Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைஞர்களை கடத்தப் பயன்படுத்திய வாகனம் – விபரம் தர மறுக்கும் சிறிலங்கா கடற்படை

Featured Replies

இளைஞர்களை கடத்தப் பயன்படுத்திய வாகனம் – விபரம் தர மறுக்கும் சிறிலங்கா கடற்படை

 

sl-navy-300x198.jpgகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்களை சிறிலங்கா கடற்படை இன்னமும் தமக்கு வழங்கவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்கள் இந்த விசாரணைக்குத் தேவைப்படுகின்ற போதும் சிறிலங்கா கடற்படை தலைமையகம்  அதனை இன்னமும் வழங்கவில்லை என்று கோட்டே நீதிவானிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று தெரிவித்தனர்.

அந்த வாகனம் முற்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கவில்லை.

அத்துடன், 2008ஆம் ஆண்டு நடந்த இந்தக் கடத்தல்கள் தொடர்பான, பிரதான சந்தேக நபரான கடற்படையின் முன்னாள் லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியின் கீழ் இருந்த கடற்படையினர் பயன்படுத்திய உந்துருளிகள் தொடர்பான எந்த விபரங்களும் தரப்படவில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/07/13/news/31856

  • தொடங்கியவர்

5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் விவ­காரம்: கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட வெள்ளை வேன், சந்­தே­க­நபர் ஹெட்­டி­ஆ­ராச்சி குறித்த தக­வல்­களை கடற்­படை மறைக்­கி­றது

 

 (எம்.எப்.எம்.பஸீர்)
குற்றப் புல­னாய்வுப் பிரிவு கோட்டை நீதி­வா­னுக்கு அறி­விப்பு
கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்­தல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வி­னரால் கண்­ட­றி­யப்­பட்டு கைப்­பற்­றப்­பட்ட கடற்­படை புல­னாய்வுப் பிரிவு பயன்­ப­டுத்­திய வெள்ளை வேன் கடத்­தல்­களின் பின்னர் புதுப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அது குறித்த தக­வல்­களை வழங்­காமல் கடற்­படை மறைத்து வரு­வ­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கோட்டை நீதி­மன்றில் அறிக்கை தாக்கல் செய்­துள்­ளது.  

வேன் மட்­டு­மன்றி சந்­தேக நபர்­க­ளான கடற்­படை புல­னாய்வுப் பிரிவு வீரர்கள் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் மோட்டார் சைக்­கிள்கள் தொடர்­பிலும் , பிர­தான சந்­தேக நப­ரான கடற்­படை லெப்­டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆரச்­சியின் கீழ் சேவை­யாற்­றி­ய­வர்கள் தொடர்­பிலும் தக­வல்­களை வழங்­காது கடற்­படை இழுத்­த­டிப்பு செய்­வ­தாக புல­னாய்வுப் பிரிவு நேற்று நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அறி­வித்­தது.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் போகச் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் இந்த 54 - 9238 எனும் இலக்­கத்தைக் கொண்ட வெள்ளை வேன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­துடன் அது தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக கடந்த 2017.10.20 ஆம் திகதி நீதி­மன்ற உத்­தர்­வுக்கு அமைய கோரப்­பட்ட தக­வல்­களே இது­வரை வழ்­னக்­கப்­படாம் உள்­ளது.

5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்­பி­லான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. நீதி­மன்ற அறி­வித்தல் பிர­காரம் விளக்­க­ம­றி­யலில் உள்ள இரு சந்­தேக நபர்­க­ளான கஸ்­தூ­ரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ் ஆகியோர் சிறை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

 நேற்­றைய வழக்கு விசா­ர­ணை­களின் போதும் சட்ட மா அதிபர் சார்பில் எவரும் ஆஜ­ரா­காத நிலையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சார்பில் பொலிஸ் அதி­காரி ஒருவர் ஆஜ­ரானார். இந் நிலையில் பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன கடந்த 2017.10.20 அன்று நீதி­மன்றம் விடுத்த உத்­தர்வு இன்னும் அமுல் செய்­யப்­ப­டாமல் இருப்­ப­தையும், அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கி­றதா எனவும் கேள்வி எழுப்­பினார்.

 அது குறித்து நீதிவான் குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் கோரிய போது, அந்த தக­வல்கள் இன்னும் கடற்­ப­டை­யி­னரால் வழங்­கப்­ப­டாமை தொடர்பில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

முன்­ன­தாக கடந்த 2017.டிசம்பர் 22 ஆம் திகதி , நீல நிறத்­தினை உண்மை நிற­மாக கொண்ட 54 - 9238 எனும் வேனுக்கு வெள்ளை நிற­ம­டித்து, வேறு எஞ்­ஜினை அதற்கு பொருத்­தியே வெள்ளை வேன் கடத்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றப்­பு­ல­ன­யவுப் பிரி­வினர் நீதி­மன்­ருக்கு அரி­வித்­தி­ருந்­தனர்.

 அது தொடர்பில் விசா­ரணை செய்யும் குற்றப் புல­ன­யவுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா இதனை நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்த நிலையில், குறித்த வேன் தொடர்பில் கடற்­ப­டையின் லெப்­டினன் கொமாண்டர் முன­சிங்க ( சந்­தேக நபர் அல்ல. பிரி­தொ­ருவர்)வின் வாக்கு மூலத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டும், அரச இர­சா­யன பகுப்­ப­யவு அறிக்­கையின் படியும் மேற்­படி விட­யத்தை குற்றப் புல­னாய்வு பிரி­வுக்கு உறுதி செய்­தது.

குறித்த வேனுக்கு வெல்­லம்­பிட்­டிய பகு­தியில் வைத்து இவ்­வ­ழக்கின் சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ராக கருதி தேடப்­படும் ஹெட்டி ஆரச்­சிக்கு தெரிந்த கராஜ் ஒன்றில் போலி­யாக எஞ்ஜின் ஒன்று பொருத்­தப்ப்ட்­டுள்­ள­தா­கவும், செசி இலக்­கத்­துக்கும் எஞ்­ஜி­னுக்கும் தொடர்­பில்­லாமை இர­சா­யன பகுப்­பாய்வு ஊடாக உறுதி செய்­யப்ப்ட்­டுள்­ள­தா­கவும் சி.ஐ.டி. ஏற்­க­னவே நீதி­மன்ரை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந் நிலை­யி­லேயே கடற்­படை புல­ன­யவுப் பிரி­வி­னரால் பயன்­ப­டுத்­தப்ப்ட்ட அந்த வேன் தொடர்பில் ஆவ­ணங்கள் கோரப்­பட்­டி­ருந்­தன.

இத­னி­டையே இந்த விவ­கா­ரத்தில் தற்­போது கைது செய்­யப்­ப­டு­வ­தற்­காக தேடப்பட்டு வரும் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சியைக் கைது செய்ய பகிரங்க பிடியாணையும் நீதிமன்ரினால் நேற்றும் பிறப்பிக்கப்பட்டது. அடுத்த கட்ட விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிவான் அது வரை தற்போது விளக்கமரியலில் உள்ள கஸ்தூரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ் ஆகியோரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தர்விட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.