Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸ் மா அதிபர், சட்ட அமைச்சர்கள் -வடக்கு முதல்வருடன் சந்திப்பு!!

Featured Replies

பொலிஸ் மா அதிபர், சட்ட அமைச்சர்கள் -வடக்கு முதல்வருடன் சந்திப்பு!!

 

559666-750x430.jpg

 
 
 

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட அமைச்சர் குழு, வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையில் இன்று சந்தித்தது.

வடக்கில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்காக சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் மத்­தும பண்­டார, பிரதி அமைச்­சர் நளின் பண்­டார, பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர ஆகி­யோர் நேற்று யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யம் வந்த அவர்­க­ளுக்கு சிறப்பு பொலிஸ் அணி­வ­குப்பு மரி­யாதை வழங்­கப்­பட்­டது. அதன் ­பின்­னர் யாழ்ப்­பா­ணம் மாவட்ட பொலிஸ் உயர் அதி­கா­ரி­கள், சிறப்பு அதி­ர­டிப் படை அதி­கா­ரி­களை அமைச்­சர் தலை­மை­யி­லான குழு சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­யது.

 

அதன் பின்னர் மாலை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை அவரது அலுவகத்தில் சந்தித்தது.

அதன்  தொடர்ச்சியாக வடக்கு முதல்வரை  இன்று சந்தித்தது.

85222-300x225.jpg966-1-300x225.jpg56-1-300x225.jpg9-300x225.jpg

http://newuthayan.com/story/15/பொலிஸ்-மா-அதிபர்-சட்ட-அமைச்சர்கள்-வடக்கு-முதல்வருடன்-சந்திப்பு.html

  • தொடங்கியவர்

காவற்துறையினருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு…

IMG-20180712-WA0009.jpg?resize=768%2C432
வட மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோரிடம் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காவற்துறையினருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது என தன்னால் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை காவற்துறை மா அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக சென்ற சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பு கைதடியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,

குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஆளணிப் பற்றாக்குறை உள்ளது. தமிழ் முதலமைச்சர் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும். பெண் முதலமைச்சர் உத்தியோகத்தர்களுக்கும் பற்றாக்குறை உள்ளது என முதலமைச்சர் மா அதிபரிடம் எடுத்துக் கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்..

http://globaltamilnews.net/2018/87567/

  • தொடங்கியவர்

வடக்கில் குற்­றச்­செ­யல்­க­ளுடன் பொலி­ஸா­ருக்கும் தொடர்பு

26-48fe96f7e660f4399b2a4960f1d52cbe8af59359.jpg

 

சட்டம் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதி­ப­ரிடம் முத­ல­மைச்சர் விக்கி சுட்­டிக்­காட்டு

(எம்.நியூட்டன்)

வடக்கு மாகா­ணத்தில் இடம்­பெறும் குற்றச் செயல்­க­ளுடன் பொலி­ஸா­ருக்குத் தொடர்­புள்­ளது. இதன் கார­ண­மாக குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்­துள்­ளன என சட்டம், ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதி­ப­ரிடம் வட­ மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­துவ பண்­டார, பிரதி அமைச்சர் நளின் பண்­டார மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர ஆகியோர் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நேற்று கைத­டியில் உள்ள முத­ல­மைச்சர் அலு­வ­ல­கத்தில் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­னனர்.  இச் சந்­திப்புத் தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு தெ ளிவு­ப­டுத்­து­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பொலி­ஸா­ருக்கும் குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கும் நெருங்­கிய தொடர்பு இருப்­பதால் வடக்கில் குற்­றங்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது காணப்­ப­டு­கின்­றது. இதற்கு தெற்கில் குற்­றச்­செ­யல்கள் புரிந்த பொலி­ஸாரை இங்கு அனுப்­பு­வ­துதான் கார­ணமோ தெரி­யாது. அதற்கு அவர்கள் அவ்­வாறு இல்லை என்று கூறி­னார்கள். மேலும் பொலிஸார் இரண்டு வரு­டங்கள் ஓரி­டத்தில் கட­மை­யாற்ற வேண்டும் என்றும் அவ்­வாறே அவர்கள் சிறப்­பாக பணி­யாற்­று­வ­தா­கவும் தெரி­வித்­தார்கள். மேலும் பொலி­ஸா­ருக்கும் குற்­றங்கள் புரிந்­த­வர்­க­ளுக்கும் இடையில் நெருங்­கிய உறவு இருப்­பதை கூறி­ய­போது அதனை அவர்கள் ஏற்­றுக்­கொண்­டார்கள். அவ்­வாறு தமக்கும் பல­வி­த­மான முறைப்­பா­டுகள் கிடைத்­தி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்ட சிலர் தொடர்பில் உட­ன­டி­யா­கவே நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் தெரி­வித்­தார்கள்.

 

 இவற்­றை­விட போதை­வஸ்து கடத்­தல்­கா­ரர்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் நெருங்­கிய தொடர்பு இருப்­பதை கூறினேன். அத­னையும் அவர்க் ஏற்­றுக்­கொண்­டனர். மேலும் அவ்­வாறு தமக்கும் முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் கிடைத்­துள்ள சக­ல­தையும் விசா­ரணை செய்­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

 பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் துஸ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பிலும் பேசி­யி­ருந்தேன். இதற்கு விரைவில் ஒரு செய­லணி ஒன்­றினை அமைத்து நட­வ­டிக்கை ஒன்றை மேற்­கொள்­வ­தாக தெரி­வித்­தனர்.

 பெண் பொலி­ஸா­ருக்கு தட்­டுப்­பாடு நில­வு­வ­தா­கவும் பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கு தமிழ் பெண்கள் இணைந்தால் இத்­த­கைய பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­ளலாம் எனவும் ஆலோ­சிக்­கப்­பட்­டது. குறிப்­பாக பேருந்து நிலை­யங்கள், தனியார் இடங்கள், பாட­சா­லை­களில், பொலிஸ் நிலை­யங்­களில் பெண்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்று வரு­கின்ற துஸ்­பி­ர­யோ­கங்­களை இதன்­மூலம் கட்­டுப்­ப­டுத்­தலாம் எனக் தெரி­வித்­தனர். இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆண் பொலி­ஸாரே இதனைப் பார்க்க வேண்­டி­யுள்­ளது. மேலும் பொலிஸ் நிலை­யங்­களில் பெண்­க­ளுக்கும் சிறு­வர்­க­ளுக்­கு­மான பிரி­வொன்று இப்­பொ­ழுதும் இருப்­ப­தாகக் கூறப்­பட்­ட­துடன் இப்­பி­ரி­வுடன் தொடர்பு கொண்டால் சிறுவர் பெண்­க­ளுக்­கான பிரச்­சி­சினை தொடர்பில் கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்கை எடுக்க முடியும் எனவும் தெரி­வித்­தனர்.

 

 சட்­ட­வி­ரோத மண் கடத்தல் தொடர்­பிலும் எடுத்துக் கூறினேன். இத­னையும் அவர்கள் ஏற்றுக் கொண்டு இங்கு மட்­டு­மன்றி நாடு பூரா­கவும் இப்­பி­ரச்­சினை இருப்­ப­தா­கவும் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய அள­வுக்கு அதனை கட்­டுப்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர். வடக்கில் இடம்­பெற்று வரு­கின்ற போக்­கு­வ­ரத்து நெருக்­க­டிகள் தொடர்­பா­கவும் இச் சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டினேன். சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருடன் இவ் விட­யத்தை கலந்­து­ரை­யா­டு­மாறு தெரி­வித்­தனர் மேலும் பொலி­ஸா­ருக்கு போக்­கு­வ­ரத்­திற்கு ஏற்ற மோட்டார் சைக்­கிள்கள் மற்றும் வாக­னங்கள் போதாமை உள்­ளமை தொடர்பில் எடுத்­துக்­கூ­றினே். கடந்த அர­சாங்கம் ஆட்­சியில் இருந்­த­போது பொலி­ஸா­ருக்கு வாக­னங்கள் வழங்­கப்­பட்­ட­தா­கவும், எனினும் அனைத்து பொலி­ஸா­ருக்கும் இது வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் இதனை வழங்­கினால் விரை­வான சேவை­யினை வழங்க முடியும் என்­ப­த­னையும் சுட்டிக் காட்­டினேன்.

 

இதற்கு சட்ட ஒழுங்கு அமைச்சர் தாம் இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க கலந்­து­ரை­யாடி வரு­வ­தா­கவும் தெரி­வித்தார். தமிழ் பொலி­ஸாரை அனுப்­பு­வ­தாகக் கூறி­னீர்கள் இன்­று­வ­ரைக்கும் அது நடை­பெ­ற­வில்லை என்­பதை சுட்­டிக்­காட்­டினேன். அதற்கு அவர் கட்­டாயம் அனுப்­பு­வ­தாக கூறினார். பெயர்­களை தரு­மாறும் கேட்­டி­ருந்தார். நான் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரிடம் வழங்­கி­யுள்­ள­தனை தெரிவித்தேன். இதற்கு அவர் இவர்களது பயிற்சி முடிவடைந்ததும் இங்கு அனுப்புவதாக தெரிவித்தார்.

 குறிப்பிட்டளவு நேரமே சந்திக்கின்ற வாய்ப்பு இருந்தமையால் இயலுமான வரையில் கலந்துரையாடியுள்ளோம். எனினும் பொலிஸாருக்கும் குற்றம் செய்வோருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் தொடர்பாக இயலுமான அளவு பெயர், விபரங்களை இரகசியமான முறையில் எனக்கு எழுதி அனுப்பினால் விரைவான நடவடிக்கையினை எடுப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் வாக்குறுதி அளித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.