Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்பது மாகாணங்களும் சுயாட்சியை அரசிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்

Featured Replies

ஒன்பது மாகாணங்களும் சுயாட்சியை அரசிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்

 

 

cv.jpg

மாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு பிரிவினைக்கு வழிகோலும் என்ற தப்பான அபிப்பிராயம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படுவதாலேயே அதிகாரப் பகிர்வு இன்னமும் கிடைக்கவில்லை. இதனால்தான் ஒன்பது மாகாணங்களும் சுயாட்சியைக் கோரவேண்டும் என்றும், வேண்டிய இரு மாகாணங்கள் தமக்குள் இணைய வழிவகுக்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தை சிங்களவர்கள் மத்தியில் தான் பரப்பி வருவதாகவும் கூறினார்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய அலுவலகக் கட்டடத்திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவே இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டத்திற்கு வழி வகுத்தது. அதனை முழு நாட்டுக்கும் ஏற்புடைத்தாக்கினார். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன. அதேபோல் மாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் கேட்டுப்பெற வேண்டும் என்ற கருத்தைப் பரப்பி வருகின்றேன் என்றார். எமது அரசியல் தலைவர்களின் நிபந்தனையற்ற ஆதரவுகளைத் தமக்குச் சாதகமாகப்பயன்படுத்தி கடந்த மூன்று வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளும் நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்திசைவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதில் தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கக்கூடிய ஒதுக்கீடுகளோ அல்லது திட்டங்களோ உள்வாங்கப்படவில்லை. இதனைப் பகிரங்கமாக எடுத்துக் கூறினாலோ அல்லது அது பற்றி இடித்துரைத்தாலோ அரசு எம்மைப் பயங்கொண்டு பார்க்கின்றது எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் எம்மைக் கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நம்பி வாக்களித்த மக்களின் தேவையை அரசுக்கு எடுத்துக் கூறாது இன்முகங்காட்டி வரவேற்று உபசரிக்க முடியாது. இதனால்தான் இன்முகம் காட்டி வரவேற்கும் அதேநேரம் அரச தலைவர் முன்னிலையிலோ, அமைச்சர்கள் முன்னிலையிலோ மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் தான் இடித்துரைக்கப் பின்நிற்பதில்லையென்றும் தெரிவித்தார்.

பாதிப்புக்களுக்கு உள்ளாகாத ஏனைய மாகாணங்களுக்கு வழங்குகின்ற முறையிலேயே 30 வருடங்களுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது வடபகுதிக்கும் நிதிப் பங்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றனர். இம் முறை தவறானதென்றும் பாதிப்புக்குள்ளான எமக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் கோரினால் அதனை எமக்குத் தராது, வடமாகாணசபை வடக்கை அபிவிருத்தி செய்யவில்லை என்று எம்மீது குறைகூறுகின்றார்கள் அல்லது தராத நிதி திரும்பிவிட்டதாக விசமப் பிரசாரம் மேற்கொள்கின்றார்கள்.

 

 
 

பாதிப்படைந்த பிரதேசத்தை முன்னேற்றுவதற்காக எங்கள் புலம்பெயர்ந்த உறவுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்று எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்ற நோக்கில் எம்மால் ஆக்கப்பட்ட முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்தை நான்கு வருடங்களாக அங்கீகாரம் வழங்காது தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இழுத்தடிப்புச் செய்கின்றன. வெளியில் இருந்து வரும் நிதிகள் அனைத்தும் மத்திக்கூடாகக் கொண்டு வர வேண்டும் என்பது தேவையற்ற ஒரு செயற்பாடு. முதலமைச்சர் நிதியமும் நாட்டின் கணக்காளர் நாயகத்தின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையிலேயே நடைமுறைப்படுத்தப்படும். இதனால்த்தான் ஒரு இன ரீதியான சிந்தனை மத்திய அரசாங்கத்தை இவ்வாறான தவறுகளைச் செய்ய வைக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது. இந்த மாகாணத்தை முன்னேற்றுவதற்கு நாங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு மத்தியஅரசு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் நாம் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து முன்நோக்கிச் செல்வதற்கு முடிந்தவரை முயற்சிக்கின்றோம். எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு அனைவரும் உங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.

http://www.thinakaran.lk/2018/07/13/உள்நாடு/25352/ஒன்பது-மாகாணங்களும்-சுயாட்சியை-அரசிடமிருந்து-கேட்டுப்-பெறவேண்டும்

  • தொடங்கியவர்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை – ஓரங்கட்டும் கூட்டரசு- வடக்கு முதல்வர்!!

 

 

1-6-750x430.jpg

 
 

வடக்கு -– கிழக்கு மாகா­ணங்­கள் ஏனைய மாகா­ணங்­க­ளி­லி­ருந்து வேறு­பட்­டவை. 30ஆண்­டு­கள் போரால் பாதிக்­கப்­பட்ட எமது மாகா­ணங்­க­ளுக்­கும் ஏனைய மாகா­ணங்­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டும் நிதியே ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. அதிக நிதி ஒதுக்­கீடு கோரி­னால் கொழும்பு அரசு அதை வழங்­கு­வ­தில்லை.

இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் குற்­றம் சுமத்­தி­யுள்­ளார்.

வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வ­ரால் அமைக்­கப்­பட்ட சிறப்­புச் செய­ல­ணி­யில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்­றும், அர­சி­யல் தீர்­வுக்­குப் பின்­னரே அபி­வி­ருத்தி என்­றும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடி­தம் எழு­தி­னார் என்று ஊட­கங்­க­ளுக்கு அறி­விப்பு விடுத்து 24 மணி­ நே­ரத்­தி­னுள்­ளேயே முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

 

கிளி­நொச்சி டிப்­போச் சந்­திக்கு அரு­கில், கிளி­நொச்சி மாவட்ட மாற்­று­வ­லு­வுள்­ளோர் சங்­கத்­துக்­குப் புதிய கட்­ட­டம் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரால் நேற்­றுத் திறக்­கப்­பட்­டது.

கட்­ட­டம் அமைப்­ப­தற்கு வடக்கு மாகாண சபை­யின் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர் சு.பசு­ப­திப்­பிள்ளை 20 லட்­சம் ரூபா­வும், ஈ.பி.டி.பி. உறுப்­பி­னர் வை.தவ­நா­தன் 20 லட்­சம் ரூபா­வும், கூட்­ட­மைப்­பின் மற்­றொரு உறுப்­பி­ன­ரான ப.அரி­ய­ரத்­தி­னம் 2 லட்­சம் ரூபா­வும் நிதி ஒதுக்­கி­யி­ருந்­த­னர்.

இந்த நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­றும்­போதே வடக்கு முத­ல­மைச்­சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-,

புதிய கட்­ட­டத்­தில் வெடிப்பு
இன்று வந்­த­தும் வரா­த­து­மாக பசு­ப­திப்­பிள்ளை புதி­தாக அமைக்­கப்­பட்ட கட்­ட­டத்­தைக் கொண்­டு­போய்க் காட்­டி­னார். வெளிச்­சு­வர் நெடு­க­வும் வெடிப்­புக்­கள், கட்­டிய 5,6 மாதங்­க­ளில் இத்­தனை வெடிப்­புக்­கள் வர­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. எமது அமைச்­சின் செய­லர் விரை­வில் பொறி­யி­ய­லா­ளர்­க­ளைக் கொண்டு இதற்­கான கார­ணத்­தைக் கண்­டு­பி­டித்து உரி­ய­ந­ட­வ­டிக்­கை­களை எடுப்­பார் என்று உறு­தி­மொழி அளிக்­கின்­றேன்.

அடுத்­துக் குறிப்­பிட்ட காலத்­தில் கிளி­நொச்சி வைத்­தி­ய­சா­லை­யில் ஏற்­பட்ட மகப்­பே­று­கள் சம்­பந்­த­மா­கப் பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பொலி­ஸார் தர­வு­க­ளைக் கேட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. படை­யி­னர் அல்­லது பொலி­ஸார் இவ்­வா­றான கோரிக்­கை­களை விடுக்­கும் போது அலு­வ­லர்­கள் உடனே அவற்றை எனது கவ­னத்­துக்­குக் கொண்­டு­வ­ர­வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றேன். அவ்­வ­றான கோரிக்­கை­கள் எமக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டால் உடனே அதற்­கான கார­ணங்­க­ளைக் கேட்­ட­றி­வோம். இது அனைத்­துப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் பொருந்­தும்.

பேதம் களைந்த உறுப்­பி­னர்­கள்
மாற்று வலு­வுள்­ளோ­ருக்­கான ஒரு அலு­வ­ல­கத்­தின் அவ­சி­யத்தை உணர்ந்த எமது வட­மா­கா­ண­ச­பை­யின் உறுப்­பி­னர்­க­ளான சு.பசு­ப­திப்­பிள்ளை, வை.தவ­நா­தன், ப.அரி­ய­ரட்­ணம் ஆகி­யோ­ரின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி ஒதுக்­கீட்­டின் கீழ் அமைக்­கப்­பட்ட இந்த அலு­வ­ல­கம் எதிர்­கா­லத்­தில் சிறப்­பு­டன் செயற்­பட்டு மாற்­று­வ­லு­வுள்­ளோ­ரின் மேம்­பாட்­டிற்கு உதவ அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் முன்­னெ­டுக்­கும் என்று எதிர்­பார்க்­கின்­றேன்.

எமது உறுப்­பி­னர்­கள் சேர்ந்து வேலை செய்­தால், ஒத்­து­ழைத்­தால், ஒரு­மித்து சிந்­தித்­தால் எவ்­வா­றான சமூக சீர்­தி­ருத்­தங்­களை நாங்­கள் உண்­டு­பண்­ண­லாம் என்­ப­தற்கு எமது உறுப்­பி­னர்­கள் மூவ­ரும் எடுத்­துக்­காட்டு. கட்­சி­யால் வேறு­பட்­டா­லும் தமது மக்­க­ளின் மேம்­பாட்­டுக்கு உழைக்க முன்­வந்த எமது உறுப்­பி­னர்­கள் மூவ­ருக்­கும் எமது பாராட்­டுக்­கள் உரித்­தா­குக.

அர­சின் புறக்­க­ணிப்பு
இங்கு வந்­த­தும் நான் உணர்ந்து கொண்­டது மாற்­றுத் திற­னா­ளி­கள் இரண்டு வகைப்­பட்­ட­வர்­கள் என்­பதை. பிற­வி­யில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளா­கப் பிறப்­ப­வர்­கள், போரின் நிமித்­தம், விபத்­துக்­கள் நிமித்­தம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளாக ஆக்­கப்­ப­டு­ப­வர்­கள். நான் பொது­வாக மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் என்று அழைக்­கப்­ப­டு­ப­வர்­கள் பற்­றியே இங்கு கூறி­னேன். உங்­க­ளுள் பலர் போரால் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளாக ஆக்­கப்­பட்­ட­வர்­கள். உங்­க­ளைப் பரா­ம­ரிப்­பது அர­சின் பொறுப்பு.

ஆனால் கட்­சி­கள், இயக்­கங்­க­ளின் பெயர்­க­ளைச் சொல்லி நீங்­கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வதை நான் உணர்ந்து கொண்­டேன். உங்­கள் தேவை­களை எழுத்­தில் தாருங்­கள். நிதி­க­ளுக்கு ஏற்­ற­வாறு உங்­கள் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வோம் என்று கூறி­வைக்­கின்­றேன்.

வட­மா­கா­ண­சபை மாகா­ணத்­தின் ஆட்­சிப் பொறுப்பை கையேற்ற தினத்­தில் இருந்து இன்று வரை எமது மாகாண முன்­னேற்­றத்­துக்­காக கூடு­த­லான நிதி­களை அரசு ஒதுக்­கீடு செய்­ய­வேண்­டும் என்று கூறி வரு­கின்­றோம். இந்­தப் பகு­தி­யில் உள்ள வீடு இழந்­த­வர்­க­ளுக்­கான வீடு­களை அமைத்­துக் கொடுக்க வேண்­டும், வாழ்­வா­தா­ரங்­களை, தொழில் முயற்­சி­களை இழந்­த­வர்­க­ளுக்கு உரிய உத­வி­களை வழங்கி மீண்­டும் அவர்­களை அடிப்­படை நிலைக்­கா­வது கொண்­டு­வ­ர­வேண்­டும் என்ற எண்­ணத்­தில் நாம் தொடர்ந்­தும் பல்­வேறு கோரிக்­கை­க­ளை­மேற்­கொள்­ளு­கின்ற போதும் அரசு எமது கோரிக்­கை­களை கண்­டு­கொள்­வ­தாக இல்லை. மாறாக கொழும்பு அர­சின் அமைச்­சர்­க­ளின் நிதி ஒதுக்­கீ­டு­க­ளைக் கூட்டி அவர்­க­ளுக்கு ஊடாக எமக்கு உத­வி­களை வழங்க எத்­த­னிக்­கின்­றார்­கள். அதற்கு மாவட்­டச் செய­ல­கங்­க­ளைப் பாவிக்­கின்­றார்­கள்.

கொழும்­பின் அப­க­ரிப்பு
ஆனால் வேலை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­ய­வர்­கள் மாகாண சபை­யால் சம்­ப­ளம் கொடுக்­கப்­ப­டு­கின்ற எமது பணி­யா­ளர்­களே. இந்த நிலை மாற வேண்­டும். 1992ஆம் ஆண்­டின் 58ஆவது இலக்க சட்­டமே மாவட்­டச் செய­லர்­க­ளை­யும் கிராம அலு­வ­லர்­க­ளை­யும் மேலும் சில­ரை­யும் எம் கட்­டுப்­பாட்­டுக்­குள் இருந்து கொழும்­பின் கட்­டுப்­பாட்­டுக்­குள் இழுத்­தது.

அந்­தச் சட்­டம் மீளப்­பெற்று, அந்­தச் சட்­டம் வர முன்­னி­ருந்த நிலை கொண்­டு­வ­ரப்­பட வேண்­டும். இன்று சமாந்­தர நிர்­வா­கங்­கள் நடை­பெ­று­கின்­றன. மாகா­ண­ச­பை­யால் ஒன்று. கொழும்பு அர­சால் இன்­னொன்று. அதை­யும் விட அண்­மைக் காலத்­தில் ஆளு­ந­ரின் ஆட்­சி­யும் மூன்­றாம் நிர்­வா­க­மா­கத் தலை தூக்­கத் தொடங்­கி­யுள்­ளது. இவை அனைத்­தி­லும் பாதிக்­கப்­ப­டு­வது மக்­களே.

அதி­கா­ரப் பகிர்வு என்று பேச்­சுக்­குப் பேச்சு அர­சு­கள் கூறி­வந்­தா­லும் மத்­தி­யின் அதி­கா­ரங்­க­ளைப் பகிர அர­சி­னர் முன் வரு­கின்­றார்­கள் இல்லை.

கூட்­டாட்­சிக் கோரிக்கை
அத­னால்­தான் நாங்­கள் எங்­களை நாங்­களே பார்த்­துக்­கொள்ள, எமது மக்­களை நாங்­களே சிறப்­பாக வழி­ந­டத்த கூட்­டாட்சி முறை­யி­லான அர­ச­மைப் கோரி வரு­கின்­றோம். ஆனால் கூட்­டாட்சி பிரி­வி­னைக்கு அடி­கோ­லும் என்ற தப்­ப­பிப்­பி­ரா­யம் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் பரப்­பப்­பட்­டுள்­ள­தால் உண்­மை­யான அதி­கா­ரப் பகிர்வை இந் நாட்­டில் ஏற்­ப­டுத்த முடி­யா­மல் போயுள்­ளது.

அத­னால்­தான் ஒன்­பது மாகா­ணங்­க­ளும் சுயாட்­சி­யைக் கோர வேண்­டும் என்­றும் எந்த இரு மாகா­ணங்­களோ அதற்கு மேற்­பட்­ட­வையோ தமக்­குள் இணைய வழி வகுக்க வேண்­டும் என்ற கருத்தை எமது சிங்­கள சகோ­த­ரர்­கள் மத்­தி­யில் பரப்பி வரு­கின்­றேன்.

இன்று எமது அர­சி­யல் தலை­வர்­க­ளின் நிபந்­தனை அற்ற ஆத­ர­வு­க­ளைத் தமக்­குச் சாத­க­மா­கப்­ப­யன்­ப­டுத்தி கடந்த மூன்று வரவு செல­வுத் திட்­ட­முன் மொழி­வு­க­ளும் நல்­லாட்சி அர­சால் தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளின் ஒத்­தி­சை­வு­டன் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

ஆனால் அதில் தமிழ் மக்­க­ளுக்­குக் குறிப்­பி­டத்­தக்க நன்­மை­கள் கிடைக்­கக்­கூ­டிய ஒதுக்­கீ­டு­களோ அல்­லது திட்­டங்­களோ உள்­வாங்­கப்­ப­டா­தது கவ­லை­ய­ளிக்­கின்­றது. இவற்றை நாம் பகி­ரங்­க­மாக எடுத்­துக்­கூ­றி­னாலோ அல்­லது அது பற்றி இடித்­து­ரைத்­தா­லோ­அ­ரசு எம்­மைப் பயங்­கொண்டு பார்க்­கின்­றது. பயங்­க­ர­வா­தி­கள் என்று கூடப் பகர்­கின்­றது.

ஆனால் எம்­மீது அர­சி­னர் சினம் கொண்­டு­வி­டு­வார்­கள் என்­ப­தற்­காக எம்மை நம்பி வாக்­க­ளித்த மக்­க­ளின் தேவை­க­ளைப் பற்றி அர­சுக்கு எடுத்­துக்­கூ­றாது அவர்­களை இன்­மு­கங்­காட்டி வர­வேற்று உப­ச­ரிப்­பது எமது மனச்­சாட்­சிக்கு விரோ­த­மாக நாம் நடப்­ப­தாக அமை­யும். இத­னால்­தான் நான் இன்­மு­கம் காட்டி வர­வேற்­கும் அதே நேரம் அரச தலை­வர் முன்­னி­லை­யிலோ , அமைச்­சர்­கள் முன்­னி­லை­யிலோ எமது மக்­க­ளின் பிரச்­ச­னை­க­ளை­யும் தேவை­க­ளை­யும் இடித்­து­ரைக்­கப் பின்­நிற்­ப­தில்லை.

முத­ல­மைச்­சர் நிதி­யச் சட்­டம் முடக்­கம்
பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­காத ஏனைய மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­கின்ற முறை­யி­லேயே 30 ஆண்­டு­க­ளுக்கு மேல் போரால் பாதிக்­கப்­பட்ட எமது வட­ப­கு­திக்­கும் நிதிப் பங்­கீ­டு­களை அரசு மேற்­கொண்டு வரு­கின்­றது. இந்த முறை தவ­றா­ன­தென்­றும் பாதிப்­புக்­குள்­ளான எமக்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­யும்­ப­டி­யும் கோரி­னால் அதனை எமக்­குத் தராது நாம் அபி­வி­ருத்தி செய்­ய­வில்லை என்று எம்­மீது குறை கூறு­கின்­றார்­கள். அல்­லது தராத நிதி திரும்­பி­விட்­டது என்று விச­மப் பரப்­புரை மேற்­கொள்­ளு­கின்­றார்­கள்.

எமது பாதிப்­ப­டைந்த பிர­தே­சத்தை முன்­னேற்­று­வ­தற்­காக எங்­கள் புலம்­பெ­யர்ந்த உற­வு­க­ளி­டம் இருந்து உத­வி­க­ளைப் பெற்று எமது பிர­தே­சத்­தின் அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­ள­லாம் என்ற நோக்­கில் எம்­மால் ஆக்­கப்­பட்ட முத­ல­மைச்­சர் நிதிய நிய­திச் சட்­டத்தை நான்கு ஆண்­டு­க­ளாக அனு­மதி வழங்­காது தொடர்ந்து வந்த அர­சு­கள் இழுத்­த­டிப்­புச் செய்­வது எமது வளர்ச்­சியை எவ்­வ­கை­யி­லே­னும் முடக்­கி­விட வேண்­டும் என்ற கபட நோக்­கி­லான செயற்­பாடோ என்று எண்­ண­வேண்­டி­யுள்­ளது.

வெளி­யில் இருந்து வரும் நிதி­கள் அனைத்­தும் கொழும்பு அர­சின் ஊடா­கக் கொண்டு வர வேண்­டும் என்­பது தேவை­யற்ற ஒரு செயற்­பாடு. ஏன் என்­றால் எமது முத­ல­மைச்­சர் நிதி­ய­மும் நாட்­டின் கணக்­கா­ளர் நாய­கத்­தின் கட்­டுப்­பாடு மற்­றும் மேற்­பார்­வை­யி­லேயே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும். இத­னால்­தான் ஒரு இன ரீதி­யான சிந்­தனை கொழும்பு அரசை இவ்­வா­றான தவ­று­க­ளைச் செய்ய வைக்­கின்­றதோ என்று சிந்­திக்க வைக்­கின்­றது.

தடை­க­ளைத் தகர்ப்­போம்
இந்த மாகா­ணத்தை முன்­னேற்­று­வ­தற்கு நாங்­கள் எடுக்­கின்ற முயற்­சி­க­ளுக்கு கொழும்பு அரசு முட்­டுக்­கட்­டை­க­ளை­யும் தடை­க­ளை­யும் ஏற்­ப­டுத்தி வரு­கின்ற போதும் நாம் அவற்­றை­யெல்­லாம் தகர்த்­தெ­றிந்து முன்­நோக்­கிச் செல்­வ­தற்கு முடிந்­த­வரை முயற்­சிக்­கின்­றோம். அதன் ஒரு வெளிப்­பா­டாக இன்­றைய இந்த மாற்­றுத் திற­னா­ளி­களை ஊக்­கு­விக்­கின்ற இந்த நிகழ்­வும் கொள்­ளப்­ப­ட­லாம். ஏனென்­றால் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், போரால் பாதிக்­கப்­பட்­டோர் சம்­பந்­த­மாக கொழும்பு அரசு அதி­கம் அலட்­டிக் கொள்­ளா­ம­லேயே இருந்து வரு­கின்­றது.

எமது அர­சி­யல் முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு நீங்­கள் அனை­வ­ரும் உங்­கள் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க முன் வர வேண்­டும். அர­சின் நில அப­க­ரிப்பு, பார­பட்ச நட­வ­டிக்­கை­கள், வனத்­தின் பெய­ரால்­மக்­க­ளின் நில அப­க­ரிப்பு, கடல் வளங்­க­ளைச் சூறை­யா­டல் போன்ற கப­ளீ­க­ரங்­க­ளில் இருந்து எமது மக்­க­ளைப் பாது­காப்­ப­தற்கு நீங்­கள் ஒத்­து­ழைப்பு நல்க வேண்­டும். போரி­னால் நொந்­து­போய் இருக்­கின்ற காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­கள், பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­கள், மாற்­று­வ­லு­வுள்ள குடும்­பங்­கள் என அனைத்­துத் தர மக்­க­ளை­யும் முன்­னேற்­று­வ­தற்கு எம்­மு­டன் கைகோர்க்க நீங்­கள் யாவ­ரும் முன்­வர வேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/09/வடக்கு-கிழக்கு-மாகாணங்களை-ஓரங்கட்டும்-கூட்டரசு-வடக்கு-முதல்வர்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.