சுருண்டது தென்னாபிரிக்கா

 

 

இலங்கைக்கு எதிராக காலியில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா தனது முதல் இனிங்சில் 126 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி தனது முதல் இனிங்சில் 287 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்த நிலையில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி மதியபோசன இடைவேளைக்கு பின்னர் தனது அனைத்து விக்கெட்களையும் 126 ஓட்டங்களிற்கு இழந்தது.

first_test_d21.jpg

தென்னாபிரிக்க அணியின் சார்பில் அணித்தலைவர் டுபிளசிஸ் 49 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா நான்கு விக்கெட்களையும் சுரங்க லக்மால் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இலங்கை அணிக்கு எதிராக தென்னாபிரிக்க பெற்ற குறைவான ஓட்ட எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

161 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி தொடர்ந்து  துடுப்பெடுத்தாடி வருகின்றது.

first_test_d2.jpg

 

http://www.virakesari.lk/article/36515

  • தொடங்கியவர்

வெற்றியை நோக்கி முன்னேறுகின்றது இலங்கை அணி

12-15-696x460.jpg
 

சுழல் வீரர்களின் சாகசம் மற்றும் திமுத் கருணாரத்னவின் சிறப்பாட்டம் என்பவற்றுடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடும் இலங்கை அணியினர் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், தென்னாபிரிக்க அணியைவிட 272 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

இரண்டாம் இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய திமுத் கருணாரத்ன அரைச் சதம் கடக்க, இலங்கை வீரர்கள் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 111 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்க அணியினர் இலங்கையுடன் 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T-20 என்பவற்றில் விளையாட இலங்கை வந்துள்ளனர். தொடரின் ஆரம்ப மோதலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (12) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணியினர் திமுத் கருணாரத்னவின் பெறுமதி மிக்க சதத்துடன் (158) தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆடிய விருந்தினரான தென்னாபிரிக்க அணியினர் நேற்றைய நாள் ஆட்ட நிறைவின்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

களத்தில் இருந்த டீன் எல்கார் 4 ஓட்டங்களுடனும், நைட் வொஷ்மனாக வந்த கேசவ் மகராஜ் ஓட்டமேதுமின்றியும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இலங்கை அணி நேற்றைய நாளைப் போன்றே இன்றும் சுழற்பந்து வீச்சாளர்களுடன் தமது பந்து வீச்சைத் தொடர்ந்தது.

அதற்குப் பலனாக இன்று வீசப்பட்ட மூன்றாவது ஓவரிலேயே ரங்கன ஹேரத் LBW முறையில் கேசவ் மகராஜை ஆட்டமிழக்கச் செய்தார். ஒன்பது ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தமது இரண்டாவது விக்கெட்டை இழந்த தென்னாபிரிக்க அணியினர், மேலும் 4 ஓட்டங்களைப் பெற்ற வேளை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டீன் எல்கரையும் டில்ருவன் பெரேராவின் பந்து வீச்சில் இழந்தது. 8 ஓட்டங்களைப் பெற்றிருந்த எல்கரின் பிடியெடுப்பை ஸ்லிப் திசையில் இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் பெற்றார்.

முதல் 3 விக்கெட்டுக்களையும் மிக வேகமாக இழந்த தென்னாபிரிக்க அணிக்கு அனுபவ வீரர்களான ஹசிம் அம்லா மற்றும் தெம்பா பவுமா ஆகியோர் நம்பிக்கை தரும் வகையில் தமது நிதான ஆட்டத்தை தொடர்ந்தனர். எனினும் 27 ஓட்ட இணைப்பாட்டத்துடன் இவர்களது பங்களிப்பும் நிறைவுக்கு வந்தது.

 

டில்ருவன் பெரேராவின் பந்து வீச்சில் அம்லாவின் பிடியெடுப்பை குசல் மெண்டிஸ் பெற்ற போதும் நடுவர் அதனை ஆட்டமிழப்பாக அறிவிக்கவில்லை. எனவே, மூன்றாவது நடுவரின் உதவியை நாடிய இலங்கை அணிக்கு அது சாதகமான முடிவைப் பெற்றுத்தந்தது. இதனால், இலங்கை எதிர்பார்த்திருந்த அம்லா 15 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

தொடர்ந்து, இலங்கை அணியின் சைனமன் சுழல் வீரர் லக்ஷான் சந்தகன் இந்தப் போட்டியில் வீசிய இரண்டாவது பந்தில் பவுமாவை போல்ட் (இன் சைட் எஜ்) முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

பவுமா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, தென்னாபிரிக்க அணி மேலும் 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த வேளை, புதிதாக ஆடுகளம் நுழைந்திருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குயிண்டன் டி கொக் டில்ருவன் பெரேராவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து 3 ஓட்டங்களுடன் அரங்கிற்கு நடந்தார்.

தென்னாபிரிக்க அணி வெறும் 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த வேளை தமது 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில், பந்து வீச்சாளர் வெர்ணன் பிலன்டருடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் டு ப்ளெசிஸ் மிகவும் நிதானமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினார்.

மறுமுனையில் அணித் தலைவர் சுரங்க லக்மால் இன்றைய மதிய போசண இடைவேளைக்கு முன்னைய ஓவரை தனது முதல் ஓவராக வீசினார். அதுவரை இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.   

இதன்படி, இரண்டாம் நாள் போட்டி மதிய போசண இடைவேளைக்காக நிறுத்தப்படும் பொழுது தென்னாபிரிக்க அணியினர் 37 ஓவர்களில் தமது 6 விக்கெட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். களத்தில் டு ப்ளெசிஸ் 22 ஓட்டங்களுடனும், பிலெண்டர் 16 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

மதிய போசணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தின்போது தென்னாபிரிக்க அணி 115 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தில்ருவன் பெரேராவின் பந்தில் பிலெண்டர் LBW முறையில் ஆட்டமிழக்க, அதே ஓட்ட எண்ணிக்கையில் சுரங்க லக்மால் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டு ப்ளெசிஸை போல்ட் செய்தார்.

தென்னாபிரிக்க அணியின் சிறந்த இணைப்பாக 64 ஓட்டங்களை பகிர்ந்த இந்த ஜோடியில் டு ப்ளெசிஸ் ஒரு ஓட்டத்தினால் அரைத் சதத்தை தவறவிட, பிலெண்டர் 86 பந்துகளை எதிர்கொண்டு 18 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து வந்த பந்து வீச்சாளர்களும் வேகமாக ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 54.3 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், லக்மால் 21 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்ற, ஹேரத் 2 விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டார்.

 

 

இதன்படி, இலங்கை வீரர்கள் 161 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்தனர். ஆரம்ப வீரர்களான தனுஷ்க குனத்திலக்க மற்றும் திமுத் தருணாரத்ன ஆகியோர் 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த வேளை, முதல் விக்கெட்டாக குனத்திலக்க ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த தனன்ஜய டி சில்வா, முதல் இன்னிங்ஸைப் போன்றே இந்த இன்னிங்ஸிலும் 9 ஓட்டங்களுடன் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்து வந்த குசல் மெண்டிசும் தான் சந்தித்த மூன்றாவது பந்தில் LBW முறையில் (ஓட்டமேதுமின்றி) ஆட்டமிழக்க, இலங்கை அணி 13 ஓட்ட இடைவெளியில் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

ஏற்கனவே குனத்திலக்கவின் விக்கெட்டை கைப்பற்றியிருந்த மஹராஜ் இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

எனினும் முதல் இன்னிங்சில் 157 ஓட்டங்களைப் பெற்ற திமுத் இந்த இன்னிங்ஸிலும் சற்று வேகமாக ஆடி, 67 பந்துகளில் தனது 16ஆவது டெஸ்ட் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். எனினும், 60 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை திமுத் றபாடாவின் பந்துக்கு அம்லாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.   

இந்நிலையில், இன்றை நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் பொழுது இலங்கை அணி 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் 14 ஓட்டங்களுடனும், முதல் இன்னிங்ஸில் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்த ரொஷேன் சில்வா 10 ஓட்டங்களுடனும் உள்ளனர்.

பந்து வீச்சில் மஹராஜ் 3 விக்கெட்டுக்களையும் றபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை அணியினர் மேலும் 6 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் தற்பொழுது 272 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

Full Scorecard

 

Sri Lanka

 

287/10 & 111/4

(37 overs)

Result

126/10 & 0/0

(0 overs)

South Africa

 

Sri Lanka’s 1st Innings

Batting         R B
Danushka Gunathilake c Q.De Kock b K.Rabada 26 31
Dimuth Karunaratne not out 158 222
Dananjaya De Silva b T.Shamsi 11 36
Kusal Mendis c b 24 36
Angelo Mathews c Q.De Kock b K.Rabada 0 10
Roshen Silva c A.Markram b K.Rabada 0 2
Niroshen Dickwella c H.Amla b T.Shamsi 18 31
Dilruwan Perera c Q.De Kock b V.Philander 1 4
Rangana Herath (runout) Q.De Kock / V.Philander 1 7
Suranga Lakmal c Q.De Kock b K.Rabada 10 40
Lakshan sandakan st Q.De Kock b T.Shamsi 25 55
Extras
12 (b 7, lb 1, nb 2, w 2)
Total
287/10 (78.4 overs)
Fall of Wickets:
1-44 (D Gunathilaka, 10.4 ov), 2-70 (D de Silva, 20.4 ov), 3-115 (K Mendis, 31.2 ov), 4-119 (A Mathews, 35.1 ov), 5-119 (R Silva, 35.3 ov), 6-161 (N Dickwella, 46.2 ov), 7-164 (D Perera, 47.1 ov), 8-176 (R Herath, 50.3 ov), 9-224 (S Lakmal, 62.4 ov), 10-287 (L Sandakan, 78.4 ov)
Bowling O M R W E
Vernon Philander 8 1 28 1 3.50
Dale Steyn 13 0 54 1 4.15
Kagiso Rabada 14 1 50 4 3.57
Keshav Maharaj 17 3 49 0 2.88
Tabraiz Shamsi 25.4 2 91 3 3.58
Dean Elgar 1 0 7 0 7.00

South Africa’s 1st Innings

Batting         R B
Aiden Markram c A.Mathews b R.Herath 0 7
Dean Elgar c Anjelo Mathews b Dilruwan Perera 8 29
Keshav Maharaj lbw by Rangana Herath 3 12
Hashim Amla c Kusal Mendis b Dilruwan Perera 15 36
Temba Bavuma b Lakshan Sandakan 17 33
Faf du Flessis b Suranga Lakmal 49 88
Quinton de Kock b Dilruwan Perera 3 8
Vernon Philander lbw by Dilruwan Perera 18 85
Kagiso Rabada b Suranga Lakmal 2 9
Dale Steyn c Anjelo Mathews b Suranga Lakmal 8 17
Tabraiz Shamsi not out 0 3
Extras
3 (b 2, nb 1)
Total
126/10 (54.3 overs)
Fall of Wickets:
1-1 (AK Markram, 2.4 ov), 2-9 (KA Maharaj, 6.3 ov), 3-13 (D Elgar, 9.2 ov), 4-40 (HM Amla, 17.6 ov), 5-48 (T Bavuma, 20.2 ov), 6-51 (Q de Kock, 21.6 ov), 7-115 (VD Philander, 49.4 ov), 8-115 (F du Plessis, 50.1 ov), 9-123 (K Rabada, 52.6 ov), 10-126 (DW Steyn, 54.3 ov)
Bowling O M R W E
Rangana Herath 19 5 39 2 2.05
Dilruwan Perera 23 8 46 4 2.00
L.Sandakan 8 1 18 1 2.25
Suranga Lakmal 4.3 0 21 3 4.88

Sri Lanka’s 2nd Innings

South Africa’s 2nd Innings

 

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்க அணிக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்த இலங்கை

SAvsSL-sri-696x464.jpg
 

அணித்தலைவர் சுரங்க லக்மால் கடைசி வரிசையில் பொறுப்புடன் ஓட்டங்களை அதிகரித்ததன் மூலம் இலங்கை அணியால் தென்னாபிரிக்காவுக்கு சவாலான 352 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க முடிந்துள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (14) நடைபெற்று வருகிறது. இதில் பகல் போசணத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியபோதும் இலங்கையால் சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்துள்ளது.

 

இலங்கை அணி 111 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஸ்திரமான நிலையிலேயே இன்றைய தினத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. எனினும் 10 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ரொஷேன் சில்வா மேலும் 3 ஓட்டங்களை பெற்று துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

இந்நிலையில் அடுத்து வந்த விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வல்ல (09) ரபாடா வீசிய 45 ஆவது ஓவரில் வெளியேற அதே ஓவரில் நிதானமாக துடுப்பாடி வந்த அஞ்செலோ மெத்திவ்சும் போல்டானார். அவர் 86 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றார்.

பின்வரிசையில் டில்ருவன் பெரேரா 2 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு, ரங்கன ஹேரத் டக் அவுட் ஆனார். என்றாலும் கடைசி விக்கெட்டுக்காக சுரங்க லக்மால் சற்று வேகமாகவும் சிறப்பாகவும் துடுப்பெடுத்தாடி வலுவான முன்னிலை பெற இலங்கை அணிக்கு தேவைப்படும் ஓட்டங்களை அதிகரித்தார்.

இதன்போது அவர் லக்ஷான் சந்தகனுடன் இணைந்து 27 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதோடு டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றார். 46 பந்துகளுக்கு முகம்கெடுத்த அவர் 5 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றார். எனினும் மறுமுனையில் ஆடிய சந்தகன் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதன்படி இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 190 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த போதும் அந்த அணியால் தென்னாபிரக்காவுக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் அபார சதம் அடித்த திமுத் கருணாரத்ன இரண்டவாது இன்னிங்ஸில் அரைச்சதம் ஒன்றை பெற்றார். இதன்போது தென்னாபிரிக்க அணி சார்பில் சுழல் வீரர் கேஷவ் மஹராஜ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் டேல் ஸ்டெயின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியபோது தென்னாபிரிக்க அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் ஷோன் பொலக்கின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தற்போது 421 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையிலும் அவர் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 287 ஓட்டங்களை பெற்றதோடு தென்னாபிரிக்க அணியை 126 ஓட்டங்களுக்கு சுருட்டியது. இதன்படி தென்னாபிரிக்க அணிக்கு 352 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க இலங்கையால் முடிந்தது.

தென்னாபிரிக்க அணி 350 இற்கும் அதிக ஓட்ட வெற்றி இலக்கை டெஸ்ட் வரலாற்றில் ஒரே ஒரு தடவையே எட்டியுள்ளது. அது சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 414 ஓட்டங்களையும் நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியதாகும்.

தென்னாபிரிக்க அணி துணைக்கண்டத்தில் கடைசியாக ஆடிய எட்டு இன்னிங்சுகளில் ஒரே ஒரு தடவை மாத்திரமே 200 இற்கும் அதிக ஓட்டங்களை பெற்றது. அந்த அணி கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன் காலியில் நடந்த டெஸ்டிலேயே ஆசிய மண்ணில் கடைசியாக 300 ஓட்டங்களை தாண்டியது.

இந்நிலையில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி மூன்றாவது நாள் ஆட்ட பகல் போசண இடைவேளைக்காக நிறுத்தப்படும் போது விக்கெட் இழப்பின்றி 3 ஓவர்களில் 5 ஓட்டங்களை பெற்றுள்ளது.

http://www.thepapare.com

Sri Lanka won by 278 runs

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மூன்றாவது நாளிலேயே முடிந்தது முதலாவது டெஸ்ட்.

 

காலியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று வெற்றிபெறுவதற்கு 352ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் 73 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தென்னாபிரிக்க அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள்  இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களை  எதிர்கொள்ள முடியாமல் வரிசையாக வெளியேறினர்.

ஆரம்பதுடுப்பாட்ட வீரர்கள் இருவரும் வெளியில் வந்து பந்தை அடித்து ஆட முற்பட்டவேளை ஸ்டம்ப் ஆகினர்.அதேவேளை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹசீம் அம்லாவும் ஏமாற்றினார்.

test_2.jpg

இலங்கை அணியின் சார்பில் தில்ருவான் பெரோ  32 ஓட்டங்களிற்கு ஆறுவிக்கெட்களை வீழ்த்தினார்.தென்னாபிரிக்க அணியின் சார்பில் பிலான்டர் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களை பெற்றார்

இந்த டெஸ்ட்போட்டியில் அபாரமாக பந்து வீசிதில்வருவான் பெரேரா  மொத்;தமாக 10 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை  இலங்கையின் இரு இனிங்;ஸ்களிலும் துடுப்பெடுத்தாடிய ஆரம்பதுடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ன ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த டெஸ்ட்போட்டியின் தோல்வி குறித்துகருத்து தெரிவித்துள்ள  தென்னாபிரிக்க அணித்தலைவர் டுபிளசிஸ் இந்த தோல்விக்கு நாங்களே காரணம் எங்களையே குறை சொல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அதன் முதல் இனிங்சில் 7 விக்கெட்களை 170 ஓட்டங்களிற்கு இழந்திருந்தவேளை அவர்கள் 220 ஓட்டங்களிற்குள் ஆட்டமிழக்க செய்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் 287 ஓட்டங்களை பெற்றார்கள் அது பெரிய எண்ணிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

first_test_win3.jpg

திமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் அவரின் முயற்சி மிகசிறப்பானது எனவும் தென்னாபிரிக்க அணித்தலைவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/36577

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.